சென்னை ஸென்ட்ரலில் மும்பை பிள்ளையார். இங்கும்
செப்ரெம்பர் 15, 2015 at 10:16 முப 16 பின்னூட்டங்கள்
சென்ற வருஷம் பிள்ளையாரே வாரீர்,பெருமாளே வாரீர் என்று கூப்பிட்டோம். செய்தித்தாளில் மும்பைப் பிள்ளையார் ஸென்ட்ரல் ஸ்டேஷனில். சென்னையைப்பார்க்க அருள்பாலிக்க போட்டோ வெளியாகி இருந்தது.
கணபதி சென்னையில்.
சென்னை சென்று விட்டார் கணேஷ். எனக்கு கடைப்பிள்ளையார்களைப் பார்க்க வேண்டுமென்றேன். என் மகனிடம். மறந்து விட்டது போலும். நேற்று ஜி மெயிலில் ஆபீஸினின்றும் வரும்போது படங்களாக அனுப்புகிறான். உயர்ந்த பதவியிலிருந்தாலும், அம்மாவுக்காக இரண்டு மூன்று கடைகள் ஏறி இறங்கி, பேப்பர் மூட்டங்களை நீக்கி ஞாபகமாக அனுப்பி இருந்தார். எத்தெத்தனை கணேஷ்ஜிக்கள். எங்கெங்கு ஆவாஹனமோ? முன்னதாக நம் மனதிலும் ஆவாஹனம் செய்யலாம். அப்புறம் பூஜைக்குப் பின்னர் மண்டல்களின் கணேஷ்ஜீக்களையும் பார்க்கணும் என்று நினைக்கிறேன். பார்க்கலாமா? முதலில் எந்த கணேஷ்?
வாங்க அடுத்தபடியா என்த கணபதி?
அப்புறம் அடுக்கடுக்காய் அலங்கார விபின்ன கணபதிகள்
இன்னும்
இன்னும்
மிகுதி ஆனந்த சதுர்த்தி தரிசனத்தில் நிறைய மண்டலிகளின் வினாயகர்களைத் தரிசனம் செய்வோம். சென்னை சென்றகணேசரைப் பார்த்து மும்பை கணேஷுகளையும் பார்க்க உதவியது என் பிள்ளைக்கு மிகவும் நன்றி.
Entry filed under: படங்கள். Tags: அருமையான பிள்ளையார்கள்.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 12:10 பிப இல் செப்ரெம்பர் 15, 2015
இந்த முறை பிள்ளையார் ஸ்பெஷல் ‘பாகுபலி பிள்ளையார்’ தான்! பாகுபலி படத்தில் பாகுபலி சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு வருவதுபோல ஒரு காட்சி. அதே போல செய்த பிள்ளையார் தான் இந்த வருட ஸ்பெஷல்!
நீங்கள் போட்டிருக்கும் சிறப்புப் படங்களும் நன்றாக இருக்கின்றன.
விநாயக சதுர்த்தி திருவிழா நல்வாழ்த்துகள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.
2.
chollukireen | 3:35 பிப இல் செப்ரெம்பர் 18, 2015
அப்படியா? பாகுபலி படம் நான் பாரக்கவில்லை. இவ்வருடத்திய விசேஷம் எந்த பிள்ளையார் நாளை பேப்பர் பார்த்தால்தான் தெரியும். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. யாவருக்கும் விசேஷ வாழ்த்துகள். பார்க்கலாம். கணபதி தரிசனத்தில் இன்னும் என்ன பார்க்கலாம் என்று. இன்னும் ஒரு வாரத்திற்குமேல் தரிசனம் செய்யலாமே. அன்புடன்
3.
பிரபுவின் | 1:54 பிப இல் செப்ரெம்பர் 15, 2015
அழகான,நேர்த்தி மிக்க கணபதி சிலைகள்.உங்கள் பிள்ளைக்கு நானும் நன்றி சொல்லுகிறேன்.கணபதியின் அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைக்கட்டும்.
நன்றி அம்மா.அன்புடன் பிரபு.
4.
chollukireen | 3:39 பிப இல் செப்ரெம்பர் 18, 2015
இன்னும் ஏராளமான பிள்ளையார்கள் மும்பையில் தரிசனம் செய்யக் கிடைக்கும். பத்து நாட்கள் கோலாஹலம்தான். உங்கள் வரவுக்கும் அன்பான பதிலுக்கும் மிக்க ஸந்தோஷம். அன்புடன்
5.
இளமதி | 2:20 பிப இல் செப்ரெம்பர் 15, 2015
கண்ணில் ஒற்றிக்கொண்டேன் அம்மா!
அழகிய வடிவங்கள்!..
அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டுகிறேன் அம்மா!
6.
chollukireen | 3:42 பிப இல் செப்ரெம்பர் 18, 2015
உன்னுடைய வேண்டுதல்கள் பலிதமாகட்டும்.நல்ல பொதுவான வேண்டுதல். நன்றி பெண்ணே. அன்புடன்
7.
ஸ்ரீராம் | 12:30 முப இல் செப்ரெம்பர் 16, 2015
அழகிய விநாயகர் படங்கள். கிரிக்கெட் ஆடும் பிள்ளையார், மௌஸ் பிடிக்கும் பிள்ளையார், கண்ணாடி அணிந்த பிள்ளையார் என்று படங்கள் அணிவகுக்கின்றன. ரஞ்சனி மேடம் சொல்லி இருக்கும் பாகுபலி பிள்ளையார் இதுவரை கண்ணில் படவில்லை! பார்க்க வேண்டும்!
8.
chollukireen | 3:57 பிப இல் செப்ரெம்பர் 18, 2015
நானும் பாகுபலி வினாயகரைத்தான் தேடுகிறேன். எங்கு கிடைப்பார். பார்த்தால் சொல்லுங்கள் என் நமஸ்காரத்தை. அன்புடன்
9.
Geetha Sambasivam | 10:33 முப இல் செப்ரெம்பர் 16, 2015
அருமையான பிள்ளையார்கள். இந்த வருஷம் சென்னையில் கிரிக்கெட் ஆடும் பிள்ளையார்னு கணேஷ் பாலா போட்டிருந்தார். அவரை நான் பல வருடங்கள் முன்னரே மும்பையில் பார்த்திருக்கேன். உலகக்கோப்பை நடந்த சமயம். சென்னைக்கு இப்போத் தான் வந்திருக்கார் போல!
10.
chollukireen | 4:00 பிப இல் செப்ரெம்பர் 18, 2015
ப்ளைட் கிடைத்திருக்காது. பார்த்த பிள்ளையார்கள் கூட ஞாபகம் மறந்து விடுகிரது. நீங்கள் பாகுபலியைப் பார்த்தீர்களா? அன்புடன்
11.
Geetha Sambasivam | 12:18 முப இல் செப்ரெம்பர் 19, 2015
பாகுபலி சினிமாவும் பார்க்கலை, பிள்ளையாரையும் பார்க்கலை. 🙂 சினிமாவெல்லாம் தியேட்டர்களில் போய்ப் பார்க்கும் வழக்கம் எண்பதுகளோடு முடிந்து விட்டது. ராணுவக் குடியிருப்பின் திறந்த வெளி தியேட்டர்களில் சில சமயங்கள் (எண்பதுகளின் கடைசியில் )பார்த்திருக்கோம். மற்றபடி தொலைக்காட்சியில் எப்போவேனும் பார்ப்பது தான். பாகுபலி நான் பார்க்கணும்னா இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும்! 🙂
12.
chollukireen | 11:16 முப இல் செப்ரெம்பர் 20, 2015
நானும் அபூர்வமாக யாராவது கட்டாயம் செய்து கூட்டிப்போனால் பார்ப்பதுண்டு. அதற்கே சால் எடுத்துக் கொள்வேன். தமிழில்லா ஊர்கள், என்னவோ Tvஇலாவது பார்க்கலாம் இல்லையா.எதுவும் வழக்கம் இல்லை. மெள்ளவே பாருங்கள். உங்களைப்பற்றியும் பாகு பலியால்தானே தெரிந்து கொள்ள முடிந்தது. ரஸிக்கும்படியான பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. அன்புடன்
13.
chitrasundar | 2:26 முப இல் செப்ரெம்பர் 19, 2015
காமாஷிமா,
பலவிதமான பிள்ளையார்கள் கண்ணைப் பறிக்கிறார்கள். உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா. கொழுக்கட்டை சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் லேட்டாயிடுச்சு 🙂 அன்புடன் சித்ரா.
14.
chollukireen | 11:20 முப இல் செப்ரெம்பர் 20, 2015
இன்னும் பல பெரிய பிள்ளையார்களைப் பார்த்து வந்தேன். சுலபமாக பார்க்க முடிந்ததை. ஆசைகள் எதற்கும் கூடாது. வயது கூடவே வருகிறது. கொழுக்கட்டைதான் முக்கியமான நிவேதனம் இல்லையா? அதற்குதான் முன்னுரிமை. வாழ்த்துகள். அன்புடன்
15.
Jayanthi Sridharan | 8:39 முப இல் செப்ரெம்பர் 19, 2015
Mami, Nice sharing. I saw Bahubali Pillayar’s picture in The Hindu Online today. For infn.
16.
chollukireen | 11:27 முப இல் செப்ரெம்பர் 20, 2015
ஸந்தோஷம் ஜயந்தி. பாகுபலி பிள்ளையார் படத்தை நானும் ஹிந்துவில் பார்த்தேன். விவரத்திற்கு நன்றி. ப்ளாகர்டாட்காமிலும் காமாட்சி என்ற பெயரில் வலைத்தளம் எழுத முயற்சித்திருக்கிறேன். எல்லோருடைய பின்னூட்டத்திலும் குறிப்பிட நினைத்தும் ஸமயத்தில் மறந்து விட்டேன். முடிந்தபோது வந்துபார். அன்புடன்