சிவராத்திரி மகிமை
மார்ச் 1, 2016 at 2:16 பிப 9 பின்னூட்டங்கள்
சிவனுக்குகந்த தினம் சிவராத்திரி
.தேவியைப் பூஜை செய்ய நவராத்திரி ஒன்பது தினங்களைப்போல் இல்லாவிட்டாலும்சிவராத்திரி ஒரு தினமே சிவனுக்கு மிகவும் மகத்துவமானது. சிவனுக்காக விசேஷமான தினங்கள் ஏராளமாக உள்ளது. ஆயினும் இந்த சிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும், அவரவர்கள் வீடுகளிலும் பூஜித்துக் கொண்டாடப் படுகிறது. இளைய ஸமுதாயங்கள் சற்று விதி விலக்காக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் சிறுவர் சிறுமியர்கள் கூட அவரவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ,பூஜை,பாட்டு என்று பாடிக் கொண்டாடுவது ஞாபகம் வருகிறது. இரவு முழுதும் கண் விழித்து பக்தியை அப்போதே சிறுவர்களுக்கு ஊட்டப் படுவதும் மனதை விட்டு அகலவில்லை.
காட்மாண்டு சுபதீசுவரர் கோவிலில் சிவராத்திரி வெகு விசேஷமாகக் கொண்டாடப் படும். நேபாளத்திலேயே மிகவும் உயர்வான சிவனைப் பற்றிய விசேஷக் கொண்டாட்டமது. வெகு வருஷங்கள் அவ்விடம் வசித்தபடியால் நேபாளத்தைப்பற்றி குறிப்பிடாதிருக்கவே முடிவதில்லை.ஸாதுக்கள் கூட்டம்சொல்லிமாளாது.
பசுபதீசுவரருக்கு நான்கு திசையில் நான்கு முகங்கள், உச்சியில் ஒன்று என ஐந்து முகம் கொண்ட ஸதா சிவமாக விளங்குபவர். நான்கு முக எதிரிலும் நான்கு வாயில்கள் உள்ளன. எதிரில் பிரும்மாண்டமான உலோகத்தினாலான நந்தியின் சிலை உள்ளது. தென்னிந்திய கர்னாடக பட்டாக்கள்தான் பூஜை செய்கின்றனர்.பிரஸாதமாக அன்றன்று அரைத்த சந்தனம் வழங்கப்படும். நான்கு ஜாமங்களிலும் அபிஷேக அலங்காரம் சொல்லி மாளாது.
மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களாகப் பிரித்து , அபிஷேக ஆராதனைகளுடன் சிவராத்திரி பூசைகள் நடக்கிறது. அன்று கண் விழித்திருந்து, விரதமிருந்து, இறைவனை வணங்கும்போது, முழுமையான பக்தி பரவசம் கிடைக்கும். நினைத்த எண்ணங்கள் கைகூடும் என்றும் சொல்வார்கள்.
சிவராத்திரியன்று மடி ஆசாரத்துடன் சாப்பிடாது உபவாஸமிருந்து, இரவு பூராவும் கண் விழித்து சிவ தரிசனம் செய்து, மறுநாளும், மடியாக சிவதரிசனம் செய்து, தான தர்மங்கள் செய்து பாரணை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகலும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சிவனுக்குப் பூஜிக்கத் தகுந்த இலை வில்வம்.இந்த வில்வ தளப் பெருமையை பீஷ்மப்பிதாமஹர் அம்புப்படுக்கையில் இருக்கும்போது கூறிய ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது.
சித்ரபானு என்கின்ற ஒரு மன்னன் வேட்டையாடி ஒரு மானை எடுத்துக்கொண்டு வரும்போது இரவு நேரமாகிவிட்டது. ஒரு மரத்தின்கீழ் அதைப் போட்டுவிட்டு,,மரத்தின்மேலே இரவைக்கழிக்க, அதன்ஏறி உட்கார்ந்து கொண்டான். விழிப்புணர்வுடன் இருப்பதற்காக மரத்தின் ஒவ்வொரு இலையாகக் கிள்ளி கீழே போட்டுக் கொண்டும்,குடுவையிலிருந்த நீ்ர் சிந்திக் கொண்டும் இருந்தது.கண்களைத் துடைக்கும் போது நீர் கீழே சிந்திக் கொண்டும் இருந்திருக்கிறது. காலையில் மானுடன் அவர் அரண்மனை போயாகிவிட்டது.
காலப்போக்கில் அவர் காலகதி அடைந்தபோது, சிவதூதர்கள் அவருக்கு இராஜ உபசாரம் செய்து அழைத்துப் போனபோது அவரறியாது செய்த புண்ணியத்தின்பலன் தெரியவந்தது. அவர் ஏறி இருந்த மரம் வில்வமரம்.மரத்தினடியில் சிவலிங்கமிருந்திருக்கிறது.
அவரறியாமலே செய்த சிவராத்ரி பூஜையின் பலன் அவருக்கு, அதுவும் பூர்வ ஜன்மத்தில் செய்தது நல்ல கதியைக் கொடுத்ததாக மஹாபாரத சாந்தி பர்வத்தில் பீஷ்மரால் கூறப்படுகிறது.
ஸகல பிரபஞ்ஜமும் அடங்கி இருக்கிற லிங்க ரூபமானதுஆவிர்பவித்த மஹா சதுர்த்தசி இரவில்.அவரை அப்படியே ஸ்மரித்துஸ்மரித்து அவருக்குள்நாம் அடங்கி இருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை என்று ஸ்ரீ ஸ்ரீீ மஹா பெரியவாள் தன்னுடைய தெய்வத்தின் குரலில் சொல்லி இருக்கிறார். அதை விட வேறு எந்த வாக்கு பெரியது?
நாராயணா என்னா நாவென்ன நாவே நமசிவாயா யென்னா நாவென்ன நாவே.
திரிகுணம்,திரிகுணாகாரம்,திரிநேத்ரஞ்சதிரயாயுஷஹ
திரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்.
இவ்வருஷம் மார்ச்மாதம் ஏழாம் தேதி மஹா சிவராத்திரி வருகிறது. நம் எல்லா சிவாலயங்களிலும் அவரவர்களுக்கு அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று சிவனை வழிபட்டு உலக நன்மைகளுக்காகவும் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
நான்கு ஜாமங்கள் என்பது மாலை 6–30 மணி, 9—30மணி, 12—30 மணி 3. மணி என்பர்.
ஓம் நமசிவாயநமஹ.
Entry filed under: பூஜைகள்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 2:26 பிப இல் மார்ச் 1, 2016
ஓம் நமச் சிவாய நமஹ.!
பயனுள்ள தகவல்களுடனான பதிவுக்கு நன்றி.
2.
chollukireen | 2:32 பிப இல் மார்ச் 1, 2016
வாங்கோ,வாங்கோ என்னாலே எழுதமுடிஞ்சுதாபாருங்க. உங்கள் பதிலுக்கு மிக்க மனமார்ந்த நன்றி. அன்புடன்
3.
chitrasundar | 6:20 பிப இல் மார்ச் 2, 2016
காமாக்ஷிமா,
சிவராத்திரியின் கதையும், சிறப்பும் அருமை அம்மா ! நேற்றுதான் சிவராத்திரி என்று? என தேடி, ஊருக்கும் ஃபோன் செய்து காலண்டரில் குறித்து வைத்தேன். இங்கே தேதியுடன் பதிவைப் பார்த்ததும் சந்தோஷம்.
எங்க(நம்ம) ஊர் பக்கம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்காக சிவராத்தியியை மிக சிறப்பா செய்வாங்க, அன்று கொழுக்கட்டையெல்லாம் செய்வோம்.
உங்களால் முடியும்போது சிறுசிறு பதிவுகளாக இதுமாதிரி நிறைய எழுதுங்கம்மா, அன்புடன் சித்ராசுந்தர்.
4.
chollukireen | 12:32 பிப இல் மார்ச் 6, 2016
நானும் மேல் மலையனூர் போய் தரிசனம் செய்திருக்கிறேன். என் இடுகைக்கு உன் பதில் ஊட்டச் சத்துதான். 4, 5 நாட்களாக எப்படியாவது எழுத வேண்டும் என்று முயற்சிக்கிறேன். அடுத்தும் பதிவுகள் போடுகிறேன். அன்பிற்கு நன்றி. அன்புடன்
5.
chollukireen | 12:19 பிப இல் பிப்ரவரி 28, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நாளை மார்ச் முதல்தேதி 1-3-1922 மஹா சிவராத்திரி. முன்னாடி எழுதிய பதிவு ஒன்றை மீள்ப் பதிவு செய்கிறேன். உலகெலாமுணர்ந்து ஓதற்கறியவன்
நிலாவுலாமலி நீர்மலி வேணியன்
அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
அன்புடன்
6.
ஸ்ரீராம் | 1:08 பிப இல் பிப்ரவரி 28, 2022
நமச்சிவாய என்று சொல்வோமே.. நால்வகை நன்மைகள் வெல்வோமே..
சிறப்பான தகவல்கள் அம்மா.
7.
chollukireen | 5:55 பிப இல் பிப்ரவரி 28, 2022
யாவரும் வேண்டுவது அதையேதான் ஓம் நமசிவாய அன்புடன்
8.
Geetha Sambasivam | 6:39 முப இல் மார்ச் 1, 2022
அருமை அம்மா. மிக அழகாகவும் விரிவாகவும் சொல்லி இருக்கீங்க. இந்தக் கதையும் கேள்விப் பட்டது தான். பசுபதிநாதரை நாங்க தரிசிக்க வந்த வருஷம் நீங்க அங்கே காட்மாண்டுவில் தான் இருந்திருப்பீங்களானு நினைச்சுப்பேன். 2006 ஆம் வருஷம் செப்டெம்பரில் மஹாலய பக்ஷத்தின் போது காட்மாண்டு, கயிலை யாத்திரை, முக்திநாத் யாத்திரை எல்லாம் ஈசன் அருளால் நிறைவேறியது.
9.
chollukireen | 12:40 பிப இல் மார்ச் 1, 2022
நாங்கள் 1990 வருஷமே டில்லி வந்து விட்டோம். அப்புறம் பல ஊர்கள். பிள்ளைகள் இருக்குமிடங்கள். சுற்றிலுமுள்ள க்ஷேத்திரங்கள் சில இப்படியே காலங்கள் உருண்டோடி விட்டன. மூன்று வருஷங்களுக்கு முன்னர் காட்மாண்டுவும் அதில் அடங்கும். உங்கள் க்ஷேத்ராடனங்கள் மிகவும் அதிகம். கொடுத்து வைத்தால்தான் கிடைக்கக் கூடியவைகள். இருந்த இடத்திலேயே கடவுள் நாமஸ்மரணை இப்போது. ஓம் நமசிவாய நன்றி. அன்புடன்