நவராத்திரி
ஒக்ரோபர் 14, 2015 at 1:42 பிப 2 பின்னூட்டங்கள்
பதிவுகள் இடமுடியாமற் ஒரு உடல்நலக்குறைவு நவராத்திரி மறு பதிவாகிலும் செய்ய வேண்டுமென்ற அவா
ஓரிரு படங்களும் நிவேதனம் வேண்டாமா?நேற்று ஆரம்பித்துவிட்ட நவராத்ரி விழாவைச் செம்மையாகப்,பக்திப் பரவசத்துடன் கொண்டாடி,முப்பெருந்தேவிகளுடைய அருளுக்குப் பாத்திரராகி எல்லா நலன்களையும் பெறவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய மானஸீக மங்கலப்பொருள்களுடன் மஞ்சள் குங்கும தாம்பூலமும்,அன்பான ஆசிகளும். அன்புடன் சொல்கிறேன். படம் ரிப்ளாகில் தரவேற்றுவது எப்படி?/???
படமுதவி—-கூகலுக்கு நன்றி.
புரட்டாசிமாதம் வரும் அமாவாஸை கழித்த மறுநாள் தொடங்கி பத்து
நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை இது.
இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களைக் காட்டிலும் மைசூரில் சிறப்பாகக்
கொண்டாடப் படுகிறது. கர்நாடகத்தில் சாமுண்சீசுவரி.
வட இந்தியாவிலும்,உத்தரப்பிரதேசத்திலும் ராம் லீலா என்று கொண்டாடுகின்றனர்.
ராமாயண நாடகங்கள் நடிக்கப் படுகிறது. விஜய தசமியன்று
இராவணன் கும்பகர்ணன் உருவப் பொம்மைகள் மெகா ஸைஸில் செய்து பொது இடங்களில் வைத்து
பட்டாசுகளை வெடித்து உருவங்களை எரித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
வங்காளத்தில் துர்கா பூஜையாகக் கொண்டாடப் படுகிறது.
தமிழ் நாட்டில் முற்றிலும் பெண்களுக்கான பண்டிகையாகத் திகழ்கிரது இது.
அழகான,விதவிதமான பொம்மைகளால் கொலு வைக்கப்படுகிறது.
இதில் இல்லாத விஶயங்களே கிடையாது. பெண்கள் தங்களின் ஆர்வத்தையும்
கலைத்திறனையும் கொலுவில் அழகுரக்காட்டி மகிழ்வர்.
உறவினர்கள்,நண்பர்கள்,யாவர்களையும் அழைத்துக் கூடி மகிழ்வாகக்
கொண்டாடும் விசேஶ தினங்களிது.
அதே நேரத்தில் விசேஶ பக்தி ச்ரத்தையுடன் தேவியை வணங்கித் துதிக்கும்
பண்டிகையாகவும் இது விளங்குகிறது. அன்னையை
மூன்று சக்திகளாகப் பாவித்து, பார்வதி,லக்ஷ்மி,ஸரஸ்வதி என ஒவ்வொருவருக்கும்
மூன்று நாட்களை ஒதுக்கி இச்சாசக்தி,கிரியாசக்தி,ஞான சக்தி என ஒன்பது நாட்கள்
பூஜை செய்யப் படுகிறது.
வீடே,ஊரே திருவிழாக் கோலம்தான்.
நவராத்ரி நாட்களில் ஸுமங்கலி,கன்யாப் பெண்களுக்கு அன்னமளித்து,விசேஶ
மங்களச் சாமான்களை அளிப்பது என்பது மிகவும் விசேஶமான செயலாகக்
கருதப்படுகிறது.
நவராத்திரி ஒன்பது நாட்களும் விசேஶமாக மத்தியான வேளைகளில்
சர்க்கரைப் பொங்கல்,பாயஸம்,தயிர்சாதம், வெண்பொங்கல்,எலுமிச்சைசாதம்,
புளியஞ்சாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம்,பாலில் செய்த அக்கார வடிசல்
என…
View original post 126 more words
Entry filed under: பூஜைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 3:20 பிப இல் ஒக்ரோபர் 14, 2015
நவராத்திரி வாழ்த்துகள் அம்மா. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
2.
Chitrasundar | 12:03 முப இல் ஒக்ரோபர் 16, 2015
காமாக்ஷிமா,
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நவராத்திரி விழா வாழ்த்துக்கள்!
உடல்நிலை சீராக என்னுடைய பிரார்த்தணைகளும் , அன்புடன் சித்ரா.