மொஸென்டோ பூக்கள்
மார்ச் 4, 2016 at 2:41 பிப 9 பின்னூட்டங்கள்
இந்தச்,செடியோபூவோஎனக்கொன்றும்தெரியாது. சென்ற வருஷம் சென்னை சென்று விட்டு ஏப்ரல் பத்தாம் தேதி மும்பை வீட்டு ஹாலில் உட்கார்ந்து வெளியில் பார்த்தால் கண்கவரும்படியாக செடி கொள்ளாத வகையில் அருமையான கண்கவரும் ரோஜா நிறத்தில் அடர்த்தியாக பூக்கள் அமைதியாக காட்சி கொடுக்கிறது.
என்ன பூவிது என்று கேட்டால் நீயே போய்ப்பார்.முன்பே இருந்த செடிதான். இப்போதுதான் காட்சி கொடுக்கிறது என்றவுடன் அருகில் போய்ப் பார்த்தால் இலைகளே நிறம் மாறி விரிந்த பூக்கள் போலவும்,குட்டியாக ஒரு மஞ்சள் நிறப் பூவுடனும் காட்சி தருகிறது. இலைகள் சற்றுத் தடித்த வெற்றிலைபோலச் சொறசொறப்பாக இருந்தது.
நாம் பூவென்றால் பூஜிக்கத் தகுந்ததாக இருக்கும் என்று பார்த்தால் கண்கவர் அழகுப் பூக்களாக அருகதை என்று நினைக்கத் தோன்றியது. இது ஒரு கலர்தானா? இல்லை.
பலவேறு அழகுக் கலர்களும் இருக்கிறது.
இது புஷ் அல்லது மரம்போன்று பரந்து வளரும்தாவரம். 5, அல்லது 6 அடி உயரம்கூட வளருமாம். வெப்ப மண்டலங்களில் அதிகமாக வளரும். நல்ல சூரிய வெளிச்சம் வேண்டும். இலைகள் தோல் எரிச்சலை ஏற்படுத்துமாம்.
ஆனால் இதன் இலைகள் மரப் பட்டைகள் முதலானது மருத்துவ குணங்கள் அடங்கியதாம். இன்னும் தேடினால் எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கும்.

சிவப்பு நிறமே குட்டி மஞ்சள் நிறம்தான் பூ.
நாங்களெல்லாம் சிறுவர்களாயிருக்கும் போது இலையிலே பூபூக்கும் என்று ஒரு பச்சை நிற செடி இலை சிவப்பாக மாறும்.பச்சை இலையும்இருக்கும். அந்த செடி ஞாபகம் வந்தது. அதற்கு இராஜ பேதிச் செடி என்று சொல்வார்கள். ஸ்கூலில் இருக்கும். இதற்கு என்ன மருத்துவ குணமோ. உலகத்தில் எல்லாமே உபயோகமான வஸ்துதான் போலும். தோட்டத்திற்கேற்ற அழகான பூக்கள்.
Entry filed under: பூக்களின் படங்கள்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 2:55 பிப இல் மார்ச் 4, 2016
‘மொஸென்டோ பூக்கள்’ பார்க்க மிகவும் அழகாக உள்ளன. 🙂
2.
ஸ்ரீராம் | 1:15 முப இல் மார்ச் 5, 2016
பார்க்க அழகாக இருக்கின்றன.
3.
chollukireen | 12:37 பிப இல் மார்ச் 6, 2016
இன்னும் அழகான படங்களைப் போடாது விட்டு விட்டேன்.நன்றி உங்களுக்கு. எழுதுவதில் பின்தங்கிகிக்கொண்டுள்ளேன். அன்புடன்
4.
Jayanthi Sridharan | 3:50 பிப இல் மார்ச் 7, 2016
Dear Mami,
The Divine Mother of Pondicherry has given the significance ‘Goodwill’ for these flowers, which we offer to Her whenever we get them. No wonder these flower in your house.
5.
durgakarthik | 4:55 முப இல் ஜூலை 6, 2016
Yes.The small flower inside the colourful leaves is cosidered as flower of GoodWill
6.
chollukireen | 2:21 பிப இல் ஜூலை 28, 2016
புதியதாக உங்கள் மறுமொழி எனது ப்ளாகிற்காக என்று நினைத்தேன். சமையல் குறிப்புகளை கவனிக்கவில்லையோ என்று நினைத்தேன். இன்றுதான் ஸரிவர பார்த்ததில் புரிந்தது. பாருங்கள் சொல்லுகிறேனையும். ஆங்கிலத்தில் உங்கள் சமையல் குறிப்புகளைப் பார்த்தேன். ஸந்தோஷம். ரஞ்சனியின் சினேகிதி நீங்கள் அல்லவா? அன்புடன்
7.
durgakarthik | 5:19 முப இல் ஜூலை 29, 2016
நன்றி அம்மா.ரஞ்சனி அவர்கள் உங்களை பற்றி குறிப்பிட்டிருந்தார். பிறகு உங்கள் வலை தளத்திற்கு வந்தேன்.நல்லெண்ண மலர் நல்ல உறவுகளை வளர்க்கும்.அன்புடன்
8.
chollukireen | 12:28 பிப இல் மார்ச் 11, 2016
அப்படியா. இதுவும் மகிமையுள்ள பூதான். நோன்பிற்கான வாழ்த்துகள். அன்புடன்
9.
chollukireen | 12:32 பிப இல் மார்ச் 11, 2016
ரஞ்ஜனி மொஸென்டா பூவின் பதிவை விரும்பியது மனதை மகிழ்விக்கிறது. அன்புடன்