தை பிறந்தால்–2
பிப்ரவரி 3, 2016 at 1:43 பிப 8 பின்னூட்டங்கள்
உஷாவின் நினைவு இருந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது மானஸீகமாகப் பேசிக்கொள்வோம் கற்பனையில். மிகவும் அபிமானமுள்ள பெண். ஒரு ஆகாயவிமான பிரயாணம் மட்டுமல்ல.பல வித உணர்வுகளை பல ஸமயம் விமானப் பயணங்களில் அனுபவித்துள்ளேன். இது மனதை விட்டு அகலாத கற்பனையும் சேர்ந்ததுதான். உஷாவும் படித்து மகிழ்ந்திருப்பாள். அன்புடன்
-வாஷிங்டன்லே நல்ல வேலெம்மா எனக்கு. மகளைப் பாத்துபாத்து
அருமையா வளர்க்கவும், அதுக்கு குறையில்லாம எல்லாம் செய்யவும்,
வேலைக்கு போவதும் ,வருவதும்தான் அதுதான் உலகத்திலே ,பெரிசு.
மக நல்லா வளரணும், படிக்கணும், இது ஒண்ணுதாம்மா கனவு.
ஆபீஸ்லே இருக்கரவங்க சொல்லுவாங்க, உனக்குன்னு வாழ்க்கை
வேணும், அதைப்பத்தியும் யோசின்னு சொல்லுவாங்க.
எனக்கு எதுவும் காதுலே விழுந்ததேயில்லைம்மா. வருஷத்துக்கொரு
முறை இந்தியா வந்து போனால், அம்மா கை சாப்பாடு தின்றாலே அது
போதும்மா.
ஜெயந்தி நல்லா படிப்பா. அவங்க அப்பா வழி பாட்டின்னா உசுரு.
அவங்களும் வருஷா வருஷம் கூப்பிடுவாங்க. அனுப்புவேன்.
இப்படியே அவளுக்கு அன்பும் நல்லா கெடைச்சுது.
நான் அவங்ககிட்டே போன் போட்டுதான் பேசுவேன்.
உஷா, ஜெயந்தி வளந்திட்டே வரா. நீ ஜாக்கிரதையா இருக்கோணம்.
அவளுக்கு எல்லாம் நல்லா செய்யணும்!
வெளி நாட்லே இருக்கே!ஞாபகம் இருக்கணும் , இதையே சொல்லுவாங்க.
இது ஏது? புதுக்கதை ஏதாவது பாவம், நமக்கு இதெல்லாம் வேணுமா?
யோசனை வந்து விட்டது.
ட்ரே,ப்ளேட் எல்லாம் எடுக்க ஏர்ஹோஸ்டஸ் வர இரண்டு நிமிஷம் பேச்சு
தடை.
அப்பா சொல்வாங்க, போனிலேதான், உன் மக எதிர்காலம் உன் கையில்.
என் எதிர் காலமே தெரியலே. என்ன சொல்ராங்கன்னு புரியலையா?
ஆபீஸ்லே பெரிய,பெரிய மீட்டிங்லாம் ஏற்பாடு செய்ய என்னிடம்
ஒப்படைப்பாங்க. வெளியிடங்கள்லேந்து ஆட்களெல்லாம் வருவாங்க.
அவங்களுக்கும், எல்லா ஒத்தாசைங்க. ஷாப்பிங் எல்லாம் கூட போய்
முடிந்ததை எல்லாம் செய்வேங்க
ஜெயந்திக்கும் ஷாப்பிங் போக பிடிக்கும். இம்…
View original post 976 more words
Entry filed under: Uncategorized.
8 பின்னூட்டங்கள் Add your own
chitrasundar5 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 2:10 பிப இல் பிப்ரவரி 3, 2016
ஏற்கனவே படித்த ஞாபகம் உள்ளது. மிகப்பெரிய பதிவாக உள்ளது. மீண்டும் படித்து ரஸித்தேன். மிக்க மகிழ்ச்சி.
2.
chollukireen | 8:10 முப இல் பிப்ரவரி 10, 2016
அதிகம் எழுதி வழக்கமில்லாததால் நீண்ட பதிவாகிவிட்டது. எப்படியோ படித்து ரஸித்தேன் என்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றி. அன்புடன்
3.
angel | 5:43 பிப இல் பிப்ரவரி 3, 2016
நலமா காமாட்சியம்மா ..இந்த கதை முன்பே வாசித்திருந்தாலும் மீண்டும் இப்பவும் வாசித்தேன் .
4.
chollukireen | 8:15 முப இல் பிப்ரவரி 10, 2016
நலமே. நீ ஸோஷியல் ஒர்க்செய்யப்போவதாக செய்தி பார்த்து மிக்க ஸந்தோஷம். கதை ரிபிளாக் செய்ததுதானே. தவிரவும் ஹிட்ஸ் வருமளவிற்கு பின்னூட்டங்கள் வருவதில்லை. ஏதோ தெரிந்த சில பேர்கள்தான் எழுதுவார்கள். அதுவே மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் குடும்ப நலனைக்கோரும் அன்புடன்
5.
ஸ்ரீராம் | 1:09 முப இல் பிப்ரவரி 4, 2016
சுவாரஸ்யம். உஷாவின் முடிவு நல்ல முடிவு.
6.
chollukireen | 8:18 முப இல் பிப்ரவரி 10, 2016
ஆயிரக்கணக்கில் கதைகள் படித்திருக்கும் அன்பு மிக்க ஸ்ரீராம் அவர்களே சுவாரஸ்யம் என எழுதியது , முடிவைப் பாராட்டியது எல்லாவற்றிற்கும் நன்றி. அன்புடன்
,
7.
chitrasundar5 | 10:37 பிப இல் பிப்ரவரி 4, 2016
நல்ல முடிவுடன்கூடிய கதை. மீண்டும் படித்ததில் மகிழ்ச்சிமா, அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 8:20 முப இல் பிப்ரவரி 10, 2016
மீள்பதிவை, மீண்டும் படித்து,நல்ல முடிவை ரஸித்ததற்கு நன்றி பெண்ணே. அன்புடன்