நான் படித்த உப கதைகள்.
ஜூலை 23, 2015 at 7:43 முப 10 பின்னூட்டங்கள்
சில நல்ல கதைகளைப் படிக்கும்போது இவைகளையும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம் என்ற ஆவல் தோன்றுகிறது. இது ப்ளாக் எழுதும் எல்லோருக்கும் தோன்றுவதொன்றேதான் . அப்படி சில நல் விஷயங்கள் இக்காலத்திற்கும் ஏற்றதாக பொருள் மாற்றம் கண்டு எண்ணும் போது எழுதுவதுதான் இந்தக் கதை. மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் தர்மருக்கு ,பீஷ்மர் சொல்லும் கதை இது.
எவன் சக்திசாலியோ,அருகிலுள்ளவர்களுக்கு உபகாரம்,அபகாரம் இரண்டும் செய்யக்கூடியவனோ,எப்போதும் ஸந்தோஷமாக இருக்கக் கூடியவனோ அவனிடம் அதிக பலமில்லாதவன், தற்பெருமை பேசும் ஸுபாவமுள்ளவன், பேசத்தெரியாமல்பேசிப் பலவானிடம் பகைகொண்டால், அது ஆபத்தில்தான் போய்முடியும். பலவான் சினந்து பேசி, பலமற்றவனை ஒன்றுமில்லாமற் செய்து விடுவான் அந்த மனிதன் தன்னைத் தாக்குபவனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். என்று தர்மர் கேட்க, பீஷ்மப்பிதாமஹர் இதற்கு உதாரணமாகக் கூறிய பாரதக் கதை இது.
இமயமலையின் தொடர்களின் மீது மிகவும் பழமை வாய்ந்த காட்டில் வெகுகாலமாக வாழ்ந்து வரும் மிக்க பலமுடையதாக ஒரு மரமிருந்தது. அதன் தண்டுகள்,வேர்கள்,இலைகள்,பூக்கள்,காய்கள் ,கிளைகள் என நிரம்பி மிகவும் விரிந்து பரந்து வியாபித்திருந்தது. மற்ற ஏனைய மரங்களைவிட இது தனித் தன்மையுடன் விளங்கிற்று.. இதன் கீழ் வெயிலினின்றும் இளைப்பாற யானைகள்,குதிரைகள்,பலவித மிருகங்கள், கூட்டமாகவும்,தனிமையாகவும் வந்து தங்கி இளைப்பாறுவது வழக்கமாக இருந்தது. இந்த மரம் அழகாகவும் அகலமாகவும்,உயரமாகவும் வியாபித்திருந்தது. நிழல் மிகவும் அருகில் வரும். மைனாக்களும், கிளிகளும்,மற்றும் பல்வேறு பறவைகளும் அதன் கிளைகளில் வசித்து வந்தது. வழிப்போக்கர்களும் பகலில் வந்து தங்கி இளைப்பாறுவார்கள். வியாபாரிகள்ரிஷி தபஸ்விகளும் இளைப்பாறுவர். அது ஒரு இலவ மரம்.
ஒரு நாள் அம்மரத்தின் பருமனான இலைகளையும், அழகிய பூக்களையும், அவ்வழியே வந்த நாரதர் கண்டார். மரத்தைப் பார்த்துப் பேசலுற்றார்.ஓ அழகிய இலவமே நீ, பூ,காய்,இலை,கிளை,நிழல்,அடர்த்தி, முதலியவைகளால் அழகாகவும்,கம்பீரமாகவும் இருக்கிறாய். யாவருக்கும் வேண்டியவனாகவும் இருக்கிராய். வாயு பகவானான காற்றுகூட உனக்கு நல்ல நண்பன் போலுள்ளது. அவரும் உன்னை யாவருக்கும் சேவை செய்ய,மேன்மையாக வாழ, விட்டிருக்கிரார். இல்லாவிடின் அவரின் வேகம் பட்டால் நீ இவ்வளவு பலசாலியாக இருக்க முடியாது . சமுத்திரம்,காடுகள் முதலானவற்றைக்கூட அழித்துவிடும் சக்தி அவருக்கு உண்டு அவரின் சினேகமே நீ உன்னதமாக இருக்கிறாய் என்றார். அதனால்மற்றவர்களின் ஆசியும் உனக்குக் கிடைக்கிரதென்று சொல்லி பலவகைகளிலும் வாயுவைப் போற்றினார் நாரதர். பலவிதங்களிலும் வாயுவைப் போற்றிக் கூறவே அந்த இலவ மரத்திற்கு மனது என்னவோ போல ஆகிவிட்டது. அதுகர்வத்துடன் பேசலுற்றது.
இலவ மரம் சொல்லியது. வாயுஎனக்குநண்பனுமில்லை,சகோதரன்,உறவினன் எதுவுமில்லை. என்னைக் காக்கும் பிரம்மாவும் இல்லை. என்னுடைய சக்தியில் பதினாரு பங்கில் ஒருபங்குகூட அதற்கில்லை. அது எல்லாவற்றையும் அழித்து விட்டு வரும்போது என் பலத்தால் அதன் கதியின்போக்கைத் திருப்பி விடுகிறேன் என்றது. அது பலவானுமில்லை,எந்தத் தகுதியுமில்லை,அதனிடம் எனக்குப் பயமுமில்லை. நானே பலவான் ,. அதன் வேகத்தைத் தடுக்கும் நானே பலவான் என்றது.
இதைக்கேட்ட நாரதருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. மிக்க கோபத்துடன் இலவமே நீ கர்வத்தால் இப்படிபேசுகிறாய்.சந்தனம்,சாலமரம்,அரசு,ஆலமரம்,தேவதாரு போன்ற மிக்க பலமான மரங்கள் கூட வாயுவிற்கு தலை வணங்குகிறது. அவைகளைவிட பலமானவனாநீ.? நீஅவருடைய சினேகிதன் என்பதற்காகவேஉன்னைவிட்டுவைத்திருக்கிரார். நன்றியில்லாத உன்னைப்பற்றி இப்போதே வாயு பகவானிடம் சென்று கூறுகிறேன் என்று நாரதர் புறப்பட்டுச் செல்கிரார். வாயு பகவானிடம் சென்று இலவமரம் கூறியதை அப்படியே கூறுகிரார் இதயத்தின் பின்பகுதியில் இருக்கும் இலவமரம் உங்களை பலவானில்லை என்று நிந்தித்தது என்றார். பிராணங்களை எல்லாம் தரிப்பவனாகிய கௌரவமுள்ள உங்களை அவமானப் படுத்திப் பேசுகிறது என்றார்.
மீதி நாளைக்குப் பார்ப்போம். கதையைத் தொடராலாமா? ஒருவரிஎழுதுங்கள்.
Entry filed under: பாரதக் கதைகளில் சில. Tags: இலவமரம், நாரதர், பலவான்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 1:46 பிப இல் ஜூலை 23, 2015
மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது… ஆவலுடன் உள்ளேன்… தொடர்கிறேன்…
2.
chollukireen | 10:46 முப இல் ஜூலை 24, 2015
அப்படியா?சின்ன கதைதான். படியுஙகள், நன்றி ஊக்கம் கொடுத்ததற்கு. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 2:06 பிப இல் ஜூலை 23, 2015
ம்ம்……. நாரதர் தன் வேலையைக் காட்டி விட்டார்!
:)))))))
4.
chollukireen | 10:47 முப இல் ஜூலை 24, 2015
நாரதா கலகப்பிரியா வார்த்தைகள் பொய்க்குமா? அன்புடன்
5.
chitrasundar | 3:03 பிப இல் ஜூலை 23, 2015
காமாஷிமா,
தொடருங்க, எனக்கு இந்தக் கதை புதுசுமா. பாவம் இலவ மரம், அதுபாட்டுக்கு பேசாமல் இருந்தது, வந்து கலகமூட்டிவிட்டார் நாரதர்!
சின்ன வயசுல இலவம் பிஞ்சுகளை நிறைய சாப்பிட்டுக்கிறேன். சூப்பரா இருக்கும். கதையுடன் சில நினைவுகளும் வந்துபோயின. அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 10:59 முப இல் ஜூலை 24, 2015
புதுசா, பழசா பாரு. இலவம் பிஞ்சா,இலந்தைப் பிஞ்சா? இலந்தப்பழம் உண்டு. இலவம் பழம் கிடையாது. இலவம் என்பது ஸில்க் காட்டன். நம் ஊரில் மெத்தை,தலையணை செய்வதற்கு இலவம் பஞ்சு.உபயோகப்படுத்துவோமே அந்த காய்களைக் கொடுக்கும் மரம். சென்னயில் இப்போதும் நிறையப் பார்க்கக் கிடைக்கிறது. ஸுகமான நித்திரைக்கு இந்தப் பஞ்சடைத்த மெத்தைகள் மென்மையைக் கொடுக்கும்.
இலவம் பிஞ்சு ருசியானதா?என்ன நினைவுகள் வருகிறது/ ? அதையும் கூறு. அன்புடன்
7.
ranjani135 | 10:45 முப இல் ஜூலை 24, 2015
கேட்காத கதையாக இருக்கிறது. தொடர் கதையா? பேஷ் பேஷ் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து படிக்கிறேன்.
8.
chollukireen | 11:01 முப இல் ஜூலை 24, 2015
தொடர் கதை இல்லை. தருமருக்கு பீஷ்மப்பிதாமஹர் சொன்ன உப கதைகளில் சில . பாருங்கள். எழுதுங்கள். அன்புடன்
9.
Geetha Sambasivam | 3:24 முப இல் ஜூலை 26, 2015
நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்.
10.
chollukireen | 3:43 பிப இல் ஜூலை 27, 2015
காற்று வந்து இலவமரத்தைப் பாடு படுத்தாமல் தானாகவே உதிர்த்து விட்டதே. அதுதான் அதற்கு நன்மை. என் ஐடியா எப்படி. அன்புடன்