ராக்ஷஸ தாவரம்.
ஜூலை 20, 2015 at 5:38 முப 15 பின்னூட்டங்கள்
puya chilensis பூயாசிலென்ஸிஸ்
மனிதனிடம் ராக்ஷஸ குணம் வரலாம்.. மிருகங்கள் ராக்ஷஸனாக இருக்கும். தாவரங்கள் ராக்ஷஸனாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு ராக்ஷஸ தாவரத்தைப் பற்றி நான் படிக்கும் செய்தித் தாளில் படித்தேன். அதிசயம் ஆனால் உண்மை என்ற பகுதிக்கு ஏற்றதாக இருந்தது. உங்களுக்குத் தெரிந்தும் இருக்கலாம். புதியதாகவும் இருக்கலாம்.
விஞ்ஞானிகள் இத்தாவரத்தை செம்மறியாட்டைச் சாப்பிடும் தாவரம் என்றுச் சொல்கிரார்களாம். பெயர்
புயாசிலன்ஸிஸ் என்பது.
இது முதன் முதலில் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டதாம். பத்து அடி உயரத்திற்கு புஷ்போன்று பரவி வளரும் தாவரமிது.நீளமான முட்களையுடயது. விலங்குகளை பிடித்துக்கொள்வதற்கு ஏற்றபடி, இயற்கையிலேயே வளைந்தபடி கொக்கிபோல் அமைந்த முட்களைக் கொண்டது. தானாகவே அவைகள் அம்மாதிரி அமைகிறது.
செம்மறி ஆடோ,அல்லது மற்றெந்தப் பிராணிகளோ இதன் பிடியில் சிக்கிவிட்டால் விடுபடவே முடியாது. இப்படி அப்படி அசைந்தால்கூட முட்கள் வளைத்துப் பிடித்துக் கொண்டு,உடலைக்கிழித்து மரணாவஸ்தை உண்டாக்கிவிடும். கத்திக் கதறி உயிரை விடவேண்டியதுதான். இத்தாவரத்தில் விலங்குகளை ஈர்ப்பதற்காக பழங்கள் நல்ல மணத்தைப் பரப்பும் வகையில் இருக்குமாம். இம்மாதிரிக் கவர்ந்த வாஸனையில் புதருக்குள் சிக்கி அதிக அளவில் உயிரிழப்பது செம்மறி ஆடுகள்தானாம். அதனால்தான் செம்மறியாட்டைச் சாப்பிடும் தாவரம் என்று சொல்லுகிரார்கள். உயிரிழந்த பிராணியின் உயிர்ச் சத்தை வேர்கள் உறிஞ்சிக் கொள்ளும். மக்கி மடிந்து போன உடல் உரமாக ஆகி விடுமாம். ராக்ஷஸதாவரம்தான் இல்லையா? இத் தாவரத்தை லண்டனின் ராயல் தோட்டக்கலை கூடத்தில் வளர்த்து வருகிரார்களாம்.யாவரும் அருகில் போகாதிருக்க அதைச் சுற்றிலும் கண்ணாடி வேலி அமைத்திருக்கிரார்கள்.. யாவும் படித்தறிந்த தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? பூக்களும்,பழமும் நறுமணம் மிகுந்தவை. ஒரு மனிதர் சாப்பிடும் அளவிற்குத் தேன் இருக்குமாம் அப்பூக்களில். பக்ஷிகளும் விலங்குகளும் மாட்டிக் கொள்ள இதுவே காரணமாக இருக்கும். இந்தச் செடி வளர இலண்டனில் பதினைந்து வருஷங்கள் ஆயிற்றாம்.
பட உதவி கூகல்
நன்றி—-தினத்தந்தி.
Entry filed under: அதிசயம்.ஆனால் உண்மை.. Tags: சிலிநாடு, தாவரம்.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 7:01 முப இல் ஜூலை 20, 2015
பிரமாண்டம்…!
2.
chollukireen | 10:34 முப இல் ஜூலை 21, 2015
தாவரத்தின் கொடுமைதானே ஆமாம் மிகவும் பிரமாண்டம். நன்றி. அன்புடன்
3.
marubadiyumpookkum | 7:45 முப இல் ஜூலை 20, 2015
thanks to your good postma
4.
chollukireen | 10:35 முப இல் ஜூலை 21, 2015
மிக்க ஸந்தோஷம். பாராட்டிற்குமிகவும் நன்றி.
5.
marubadiyumpookkum | 10:14 முப இல் ஜூலை 22, 2015
son to a mother.mother to a son…loving each other for ever
6.
ஸ்ரீராம் | 8:56 முப இல் ஜூலை 20, 2015
தெரியாத தகவல். பயங்கரத் தாவரமாய் இருக்கும் போல! தாவரங்களில் ஒரு மாமிச பட்சினி!
7.
chollukireen | 10:40 முப இல் ஜூலை 21, 2015
நான் கூட தகவல் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று தேடிப்பார்த்துதான் வெளியிட்டேன். படித்த பிறகு ஏதோ ஒரு ஆடு அகப்பட்டுக்கொண்டு விழிப்பதுபோல ஒரு கற்பனை. ராக்ஷஸதாவரம் ஸரிதான் இல்லையா?நன்றி அன்புடன்
8.
chitrasundar | 12:11 முப இல் ஜூலை 21, 2015
காமாஷிமா,
பார்க்கும்போதே தெரியுது இது ராட்சஸ தாவரம்தான். தகவலும் ஆச்சரியமாத்தான் இருக்கு ! அன்புடன் சித்ரா.
9.
chollukireen | 10:42 முப இல் ஜூலை 21, 2015
அதான் நானும் நினைத்தேன். தகவல் ஓரிருமுறை மற்ற இடங்களில் சோதித்துதான் எழுதினேன். நன்றி அன்புடன்
10.
Venkat | 12:29 முப இல் ஜூலை 21, 2015
அட இப்படியும் ஒரு தாவரம்…..
11.
chollukireen | 10:44 முப இல் ஜூலை 21, 2015
அதிசயம் ஆனால் உண்மை எண்ற சொல்லுக்காகவே ஏற்பட்டது போல உள்ளது. நன்றி அன்புடன்
12.
Geetha Sambasivam | 7:43 முப இல் ஜூலை 22, 2015
உயிர்க்கொல்லித் தாவரம் பற்றி நேஷனல் ஜியாக்ரஃபிக் சானலில் முன்னர் எப்போதோ ஓர் முறை பார்த்த நினைவு. முடியும் நேரம் பார்த்தேன் என எண்ணுகிறேன். இவ்வளவு விபரங்கள் தெரியாது. பெயரும் தெரியாது. அறியாத தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி.
13.
chollukireen | 9:51 முப இல் ஜூலை 22, 2015
நான் கூட இது என்ன பிரமாதம்? எனக்கு முன்பே தெரியுமே என்று பலபேர் எழுதுவார்கள் என்ற எண்ணத்துடனே எழுதினேன். நல்ல வேளை நீங்களும் ஸரியாகத் தெரிந்து கொள்ளாததுதான் என்பதில் ஒரு நிம்மதி. எப்படியிருக்கு பாருங்கோ. நன்றி அன்புடன்
14.
ranjani135 | 8:20 முப இல் ஜூலை 22, 2015
உண்மையான ராக்ஷசன் போலத்தான் இருக்கிறது, பார்ப்பதற்கும் கூட!
15.
chollukireen | 9:53 முப இல் ஜூலை 22, 2015
பக்கா ராக்ஷஸ ஜென்மம்தான். நன்றி அன்புடன்