இந்திய ஆப்பிரிக்க -ஃபோரம் மஹாநாட்டில் இந்திய மருந்துகளின் முக்கிய உதவி.
நவம்பர் 2, 2015 at 3:24 முப 18 பின்னூட்டங்கள்
நிறைய எழுதமுடியாமையாமல் மிக்கச் சோர்ந்து போனஎனக்கு, எழுதவே வேண்டாம் என்றுநினைத்த எனக்கு என்னைப் பார்க்க வந்த என் மகன், ப்ளாக் எழுதவே சொல்லிக்கொடுத்த என் மகன் ஆப்பிரிக்க மகாநாட்டிற்கு வந்தவன் ஒரு ஃப்ளையிங் விஸிட் பார்க்க வந்து ஜெநிவா இன்றுதிரும்பினான்.
என்ன அப்படி யூஎன் எய்ட்ஸிற்கு மகத்துவம்? மகாநாட்டுக்காக சாலைப் போக்குவரத்துகள் கட்டுப்பாட்டினால் ஆட்டோவிலேயே ஒரு பெண்ணிற்கு பிரஸவம் ஏற்பட்டது என்ற செய்தி,திரும்பத் திரும்ப டிவியில் காட்டப்பட்டதே. டெல்லியில் இதுதான் விசேஷ,மா என்றேன். இல்லை அது முதல்நாள் ஸம்மிட்டின்போது. மறுநாள்தான் எங்கள் ஸம்பந்தப்பட்ட விசேஷக் கூட்டம். நீ உன் உடம்பைப் பற்றிச் சொல். ப்ளாகை விட்டு விடாதே. உன்னுடன் இணைந்து இருப்பது அது ஒன்றுதான். முடிகிறதோ,முடியவில்லையோ ஏதாவது எழுது. இப்படிப் பேச்சுகளை அவர்கள் தொடர்ந்தார்கள். யோசிக்க உடல்நலக் குரைவுகள்தான் முதலில் நான் நீ என்று போட்டிப் போடுகிறது.
உங்கள் ஸம்மிட்டில் உங்கள் ஸேவை ஏதாகிலும் இருந்தால் அதைச் சொல்,நான்கு வரி எழுதுகிறேன் என்றேன். முடிகிறதா பார்க்கிறேன். இரண்டுவரி குறித்துக் கொள்கிறேன். ஏன் அவர்களுக்குத் தமிழ் எழுத வராது.
போதும்,சொல்ல வந்ததைச் சொல்லுங்கள் என்கிறீர்களா?
இந்த இந்திய.ஆப்ரிக்க போரம் மஹாநாடு இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுக் கூட்டப்பட்டது. கல்ச்சர்,ட்ரேட்.பாலிடிக்ஸ்,தேச உள்நாட்டுபாதுகாப்பு, எஜுகேஷன் ஹெல்த், ஆட்சிமுறை, சுகாதாரம்,பரஸ்பர உதவி என எல்லா விஷயங்களும் பரஸ்பரம் கலந்தாலோசித்து விவாதித்து முடிவெடுக்க ஆப்பிரிக்க தேச அனைத்து தேசங்களையும் அழைத்து ஸம்மிட் நடத்தியது. தில்லியில் இரண்டு மூன்று நாட்கள் நடந்தது உங்களுக்கெல்லாம் தெரியும்.
இவர்களைக் கொண்டேஇந்த கூட்டம் முடிந்த மறுநாளே எய்ட்ஸைப் பற்றிய கூட்டம்ஒன்றை இந்தியாவின் நேகோ என்று சொல்லப்படும் நேஷனல் எய்ட்ஸ் கன்ட்ரோல் ஆர்கனைஸ்ஸேஷலினால்ஏற்பாடு செய்யப்பட்டுக் கூட்டப்பட்டது. இதில்
இதில் U.N நிறுவனமான UNAIDS என்ற நிறுவனம் உயிர்க்கொல்லிநோயான எய்ட்ஸைக் கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவில் தொண்டு செய்யும் நிறுவனம். அதை வழிநடத்தும்,தலைமையாளரை முக்கியப்பிரதிநிதியாகவும் ,அவரைச்சார்ந்த சிலரையும் விசேஷமாக அழைத்திருந்தனர். யாவரும் ஸம்மிட்டுக்காக வந்திருந்தவர்கள். அப்படி வந்தவர்தான் என் மகனும்.
இந்தக் கூட்டம் கென்யாவின் பிரஸிடெண்ட் திரு கென்யாட்டோவின் விருப்பத்திற்கிணங்க, ஏற்பாடு செய்யப்பட்டு, அவரும் முக்கியப் பிரமுகராகக் கலந்து கொண்டார். உகாண்டா.ஸௌத்ஸூடான், மலாவி, டோகோ, ரவாண்டா இன்னும் பல முக்கிய ஆப்பிரிக்க தேசங்களின் மந்திரிகளும் கலந்து கொண்டனர். unaids இன் தலைவர் திரு ஸிடிபே மிஷைல் தலமை வகித்து உறையாற்றினார்.
இந்தியா எய்ட்ஸ்,கான்ஸர்,டயபடீஸ்,இருதய நோய்க்கான உயிரைக்காப்பாற்றும் விசேஷமருந்துகள்,மற்றும் பலவித மருந்துகள் தயாரித்து, குறைந்த விலையில் அளித்து வருகிறது. மற்ற தேசங்களுக்கும் அளித்து வருகிறார்கள். இருப்பினும், சில காலத்திற்குப் பின்,இன்னும் அபூர்வ மருந்துகளை தயாரிக்கும் உரிமை காலாவதி ஆகிவிட்டால் இவ்வளவு மலிந்த விலையில் தயாரித்துக் கொடுக்காவிட்டால், இப்போது நன்மை பெறும் தேசங்களின் நிலை என்ன வாகும்?
ஆப்பிரிக்காவில் இரண்டரைகோடி மக்கள் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இவர்களில் பாதி அளவு மக்களுக்கு, இந்த மருந்து எய்ட்ஸ்கண்டுபிடிப்பிற்குப் பின் கொடுக்கப் பட்டு அவர்கள் சிரமமின்றி, அதிக வருஷங்கள் வாழ்வதற்கும் வகை செய்யப்பட்டு பலனளித்து வருகிறது. இவ்வியாதி மற்றவர்களுக்குப் பரவுவதையும் தவிர்க்கப் படுகிறது.
இந்த மருந்துகள் எல்லாம் இங்கு கிடைப்பதை ஒன்றிற்கு பத்து மடங்கு விலை வெளி நாடுகளில் கொடுத்தால்தான் கிடைக்கும். உதவிக்காக இலாப நோக்கில்லாமல் செய்வது யாவருக்கும் வராது. தடைகள் செய்யத்தான் யோசிப்பார்கள்.
இீந்தியாவின் இந்த உதவி மகத்தானது. இந்தியா எப்போதும் இந்த உதவிகளைத் தொடர்ந்து செய்தால்தான் தொண்டு நிறுவனங்களின்பணி நல்ல முறையில் இருக்கும். தொண்டு நிறுவனங்களிடம் நிதி கிடையாது. உலக ஸுகாதாரநிறுவனம்,க்ளோபல் ஃபண்ட் முதலிய நிறுவனங்கள் உதவியுடன்தான் செயல் படுகிரது. இந்தியா தொடர்ந்து மருத்துவவகை எல்லா உதவிகளையும் எக்காலமும் செய்யும்படி ஆப்பரிக்க நாடுகளின் சார்பில் கேட்டுக் கொண்டார். பொதுநல தொண்டு புரிவதற்கு ,ஆப்பிரிக்கநாடுகளின் சார்பில், முக்கிய வியாதிகளை ஒழிப்பதற்கு இந்தியாவின் மருத்துவ உதவிக்கு நன்றியும் கூறினார்.
கேட்கப்பட்ட உதவிகளை செய்து கொடுப்பதாக இந்தியா சார்பில் மாண்பு மிகு சுகாதார மந்திரி திரு ஜெகத்பிரகாஷ் நாடா அவர்கள் சார்பில் உறுதி மொழி கொடுக்கப்பட்டது. இன்னும் பதினைந்து வருடங்களில் எய்ட்ஸை அறவே ஒழித்துவிடலாம் என்ற நல்லெண்ண உறுதியும் அளிக்கப் பட்டது. இதைவிட வேறு என்ன வேண்டும்?
இக்கூட்டத்தில் பெயர்பெற்ற மருந்து தயாரிப்பாள நிருவனங்களும், ஸோஷியல்ஸர்வீஸ்நிறுவனங்களின் தலைவர்களும், எய்ட்ஸ் உதவியாளர்கள் யாவரும் பங்கு பெற்றனர். நம்முடைய நாட்டின் மருந்துகளும், உதவும் மனப்பான்மையும் எவ்வளவு சிறந்தது.?என் மகன்ஒரு ஐந்து நிமிஷ,ம் எனக்காகச் சொன்ன செய்திகள். என் எழுத்தில், கருத்தில்கூட தவறு இருக்கலாம். பெரிய இடத்து விஷயங்கள். நல்ல விஷயம். படிக்கவும்.
Entry filed under: விசேஷமான கட்டுரை. Tags: இந்திய ஆப்ரிக்க ஃபோரம் ஸம்மிட்.
18 பின்னூட்டங்கள் Add your own
Suman க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
marubadiyumpookkum | 11:00 முப இல் நவம்பர் 2, 2015
superb. good reporting. keep it up ma. and Tell your great son’s name and
designation and participation details also. it will be nice and good.
thanks . vanakkam.
2.
chollukireen | 11:23 முப இல் நவம்பர் 13, 2015
ஆசிகள் தீபாவளிக்கும் சேர்த்து. உங்களின் பாராட்டுதல்களுக்கு மிகவும் நன்றி. என் மகனின் பெயர்,மற்றும் சிறு விவரம் .
MAHESH MAHALINGAM.
DIRECTOR
UNAIDS
மேற்கொண்டு விவரங்கள் வேண்டுமானால் தயவுசெய்து GOOGLE இல் பார்க்கவும். விவரமாக இருக்கிறது. உங்கள் அக்கரைக்கும்,அன்பிற்கும் மகிழ்ச்சி சொல்லிலடங்காது. அதிகம் வலையில் உட்காருவதில்லை. வாழ்த்துகள் அன்புடன்
3.
marubadiyumpookkum | 5:05 பிப இல் நவம்பர் 13, 2015
thanksma.great people thinks alike
4.
chollukireen | 11:15 முப இல் நவம்பர் 16, 2015
Eஆசிகளும் நன்றியும். அன்புடன்
5.
marubadiyumpookkum | 8:32 முப இல் நவம்பர் 21, 2015
thanksma
6.
ஸ்ரீராம் | 12:12 பிப இல் நவம்பர் 2, 2015
நல்ல தகவல்கள். உங்கள் மகர் சொல்வது போல ப்ளாக் பார்ப்பது, ப்ளாக் எழுதுவது உங்கள் மனதுக்கு உற்சாகம் தரும். தொடருங்கள்.
7.
chollukireen | 11:26 முப இல் நவம்பர் 13, 2015
உங்கள் பதிலுக்கு மிகவும் ஸந்தோஷம். நானும் தொடர்ந்து ப்ளாகில் வலம் வரவே ஆசைப்படுகிறேன். நன்றி அன்புடன்
8.
A Kumar | 2:11 பிப இல் நவம்பர் 3, 2015
Akka,
Ungal thagavalkal padithen. Migavum aurpudham.
Nations name ellam ezuthi iruntheergal.
Ithu rombavum periya vishayam.
Mellum mellum ithu madhiri niraiya ezhuthungal
India vin perumai ellorukkum theriyavarum.
Take care.
Bye Kumar
9.
chollukireen | 11:38 முப இல் நவம்பர் 13, 2015
ஊர்பெயர்கள் மட்டும் குறித்துக் கொண்டேன். நன்றி உங்கள் மறுமொழிக்கு. அன்புடன்
10.
A Kumar | 2:30 பிப இல் நவம்பர் 3, 2015
Akka,
Mudhalil onru ezhuthinen.
Marupadium ezhthugiren.
Ungal thagavalkal rombavumnanraga irukkirathu.
Pala vishayangal India eppadi pira deshangaluku
udthavi seigirathu enru ezhuthiirukkeergal.
Melum Melum idhupol niraiya ezhuthungal.
Take care.
Bye
Kumar
11.
ranjani135 | 10:06 முப இல் நவம்பர் 5, 2015
ரொம்பவும் சிறப்பாக செய்தியினை சொல்லியிருக்கிறீர்கள். இது போன்று கூட நீங்கள் எழுதலாம். உங்களிடம் நல்ல ரிப்போர்டிங் திறமை இருக்கிறது. இணையத்திலேயே நீங்கள் படிக்கும், பார்க்கும் வித்தியாசமான அல்லது உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் விஷயங்களைக் கூட நீங்கள் இதுபோல எழுதலாம். நான் ஆழம் பத்திரிகையில் எழுதி வந்த கட்டுரைகள் போல இருக்கிறது. அத்தனை செய்திகளையும் உள்ளடக்கி மிகவும் விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்களிடம் இந்தத் திறமையும் இருப்பது இன்று தெரிய வந்திருக்கிறது. தொடருங்கள்.
பாராட்டுக்கள்!
12.
chollukireen | 11:46 முப இல் நவம்பர் 13, 2015
உங்கள் மறுமொழி என்னை ஆகாயத்தில் பறப்பதுபோன்ற உணர்ச்சியை உண்டாக்கியது. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. அன்புடன்
13.
Suman | 6:57 பிப இல் நவம்பர் 8, 2015
Very nice amma!
14.
chollukireen | 11:08 முப இல் நவம்பர் 9, 2015
Thankyou suman
15.
Jayanthi Sridharan | 7:38 முப இல் நவம்பர் 12, 2015
Great reporting mami. I am amazed at your talent. With adoration and respects,
16.
chollukireen | 11:50 முப இல் நவம்பர் 13, 2015
ஜயந்தி. உன்னைப்பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆசை. எதை நினைத்தாலும் எழுத மனதளவில் ஒரு உருவகம் ஏற்பட்டுவிடும். பதிவில் எழுதமுடிவதில்லை.
நன்றி அன்புடன்
17.
Jayanthi Sridharan | 12:46 பிப இல் நவம்பர் 13, 2015
Dear Mami, (1) I am Ranjani Narayanan’s friend living in Chennai – born In 1957. (2) Got to know about you through her some 2-3 years back. (3) Since then, I have bee referring to your samayal tips and found them quite useful. (4) My mother 82 yrs old is almost like you but I have failed to teach her to use computers which your son did to you. (5) With all the limitations and difficulties people of your generation in general and you in particular experienced, you have reached to this extent. I cannot imagine what level you would have reached, had you been born a little later. I am sure your progeny will reach greatest heights because of having your genes. (6) I am sorry, I have not familiarized myself with tamil fonts in spite of being computer-literate. (7) I do not know how to contact you privately. hence this elaborate introduction.
Thank you mami for wanting to know about me. With love, Jayanthi Sridharan.
Please remove from the comment box if this is too personal.
18.
ranjani135 | 3:12 பிப இல் நவம்பர் 13, 2015
beautiful intro, Jayanthi. Excellent flow.
நீ சொல்வது போல மாமி இன்னும் ஒரு தலைமுறை தள்ளிப் பிறந்திருந்தால் நிச்சயம் சாதனையாளராக இருந்திருப்பார். இப்போதே அவரது அனுபவம் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒரு பொக்கிஷத்தையே வைத்திருக்கிறார் மாமி.
என் கவலைகளை கேட்டு எனக்கு ஆறுதல் சொல்வதில் மாமிக்கு முதலிடம்.
நீயும் மாமியின் தோழிகள் லிஸ்டில் சேர்ந்திருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது.