உப கதைகளில் நான் எழுதும் இரண்டாவது கதை. மூன்று மீன்கள்.
ஜூலை 27, 2015 at 2:43 பிப 8 பின்னூட்டங்கள்
இதுவும் தர்மரின் கேள்விக்குப் பீஷ்மரால் சொல்லப்பட்ட உபகதைதான். பீஷ்மர் அம்புப் படுக்கையில் யுத்தத்திற்குப் பின்னால் தர்மரின் உபயோகத்திற்காகச் சொன்ன ராஜ நீதிக் கதைகள். நம்முடயதென்று எதுவுமில்லை.
ஒருகுளம் .அடுத்தடுத்து குளங்கள். நீர் நிலை கொள்ளாது சிறிதும்,பெறியதுமாக நிறைய மீன்கள். அதிலும் மிக்க சினேகமுடைய மீன்கள் மூன்று. அவைகள் எங்கு இருந்தாலும்,என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக அக்குளத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தன. மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ தன்மை,குணம் இருந்தது. ஒன்றிற்கொன்று வித்தியாஸமான குணம்தான். ஆனால் அவைகளுக்கு இடையூறுமொன்றுமில்லை.
வரும் சங்கடங்களிலிருந்துஎச்சரிகையோடு இருப்பவனுக்குத் தூரதர்சி என்று பெயர். அப்படிப்பட்ட ஒரு மீன்.,அநாதகவிதாதாஆபத்து ஸமயத்தில்உபாயம்தோன்றிஎவன்தன்னைக்காப்பாற்றிக்கொள்கிறானோஅவன் பிரத்யுன்மதி. மூன்றாவது அனாவசியமாகக் காலதாமதம் செய்பவன். தீர்க்க சூத்ரி. இந்த மூன்று மீன்களும் தனித்தனியே ஒவ்வொரு குணத்துடன் இருந்தது.
ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் அக்குளத்தருகே வந்து அதைச் சுற்றிலும் வாய்க்கால் அமைத்து தண்ணீரை வடியவைத்து , நீர் குறைந்ததும் வலை வீசி மீன்களைப் பிடிக்கலாம் என்றுபேசிக் கொண்டனர். இந்தப்பேச்சை அம்மூன்று மீன்ங்களும் செவிமடுத்தது. மறுநாளே கால்வாயும் வெட்டத் துவங்கினர். பெரியமீன்கள் யோசித்தது.
மற்ற மீன்களைக் கூப்பிட்டுப் பேசத் துவங்கியது. உறவினர்களே இக்குளத்தில் இருக்கும் நம் யாவருக்கும் ஆபத்து நெருங்கி விட்டது. இன்று சில மீனவர்களின் பேச்சைக் கேட்டேன். நான் ஒரு யோசனை சொல்கிறேன் நாமும்யாவரும்அறியாமல்இக்கால்வாய்கள் மூலமே இவர்கள் வெட்டும் வாய்க்கால் மூலம் வெளியேறி விடுவோம். அதற்குள் வேறு இடமும் கிடைக்கும் என்றது. யாருக்காவது ஆக்ஷேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என்றது. இதைச்சொல்லியது தூரதர்சி. அடுத்த இடத்திற்குப் போய்விட்டால் அங்கிருந்து தப்பலாம் என்றது. யாவும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டது. தண்ணீர் வெளியேறத் துவங்கிவிட்டது. சீக்கிரம் முடிவெடுப்போம் என்றது.
தீர்க சூத்ரி பதில் சொல்லியது. நண்பனே அதற்கு இன்னும் காலம் வரவில்லை. நேரம் இருக்கிறது என்றதுப்ரத்யுன்மதி சொல்லியது. ஸமயம் வரும்போது எனக்கு யோசனை தோன்றும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். அவஸரமில்லை என்றது. நல்ல யோசனை வரும் என்றது.
மற்ற மீன்களும் இதை ஆமோதித்தது. அவைகளுக்கு பழக்கமான இடத்தைவிட்டுப் போக மனமில்லை போலும். தூரதர்சி நான் போகிறேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் நீரினுட் புகுந்து வெளியேறிவிட்டது.
மீனவர்கள் அதிக அளவு நீரை வெளியேற்றிவிட்டு நல்லதொரு அழுத்தமான வலையை குளத்தில் வீசி,பலவித யுக்திகளைக் கையாண்டு மீன்களையெல்லாம் வலையில் சிக்க வைத்தனர்.
சிக்கின மீன்களுடன் வலையை இழுத்தனர். ப்ரத்யுன்பந்த மீனும் அதில் சிக்கியது. வலையின் கயிற்றை வாயில் கவ்விக்கொண்டு வலையினுள் கட்டுண்டதைப்போல கிடந்தது. வலை வாயில் கவ்வும்படி இருந்தது. எல்லா மீன்களும் வலையிற் அகப்பட்டு விட்டது. வேறு இடத்திற்கு நீரின் வழியே எடுத்துப்போய் சுத்தம் செய்வோம் என்று வலையை இழுத்துக் கொண்டு போய் சுத்தம் செய்யத் துவக்கினர், ப்ரத்யுன்மதி கயிற்றை வாயிலிருந்து விடுத்துக் கொண்டு நீரில் தாவிவிட்டது. ஆனால் தீர்க சூத்ரிக்கு பயத்திலேயே உணர்விழந்து மரணத்தைத் தழுவியது. இப்படி அனுபவம் அவைகளுக்கு வேறு மாதிரி அமைந்து விட்டது.
அதனால் வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான்.
ஒருவன் தனக்குத் தக்க ஸமயத்தில் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறானோ அவன்கஷ்டப்பட்டுதான் சுகமடைய முடியும்.
எந்த மனிதனும் ஆலோசனை செய்து, அல்லது நன்கறிந்து, தேசகாலத்தை உத்தேசித்து,ஸரியாகப் பயன் படுத்தினால் அதன் ஒத்துழைப்பால் விருப்பமான பலனைப்பெறுகிறான் என்பது, பீஷ்மப் பிதாமஹரால் தருமருக்குச் சொல்லப்பட்டது என்பது கதை.
Entry filed under: பாரதக்கதைகளில் சில. Tags: அநாதகவிதாதா, தீர்க சூத்ரி, தூரதர்சி.
8 பின்னூட்டங்கள் Add your own
ranjani135 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 11:33 பிப இல் ஜூலை 27, 2015
காமாஷிமா,
நல்ல கதை. அந்த நாள் கதையாக இருந்தாலும் இன்றளவும் இதுதானே உண்மை.
இன்னும் பல கதைகளையும் தெரிந்துகொள்ள விருப்பம். சிரமம் பாராமல் பதிவிடுவதற்கு நன்றி அம்மா. அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 2:07 பிப இல் ஜூலை 28, 2015
சின்னகதைதான். இன்றும் குழந்தைகளுக்கும் சொல்லத் தக்கதாய் இருக்கிறது என்று தோன்றியது.. படித்ததை பகிர்வதில் ஞாபக விருத்தி ஏற்படுகிறது. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:25 முப இல் ஜூலை 28, 2015
நல்ல கதை. முதல் மீன் சுறுசுறுப்பான மீன் – மூளையிலும்!
4.
chollukireen | 2:13 பிப இல் ஜூலை 28, 2015
தூர தர்சி. மூளையிலும் சுறுசுறுப்பு. மிக்க நன்றி. அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 2:40 முப இல் ஜூலை 28, 2015
அருமையான கதை…
6.
chollukireen | 2:14 பிப இல் ஜூலை 28, 2015
பாராட்டிற்கு நன்றி. அன்புடன்
7.
ranjani135 | 10:58 முப இல் ஓகஸ்ட் 5, 2015
நம்மிடம் இருக்கும் மூன்று குணங்களைச் சொல்லுவது போல இருக்கிறது, இல்லையா? ஒவ்வொரு சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் – சில முன் யோசனைகள், சில வந்தபின் எடுக்கும் முடிவுகள், முடிவுகளை எடுப்பதை ஒத்திப் போடுவதாலேயே மனக்குழப்பத்திற்கு ஆளாவது என்று நாமும் இந்த மீன்கள் போலத்தானோ என்று தோன்றுகிறது.
சின்னக் கதையானாலும் சிறந்த நீதியைச் சொல்லுகிறது. இன்னும் இதைப்போல எழுதுங்கள். படிக்க நன்றாக இருக்கிறது.
8.
chollukireen | 3:04 முப இல் ஓகஸ்ட் 7, 2015
மிக்க நன்றி. இம்மாதிரியான பின்னூட்டங்கள் வந்தால் மேலும் படிப்பவர்களுக்கு படிக்கத் தூண்டும். ஊக்கம் கொடுக்கும் பின்னூட்டம். எழுத முயற்சிக்கிறேன். அன்புடன்