பூந்தி லட்டு
நவம்பர் 6, 2015 at 7:56 முப 13 பின்னூட்டங்கள்
இதுவும் ஐந்து வருஷங்களுக்குமுன்னர் ஜெனிவாவில் பூந்தி கரண்டி இல்லாமல் காய்கள் வடியப்போடும் தட்டின் உதவியால் செய்தது. ப்ளாக் ஆரம்பித்தபோது இந்த போட்டோவெல்லாம் போடவராது. அப்படியும் ஒரு ஆசை.போட்டோவுடன்போட. அவ்வளவு ஸந்தோஷம் பேத்தி போட்டுக் கொடுத்தவுடன். அந்த ஞாபகம்வந்தது. தீபாவளி. நீங்களும் படத்தை மற்ற இனிப்பு வகைகளுடன் சுவையுங்கள்.ஆசிகளையும்,வாழ்த்துக்களையும் பெறுங்கள். இனிய தீபாவளி வாழ்த்துகள். அன்புடன்
வேண்டியவைகள்
புதியதாக அரைத்த கடலை மாவு—2கப்
சர்க்கரை—இரண்டரைகப்
நெய்—–1டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு—–10 விருப்பம் போல்
லவங்கம்—–6
திராட்சை—–15
ஏலக்காய்—–6 பொடித்துக் கொள்ளவும்
பூந்தி பொரிக்க —–வேண்டிய எண்ணெய்
கேஸரி பவுடர்—-ஒரு துளி
குங்குமப்பூ—சில இதழ்கள்
பச்சைக் கற்பூரம் —-மிகச் சிறிய அளவு
செய்முறை
சர்க்கரையை அமிழ ஒருகப் ஜலம் சேர்த்து அகன்ற
பாத்திரத்தில் நிதானமான தீயில் வைக்கவும்.
பாகு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால்
அழுக்கு ஓரமாக ஒதுங்கும்.
கரண்டியால் அதை எடுத்து விடவும்.
ஒரு கம்பிப் பாகு பதம் வந்ததும் பாகை இறக்கி வைக்கவும்.
–கடலை மாவைச் சலித்து ஒரு சிட்டிகை
ஸோடாஉப்பு, உப்பு, கேஸரி பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு
தோசைமாவு பதத்தில் கறைத்துக் கொள்ளவும்.
சற்றுக் குழிவான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
பூந்தி தேய்க்கும் கரண்டியில், ஒரு கரண்டி மாவை விட்டு,
எண்ணெயினின்றும் சற்று தூக்கலாக கரண்டியைப்
பிடித்துக் கொண்டு, மற்ற கரண்டியின் அடி பாகத்தினால்,
மாவைத் தேய்க்கவும்.
பூந்திகள் எண்ணெயில் விழுந்து பொரியும்.
முக்கால் வேக்காடே போதும். சல்லிக் கரண்டியினால்
கிளறிவிட்டு , பூந்தியை எடுத்து எண்ணெயை ஒட்ட
வடித்துவிட்டு, பாகில் சேர்க்கவும். இப்படியே மாவு
பூராவையும் பூந்தியாகத் தேய்த்து எடுத்து பாகில் சேர்க்கவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, லவங்கத்தையும்
சேர்த்து பிரட்டி பூந்தியில் சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்துக்
கிளரவும். சற்றே ஊரவைத்து சூடு இருக்கும் போதே கலவையை
லட்டுகளாகப் பிடிக்கவும்
View original post 22 more words
Entry filed under: இனிப்பு வகைகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Nagarajan Sugavanam | 9:28 முப இல் நவம்பர் 6, 2015
Happy Deepawali…. thanks for the recipe
.
2.
chollukireen | 11:38 முப இல் நவம்பர் 6, 2015
உலகத்தில் யாவரும் நலம்பெற்று வாழவேண்டும் என்று பிரார்த்திப்போம். நன்றி உங்கள் யாவருக்கும். ஆசிகளும். அன்புடன்
3.
rukmani seshasayee | 5:54 பிப இல் நவம்பர் 6, 2015
அன்புள்ள அம்மா, தங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
4.
chollukireen | 5:39 முப இல் நவம்பர் 8, 2015
அன்புள்ள ஸகோதரி ருக்மணி அவர்களே உங்கள் முதல் வரவையும், வாழ்த்துகளையும் களிப்புடன் வரவேற்கிறேன். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள். அன்புடன்
5.
rukmani seshasayee | 5:57 பிப இல் நவம்பர் 6, 2015
deepavali vaazhththukal.
6.
chollukireen | 5:41 முப இல் நவம்பர் 8, 2015
மிக்கநன்றி.சாவகாசமாகப் பேசலாம். அன்புடன்
7.
JAYANTHI RAMANI | 2:52 பிப இல் நவம்பர் 7, 2015
காமாட்சி அம்மா
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.
8.
chollukireen | 5:45 முப இல் நவம்பர் 8, 2015
ஸந்தோஷம். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் ஆசிகளும், வாழ்த்துகளும். நன்றிஜயந்தி. அன்புடன்
9.
ranjani135 | 3:26 பிப இல் நவம்பர் 7, 2015
முத்துமுத்தாக பூந்தி விழ நிறைய பயிற்சி வேண்டும் என்று தோன்றுகிறது. பாகில் எல்லா பூந்தியையும் போட்டுவிட்டு பிறகு பிடிக்கலாமா? நான் ஒரே ஒரு முறைதான் செய்து பார்த்தேன். அடிக்கடி இல்லாவிட்டாலும் கொஞ்சமாக அவ்வப்போது செய்து பார்த்தால் தான் சரியாக வரும் என்று தோன்றுகிறது. ஆறஅமர ஒருமுறை செய்து பார்க்க வேண்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
10.
chollukireen | 6:43 முப இல் நவம்பர் 8, 2015
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்,இனிய தீபாவளி வாழ்த்துகளும், நல் ஆசிகளும். சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வதுபோல நமக்குநாமே . பழக்கத்தில் எல்லாம் கைவரும். பாகை வைத்து மிதமான சூட்டில், பூந்தியை தேய்க்கத்தேய்க்க எடுத்துப் போட்டும் செய்யலாம். கொஞ்சமாகச் செய்யும்போது, பூந்தியை மொத்தமாகச் சேர்த்தும் செய்வேன். கொஞ்சம் செய்து பார்த்தால் தானாகவே தெரிந்து விட்டுப் போகிறது.
இப்போது எல்லாம் ரெடிமேடாகவே வந்துவிடுகிறதால்
மறந்துகூடவிடும் போலத் தோன்றுகிறது. அன்புடன்
11.
sakthi | 4:53 பிப இல் நவம்பர் 13, 2015
வணக்கம் நான் சக்தி. http://sakthiinnisai.blogspot.in/ உங்கலை ஒரு இணைப்பில் இணைத்துள்ளேன்..நன்றி.
12.
chollukireen | 11:17 முப இல் நவம்பர் 16, 2015
இணைப்பைப் பார்க்கிறேன். மிக்க ஸந்தோஷம். அன்புடன்
13.
sakthi | 4:53 பிப இல் நவம்பர் 13, 2015
http://sakthiinnisai.blogspot.in/