இது என்ன பூ, வாழைப்பூ மாதிரி.
ஓகஸ்ட் 24, 2015 at 3:49 பிப 16 பின்னூட்டங்கள்
கொட்டை வாழை இனம்போல மெல்லிய,நீண்ட வாழை மாதிரி இலைகள். ஒல்லியா,உயரமான செடிகள். சிவப்பும் மஞ்சளும் கலந்த வாழைக் குலைபோன்று தொங்கும் பூக்கள். அழகானது. பூவின் பெயர் lobster claw.லாப்ஸ்டர் கிளா. எங்கள் வீட்டில் பூத்தது. எப்படி இருக்கு ? .செடியின் தண்டு சற்று உருண்டை வடிவில் காணப்படுகிறது. பூவிற்கு வாஸனை இல்லை. சீக்கிரம் கலர்மாறி வாடுவதுமில்லை. தொட்டிகளில் வாழை மாதிரி பக்கக் கன்றுகளுடன் வளர்கிறது. பூக்கள் அழகாக இருக்கிறது. அதிகம் கேரளாவிலும்,அஸ்ஸாமிலும் நான் பார்த்தேன். இங்கு மும்பையில் நீண்ட தொட்டியில் வளர்ந்து பூத்துள்ளது. பார்த்து ரஸிக்க அழகாக இருக்கிறது. சின்ன இடங்களிற்கூட வீட்டின் ஓரங்களில் வளர்க்கலாம். . நல்ல வெயில் தேவையாக இருக்கிறது. நல்ல வெயிலில் பூக்கள் சற்று நிறம் மாறுவதுபோலத் தோன்றினாலும் பிறகு பளிச்சென்று ஆகிவிடுகிறது. மனதைக்கவரும் செடிக்கு அழகூட்டும் லாப்ஸ்டர்க்ளா.
16 பின்னூட்டங்கள் Add your own
chitrasundar க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar | 8:06 பிப இல் ஓகஸ்ட் 24, 2015
காமாஷிமா,
பார்ப்பதற்கு லாப்ஸ்டர் க்ளா மாதிரிதான் இருக்கு. வித்தியாசமான இது மாதிரி பூக்கள் இங்கும் உள்ளன. ரசிப்பதில் உங்களுக்கும் நேரம் போவதே தெரியாமல் இருக்கும் ! அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 7:33 முப இல் ஓகஸ்ட் 27, 2015
பூ அழகாக இருக்கு. போடவேண்டும் என்று தோன்றியது. தினமும் பார்வையில் படுகிரதே அதற்கும் ஒரு நன்றி சொல்ல வேண்டாமா, அதுதான் காரணம். அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:33 முப இல் ஓகஸ்ட் 25, 2015
கண்கவர் பூ. இதனால் மருத்துவப் பயன் போல வேறு எதுவும் பயன் உண்டா அம்மா?
4.
chollukireen | 7:36 முப இல் ஓகஸ்ட் 27, 2015
ஏதாவது இருக்குமா என்று தேடித்தேடிப் பார்த்தேன். மருத்துவப் பயன்கள் எதுவும் இருப்பதாகத் தகவல்கள் இல்லை. வீட்டுத் தொட்டியில் பூத்திருக்கிரது .. நன்றி உங்களுக்கு. அன்புடன்
5.
marubadiyumpookkum | 5:28 முப இல் ஓகஸ்ட் 25, 2015
I too saw it some where else. But not recollecting the place.but remembering that sight of flowers.
6.
chollukireen | 8:03 முப இல் ஓகஸ்ட் 27, 2015
அதனாலென்ன சட்டென்று பூவைப் பார்த்த ஞாபகம் வந்து எனக்கு மறுமொழி அனுப்பியது மிக்க ஸந்தோஷம். பளிச்சென்று வாடாமல்,வதங்காமல் அழகாக இருக்கிறது. நன்றி. அன்புடன்
7.
marubadiyumpookkum | 10:16 முப இல் ஓகஸ்ட் 27, 2015
thanks ma long live.
8.
Geetha Sambasivam | 10:33 முப இல் ஓகஸ்ட் 25, 2015
ஏதோ பஞ்சவர்ணக் கிளிகள் அமர்ந்திருப்பது போல் இருக்கு!
9.
chollukireen | 8:04 முப இல் ஓகஸ்ட் 27, 2015
கலர் அப்படி உருவமும் அப்படி. நன்றி அன்புடன்
10.
A Kumar | 8:16 பிப இல் ஓகஸ்ட் 26, 2015
Dear Akka,
Rombavum nanraga Irukkirathu.
Ellorukkum idhupol ezhthutha varathu
11.
chollukireen | 8:05 முப இல் ஓகஸ்ட் 27, 2015
இன்னும் இதைவிட அழகாக எழுதலாம் என்று நான் நினைக்கிறேன். ஸந்தோஷம். அன்புடன்
12.
chollukireen | 8:19 முப இல் ஓகஸ்ட் 27, 2015
விருப்பம் தெரிவித்த மறுபடியும் பூக்கும் வலைத்தளத்திற்கும்,ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கும் மிகவும் நன்றி. அன்புடன்
13.
chollukireen | 8:34 முப இல் ஓகஸ்ட் 27, 2015
விருப்பம் தெரிவித்த ரஞ்சனி நாராயணனுக்கும்,மருபடியும் பூக்கும் தளத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
14.
பிரபுவின் | 6:07 பிப இல் ஓகஸ்ட் 27, 2015
அருமையான பதிவில் அழகான பூ. வாழ்த்துக்கள்.இதன் தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா அம்மா.நன்றி அம்மா…அன்புடன் பிரபு.
15.
chollukireen | 6:26 முப இல் ஓகஸ்ட் 28, 2015
தேடிக்கண்டுபிடித்ததில் இந்தப் பெயர்தான் கிடைத்தது. இது ஆங்கிலமாகிவிட்டது. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்தான். பார்ப்போம். அன்புடன்
16.
ranjani135 | 10:36 முப இல் செப்ரெம்பர் 2, 2015
வாழைப்பூவுக்குள் இருக்கும் பூ போல இருக்கிறது, இல்லையா? கலரும் கொஞ்சம் டார்க் -ஆக அதேபோல இருக்கிறது. வாசனைப்பூவா?