ருத்திராக்ஷம்.
மார்ச் 6, 2016 at 8:01 முப 7 பின்னூட்டங்கள்
சிவனுக்கு வில்வம் எவ்வளவு உகந்ததோ அம்மாதிரியே, அணிவதற்கு ருத்திராக்ஷமும் மிகச் சிறந்தது. ருத்திராக்ஷம் விசேஷ சக்திகளைக் கொண்டது.
இயற்கையும்,உலகமும்,தாவரங்களும் படைக்கப் பட்ட போதே இதுவும் யாவருக்கும் உபயோகமாகும் வண்ணம் படைக்கப் பட்டது. ருத்திராக்ஷமரமும் அப்படியே. ஆதிகால முதல் அதன் பயனை உணர்ந்து யாவரும் சிரத்தையுடன் அணிந்து கொண்டு இருந்தனர். மனதை சுத்தமாக்கும் தன்மை இதற்கு உண்டு. இதை அணிந்து கொண்டவர்கள் யாருக்கும் எந்தவித தீமையையும் மனதினால் கூட நினைக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட மரியாதையை இந்த ருத்ராக்ஷமாலைக்குக் கொடுப்பார்கள்.இந்தமாலையை அணிந்து நீராடும்போது மேலே படும் நீரானது உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்க வல்லதாம். பலவித உடல் அஸௌகரியங்களைப் போக்கவும் வல்லதாம்.
எந்தவித வெப்ப,குளிர், சீதோஷ்ண நிலைகள் இருந்தாலும், அவைகளைத் தாங்கவல்லது இந்த ருத்திராக்ஷம். மரத்தில் பூத்து,காய்த்துக்,கனியாகிப்,பிறகு அவைகளைத் தண்ணீரில் ஊறவைத்து,சதைப்பற்றை நீக்கினால் உள்ளே இருக்கும் வித்துதான் ருத்திராக்ஷம். அதன் விசேஷம் துவாரத்துடனே இருப்பதுதான்.

பூ,காய்,பழம்,இலை, வித்துக்கள்இவைகள் ஒன்று முதல் பதினாறு முகங்களைக் கொண்டதாகவு ம் கிடைக்கிறது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விசேஷங்களைச் சொல்லுவார்கள்.முகங்கள் என்பது பிரிவுகள்தான். 4,5,6 போன்றவைகள் ஏராளமாகவும் ஒருமுகம்,மற்றும் விசேஷமானவைகள் அபூர்வமாகக் கிடைக்கும்.
படம் உதவி கூகல்
நேபாளம், இந்தோநேஷியாவில் காடுகளாக இம்மரங்கள் இருக்கிறது. இருப்பினும் ருத்திர பூமி நேபாளத்தில் கிடைக்கும் ருத்திராக்ஷம் விசேஷமாகக் கருதப் படுகிறது.
பெண்கள் இதை அணிவதில்லை என்று சொல்லி வந்தனர். திருச்சியில் கோயில் கொண்டிருக்கும் அகிலாண்டேசுவரி அம்பாளே இதை அணிந்திருப்பதால் , இப்போது யாவரும் அணிகிரார்கள். இம்மணிகளை அணிவதால் பாதுகாப்பும்,மனநிம்மதியும் கிடைக்கிறது என்பது உறுதி.உடல் சுத்தத்துடன் ஜெபம் செய்ய உபயோகிக்கலாமே
சிவராத்திரி தினத்தில் ருத்திராக்ஷமகிமை சிறிது எழுதினேன். இப்போது ஆடை அணிகளில்கூட சிறிய ருத்திராக்ஷங்களை அழகுக்காக சேர்க்கின்றனர். வட இந்தியக் கோயில்களில் நாமாகவே சிவலிங்கத்திற்கு இளநீரால் அபிஷேகம் செய்து விட்டு,ருத்திராக்ஷமாலையையும் ,சார்த்தி எடுத்து வரலாம். ருத்திராக்ஷமாலைகள் ஏராளமான விலைகளில்லை. இப்போது இந்தியாவிலும்தான் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.தரிசியுங்கள் ருத்திராக்ஷமணிந்த சிவனை.
பட உதவிகள் கூகல் நன்றி.
தற்காலத்தில் அணிகலன்களாகவும் இதை உபயோகித்துச் செய்கிரார்கள். நாம் பக்தியுடன் இதை அணியும்போது அணிந்து மன நிம்மதியைப் பெறலாமே!
Entry filed under: மனதிற்குகந்த கட்டுரை.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 12:34 பிப இல் மார்ச் 6, 2016
நாளை பொழுது நல்லபடியாக விடிந்தால் சிவராத்திரி. இன்றே இங்கு நல்ல சிவ தரிஸனம். மிக்க மகிழ்ச்சி. பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி.
2.
chollukireen | 12:43 பிப இல் மார்ச் 6, 2016
என்ன புயல்வேக சிவதரிசனம் செய்து எனக்கும் ஸந்தோஷத்தைக் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
ஹரஹரசிவசிவ. அன்புடன்
3.
chitrasundar5 | 2:30 முப இல் மார்ச் 7, 2016
காமாக்ஷிமா,
இது ஒரு காய் என்பதை எப்போதோ படிச்ச ஞாபகம், பிறகு மறந்தே போனேன். நல்ல நேரத்தில் ருத்திராஷம் பற்றிய பதிவு, நன்றி அம்மா. இதன் பயன்களைப் பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கே ! அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 1:14 பிப இல் மார்ச் 7, 2016
நாங்கள் நேபாலில் இருந்தபோது வேண்டியவர்களுக்கு எவ்வளவோ வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இந்தியாவிலும் கிடைக்கிறது. சிவராத்திரி. ருத்ராக்ஷம் இணைப்பு ஸரியாக இருக்கும் என்று தோன்றியது. உன் பின்னூட்டத்திற்கு ஸந்தோஷம். அன்புடன்
5.
ranjani135 | 10:43 முப இல் மார்ச் 10, 2016
சரியான நேரத்தில் சரியான பதிவு போட்டிருக்கிறீர்கள். நான் கூட ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், ருத்ராக்ஷம் பற்றி. எனக்கு என் தோழி நேபாளம் போய்விட்டு வந்து இரண்டு ருத்ராக்ஷம் கொடுத்தாள். என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்கள் அகத்துப் பெருமாளுக்கும் தாயாருக்கும் சரட்டில் கோர்த்து அணிவித்திருக்கிறேன்.
6.
chollukireen | 12:24 பிப இல் மார்ச் 11, 2016
ருத்ராக்ஷமும் துளசிமணிமாலைக்கு நிகரானதே. அதை எழுத மறந்து விட்டேன். பாராட்டுதளுக்கு ஸந்தோஷம் அன்புடன்
7.
chollukireen | 12:25 பிப இல் மார்ச் 11, 2016
பதிவை விரும்பியதற்கு மிகவும் நன்றி. அன்புடன்