காய்கறி ஸ்டூ
ஒக்ரோபர் 1, 2015 at 8:00 முப 10 பின்னூட்டங்கள்
தேங்காசேர்த்துத்ய்ப்பால் சேர்த்துத்
இதையும் நான் கூட்டு வகையில்தான் சேர்த்திருக்கிறேன்.
தேங்காய்ப் பால் தயாரிப்பது எப்படி என்பதை முதலில்
பார்ப்போம்.
ஒரு தேங்காயைத் துருவி சிறிது சுடு நீர் தெளித்ப்
பிழிந்தால் கெட்டியாக சிறிது தேங்காயப் பால
கிடைக்கும். பின்னர் ஒருகப் சூடான நீர் சேர்த்து
தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பிழிந்தால்
தேங்காய்ப்பால் கிடைக்கும்.
வேண்டிய சாமான்கள்——-தோல் நீக்கி
நறுக்கியஉருளைககிழங்கு ஒருகப்
உறித்த பட்டாணி–அரைகப்
கேப்ஸிகத் துண்டுகள்—-அரைகப்
நறுக்கிய காலிப்ளவர்—ஒருகப்
நறுக்கிய கேரட்—-அரைகப்
நறுக்கிய தக்காளிப் பழம்-முக்கால் கப்
பச்சை மிளகாய்–மூன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம்–ஒருகப்
லவங்கம்—–6, ஏலக்காய்–ஒன்று
மிளகுப் பொடி—-இரண்டு டீஸ்பூன்
ஒரு துளி மஞ்சள்ப் பொடி
ருசிக்கு உப்பு
எண்ணெய்—–இரண்டு டேபிள் ஸ்பூன்
பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி ஏலக்காய் லவங்கத்தைத்
தாளித்து, வெங்காயம், மிளகாயை வதக்கி தக்காளி,
காய்கறிகளைச் சேர்த்து சிறிது பிறட்டி உப்பு ,மிளகுப்பொடி
மஞ்சள் சேர்க்கவும்.
திட்டமாகத் தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும்.
வெந்த காய்க் கலவையில் தேங்காய்ப் பாலை விட்டு
ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறி வேப்பிலை சேர்த்து
உபயோகிக்கவும்.
கலந்த சாதம், புலவு, சேவை, அடை, தோசை,என
எல்லாவற்றுடனும் உபயோகிக்கலாம்.
தேங்காய்ப் பால் வேண்டிய அளவு தயாரித்து உபயோகிக்கவும்.
Entry filed under: கூட்டுவகைகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஶ்ரீராம் | 8:09 முப இல் ஒக்ரோபர் 1, 2015
கேரள உணவு வகை. நிறைய வருடங்களுக்கு முன் ஒரு மலையாள நண்பர் எங்கள் வீட்டுக்கு வந்து செய்து கொடுத்தார். அப்போது சாப்பிட்டதுதான். சுவையானது.
2.
chollukireen | 1:50 பிப இல் ஒக்ரோபர் 1, 2015
நான்கூட எர்ணாகுளத்தில் என் பிள்ளையுடன் இருந்த காலத்தில் கற்றுக் கொண்டதுதான். நன்றி அன்புடன்
3.
Geetha Sambasivam | 8:21 முப இல் ஒக்ரோபர் 1, 2015
இது போல் பறங்கிக்காயில் செய்வதுண்டு.ஓலன் என்போம். ஆனால் வெங்காயம் தக்காளி, ஏலக்காய், லவங்கம் போடுவதில்லை. மிளகு பொடி கூட விரும்பினால் தான். இது மாதிரியும் செய்து பார்க்கலாம். இப்போக் கொஞ்ச நாட்களுக்கு நோ வெங்காயம், நோ பூண்டு! நவராத்திரிக்கு அப்புறமாத் தான்! 🙂
4.
chollukireen | 1:57 பிப இல் ஒக்ரோபர் 1, 2015
இந்த வெங்காயம் பூண்டெல்லாம் ஜன ரஞ்ஜகமானது. இது இல்லாமல் கூட சமைக்கலாம். கரம் மஸாலாவும் அப்படியே.. நாமெல்லாம் வெங்காயம் கட்டாயம் வேண்டும் என்ற பாலிஸி உள்ளவர்களில்லை. என்ன அவஸரம். மெள்ள பண்ணுங்கள். பெரியவருக்கு முடியவில்லை. எனக்கும் எதுவும் ஓடவில்லை. ஏதோ மிக்கப் பழமையான குறிப்பு. எல்லோருடனும் தொடர்பு கொள்ள ஏதாவது வேண்டுமே. அதுதான் இது. அன்புடன்
5.
Geetha Sambasivam | 3:17 முப இல் ஒக்ரோபர் 2, 2015
கவனம் அம்மா, பெரியவரையும் பார்த்துக் கொண்டு உங்கள் வேலைகளயும் கவனித்துக் கொண்டு இத்தனை எழுதுவதே பெரிய விஷயம். நமஸ்கரிக்கிறேன். பெரியவர் விரைவில் குணமாக எங்கள் பிரார்த்தனைகள்.
6.
chollukireen | 5:34 முப இல் ஒக்ரோபர் 7, 2015
உங்கள் அன்பிற்கும்,ப்ரார்த்தனைக்கும் மிகவும் நன்றி.அன்புடன்
7.
Mrs.Mano Saminathan | 3:21 பிப இல் ஒக்ரோபர் 2, 2015
பழைய குறிப்பு மட்டுமில்லை, மிக அருமையான குறிப்பும்கூட! மனக்கவலைகளுக்கிடையில் பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி! எல்லாமே நல்லபடியாகவே நடக்கும். கவலைப்படாதிருங்கள்!
8.
chollukireen | 5:41 முப இல் ஒக்ரோபர் 7, 2015
இதமான வார்த்தைகளுக்கும், அன்பிற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
9.
chitrasundar | 12:13 முப இல் ஒக்ரோபர் 6, 2015
காமாக்ஷிமா,
காய்கறி ஸ்டூ பார்க்கவே சூப்பரா இருக்கு. உடன் எதுவும் வேண்டாம் அப்படியே ஒரு பௌளில் நிரப்பி ஸ்பூன் போட்டுக் கொடுத்தால் நொடியில் காலி பண்ணிடலாம் போல இருக்குமா. ஐயாவின் உடல்நிலையையும் பார்த்துக்கோங்கமா, அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 5:46 முப இல் ஒக்ரோபர் 7, 2015
மிகவும் பெரிய அளவில் கொண்டு போகும்படியான உடல் நிலை இருந்தது. நல்லவேளை.பரவாயில்லை. ஸ்டூ இன்னும் சற்றுத் தளர்வாகவும் செய்யலாம். நன்றி அன்புடன்