மேதிபரோட்டா அல்லது வெந்தயக்கீரை ரொட்டி
செப்ரெம்பர் 3, 2015 at 10:30 முப 5 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்———–மாவு தயாரிக்க—-கோதுமைமாவு—2கப்
அரிசிமாவு-ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைமாவு, அல்லதுசோளமாவு–ஒருடேபிள்ஸ்பூன்
மிளகாய்ப்பொடி—-அரை–டீஸ்பூன் ஆம்சூர்–ஒரு டீஸ்பூன்
சீரகப்பொடி—அரைடீஸ்பூன் -ருசிக்கு வேண்டியஉப்பு
அலம்பி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய லெந்தயக்கீரை-ஒருகப்
மாவுடன் கலக்க-ஒருடேபிள் ஸ்பூன் எண்ணெய்.
இவைகள் யாவையும் ஒன்று சேர்த்துக் கலந்துப பிறகு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ரொட்டிமாவுபதத்தில் மாவைத் தயாரித்துக் கொள்ளவும். அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
ரொட்டி தோய்த்துயிட மாவும், ரொட்டி தயாரிக்க விருப்பம்போல எண்ணெயோ நெய்யோ உபயோகிககலாம்.
திட்டமான உருண்டைகளாகச் செய்து . குழவியினால் ஊறினமாவை வட்டமான ரொட்டிகளாக மேல் மாவில் பிரட்டிஇட்டு அவரவர்கள் அடுப்பில் தோசைக் கல்லில் நெய் விட்டு ரொட்டிகளைஒவ்வொன்றாகதயாரிக்கவும் . டால,கூட்டு முதலானவைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
Entry filed under: Uncategorized.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:27 முப இல் செப்ரெம்பர் 4, 2015
இதுவரை செய்ததில்லை. வெந்தயக் கீரை எப்போதாவதுதான் வாங்குவோம். ஆம்சூர் என்றால் என்ன?
2.
chollukireen | 6:42 முப இல் செப்ரெம்பர் 4, 2015
உலர்ந்த மாங்காய்ப்பொடி ஆம்சூர். புளிப்பு சுவை கூட்டுவதற்காக வட இந்திய சமையலில் இது இடம் பெறுகிறது எனக்குச் சற்று அந்தத் தாக்கம் உள்ளது. மாங்காயைத் தோல்சீவி உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்து பொடியாகப் பாக்கெட்டுகளில் கிடைக்கும். ஆம் —மாங்காய். சூர்—பொடி. இதே மாதிரி நெல்லிக்காய்,மாதுளம் பழப் பொடிகள் கூடக் கிடைக்கும். தோசை மிளகாய்ப்பொடியில் கூட நான் சிலஸமயம் ஆம்சூர் போடுவேன். கசப்பு ஸாமான்கள் சமையலில் ஆம்சூர் ருசியை அதிகரிக்கும். இது 2009 இல் போட்ட பதிவு. உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
இளமதி | 1:46 பிப இல் செப்ரெம்பர் 4, 2015
வணக்கம் அம்மா!
மேத்தி பரோட்டா ஒருமுறை இங்கு ரெடி மேட்டாக கிடைத்து வாங்கிச் சூடு பண்ணிச் சாப்பிட்டேன். பெயருக்கு அங்கிங்கே குட்டிக் குட்டியா ஓரிரண்டு இலைகள் சேர்த்திருந்ததே தவிர வேறு விசேடமாக இருக்கவில்லை.
ஒருமுறை ஏசியன் கடையில் இந்த வெந்தியக் கீரைக் கட்டைக் கண்டவுடன் வாங்கிக் கொண்டாந்த அன்றே இவருக்கு ரொம்பவும் முடியாமல் ஹாஸ்பிட்டல் திரிச்சல். கீரை கவனிப்பாரற்றுக் குப்பை வாளியைச் சரணடைந்தது. வீட்டில் எல்லாம் சாதாரணமாக இருக்கிறது வெந்தியக்கீரை இருக்கான்னு கடையில் கேட்டால் ’இல்லியே வரேல இந்த வாட்டி’…ங்கிறாங்க.. என்ன சொல்ல அம்மா!
கல்லைக் கண்டால் நாயைக்காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்ன்னு எங்க ஊர்ல தமாஷா சொல்லுவாங்க அதுபோலவே எனக்கும் எல்லாம்..:)
நல்ல செய்முறை! சுலபம்! என்னிக்கோ ஒருநாள் கீரை கிடைக்கறப்போ செஞ்சு பார்ப்பேன் மா!
பின்னூட்டம் நீண்டுவிட்டது. பொறுத்துக்கோங்க மா!
அங்கே வந்து வாழ்த்தியமைக்கும் ரொம்ப மகிழ்ச்சியுடன் நன்றி மா!
4.
chollukireen | 12:45 பிப இல் செப்ரெம்பர் 5, 2015
அன்புள்ள இளமதி கடைகளில் வாங்குவது முக்கால் வாசி நேரங்களில் பெயருக்கும்,பொருளுக்கும் ஸம்பந்தமில்லாமலே இருக்கும். உன் அனுபவம் இதை நிரூபிக்கிறது. பரவாயில்லே. உன் காமாட்சி அம்மாவின் சமையல் குறிப்பு பார்த்து திருப்தி அடைந்து விடு. இந்த மேதி பரோட்டா ஜெனிவாவில் செய்தது. கீரை இந்தியனோ,ஸ்ரீலங்காவாகத்தான் இருக்கும். கஸூரி மெத்தி என்கிற உலர்ந்த வெந்திய.க்கீரைப் பொடியாகக் கிடைக்கிறது. அது கூட நன்றாக உள்ளது. நானும் ஜெனிவாவில் இந்த அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.
ஸரி. உனக்கு அலைச்சல்,திரிச்சல்,மன உளைச்சல் இவைகளின் மத்தி.யில் இளைய நிலவாகவே வலம் வர வேண்டுகிறேன். உன்னுடயது நீண்ட பின்னூட்டமில்லை. அன்பின் வெளிப்பாடு. நான் உங்களின் ப்ளாகர் காமிலும் ஒரு வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். காமாட்சி என்ற பெயரே. இன்னும் சூடு பிடிக்கவில்லை. பார். உனக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல். உங்கள் ப்ளாகரிலும் நிறைய சினேகம் பிடிக்க ஆசை. வாழ்த்துகள் உனக்கும்
குடும்பத்தினருக்கும். அன்புடன்
5.
Geetha Sambasivam | 10:05 முப இல் செப்ரெம்பர் 24, 2015
அடிக்கடி பண்ணுவேன். ஆனால் அம்சூர் வீட்டில் இருந்தாலும் தயிர் சேர்த்துப் பிசைவேன். பரோட்டாவாகவே மடித்து மடித்துப் போட்டு இட்டுப் போட்டு எடுப்பேன். கொஞ்சம் பச்சைமிளகாய், இஞ்சியை ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டும் சேர்ப்பது உண்டு. அநேகமாக பச்சைமிளகாய், கொத்துமல்லிக் கீரை சேர்த்து அரைத்த சட்னி இருக்கும் கைவசம். அதில் ஒரு ஸ்பூன் கலந்து கொண்டு இஞ்சியைத் துருவிப் போடலாம்.