காரடையான் நோன்பு.
மார்ச் 10, 2016 at 8:14 முப 6 பின்னூட்டங்கள்
இவ்வருஷத்திய பூஜை காரடையான்நோன்பு மார்ச் பதினான்காம்தேதி திங்கட்கிழமை காலை பத்து மணி முதல் பத்து மணி ஐம்பது நிமிஷத்திற்குள் செய்யலாம் என்று வாத்தியார் சொல்லி சரடு கொடுத்துவிட்டுப் போனார். யாவரும் பூஜையை பக்தி சிரத்தையுடன் அனுஸரித்து, வேண்டும் வரங்களைப் பெறவேண்டும். உங்கள் யாவருக்கும் மஞ்சள்,குங்குமம்,தாம்பூலத்துடன் என்னுடைய அன்பான நல் ஆசிகளையும் சொல்லுகிறேன். அன்புடன்
பூஜைக்குச் செய்யும் முக்கியமான நிவேதனப் பொருளின் பெயரைக்
கொண்டே இந்தப்பூஜையை,அதாவது நோன்பைச் செய்கிறோம்.
இதற்காகத் தொன்று தொட்டு ஒரு கதையும் உண்டு.
ஸாவித்ரி அவள் கணவர் ஸத்யவானின் உயிரை மீட்டு வந்து
நன்றிக்காக இவ்விரதத்தை அநுஷ்டித்ததாகச் சொல்லுவார்கள்.
அசுவபதி என்கிற அரசனுக்கு நெடுநாட்கள் குழந்தைப்பேரின்றி, தவமிருந்து
பெற்ற பெண் ஸாவித்ரி.
மிக்க அருமையான குணம் நிறைந்த,தெய்வ பக்தியுள்ள,, ஒரு பெண்.
அரசர் ஒருஸமயம் நாரதரைப் பார்க்கும் பொழுது இவ்வளவு உத்தம் சீலமான
பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வினவினார்.
நாரதரும் அவள் ஒரு உத்தமமான தாய்தந்தையரிடம் பக்தி கொண்டு
அவர்களை ரட்சிக்கும் ஒரு நல்லவனை மணப்பாள் என்றாராம்.
ஆனால் அவனுக்கு ஆயுள் குறைவு என்றும் சொல்லி வைத்தார்.
வழக்கம்போல ஒருமுறை தோழிகளுடன் ஸாவித்ரி வனத்திற்குச் சென்ற
போது அவ்விடம் ஸத்யவானைச் ஸந்திக்கிறாள்.
ஸத்யவானையே மனதில் வரித்து விடுகிறாள்
ஸத்யவானின் தந்தை பகையரசர்களால் நாடு கடத்தப்பட்டு
வனத்தில் வசிக்கும், கண்தெரியாத அரசர். மனைவிக்கும் கண்தெரியாது.
அவர்களைப் புதல்வன் ஸத்யவான் காப்பாற்றி வருகிரார்.
காட்டில் விரகு வெட்டி, அதை நாட்டில் விற்று அந்தத் தொகையில்
காட்டில் குடிசை அமைத்து அதில் வாழ்ந்து வருகிரார்கள்.
ஸத்யவானைச் சந்தித்த விஷயம் சொல்லி அவளின் விருப்பத்தைச்
சொல்லுகிறாள் தந்தையிடம்.
அவருக்கு ஆயுள் குறைவு, என்று சொல்லியும் ,ஸாவித்ரியின் விருப்பப்படி
ஸத்யவானுடன் மணமுடித்து வைக்கிரார்.
ஸாவித்ரியும் மாமனார்,மாமியாருக்குச் சேவை செய்து கணவருடன்
உத்தமமான வாழ்வை நடத்தினாள்.
View original post 328 more words
Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 8:38 முப இல் மார்ச் 10, 2016
சரியான நேரத்தில் கொடுத்துள்ள மிகவும் அருமையான பயனுள்ள பதிவுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.
2.
chollukireen | 12:44 பிப இல் மார்ச் 11, 2016
நன்றிக்கும்,பாராட்டுகளுக்கும், மருமகளுக்கும்,உங்களுக்கும் என் ஆசிகளும் நன்றிகளும். அன்புடன்
3.
ranjani135 | 10:31 முப இல் மார்ச் 10, 2016
எனக்கும் சரடு போஸ்ட்டில் வந்துவிட்டது. எத்தனை மணிக்கு என்று கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள்.
நன்றி,
இனிய காரடையான் நோன்பு நல்வாழ்த்துகள், உங்களுக்கும் உங்கள் மருமகள்களுக்கும்.
4.
chollukireen | 12:42 பிப இல் மார்ச் 11, 2016
ரஞ்ஜனி நான்கூட சென்னை வருகிறேன். மனதாலேயே எல்லோரையும் பார்த்து விடுகிறேன் உங்கள் மகள்,மருமகளுக்கும், உங்களுக்கும் மனமார்ந்த ஆசிகள். அன்புடன்
5.
Umaravishankar | 7:51 முப இல் மார்ச் 13, 2016
சூப்பர் இன்போ ரெம்ப நன்றி அப்புடியே ஆடை செய் முறையையும் கொஞ்சம் தாந்தா ரெம்ப சௌகர்யமா இருக்கும் ப்ளீஸ்
6.
chollukireen | 8:14 முப இல் மார்ச் 13, 2016
அன்புப்பெண்ணே சொல்லுகிறேன் பதிவுகளில் பிரிவுகள் என்று வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் இனிப்பு வகைகள் என்றதில் கிளிக் செய்யவும். post filedunder இனிப்பு வகைகள் என்று அடுத்தடுத்து வரும். அதில் காரடை உப்பு, வெல்லம் என இரண்டு வகைகளின் குறிப்பும் இருக்கிறது. பார்த்துவிட்டு பார்த்தாயா என்றும் சொல். சந்தோஷமாக இருக்கும். அடிக்கடி வா பெண்ணே. ஆசிகளுடன் அன்பும் சொல்லுகிறேன்.