தை பிறந்தால்–1
பிப்ரவரி 2, 2016 at 11:23 முப 3 பின்னூட்டங்கள்
பார்த்துக்கொண்டே வரும்போது இந்தக் கதை மட்டும் திரும்பப் படித்ததாக ஞாபகம் வரலை. இரண்டு பகுதியாவேறு போட்டிருந்தேன். அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்று ஒரு வசனமுண்டு. புதுசா எழுத யோசனைவந்தாலும் ப்ளாகில் அதிகம் தட்டச்சு செய்ய முடிவதில்லை ஸரி இதைப் போடுவோம் என்று தோன்றியது. படிக்காதவர்கள் கூட சிலர் ,பலர் இருக்கலாமில்லையா? எனக்காகவே மனத்திருப்திக்காகப் போடுகிறேன் என்றே இருக்கட்டும். படியுங்கள்.
ஏர் போர்ட், டிக்கெட் கவுண்டர்.
அப்க்ரேட் இன்னிக்கு செய்வதாகச் சொன்னீர்கள்.
ஸாரி மேடம். பிஸினஸ்க்ளாஸ் ஃபுல் மேடம்.
நேற்று புக்செய்யக் கேட்ட போது கட்டாயம் இன்று தருகிறேன்
என்று சொன்னீர்கள். ப்ளாட்டினம் கார்ட் எதற்குத் தருகிறீர்கள்?
எங்கே உங்கள் ஆஃபீஸர். நான் பேசுகிறேன்.
ஸாரிமேடம்.
நோநோ. ஸாரி,யெல்லாம் வேண்டாம். கொடுத்த வார்த்தையை
காப்பாத்தணும். வயஸானவங்க, வீல்ச்சேர்.
போன் செய்து விவரம் போக ஆஃபீஸரே வருகிரார்.
ஒரு முறைகூட இ்துவரை அப்க்ரேட் கேட்டதில்லை.
உங்கள் கார்டிற்கு என்ன மதிப்பு.?
வாதம், கார்ட் எதற்குக் கொடுக்குறீர்கள் அதற்கு அர்த்தமே இல்லை.
எப்படியோ பத்து நிமிஷம் கொடுங்கள், பார்க்கிறேன்.
வேண்டாமே இ ப்படியே அட்ஜஸ்ட் பண்ணலாமே.
என்ன ஆகிறது பார்ப்போம். அப்படி விடக்கூடாது. டிக்கட் வாங்க
முடியாதா என்ன?
வாதம் பலித்து. கார்டை வாங்கி ஸரி பார்த்து அப்க்ரேட் செய்து
மூன்று போர்டிங்பாஸ்.
சேர்ந்தமாதிரி இருக்கையில்லை. ஆரம்பத்தில் இரண்டு இருக்கை.
கடைசியில் ஒரு இருக்கை.
ஸாரி. இப்படிதான் கொடுக்க முடிந்தது. ரொம்ப சிரமப்பட்டுதான்
செஞ்ஜோம்.
இவ்வளவு சண்டை போட்டால்தான் காரியம் நடக்கும்.
வீல்சேர். முன்னைடியே போய்ச் சேரணும்.
நாங்க முன்னாடி இருக்கோம். நீங்க பின் ஸீட்டுலே இருங்கோ.
மத்ததை நான் பாத்துக்கறேன்.
வீல்சேர், பாஸஞ்சர்கள் இரங்கிப் போனவுடன்,ப்ளேன் சுத்தம்செய்து
கொண்டிருக்கும் போதே டோரில் காத்துக் கிடக்கும்.
அதிகம் பாஸஞ்சரிருந்தால் இன்னும் சீக்கிரமே சுவர்க
வாசல்தான். உள்ளே போக அனுமதிக்கு .
தெறியாமல் பணத்தை , வீல் சேரைத்…
View original post 538 more words
Entry filed under: Uncategorized.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 12:22 பிப இல் பிப்ரவரி 2, 2016
//அடியைப் பிடிடா பாரதப்பட்டா //
நல்ல வசனம். 🙂
நானும் கேள்விப்பட்டுள்ளேன்.
கதையைப் படிச்சுட்டு மீண்டும் வருவேன்.
2.
VAI. GOPALAKRISHNAN | 12:31 பிப இல் பிப்ரவரி 2, 2016
கதையை மீண்டும் அங்குபோய் படித்தேன். நல்லா இருக்கு. அங்கு நான் போட்டுள்ள பின்னூட்டம் இதோ:
//மாமி நமஸ்காரங்கள்.
அழகா சுவாரஸ்யமாக் கதை சொல்லுகிறீர்கள். திடீரென்று முடிவு சொல்லாமல் கதையை பாதியிலேயே, அதுவும் சுவாரஸ்யமான கட்டத்தில் போய் நிறுத்திட்டேளே! எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்குது.
பாராட்டுக்கள் மாமி. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள
கோபாலகிருஷ்ணன்//
3.
chitrasundar | 5:04 பிப இல் பிப்ரவரி 2, 2016
காமாக்ஷிமா,
கதை முன்பே படித்ததுதான் என்றாலும் திரும்பப் படிக்கும்போது இன்னும் சுவாரஸியம் கூடத்தான் செய்கிறது.
“அடியைப் பிடிடா பாரதப்பட்டா ” _____ நீங்க ரீப்ளாக் செய்ததால் புதிதாக ஒரு வசனமும் கிடைத்தது ஹா ஹா :)) _ அன்புடன் சித்ரா.