மகிமை பொருந்திய ஆடி வெள்ளிக்கிழமை.
ஜூலை 17, 2015 at 5:18 முப 17 பின்னூட்டங்கள்
சக்தியை,தேவியை, லக்ஷ்மியை பூஜிக்க எல்லா வெள்ளிக்கிழமைகளும் ஏற்றதே. ஆயினும் மகிமை மிக்க ஆடி,தை வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானது. மாரியம்மன் கோயில்களிலும் அபிஷேகஆராதனைகள்,ஏழைகளுக்கு கூழ் வார்த்தலும்,மாவிளக்குப் போடுதலும் விசேஷமாக இருக்கும். ஆடிமாத முதல்நாள் ஆடிப்பண்டிகை என்று போற்றிக் கொண்டாடுவார்கள். இம்மாதம் துவங்கிப் பண்டிகைகளின் அணிவரிசைதான். தக்ஷிணாயண புண்ணியகாலம், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல் போன்ற காரியங்கள் இன்றே. ஆடி வெள்ளிகள்,ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, பதினெட்டாம் பெருக்கு, முதலியன தொடர்ந்து வரும்.எல்லா நாட்களுமே ஒவ்வொரு விஷயத்தில் விசேஷம்தான்.ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். வீட்டுத் தோட்டத்தில், அவரை,பூசணி,பறங்கி, பாகல்,புடல் என்று தேடித்தேடி விதைகளை நடுவார்கள். மார்கழி தை மாதங்களில் நன்றாகப் பலன் கொடுக்க ஆரம்பிக்கும்..
வரலக்ஷ்மி விரதமும் இம்மாதம் வருவதுண்டு. அம்மன் கோயில்களிள் சந்தனக்காப்பிட்டு நிறைமணி அலங்காரம் செய்வார்கள். ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளைகாப்பு செய்து கொண்டாடும் கோயில்களுண்டு. எங்களூரில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்து கொண்டாடும வழக்கமிருந்தது..
குத்து விளக்கு பூஜை,அபிராமி அந்தாதி யாவருமாகச் சொல்லுதல், லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்,
சுமங்கலி,கன்யாப் பெண்களுக்கு மங்கல ஸாமான்கள் வழங்குதல் போன்ற காரியங்களுடன் வெள்ளிக்கிழமைகள் ஏக போக பக்தியுடன் கொண்டாடுவது எப்போதும் மனதை விட்டகலாது. பாயஸ வகைகள்,இனிப்பு குழக்கட்டைகள்,அம்மனுக்குப் பிடித்தமான நிவேதனங்கள்
எங்கள் வளவனூரையடுத்த கோலியனூர் மாரியம்மன் மிகவும் பிரசித்தம். மூலஸ்தானத்தில் ஆறு அடி உயர பாம்புப் புற்று உள்ளது. புத்துவாயம்மன் என்று அழைக்கப்படும் அம்மனது. பக்கத்தில் ரேணுகா தேவிக்கும் ஸன்னதி உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தம். பக்கத்து எல்லா ஊர்களிலிருந்தும் கூட்டம் கூடும். மண் பாண்டக்கடைகள் ஒருகாலத்தில் மிகவும் விசேஷம். இப்போதும் கோவில் திருவிழாக்கள் பிரசித்தமே. சென்ற வருஷம் நான் சென்ற போது பூச்சொரிதலுக்குப் பின்னர் எங்களுக்கும் அகஸ்மாத்தாக அம்மனின்தரிசனம் கிடைத்தது.
ஆரம்பத்தில் அம்மனின் திரு உருவம் பாருங்கள். இவர் கோலியநூர் மாரியம்மன் .
அம்மைச்சார் அம்மன். கோவில் கொண்டுள்ளார்வளவனூரில்இவரும் பல குடும்பங்களுக்குக் குலதெய்வம். இவரையும் தரிசியுங்கள்.
வீட்டில் பூஜை செய்வதுடன். அம்மன் கோயில்களுக்குச்சென்று, வணங்கி எல்லா நன்மைகளையும் பெறவேண்டும். பொதுவாகஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு அம்மனை வழிபட்டால் வாழ்வில் வளம் பெறலாம் என்பது திண்ணம்.
Entry filed under: பூஜைகள். Tags: மகிமை பொருந்திய.
17 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 6:41 முப இல் ஜூலை 17, 2015
எங்க ஊர் கோட்டை மாரியம்மனும் மிகவும் விசேசம் அம்மா…
2.
chollukireen | 11:04 முப இல் ஜூலை 17, 2015
பெயர் போன அம்மன் ஆயிற்றே கோட்டை மாரியம்மன். உங்களின் நினைவூட்டுதலுக்கு மிகவும் நன்றி. அம்மனுக்கு நமஸ்காரங்கள். அன்புடன்
3.
Geetha Sambasivam | 11:20 முப இல் ஜூலை 17, 2015
இந்த வருஷம் வரலக்ஷ்மி விரதம் ஆவணி மாதத்தில் வருகிறதுனு நினைக்கிறேன். 🙂 மாரியம்மன் தான் எங்களுக்கும் குலதெய்வம். கும்பகோணத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பரவாக்கரை என்னும் ஊரில் இருக்கிறாள். வருஷத்துக்கு 2,3 தரமாவது போயிடுவோம். 🙂
4.
chollukireen | 8:00 முப இல் ஜூலை 18, 2015
வளவனூர் மாரியம்ன் என் பிறந்த வீட்டுக் குலதெய்வம். பேரன் கர்மா செய்திருப்பதால் அதுவும் எங்கள் வீட்டு லிஸ்டிலும் சேர்த்து விட்டேன். ஊருக்குப்போனால் புடவை சாத்தி வழிபடுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உங்களுடயதும் மாரியம்மன். கேட்கவே ஸந்தோஷமாக இருக்கிரது. அன்புடன்
5.
yarlpavanan | 3:55 பிப இல் ஜூலை 17, 2015
ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் அம்மன் வழிபாட்டையும் அறிய வைத்து விட்டீர்கள்.
சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்
6.
chollukireen | 8:03 முப இல் ஜூலை 18, 2015
உங்கள் மறுமொழியை வரவேற்கிறேன். பக்திப்பதிவா. கேட்கவே இனிமையாக இருக்கிறது. அன்புடன்
7.
chitrasundar | 9:28 பிப இல் ஜூலை 17, 2015
காமாஷிமா,
ஆடி மாதம் வந்தால்தான் வரிசையாக அடுத்தடுத்து திருவிழாக்கள் வந்துகொண்டே இருக்கும்.
சென்ற முறை ஊருக்குப் போனபோது கோலியனூர் போக வேண்டும் என்று நினைத்தேனே தவிர போகவில்லை. இப்போது இங்கேயே தரிசனம் கிடைத்துவிட்டது. புத்துவாயம்மனை எல்லோரும் பேச்சுவாக்கில் புட்லாயம்மன் என்று சொல்லுவார்கள். எவ்வளவு நாட்களானது, இதைப்பற்றியெல்லாம் யாரிடமாவது பேசி !
8.
chollukireen | 8:10 முப இல் ஜூலை 18, 2015
முன்னைவிட கோயில் நன்றாக இருக்கிறது. அந்த அளவு கடைகளில்லை. உத்ஸவ நேரம் நான் போன . போது. . அதனால் பிரகாரத்தில் அமைதியாக உத்ஸவ மூர்த்தியை தரிசிக்க முடிந்தது. ஆமாம் நாங்களும் புட்லாயம்மன் என்றுதான் சொல்லுவோம். நம்ம ஊர் அம்மன். நமக்குச் சொந்தம் என்று தோன்றுகிறது. அன்புடன் கோவிலைப்பார்த்தவுடன் நாமும் அங்கேயே இருப்பவர்கள் போன்ற மனோபாவமும் ஏற்படுகிரது. நல்ல தரிசனம்.
9.
chitrasundar | 9:28 பிப இல் ஜூலை 17, 2015
முன்பு ஆடி பதினெட்டில் தெருவாசல், தோட்டம் என எல்லா இடங்களிலும் விதை போட்ட குழிகள் காணப்படும், இப்போது அந்தக் காய்களை சாப்பிடவும் ஆட்கள் இல்லை.
உங்க ஊர் அம்மன் தரிசனமும் சிறப்பாக இருந்தது, நன்றிமா, பழைய நினைவுகளுடன் சித்ரா.
10.
chollukireen | 8:45 முப இல் ஜூலை 18, 2015
நாம்தான் அங்கில்லையே தவிர, எங்கள் வீடாக இருந்த வீட்டில் மாமரங்களும்,நாரத்தை முதலானமரங்களும் காய்த்துக் குலுங்கிக் கொண்டு இருந்தது. உன்னுடன் நம் அறிந்த ஊர்களைப்பகிர்ந்து கொள்வதில் ்லாதி சுகம் இருக்கிறது. அன்புடன்
11.
ஸ்ரீராம் | 2:37 முப இல் ஜூலை 18, 2015
ஆடி மாதம் இந்த முறை வெள்ளிக் கிழமையில் தொடங்கி இருப்பதே சிறப்புதானோ? பண்டிகைக் காலம் தொடங்கி விட்டது. சாதாரண காலத்திலேயே தினம் ஒரு கோவில் செல்லும் என் பாஸ் நேற்று பால் குடத்துடன் ஆடியைக் கொண்டாடத் தொடங்கி விட்டார்!
12.
chollukireen | 8:51 முப இல் ஜூலை 18, 2015
உங்கள் பாஸ். பால்க்குடத்துடன் பார்க்கப் பரவசமாக fஇ பக்தி வலையிற் படுவோன் காண்க என்பது எவ்வளவு பொருத்தம். ஆக இருந்திருக்குமே!. நம் கோவில்களின் மகிமை நமக்குத்தான் தெரியும்.. நன்றி அன்புடன்
13.
ranjani135 | 8:01 முப இல் ஜூலை 22, 2015
அடுத்த வெள்ளிக்கிழமை வருவதற்குள் இந்தப் பதிவை வந்து படித்துவிட்டேன்! புற்றுக்கு பால் தெளிப்பதும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் தானே? ஆடி வெள்ளிக்கிழமையன்று என் மாமியார் பூரணம் வைத்த கொழுக்கட்டை செய்வார்.
நாங்கள் ஸ்ரீரங்கம் போனால் சமயபுரமும் சென்று வருவோம்.
நிறைய மலரும் நினைவுகள்!
14.
chollukireen | 10:06 முப இல் ஜூலை 22, 2015
கொழுக்கட்டை,வடை,தினுஸு தினுஸா பாயஸங்கள் எல்லாமே விசேஷம். கோயிலா இருந்தால், சர்க்கரைப்பொங்கலும்,சுண்டலும்தான். ஆடிவெள்ளி , செவ்வாய் இரண்டு கிழமைகளிலுமே புற்றிற்கு பால் வார்ப்பது விசேஷம். அந்தந்தப் பிராந்தியங்களிலுள்ள விசேஷக் கோயில்கள் கூட்டம் நிரம்பி வழியும். பரவாயில்லே ஒருவாரம் கழித்து வந்தாலும். இடரவாள் முதல்ப்பந்தியில் இருந்தால் என்ன இடைப்பந்தியில் இருந்தால என்ன? நன்றி அன்புடன்.
15.
chollukireen | 11:54 முப இல் ஓகஸ்ட் 11, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
ஆடிமாதத்திற்கேற்ற ஒரு பதிவு. அன்புடன்
16.
ஸ்ரீராம் | 12:02 முப இல் ஓகஸ்ட் 12, 2021
இந்த வரிசையில் நாக சதுர்த்தி, கருட பஞ்சமியை விட்டு விட்டீர்கள்!. இதோ.. இந்த் வருடம் இன்றும், நாளையும் அவை இரண்டும்!
17.
chollukireen | 12:08 பிப இல் ஓகஸ்ட் 12, 2021
நல்லவேளை. ஞாபகப்படுத்தினீர்கள். இது ஒரு மீள்பதிவு. முன்பே இவைகளை எழுத மறந்து இருக்கிறேன். மிகவும் நன்றி. அன்புடன்