நான் படித்த உப கதைகள்
ஜூலை 24, 2015 at 1:19 பிப 19 பின்னூட்டங்கள்
பேச்சை செவிமடுத்த வாயு பகவான் இலவமரத்திடம் கோபமாகச்சென்று பேசலுற்றார். ஏ இலவமே இங்கிருந்து வந்த நாரதமுனிவரிடம், என்னை எப்பேர்ப்பட்ட வார்த்தைகளைக் கூறி நிந்தித்திருக்கிறாய். ? உன்னைப் பற்றி நான் அறியாதது உண்டா? உலகத்தில் பிரும்மா மக்களைச் சிருஷ்டிக்கும் போது உன் நிழலில் தங்கி ஓய்வெடுத்தார்.
அவர் ஓய்வெடுத்த மரமாதலால் உனக்குநான் அருள் புரிந்தேன். உன்னை எந்த விதத்திலும் தொந்திரவு செய்யவில்லை. நண்பனாகவே மதித்தேன். நீ உன் பலத்தால் தப்பி இருக்கவில்லை. என்னுடைய பலத்தையும் காட்டுகிறேன் பார்க்கிறாயா? என்றார் வாயு பகவானான காற்று. இலவமரம் சிரித்துக் கொண்டே நீ கோபம் கொண்டு உன் சக்தியைக் காட்டு. உன்னால் என்ன செய்ய முடியும் பார்க்கிறேன். சரீர பலத்தைவிட அறிவு பலம்தான் பெரியது. நான் உன்னிடம் பயப்பட மாட்டேன் என்றது. வாயு ஸரி நல்லது நான் என் பராக்ரமத்தைக் காட்டுகிறேன் இரவாகி விட்டது நாளை வருகிறேன் என்று சொல்லிக் கோபத்துடன் சென்றது.
பிறகுதான் இலவமரம் யோசித்தது. நான் நாரதரிடம் கூறியவைகள் அனைத்தும் பொய்யாகும். பலத்த வாயுவை எதிர்க்கும் சக்தி எனக்கில்லை. என்னென்ன நிகழ்வுகள் ஏற்படுமோ? நான் பலசாலியுமில்லை. மற்ற மரங்களைவிட பலவீனமானவன். ஆனால் அறிவில் எனக்கு எந்த மரமும் ஸமானமானதல்ல.. நான் அறிவை உபயோகித்து வாயுவின் பயத்திலிருந்தும்,பலத்திலிருந்தும் விடுபடுவேன். மற்ற மரங்கள் புத்தியை உபயோகித்திருந்தால் அவைகளும் பயத்தினின்றும் விடுபட்டிருக்கலாம். வாயுவிற்கும் பலமிருக்காது நான் இவை அனைத்தையும் அறிவேன் என்று மனதில் நினைத்தது. யோசித்தது. கலக்க முற்றது. அதிகம் பேசி இருக்கக் கூடாது. ஏதாவது செய்ய வேண்டும்.எப்படி வாயுவை எதிர்கொள்வேன்?
யோசித்து யோசித்து அதன் இலைகளை எல்லாம் உதிர்த்தது. இன்னும் யோசித்தது. பூவை எல்லாம்உதிர்த்தது. கிளைகளெல்லாவற்றையும் கீழேதள்ளியது. இன்று வரை அந்த மரத்தில் என்னென்ன உண்டோதுளிர்கள் ,மொட்டுகள் என எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு பட்டமரம் போல சோகமாக நின்று மறுநாள் வாயு பகவானின் வருகைக்குக் காத்து நின்றது.
மறுநாள் வாயுபகவான் பெருத்த சத்தத்துடன் வழியிலுள்ள மரங்களை எல்லாம் வீழ்த்திக் கொண்டு மிக்க கோபத்துடன் இலவ மரம் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு கண்ட காட்சி.இலவம் எல்லாமிழந்து,பரிதாபமாக நின்றது. அக்கம்,பகக்கம் எல்லஇடத்திலும்இலைகள்,பூக்கள்,கிளைகள்,,மொட்டுகள், முளைகள் வேறு வழியே இல்லை. இதனைப்பார்த்து மகிழ்ச்சியுற்ற வாயு தேவன் சிரித்தபடி அந்த மரத்தைப் பார்த்துக் கூறினார்.
இலவமே நானும் கோபம் கொண்டு உன்னை இம்மாதிரி பார்க்கவே விரும்பினேன். நீ தானாகவே இந்தக் கஷ்டத்தை ஏற்றுக் கொண்டு விட்டாய். நீ உன் தீய அறிவாலேயே இன்னிலையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டாய். என் பலத்திற்கும்,பராக்கிரமத்திற்கும் முன்னால் எப்படி என்பதைத் தெரிந்து கொண்டாய்.
இலவமும் மிகவும் வெட்கமடைந்தது. நாரதமுனிவரிடம் அப்படி பேசி இருக்க வேண்டாம். அதன் பலனைத்தான் அனுபவித்தோம் என்று மனதில் நினைத்து வெட்கியது.
இந்தக்கதையை பீஷ்மர் தருமருக்குச் சொல்லி கருத்தை விளக்கினார்.
எந்த ஒரு மனிதனும், தான் பலஹீனனாக இருந்துபலவானோடு பகை கொள்கிறானோ அவன் இலவ மரத்தைப்போல கஷ்டப்பட நேரும்.ஆதலால் பலமற்ற மனிதன். பலசாலிகளோடு விரோதம் , செய்து கொள்ளக் கூடாது.
தைரியமுள்ளமனிதன்தனக்குததீங்குசெய்பவர்களிடம் மெல்லதன் பலத்தைக் காட்டுகிறார்கள். அறிவு பலமுடையவனை நிகர்த்தவர்கள் யாரும் கிடையாது. ஆதலால் கூனோ,குருடோ,,செவிடோ, பலத்தில் தன்னைவிடச் சிறந்தவனோ அவன் மூலம் செய்யப்படும் தனக்கு எதிரான எல்லா நடத்தையையும் மன்னித்து விட வேண்டும். இதுதான் ஆபத்துக்கால தர்மம். ராஜ தர்மமும் கூட என்று முடிக்கிறார்.
ஆக பொதுவாக வயதானவர்களுக்குக் கூட இது எவ்வளவு பொருந்துகிறது. ஒருவரை அண்டி இருக்கும் நேரம் வந்து விட்டால் அவர்கள் யாராக இருந்தாலும், எது செய்தாலும்,சொன்னாலும் மௌனமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?/ வெவ்வேறு கோணங்களில் அவரவர்கள் சிந்தித்தால் உண்மை விளங்கும். இது என் திடீர்க் கருத்து.
வேறுசில பாரதக் கதைகளையும் பகிர கூடிய சீக்கிரம் வருகிறேன்.
Entry filed under: பாரதக்கதைகளில் சில. Tags: பரிதாபமாகபராக்கிரமம்.
19 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 1:07 முப இல் ஜூலை 25, 2015
காமாஷிமா,
அருமையான கதை நடையுடன், ஆபத்துக்கால தர்மம். ராஜ தர்மம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. மேற்கொண்டு வேறு கதைகளையும் தொடருங்கள் அம்மா.
உங்கள் கருத்து எவ்வளவு உண்மை என்பதை அனுபவித்து இருக்கிறேன் 😦
2.
chollukireen | 9:39 முப இல் ஜூலை 27, 2015
சித்ரா இது பாரதக்கதைகளினுள் வரும் உபக்கதைதான். இதில் மாற்றமோ சேர்ப்போ நமக்குரிமை யில்லாதது. எல்லா தாவரங்கள்,உயிரினங்கள், மேகம்,காற்றுகள் கூட பேசுவதாக அமைந்திருக்கும். நாம் பார்க்கும் நிகழ்வுகள் குறிப்பிடுவது கூட நம் கற்பளைதான். அனுபவமும்தான். ஊக்கம் கொடுப்பதற்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது. நன்றிஉனக்கு . அன்புடன்
3.
ஸ்ரீராம் | 1:22 முப இல் ஜூலை 25, 2015
திடீர்க் கருத்து உட்பட எல்லாமே சரி. நாம் நமது சூழ்நிலைகளுக்கேற்ப கதைகளை வடிவமைத்துக் கொள்கிறோம்.
நாரதர் கோள் சொல்லும்போது வாயு பகவானுக்குக் கோபம் வரலாமோ! இதே தொழிலாகக் கொண்டவர்கள் இது போலப் பேசும்போது ஒதுக்கித் வேண்டாமோ! பெருந்தன்மை பெரியவர்களுக்குரியதன்றோ! இது என் கருத்து!
4.
ஸ்ரீராம் | 1:24 முப இல் ஜூலை 25, 2015
// இது போலப் பேசும்போது ஒதுக்கித் வேண்டாமோ! //
நடுவில் ‘தள்ள’ விட்டுப்போய்விட்டது! :)))))))
5.
chollukireen | 10:22 முப இல் ஜூலை 27, 2015
பரவாயில்லே. மரங்களுக்கெல்லாம் அளவுக்கு மீறின காற்றென்றால் பயப்பட இது ஒரு சராசரி கணக்காகச் செய்ய முடிந்தது. ஸரியா/. அன்புடன்
6.
chollukireen | 9:51 முப இல் ஜூலை 27, 2015
வலிமையான காற்று தான் உபகாரம் செய்தவனே தன்னை இகழ்வாகப் பேசுகிரது என்றால் முதலில் வருவது எதுவாகஇருக்கும் இரண்டாவது மரங்கள் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரி காற்றாக இருக்க வேண்டாமா? எல்லாம் ஸரி கதை இப்பொழுதயது இல்லை/யே. பீஷ்மப்பிதாமஹர் தர்மருக்குச் சொன்ன உபமானக் கதைதானே. இம்மாதிரி வித்தியாஸங்கள் இருக்கத்தான் செய்யும். ஆமாம் இதற்கெல்லாம் என்ன செய்யலாம். அன்புடன்
7.
chitrasundar5 | 1:42 முப இல் ஜூலை 25, 2015
காமாஷிமா,
தலையணைக்குப் பயன்படுத்துவோமே, அதே பஞ்சுதான். எங்கள் பள்ளியில் இந்த மரங்கள் நிறைய உண்டு. சின்ன பிள்ளைகளாகிய நாங்கள் இதன் காய்களை சுண்டு விரலைவிட சின்னதாய் இருக்கும்போது உரித்து சாப்பிடுவோம். நன்றாக இருக்கும்.
8.
chitrasundar5 | 1:44 முப இல் ஜூலை 25, 2015
காமாஷிமா,
தலையணைக்குப் பயன்படுத்துவோமே, அதே பஞ்சுதான். எங்கள் பள்ளியில் இந்த மரங்கள் நிறைய உண்டு. சின்ன பிள்ளைகளாகிய நாங்கள் இதன் காய்களை (சுண்டு விரலைவிட சின்னதாய் இருக்கும்போது) உரித்து சாப்பிடுவோம். நன்றாக இருக்கும். அன்புடன் சித்ரா.
9.
chollukireen | 9:56 முப இல் ஜூலை 27, 2015
வெள்ளரிப் பிஞ்சு மாதிரி இருந்ததா? எனக்கு அந்த அனுபவம் இல்லை. பெரிய ப்ரஹஸ்பதிமாதிரி இலந்தையா என்று கேட்டேன். இரண்டாவது இலவம் காய் முற்றி நெற்றாக ஆகிவிடும். தெரிந்துகொண்ட விஷயத்திற்கு நன்றி. அன்புடன்
10.
chollukireen | 9:57 முப இல் ஜூலை 27, 2015
ஊருக்குப்போனால் டேஸ்ட் செய்து சித்ராவை நினைக்க வேண்டும், ஞாபகமிருக்கட்டும்,அன்புடன்
11.
marubadiyumpookkum | 12:47 பிப இல் ஜூலை 25, 2015
my views are differs…ma..
12.
chollukireen | 9:59 முப இல் ஜூலை 27, 2015
அதனாலென்ன? நான் படித்ததை எழுதினேன். அபிப்பராயம் சொல்ல யாவருக்கும் உரிமை உண்டு. நன்றி அன்புடன்
13.
marubadiyumpookkum | 8:22 முப இல் ஜூலை 28, 2015
Always we should respect elders, for their rich experience, whether they are useful or not they are wealthy or not, they are resourceful , income based or not. With that angle only you have to consider my comments. thanks.vanakkam. ma.we will die instead of bow and live like that.as a warrior.
14.
yarlpavanan | 3:20 பிப இல் ஜூலை 25, 2015
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
15.
chollukireen | 10:01 முப இல் ஜூலை 27, 2015
உங்கள் ஊக்கமொழி ஒன்றே போதும். என்னையும் சின்திக்க வைத்தது. அன்புடன்
16.
Geetha Sambasivam | 3:28 முப இல் ஜூலை 26, 2015
மௌனமாக ஏற்றுக் கொள்ளும் மனம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். 🙂 இல்லையா? என்னவோ போங்க! எல்லோருமே இலவமரம் போல் அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவமானப் படுவாங்களானு தெரியலை; புரியலை! 😦
17.
chollukireen | 10:07 முப இல் ஜூலை 27, 2015
இலவமரம் உதாரணகதை. எல்லோருக்கும் ஏன் அவமானங்கள் வரவேண்டும். கதைக்களனுக்கே அவசியமில்லாத வாழ்க்கையாகக் கூட இருக்கலாமே?
தெரியாததற்கும்,புரியாததற்கும் ஒன்றுமில்லை. காமாட்சியம்மா கதை.எழுதினாள் கீதாவும் படித்தார் அவ்வளவுதான். கருத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
18.
பிரபுவின் | 8:06 முப இல் ஜூலை 27, 2015
“எந்த ஒரு மனிதனும், தான் பலஹீனனாக இருந்துபலவானோடு பகை கொள்கிறானோ அவன் இலவ மரத்தைப்போல கஷ்டப்பட நேரும்.ஆதலால் பலமற்ற மனிதன். பலசாலிகளோடு விரோதம் , செய்து கொள்ளக் கூடாது.”
மன்னிக்கவும் அம்மா.இந்தக் கருத்தில் நான் முரண்படுகின்றேன். எல்லோரும் இந்த உலகில் வலிமையானவர்கள் தான்.தூங்கிக் கொண்டு இருக்கும் ஒரு பூனையின் வாலை மிதித்துப் பாருங்கள்.அது புலியாக மாறும்.எங்களை ஒருவர் அடிக்கிறார் என்றால் மீண்டும் அடிக்க வேண்டுமே தவிர ஓடி ஒழியவோ, பணிந்து போகவோ கூடாது.
நன்றி அம்மா.
19.
chollukireen | 10:18 முப இல் ஜூலை 27, 2015
அடிக்கிரவர்களை அடிக்காதே என்று கதையில்லை. என்னவோ நாரதர்கேட்டால் வாயுவிற்கு பலமில்லை என்று நீங்களும்,நானுமா சொன்னோம். அதுவே சொல்லியது. அதுவே முடிவெடுத்தது. கதைகள்தானிது. ஆனாலும் நாமே வலுவில் சண்டைக்கும் போக வேண்டாமே பூனை மேலே விழுந்துப் பிராண்டும். நாமும் ஜாக்கிரதையாகத்தானிருப்போம். சில முந்தைய நாட் கதைகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தவிர்க்க முடியாது. உங்கள் கோபம் நியாயமானதாக இருந்தால் உங்களிஷ்டப்படிதான் செய்ய வேண்டும். அதுதான் நியாயம். உங்களுக்குக் கோபம் தீர்ந்ததா? அன்புடன்