பாஸ்தா ஸேலட்
ஜூலை 30, 2015 at 11:52 முப 10 பின்னூட்டங்கள்
ஸேலட் வகையில் இம்மாதிரி ஸேலட் சாப்பிட்டால் இரண்டொரு ஸ்லைஸ் வேண்டுமாளால் பிரெட் எடுத்துக்கொண்டால் கூட போதுமானது பசியடங்கி விடும். ஸேலட் பிடித்தவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.செய்வதும் எளிது. வீட்டில் பாஸ்தா செய்தால் நான் வேக வைத்த பாஸ்தாவில் சிறிது எடுத்து வைத்து இருந்து இம்மாதிரி செய்வது வழக்கம். உங்களுக்கும் ஒரு குறிப்பாகப் பயன்படும்.
வேண்டியவைகள்.
15 துண்டுகள் வேக வைத்த பாஸ்தா. காய்கறிகள் காரட்,வெங்காயத்தாள், காப்ஸிகம், ப்ரகோலி ஜுகினி,வெள்ளரிப் பிஞ்சு,டொமேடோ இவைகளில் எது இருக்கிறதோ அவைகளில் சிறிது ,சிறிது எடுத்துக் கொள்ளவும்.
துளி எலுமிச்சைச் சாறு,ஆலிவ் ஆயில் அரை டீஸ்பூன், விருப்பப் பட்டவர்கள் ஒரு இதழ்ப் பூண்டு மெல்லியதாகநறுக்கியது,வேண்டிய உப்பு,துளி மிளகுப் பொடி,துளி தேன்,அல்லது ஒரு சிட்டிகை சர்க்கரைஇவைகளை ஒன்றாகக் கலந்து வைக்கவும். சாப்பிடுமுன் இவைகள் யாவற்றையும் ஒன்றாகக் கலந்து போலிலோ,தட்டிலோ அலங்காரமாக வைத்து விட்டால் வேண்டியவர்கள் எடுத்துச் சுவைக்கட்டுமே!
Entry filed under: சுலபமானது. Tags: பாஸ்தா, மிளகுப்பொடி.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 2:04 பிப இல் ஜூலை 30, 2015
இது அதிகம் செய்ததுமில்லை, சுவைத்ததுமில்லை! பாஸ்தா போட்டு நூடுல்ஸ் போல ஓரிருமுறை செய்திருக்கிறோம்!
2.
chollukireen | 12:14 பிப இல் ஜூலை 31, 2015
காய்கறி ஸேலட்டுடன் நம்பிரகாரம் கொஞ்சம் புளிப்பும் காரமும் சேர்த்தால் இதுவும் அதனுடன் சேர்ந்து சுவை கொடுக்கிறது. நூடல்ஸ்க்கு அண்ணா இது. அரிசி பழக்கமில்லாத நாட்டில் இது ஒரு பிரதான ஐட்டம். பிட்ஸா,பாஸ்தா எல்லாம் மேலை நாட்டு இறக்குமதி. பேரன்,பேத்திகள் தற்காலமில்லையா? வாய்த்தால் கிழவியும் பாடுவாள். சேமியா மெல்லியது. பாஸ்தா பயில்வான். அவ்வளவுதான். நன்றி அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 2:25 பிப இல் ஜூலை 30, 2015
எப்போதாவது ஒரு முறை செய்வார்கள்…
4.
chollukireen | 12:17 பிப இல் ஜூலை 31, 2015
பெரிய பசங்களாக இருந்தால் லஞ்சிற்காக பாஸ்தா வேறு முறைகளில் செய்து அனுப்புகிறோம். போதுமே. எப்போதாவது செய்கிறீர்களே? நன்றி. அன்புடன்
5.
chitrasundar | 5:55 பிப இல் ஜூலை 30, 2015
காமாஷிமா,
நல்ல ஐடியாதான். பாஸ்தா பிடிக்காதவர்கள் இப்படி முயற்சி செய்யலாம். சாலட் நல்ல பளிச் நிறத்தில் இருக்கிறதும்மா. அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 12:21 பிப இல் ஜூலை 31, 2015
காய்கறி ஸேலட்டில் பிடிக்காதவர்கள் , ஒரிரு நிமிஷம் காயை மைக்ரோவேவில் சூடு செய்தும் கலக்கலாம். இது ஒரு ஸேம்பிளுக்காகவே. கலர் பிடித்திருக்கிறது. உனக்கு. நன்றி . அன்புடன்
7.
ranjani135 | 7:14 முப இல் ஜூலை 31, 2015
பாஸ்தா சாலட் கலர்புல் ஆக இருக்கிறது. என் பென்ணிற்குச் சொல்ல வேண்டும். அதென்னவோ, எனக்கு எப்போதுமே மேகி, பாஸ்தா இவையெல்லாம் பிடிப்பதேயில்லை.
8.
chollukireen | 12:29 பிப இல் ஜூலை 31, 2015
மேகிதான் ஓடிப்போய்விட்டதே. பாஸ்தாவில் அம்மாதிரி ஸாமான்கள் இல்லை. நாம்தான் ருசியைக் கூட்ட வேண்டும். மேலே எழுதினது சுலபமானது. தற்கால பசங்கள் பாஸ்தா என்றால் மிக்க விருப்பமாகச் சாப்பிடுகிரார்கள். இல்லா விட்டால் நான் கூட உங்கள் மாதிரிதான் சொல்வேன். பாஸ்தாவும் ஓடிவிடுமா பார்க்க வேண்டும். அன்புடன்
9.
பிரபுவின் | 10:03 முப இல் ஓகஸ்ட் 2, 2015
அருமை.மிகவும் இலகுவான உணவு.வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா.அன்புடன்….
10.
chollukireen | 3:50 பிப இல் ஓகஸ்ட் 3, 2015
மிக்க ஸந்தோஷமும்,நன்றியும். பார்க்கலாம் தொடர்ந்து. அன்புடன்