குஷவ்ரத் ஸரோவர். நாஸிக் கும்பமேளா.
செப்ரெம்பர் 1, 2015 at 2:52 முப 15 பின்னூட்டங்கள்
கோதாவரி நதியின் உற்பத்தி எனப்படும் இந்த குஷவ்ரத் ஸரோவர் மிகவும் பிரஸித்தமானது. தலைக்காவிரி நதியின் உற்பத்திஸ்தானம் போல் இதுவும் ஒரு குண்டமே. கும்ப மேளா ஸமயம் இந்த இடத்தில் ஸாது ஸன்னியாசிகள் விசேஷமாக நீராடும் புண்ணியம் பொருந்திய புராதனமான நீர்நிலை இது.
இதுவே கோதாவரி நதியின் உற்பத்திஸ்தானமும். தெய்வீகச் சக்தி வாய்ந்த நீர் நிலைகளுக்கு அமானுஷ்ய சக்தி உண்டு. இப்படிப்பட்ட நீர் நிலைகளில் நீராடுவதென்பது ஹிந்துக்களின் ஒரு புராதனப்பழக்கம். நீராடுவதோடில்லாமல், தங்களின் காலஞ்சென்ற மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் தொன்று தொட்டு அனுஸரிக்கும் ஒரு நல்ல பழக்கமாகவே இருந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் நாஸிக் என்ற திரயம்பகேசுவரர் கோயில் கொண்டுள்ள நகரின்எண்ணூரு மீட்டர் தொலைவிலேயே இந்த ஸரோவர் அமைந்துள்ளது. குஷவ்ருத் என்று அழைக்கப்படும் இந்த ஸரோவர் ஸம்பந்தமாக கௌதம ரிஷியின் கதை கூறப்படுகிறது. ஒரே இடத்தைப்பற்றிய பலவித கதைகளிருக்கலாம். கௌதமருக்கு சிவபெருமான் கொடுத்த வரத்தின் காரணமாய் இந்த நதி உண்டானது.
இங்கு நடந்த ஷாஹிஸ்னான் அன்று ஏராளமான ஸாதுக்கள் நீராடிய பின்பு, தீர்த்த யாத்திரை செய்யும் பக்தர்களுக்கும் ஸ்னானம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.கோதாவரி தீரத்தில் எவ்வளவோ ஸ்னான கட்டங்கள் இருந்தாலும், உற்பத்திஸ்தானமாகிய இவ்விடம் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. கௌதம ரிஷிக்கு விபத்தின் காரணமாய் எதிர்பாராத வகையில் ஒரு பசுவைக் கொன்ற பாவம் வந்து சேர்ந்து விட்டது. அ ந்த பாவத்தைப் போக்கக் கோதாவரியில் நீராடினால் பாவம் தீருமென்றபோது கோதாவரியில்நீராடமுடியாமற்போய்விட்டது. நாஸிக்கின் பிரும்மகிரி மலையில் உற்பத்தியான கோதாவரியில் நீராட முடியாமல் முதன் முறையாக கோதாவரி, சற்று தூரத்திலேயே மறைந்து விட்டது. பூமியில் இருக்க கோதாவரி விரும்பவில்லை. கௌதம ரிஷி எதிர்பாராத விதமாக ஸம்பவித்த பாவத்தைப் போக்க, சாபத்தினின்றும் விடுபட, தன்னுடைய தபோ வலிமையைக் கொண்டு, கோதாவரியைத் திரும்பப் பெருக்கெடுக்க உத்தேசித்தார். நான்கு வலிமை வாய்ந்த குஷ் என்ற தர்ப்பைப் புல்களை நான்கு மூலைகளிலும் வீசியெறிந்து,தன் வலிமையைப் பிரயோகித்து தடுத்தார். தவ வலிமை வேலைசெய்து கோதாவரியை நான்கு புறமும் தடுத்து நிறுத்தியது.
அதுவே குஷ்வ்ரத் என்ற ஸரோவர். நான்கு மூலைகளும்,சுற்றியும் தர்பைப் புல்லினால் தடுக்கப்பெற்றது. இங்குதான் முதல் ஷாகிஸ்னான் 29-8-2015 தேதி கிரஹநிலை,மற்றும் நாள்,கோள்களை, அனுஸரித்து நாள் குறிக்கப் பட்டது. இம்மாதிரி குறிப்பிட்ட நாட்களில், முப்பத்து மூன்று கோடி தேவரிஷிகளும்,மும்மூர்த்திகளும்,சிறந்த வேத பண்டிதர்களும் இந்நீர் நிலையில் நீராட வந்திருப்பதாக ஐதீகம். நம்பிக்கையும் கூட. இம்மாதிரி தினங்களில் மற்றவர்களும் புனித நீராடுவது பெறற்கறிய பேராகக் கருதப்படுகிறது. இந்தியாவின் பல பாகங்களினின்றும்,ஸாதுக்கள் கூட்டம்கூட்டமாக வருவதை,ராஜ ரிஷிகள் போல மேளதாள தாரை தப்பட்டை வாத்தியங்கள் முழங்க வரவேற்பதும்,ஊர்வலமாக வந்து நீராடுவதும் பார்க்கக் கிடைக்க வேண்டும். இவர்களுக்கு கவர்மென்டிலேயே நேரம் குறிப்பிட்டு, தொகுதிதொகுதியாக நல்ல முறையில் நீராட வசதிகள் செய்து கொடுப்பதும், சாலையில் அமைந்திருந்த
டெண்டுகளிலிருந்து இவர்களைப் படம் பிடிக்கவும் முடிந்தது. ஏராளமான இவர்கள் நீராடல் முடிந்த பிரகு, மற்ற தீர்த்த யாத்திரிகளுக்கு அதே வசதியுடன் நிம்மதியாக நீராட வசதியும் கொடுக்கிறார்கள்.. மூன்று கும்ப மேளாவில் ,ஷாஹி ஸ்னான் செய்தல் விசேஷமாகக் கருதப்படுகிரது. அம்மாதிரி மூன்றாவது ஸ்னானமாக நாஸிக்கிற்கு தில்லியிலிருந்து ஸ்னானம் செய்ய வந்த என் பிள்ளையைக் கேட்டுத் தெரிந்து கொண்ட ஸமாசாரங்கள் இவை. இன்னும் தொடர்ந்து பல வேறு தேதிகளில் ,ஷாஹிஸ்னான் இருக்கிரதாம். சமைத்ததை டேபிளில்
வைத்து விட்டு கதை கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆர்வம் கேட்பதிலும்,சொல்வதிலும் இருக்கிரது. அதுவும் ஷாஹிஸ்னான்தான். கணேஷிற்கு மிகவும் நன்றி.
படங்களும் இப்போது எடுத்தவையே. ஸாதுக்கள் எல்லாம் காட்மாண்டு சிவராத்திரி போல பல நூறுமடங்கு அதிகம் வந்திருந்தனர் நல்லது கெட்டது எங்கும் இருக் கும். நமக்கு வேண்டியதுஎல்லாம் புனித நீராடல் மட்டுமே.
நீங்கள் யாவரும் பார்த்து ரஸிக்கவே இந்தப்பதிவு. ரஸியுங்கள்.
Entry filed under: படங்கள். Tags: கும்பமேளா, நாஸிக், முப்பத்துமூன்றுகோடி.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 2:19 பிப இல் செப்ரெம்பர் 1, 2015
பார்த்ததே இல்லை. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பின்னணிக் கதை இருக்கிறது. இந்த இடத்தின் பின்னணிக் கதை தெரிந்து கொண்டேன். படங்கள் அருமை. நன்றி அம்மா.
2.
chollukireen | 1:12 பிப இல் செப்ரெம்பர் 2, 2015
முதல்வரவு. கதைகேட்க விஷயம் கேட்க நானும் உட்கார்ந்து விட்டேன். சாப்பிட்டவுடன் ஏர்போர்ட் போக பிள்ளை தயாராக வேண்டும். எனக்கு விஷயம் முக்கியம். நான் கோதாவரியா போகப்போகிறேன். அருமை படங்களா.நன்றி அன்புடன்
3.
ஸ்ரீராம் | 1:37 பிப இல் ஜூன் 2, 2021
மறுபடியும் இதையேதான் சொல்லத்தோன்றுகிறது.
4.
chollukireen | 2:50 பிப இல் ஜூன் 2, 2021
பதிவு இடுவதற்கு முன் நானும் இதையே நினைத்துக்கொண்டேன் நீங்கள் எப்படி எழுதுவீர்கள் என்று சந்தோஷம் அன்புடன்
5.
chitrasundar | 7:43 பிப இல் செப்ரெம்பர் 1, 2015
காமாஷிமா,
கோதாவரி கதை கேள்விப்படாதது. புகைப் படங்களுடன் கதையையும் சொல்லி, சாப்பாடும் கொடுத்து பகிர்ந்துகொண்டதற்கு நன்றிமா, அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 1:14 பிப இல் செப்ரெம்பர் 2, 2015
நானும் இப்போதுதான் கேள்விப்பட்டேன். கோதாவரி நாஸிக் போனபோதுகூட இந்த குண்டத்தைப் பார்க்கவில்லை. அப்போது ஒரே மழை. நன்றி அன்புடன்
7.
ranjani135 | 10:32 முப இல் செப்ரெம்பர் 2, 2015
உங்கள் பிள்ளையின் தயவால் ஷாகிஸ்நான் செய்து, உங்கள் கையால் சாப்பாடும் சாப்பிட்டாயிற்று!
அரசு இத்தனை வசதிகள் செய்து கொடுக்கிறது என்பது கொஞ்சம் வியப்பான தகவல் தான்.
கோதாவரி கதையும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
(சாப்பாட்டு மேஜையில் என்னென்ன ஐட்டங்கள் என்று பெயரும் போட்டிருக்கலாம்!)
8.
chollukireen | 1:55 பிப இல் செப்ரெம்பர் 2, 2015
ஆவணி அவிட்டம். வரலக்ஷ்மி விரதம், யாரும் இல்லை. அதனால் காயத்ரி ஜபம் களைகட்டியது. வடைமாவையே பீன்ஸ் உசிலிக்குச் சிறிது உபயோகித்தேன். வாழைக்காய் நேன்திரங்காயாக வந்தது அது ஒரு கறி. இருக்கும் காய்களைக்கொண்டு ஒரு அவியல். பிள்ளைககுப் பிடிக்குமென்று முருங்கைக்காய் வெந்தயக் குழம்பு,பருப்பு, ரஸம், வடை, பப்படம். ஸ்வீட் ஆத்திலேயே இருந்தது. ஒருவேளை சாப்பாடு என்றாலும்
பிடித்தவையாகச் செய்தேன். அவ்வளவுதான். மனது வேகம். . நன்றி . சாப்படுபோதுமா. அன்புடன்
9.
Gurumurthy-hyderabad | 4:03 பிப இல் செப்ரெம்பர் 3, 2015
I was there for 4 years and had the opportunity each year.
10.
chollukireen | 6:57 முப இல் செப்ரெம்பர் 4, 2015
நான் இந்தப்பதிவு எழுதும்போதே நாஸிக்கில் டாலுவிற்கு பூணல் போட்டது , நீங்கள் அங்கிருந்தது, லலிதா தம்பதியினர் எல்லா விவரங்களும் பங்கு கொண்டது யாவும் ஞாபகத்திற்கு வந்தது. இதில் கூட ஏதாவது திருத்தம் நீங்கள் சொல்லலாம் என்று எதிர்பார்த்தேன். விஷயம் உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்திருக்கும் என்ற எண்ணத்துடன். உங்கள் பதில் உற்சாகத்தைத் தந்தது. சாந்தி, எங்கள் நாட்டுப் பெண்ணிற்கு ஒரு 25 வகை ஊறுகாய்கள் ஒருசமயம் செய்து கொடுத்தாள். அதையும் ஞாபகப்படுத்திக் கொண்டேன் என்று அவளிடம் சொல்லவும். யாவருக்கும் அன்புடனும், ஆசிகளுடனும்
11.
chollukireen | 11:20 முப இல் ஜூன் 2, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
மீள் பதிவு செய்வதிலும் இப்படி ஒரு மாறுதலான விஷயமாக இருக்கட்டும் என்று தோன்றியது. 5,6 வருஷங்களுக்கு முந்தைய ஸமாசாரமானாலும் இதுவும் படிக்க நன்றாக இருக்கும் என்று மனதில் பட்டது.பாருங்கள் அன்புடன்
12.
Revathi Narasimhan | 7:59 பிப இல் ஜூன் 2, 2021
மிக உன்னதமான பதிவு.
உங்களுடைய ஒவ்வொரு அனுபமும் மனதை
மகிழ்ச்சியால் நிரப்புகிறது.
கோதவரி, கௌதம மகரிஷி கதை அறியாதது.
2015 இல் நீங்கள் பிள்ளைக்குச் செய்து தந்த
உணவு உபசாரம் மிக அருமை.
ஸாதுக்கள் காட்சியும், ஷாஹி ஸ்னான் மகிமையும்
அற்புதம்.
25 வகை ஊறுகாய்களா!!!! ஒவ்வொரு குறிப்பும்
லகஷம் பெறுமே.
அதை எல்லாம் சொல்லுங்கள் காமாட்சி மா.
13.
chollukireen | 11:14 முப இல் ஜூன் 3, 2021
யாராவது சிலராவது படிக்கட்டுமே என்ற வகையில் மீள் பதிவு இது. நீங்கள் படித்து,பாராட்டியது மிகவும் நன்றி.ஊறுகாய் சினேகிதி செய்து கொடுத்ததை மறுமொழியில் ஞாபகப்படுத்தி இருந்தேன். இப்போது நான் எப்படி என்பதை மீள் பதிவுகளே சொல்லும். அன்பிற்கு வந்தனம். அன்புடன்
14.
நெல்லைத்தமிழன் | 12:40 முப இல் ஜூன் 4, 2021
பதிவு முக அருமை…. இந்த ஸ்நான் கட்டத்திற்கு நான் போயிருக்கேனா அல்லது அது வேறு இடமான்னு படங்களைப் பார்க்கணும். தெரியாத ஒன்றைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சி.
மனம் சாப்பாட்டு மேசையில் இருக்கும் வடை, அப்பளாம் ரெய்த்தாவை நினைத்து, என்ன விசேஷமாக இருக்கும் என்று யோசிக்கிறது.
15.
chollukireen | 11:21 முப இல் ஜூன் 4, 2021
அன்று காயத்ரி ஜபம் என்று நினைக்கிறேன். அவ்வருஷம் பண்டிகைகளுக்கு யாருமே இவ்விடம் இல்லாததால் அன்று அவைகள். நீங்கள் பார்த்த இடமாக இருந்தால் மிக்க ஸந்தோஷம். ஏதோ மனதிற்குப் பட்டதை மீள் பதிவு செய்கிறேன். நன்றி அன்புடன்