தூதுவளை ரஸம்.
செப்ரெம்பர் 23, 2015 at 11:33 முப 11 பின்னூட்டங்கள்
சொல்வதற்கு எளிதானதே தவிர இலையை முட்கள் நீக்கி தயார் செய்தல் வேண்டும். சென்னையில் எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டின் வாசலிலேயே இந்தக் கொடியைப் படர விட்டிருந்தர்கள். மற்ற செடிகளைச் சுற்றிக் கொண்டு நன்றாகப் படர்ந்திருந்தது. சிறிய கத்திரிக்கோல் கொண்டுதான் இலைகளைக் கிள்ளி, அதன்மேலுள்ள முட்களையும் நரம்புகளையும் நீக்க வேண்டும்.
இந்த இலைகளை சுத்தம் செய்து நறுக்கி அடை,தோசைகளுடனும் சேரத்துத் தயாரிக்கலாம். நாம் ரஸம் செய்வோம். வேண்டியவைகள்.
தூதுவளை இலை— பத்து எண்ணிக்கைக்கு மேல், புளி–ஒரு சிறிய எலுமிச்சையளவு. மிளகாய் வற்றல்–1, மிளகு –ஒரு டீஸ்பூன்.,தனியா—இரண்டு டீஸ்பூன், பூண்டு இதழ்—4, துவரம் பருப்பு—3டீஸ்பூன்,சீரகம் 2 டீஸ்பூன் வருக்க நெய் சிறிது,கடுகு சிறிது ருசிக்கு உப்பு கரிவேப்பிலை இலைகள்.
செய்முறை.
புளியை ஊறவைத்து இரண்டு கப் அளவிற்குக் கரைத்துக்கொள்ளவும். பூண்டைத் தனியாக வதக்கிக் கொள்ளவும். மிளகாய்,மிளகு,தனியா,பருப்பு இவைகளைத் துளி நெய்யில் வறுத்துக் கொண்டு,இறக்கும் போது அலம்பி வைத்திருக்கும் தூதுவளை இலையையும் லேசாக வதக்கி இறக்கிக் கொள்ளவும். சீரகம்,பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீருடன்,திட்டமான உப்பு,சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.. புளி வாஸனை போோன பிறகு அரைத்த விழுதை2 கப் தண்ணீருக்கு அதிகமாகவே சேர்த்து ஒருகொதி விட்டு இறக்கவும். நெய்யில் கடுகு பெருங்காயம் தாளித்துக் கொட்டி கறிவேப்பிலை சேர்க்கவும். தூதுவளை இலை சேர்த்த பிறகு அதிகம் கொதிக்க வேண்டாம்.
ஸாதாரணமாக ரஸம், புளிஜலம்,டொமேடோ,ரஸப்பொடி உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு பருப்புஜலம் சேர்த்து, இலையைப் பொடியாக நறுக்கி வதக்கி சேர்த்து இறக்கி தாளித்துக் கொட்டினாலும் நன்றாகவே இருக்கிறது. பூண்டு சேர்ப்பது உங்கள் சாய்ஸ். பெருங்காயம் மறவாதீர்கள்.
ரஸம் என்று இல்லை. துவையல் அவ்வளவு நன்றாக உள்ளது. இது ஜலதோஷ,ம்,ஜுரம்,இருமல் முதலானவைகளைப் போக்கும். மெனக்கெடாமல் எந்தக் காய்கறி செய்தாலும் இரண்டு இலையைக் கிள்ளிப் போட்டால் உடம்பிற்கும் நல்லது. தனிப்பட்ட சமையலும் அவசியமில்லை.
Entry filed under: ரஸம்வகைகள். Tags: தூதுவளை, படர்ந்திருந்தது, முட்கள்.
11 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:46 பிப இல் செப்ரெம்பர் 23, 2015
முன்பு எங்கள் ஏரியாவில் தூதுவளைச் செடி இருந்தது. ஆனால் இது செய்து பார்த்ததில்லை. பொறுமை இல்லாததும், செய்தால் என்னைத் தவிர யாரும் வீட்டில் சாப்பிட மாட்டார்கள் என்பதும் காரணம்!
:))))
2.
chollukireen | 2:00 முப இல் செப்ரெம்பர் 24, 2015
புதுசா எழுத ஏதாவது வேண்டாமா? சிலஸமயம் கஷ்டம் தெரிவதில்லை. ருசிபார்க்காமலேயே வேண்டாம் என மறுப்பு தெரிவிக்கும் உலகமிது. நன்றி அன்புடன்
3.
marubadiyumpookkum | 8:11 முப இல் செப்ரெம்பர் 24, 2015
I saved it.
4.
chollukireen | 12:45 பிப இல் செப்ரெம்பர் 25, 2015
மிக்க நன்றி. நான் உங்கள் தளத்தில் பின்னூட்டமிடவில்லையே தவிர படிப்பதில்,வியப்பதில்க் குறைவு ஒன்றுமில்லை. அன்புடன்
5.
Geetha Sambasivam | 10:09 முப இல் செப்ரெம்பர் 24, 2015
இது ஏற்கெனவே படிச்சேன். தூதுவளை ரசம், கஷாயம், துவையல் எல்லாம் அடிக்கடி செய்வதுண்டு. இப்போது தூதுவளையே கிடைக்கவில்லை! 😦 குதிரைவாலி அரிசியில் குழிப்பணியாரம் தேடினேன். அப்படி ஒரு பதிவே இல்லைனு சொல்லுது! 🙂
6.
chollukireen | 1:01 பிப இல் செப்ரெம்பர் 25, 2015
ஆமாம் நான்தான் தப்பு. குதிரைவாலி அரிசியில் குழி அப்பம் என்று என்னுடைய இனிப்பு வகைகளில் இருக்கிறது. உப்பு காரமும் இருக்கு. உங்கள் காவேரித் தண்ணீரில் இன்னும் வகையாகச் செய்து விடுவீர்கள்.
உங்கள் கைமமணமும் சேர்ந்து எங்கேயோ போய் விடும். நன்றாகக் கொடுத்தீர்கள் பதில். நன்றி அன்புடன்
7.
chollukireen | 1:08 பிப இல் செப்ரெம்பர் 25, 2015
உங்க ப்ளாக்கர் காமில் நானும் காமாட்சி என்ற பேரில் வந்திருக்கேன். தெரிஞ்சவங்கோ நீங்க வந்து பாருங்கம்மா. சொல்ல மறந்துட்டேன். வயது ஆறது இல்லையா? அன்புடன்
8.
chitrasundar | 7:14 பிப இல் செப்ரெம்பர் 24, 2015
காமாக்ஷிமா,
தூதுவளை வீட்டின் வேலியோரங்களில் கிடந்தபோது அதன் அருமை தெரியவில்லை. இப்போதோ பார்க்கக்கூட முடியாது. நுரை ததும்பிய தூதுவளை ரசத்தை இங்கேயே பார்த்து சாப்பிட்டுக்கொள்கிறேன். அன்புடன் சித்ரா.
9.
chollukireen | 1:05 பிப இல் செப்ரெம்பர் 25, 2015
தூதுவளை என்று சொல்லும் போது என்னை ஞாபகம் வந்தால்ஸரி. படிப்பதெல்லாம் பண்ண முடியுமா? l`தொண்ணூருடன் துவரம் பருப்பு. அதுஸரி. காமாட்சி பக்கம் வரவில்லையே நீ. தெரிந்தவர்களுக்கும் கொஞ்சம் சொல்லம்மா. நன்றி. அன்புடன்
10.
பிரபுவின் | 10:30 முப இல் செப்ரெம்பர் 27, 2015
தூதுவளையின் மகத்துவமே தனி தான்.
நன்றி அம்மா.அன்புடன் பிரபு…
11.
chollukireen | 1:25 பிப இல் செப்ரெம்பர் 28, 2015
ஆமாம் .தூதுவளை இலை கிடைக்க வேண்டும். பொருமையும் வேண்டும். பலன் கிடைக்கும். அன்புடன்