பனீர்பரோட்டா
செப்ரெம்பர் 7, 2015 at 2:57 பிப 15 பின்னூட்டங்கள்
நீங்கள்யாவரும்,வெந்தயக்கீரை,உருளைக்கிழங்கு,, முள்ளங்கி ஆக பலவித பரோட்டாக்களைப் பார்த்து,செய்து, சுவைத்து இருக்கிறீர்கள். இந்தவரிசையில் பனீர் பரோட்டாவை ருசிக்க வேண்டாமா?
இதுவும் பரோட்டா செய்யத் தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபம்தான். ஒரு முறை செய்து பழகிவிட்டால் பனீர் வீ ட்டில் வாங்கும் போதெல்லாம் செய்யத் தோன்றும்.அலுத்துச் சலித்து பசியோடு வரும் பிள்ளைகளுக்கு இதைச் செய்து கொடுத்தால் கொண்டாட்டமாக சாப்பிடுவார்கள். தயிர்,ஊறுகாய், டால் எது இருந்தாலும் ஜோடி சேரும்.
வேண்டியவைகள் —2கப் கோதுமைமாவு,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
பனீர்—-100 கிராம். கடையில் வாங்குவது கிராம் கணக்கில்தானே கொடுக்கிரார்கள்
பச்சைமிளகாய்– ஒன்று அல்லது இரண்டு. காரத்திற்குத் தகுந்த அளவு.
பச்சைக் கொத்தமல்லி இலை மாத்திரம் சிறிதளவு.
வெங்காயம்–திட்டமான அளவில் ஒன்று.
ருசிக்கு உப்பு, எண்ணெய் வேண்டிய அளவு.
மாவை எப்போதும் போல சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து பிசைந்து ஊறவைக்கவும். ஸ்டஃப் செய்யும் பனீர்தான் உங்களுக்குப் புதிது.
பனீரை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து கொப்பரைத்துருவலில் துருவிக் கொள்ளவும்.அல்லது கையினால் உதிர்த்துக் கொள்ளவும். மல்லி இலையை மெல்லியதாக நறுக்கவும். மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் விதைகளை பூராவும் நீக்கி மிகவும் இழைபோல நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் உரித்து கொப்பரைத் துருவலில் துருவவும். நீர்க்க வரும், நம் கண்ணிலும் ஜலம் வரும். வாஸனைக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அது போதும். யாவற்றையும் சேர்த்து பனீரை நன்கு பிசையவும். மிகவும் திட்டமாக உப்பையும் சேர்க்கவும். சீரகப்பொடியோ,துளி மஸாலாப் பொடியோ சேர்க்கலாம்.
அழுத்திப் பிசைந்த பன்னீரை சிறிது நேரம் குளிர் பதனப்பெட்டியில் வைத்தாலும் நல்லது. தயாரிப்பதற்கு முன் பனீரை ஸம அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மாவையும் பனீரைவிட சற்றுப் பெரியதாக உருட்டிக் கொள்ளவும்.
மேல்மாவில் ஒற்றி ஒரு சிறிய வட்டம் செய்யவும். லேசாக எண்ணெய் தடவி மேலே பனீர் பூரணத்தைத் தட்டையான ,ஷேப்பில் வைத்து விளிம்புகளால் இழுத்து மூடவும். திரும்பவும் மேல்மாவின் உதவியுடன் வட்டமான பரோட்டாவாக இடவும். இப்படியே ஒவ்வொன்றாகத் தயார் செய்து, தோசைக்கல்லில் போட்டு எண்ணெயோ,நெய்யோ விட்டு பரோட்டக்களாகச் செய்து எடுக்கவும்.
Entry filed under: ரொட்டி வகைகள். Tags: அலுத்து சலித்து, பனீர்பரோட்டா.
15 பின்னூட்டங்கள் Add your own
திண்டுக்கல் தனபாலன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 4:35 பிப இல் செப்ரெம்பர் 7, 2015
கொஞ்சம் லேட் ஆகி விட்டது. இன்று மாலை இதுதான் வீட்டில் செய்தோம். ஆனால் பனீர் போடவில்லை. முன்னாலேயே பார்த்திருந்தால் பனீர் சேர்த்திருப்பேனே.. வீட்டில் பனீர் இருக்கிறது..
2.
chollukireen | 11:03 முப இல் செப்ரெம்பர் 8, 2015
அதனாலென்ன. இன்னொருநாள் செய்தால்ப் போயிற்று. அடுத்தடுத்து பரோட்டாக்கள் வெளியிட்டால் செய்யப்போவது யார்தான். ஆனால் நான் செய்ததை உடனே போடாவிட்டால், அப்புறம் அது பழசாகிப்போய்விடுகிறது. பனீர் பிடிக்கும் என்று தெரிகிரது. ஒருநாள் காமாக்ஷிம்மாவும் சமையலரைக்கு வந்து விடுவார். ஸரிதானே? அன்புடன்.
3.
chitrasundar | 9:15 பிப இல் செப்ரெம்பர் 7, 2015
காமாஷிமா,
படங்கள் பளிச் என பார்க்கவே சாப்பிடணும்போல் சூப்பரா இருக்குமா. செய்முறையும் எளிதாகவே இருக்கு.
இவர்கள் பனீர் சாப்பிடமாட்டார்கள், அதனால் வாங்குவதில்லை, எனக்காக டோஃபு வாங்குவேன். அதில் செய்து பார்க்கலாம். ஆனாலும் பனீர் டேஸ்ட் வராது. அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 11:08 முப இல் செப்ரெம்பர் 8, 2015
இது ஒருவிதம்,அது ஒருவிதம் என்று தலைப்பு வைத்து எழுதிவிடு. இந்தியா மாதிரி வெளிநாட்டில் பனீர் டேஸ்ட்டாக இருக்கா தெரியாது. டோஃபு பரோட்டா நன்றாகவே இருக்கும். பளிச்சென்று இருப்பதில் ஒன்றைச் சாப்பிட்டுவிடு. அழகான பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 4:56 முப இல் செப்ரெம்பர் 11, 2015
வணக்கம்…
வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது… விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது… தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது… நன்றி…
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக…
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
6.
திண்டுக்கல் தனபாலன் | 4:57 முப இல் செப்ரெம்பர் 11, 2015
வணக்கம்…
வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது… விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது… தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது… நன்றி…
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக…
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
7.
chollukireen | 11:20 முப இல் மே 19, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இன்று முள்ளங்கி பரோட்டாவை மீள் பதிவு செய்ய நினைத்தேன். எதிரே வந்து விட்டது பனீர் பரோட்டா.பராட்டாவா,பரோட்டாவா? ஸந்தேகம் வந்து விட்டது. தமிழ்நாடுநான். எதுஸரியோ அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.ருசி பாருங்கள் அன்புடன்
8.
ஸ்ரீராம் | 2:20 பிப இல் மே 19, 2021
அடடே… இந்தப் பதிவின் முதல் கமெண்ட்டே நான்தான்!
9.
chollukireen | 2:42 பிப இல் மே 19, 2021
இப்போதும் அதே கமெண்ட் தானா ஒரு முறையாவது செய்து பார்த்தீர்களா இல்லையா அதை தானே எழுத வேண்டும் பரவாயில்லை ஒரு முறை செய்து பாருங்கள் அன்புடன்
10.
ஸ்ரீராம் | 12:02 முப இல் மே 20, 2021
ஆம் அம்மா. அப்புறம் ஓரிருமுறை செய்திருக்கிறோம்.
11.
Geetha Sambasivam | 1:26 முப இல் மே 20, 2021
பராட்டா, பரோட்டா, பராந்தா எல்லாமும் சரிதான். வடக்கே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரிச் சொல்கின்றனர். ஹரியானாப்பகுதியில் இதைத் தவா பூரி என்றும் சிலர் சொல்கின்றனர். ருசியான பனீர் பராட்டா. அடிக்கடி இங்கே உ.கி. பராட்டா தான் செய்கிறேன். பனீர் என்னமோ அவருக்குப் பிடிப்பதில்லை. எப்போவாவது! 🙂
12.
chollukireen | 11:37 முப இல் மே 20, 2021
மருமகள் ஊரிலில்லாத போது பேத்திகளுக்காகச் செய்தது இது. பரோட்டா பலவிதங்களில் பெயர் உச்சரிக்கப் படுகிறது. நீங்கள் சொல்வது ஸரிதான். இளைய தலைமுறை விரும்பும் பண்டமிது. அடிக்கடி செய்யப்படுகிரது. நான் மீள்பதிவு செய்தே ருசித்து விடுகிரேன். உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன். ஏதோ நேரில் பேசுவது போன்ற உணர்ச்சி.
13.
நெல்லைத்தமிழன் | 11:43 முப இல் மே 20, 2021
அருமை. இதற்கு ஊறுகாய், தயிர் நன்றாக இருக்கும். இல்லை வெறும்னவும் சாப்பிடலாம்.
அது சரி…யார் இதை இப்போ பண்ணித்தரப்போறா?
14.
chollukireen | 11:50 முப இல் மே 20, 2021
முடிந்தபோது செய்து சாப்பிட்டால் நன்றாக இருந்தது என்று நெல்லைத்தமிழன் சொல்லுவார். என்று நான் நினைத்தால் , யார் இப்போ பண்ணித் தரப்போறா? நல்ல கேள்வி இது. எங்கள் ப்ளாக் கௌதமன் அவர்களுக்குத்தான் அனுப்ப வேண்டும். ஸரியா. நன்றி அன்புடன்
15.
chollukireen | 11:53 முப இல் மே 20, 2021
ஸ்ரீராம் அவர்களுக்கும் மிகவும் நன்றி. அன்புடன்