பேபி பொடேடோ வதக்கல்.
திசெம்பர் 18, 2015 at 12:32 பிப 9 பின்னூட்டங்கள்
இன்று இவ்விடம் இதே கறிசெய்தது. அதிகம் நான் சமையல் பக்கம் போவதில்லை. என்னையாவது திரும்பிப்போடு என்று குட்டி உருளைக் கேட்டது.டிஸம்பர் ஆரம்பித்து எதுவும் பதிவிடவே இல்லை. படியுங்கள் நீங்கள் ருசிக்காதது எதுவுமில்லை. என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். பதிலும் கட்டாயம் முதலில் விட்டுப்போனவைகளுக்கும் சேர்த்து எழுதுகிறேன். காமாட்சிம்மா அன்புடனாக.
இன்று இந்த வதக்கல் செய்தேன். ஸரி நம் ப்ளாகைப் பார்க்கிறவர்களும்
ருசிக்கட்டுமே என்று தோன்றியது.4 நாட்கள் முன்பு செய்தது, இது.
வேண்டியவைகள் ஒன்றும் பிரமாதமில்லை. வேண்டிய அளவு
குட்டி உருளைக் கிழங்கு
எண்ணெய் தாராளமாகவே விடுங்கள்.
தாளித்துக் கொட்ட —சிறிது கடுகு.
மஞ்சள்பொடி—சிறிது
மிளகாய்ப் பொடி—காரம் வேண்டிய அளவு.
சீரகப்பொடி—-அரை டீஸ்பூன்
உப்பு—ருசிக்கு
பெருங்காயப் பொடி—சிறிது
ஒரு டீஸ்பூன்—கடலைமாவு
கறிவேப்பிலை—-சிறிது. 2 இதழ் உரித்த பூண்டு
செய்முறை–
உருளைக்கிழங்கை அலம்பி ,அது அமிழத் தண்ணீர் வைத்து
குக்கரிலோ,அல்லது பாத்திரத்திலோ வேக வைத்து வடிக்கட்டவும்.
முக்கால் வேக்காடு போதும். ஆறினவுடன் தோலை உரிக்கவும்.
உரித்த கிழங்குடன்,உப்பு, மிளகாய், மஞ்சள், பெருங்காயம் சீரகப்
பொடிகளுடன் நன்றாக நசுக்கிய பூண்டு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
சற்று ஊறிய பிறகு, அடி கனமான வாணலியைச் சூடாக்கி
எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க விடவும்.
பிசறி வைத்துள்ள பேபி பொடேடோவை, அதான் குட்டி உருளைக்
கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.
ஸிம்மில் எரிவாயுவை வைக்கவும்.
நிதானமாகக் கிளறிவிட்டு வதக்கவும்.
ம னதுக்கு போதும் என்று தோன்றும் வரை வதக்கலாம்.
இஞ்சி சேர்த்து வதக்கலாம்.
பூண்டு சேர்த்து வதக்கலாம்.
வெங்காயம் சேர்த்து வதக்கலாம்.
மஸாலா, பெருஞ்சீரகம், எது வேண்டுமானாலும் சேருங்கள்.
ஏதாவதொன்று சேர்த்து வதக்கி கடைசியில் கடலை மாவைப் பரவலாகத்
தூவிப் பிரட்டி வதக்கி இரக்கவும். சிறிது எண்ணெய் அதிகமிருந்தாலும்
மாவு அதை ஸரியாக்கிவிடும். கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.
வித்தியாஸமான …
View original post 12 more words
Entry filed under: Uncategorized.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:40 பிப இல் திசெம்பர் 18, 2015
ஆஹா, உருளைக்கிழங்கு கறி படத்தில் பார்க்கவே ருசியோ ருசியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
காரக்கறி செய்து 4 நாட்கள் ஆகியும், கெடாமல், பதிவில் இப்போ செய்ததுபோல ஃப்ரெஷ்ஷாவே இருக்குது 🙂
2.
chollukireen | 2:26 பிப இல் திசெம்பர் 18, 2015
காக்கா தூக்காமல் பின்னூட்டம் வந்தது மிகவும் ஸந்தோஷம். இது ஒரு ரிப்ளாக்தான். நன்றி. மிகவும் நிதானமும், ஆர்வமின்மையும் தலை தூக்குகிறது எனக்கு. பார்ப்போம். அன்புடன்
3.
ஸ்ரீராம் | 3:03 முப இல் திசெம்பர் 19, 2015
கடலை மாவு தூவுவதும், சீரகப்பொடி சேர்ப்பதும் இதுவரை செய்ததில்லை. இப்படி ஒருமுறை செய்து பார்த்து விடுகிறேன் அம்மா. ஆனால் ஏனோ குட்டி உருளைக் கிழங்கு அவ்வளவாக பிடிக்காது!
4.
chollukireen | 11:47 முப இல் திசெம்பர் 28, 2015
குட்டி உருளைக்கிழங்கில் உள் வரைக்கும் காரம் உரைக்காது போய்விடும். ருசியிலும் சிறிது கடுப்பு தெரிவதுபோல இருக்கும்.ரோஸ்ட்டாகச் செய்யும்போது உப்பு காரத்தைத் தூக்கலாகப் போட்டால் ஸரியாகி விடுகிறது. ஸ்டார் ஹோட்டல்களில் ஆலுஜீரா என்றே சீரகப்பொடிசேர்த்த உருளை வதக்கல் மிகவும் ஃபேமஸ். எண்ணெய் வாணலியில் அதிகம் இருந்து விட்டால் இந்தக் கடலைமாவு அதை இழுத்துக் கொண்டு வறுபட்டு சுவை கூட்டிவிடும். தாமதமான பதில் அன்புடன், நன்றி
5.
A Kumar | 2:26 பிப இல் திசெம்பர் 20, 2015
Akka,
Karri romba nanraga irukkirathu.
Pakkarapothey pasikirathu. Ungal ponnum & Peranum unakku
udambukku agathu enru sollividuvargal.
Angu vanthalthan ithupol kidaikum.
Nanri. Melum melum ethavathu ezhuthungal.
6.
chollukireen | 11:54 முப இல் திசெம்பர் 28, 2015
எப்போதாகிலும் புது தினுஸாக ஏதோ சிறிது சாப்பிட்டால்தான் நாவும்,ருசிக்கும். சாப்பாடும் ரஸிக்கும். நீங்கள் இருக்கும் இடமெல்லாம் கிடைக்கும் சின்ன உருளைக்கிழங்கை அப்படியே இரண்டாக நறுக்கி வதக்கினாலே ருசிக்கும். சற்று பச்சை நிறமாகக் கிடைக்கும். உப்பு போட்டு வதக்கினாலே போதும். தோல்கூட உரிக்க வேண்டாம்.
அன்புடன்
7.
Jayanthi Sridharan | 7:20 முப இல் திசெம்பர் 21, 2015
Dear mami, Happy to see your post again. I’m sorry to hear that you feel a bit disinterested though. You have been a great source of inspiration.
I gave my intro in “IndoAfrican Forum Conf.” post. I will be happy if you go thru the same (if you haven’t yet when you can). I Pray for your health and happiness.
8.
chollukireen | 12:31 பிப இல் திசெம்பர் 28, 2015
மூன்றுமுறை எழுதியும் போகாத பதில் இது. அன்புள்ள ஜயந்தி இந்தப் பதிவுகூட மறுபதிவுதான். முன்பே உன் அன்பான மறு மொழிக்கு பதிலெழுத வேண்டும். அன்பிலும்,மரியாதையிலும் மனது கட்டுண்டு விட்டது. சிந்தனை அதிலேயே லயித்து விட்டது. வயோதிகத்தினால் அவயவங்கள் சிரமம் கொடுக்கிறது. வியாதிகள் ஒன்றுமில்லை. அவைகளுக்கு உபசாரங்கள் செய்ய நேரம் ஸரியாகி விடுகிறது. சிந்தனைகள் கட்டுக்கடங்குவதில்லை. இதுவும் பழக்கமாகிக்கொண்டு வருகிறது. உன் அன்பிற்கு மிகவும் நன்றி. விவரமாக பின் எழுதுகிறேன். உன் அம்மா,மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் விசாரித்ததாகச் சொல்லவும். அன்புடன்
9.
Jayanthi Sridharan | 5:36 முப இல் திசெம்பர் 29, 2015
Thank you very much mami, for your kind reply. I am fortunate to have known you. Wish to emulate you. You are great.