ஒரு பரோபகாரத் தந்தை.
மார்ச் 16, 2016 at 6:48 முப 9 பின்னூட்டங்கள்

உதவி
துக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை மற்றவர்களுக்கும் இம்மாதிரி கஷ்டம் நேரிடக் கூடாது என்று, அதற்குத் தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டுமென்று,செய்து கொண்டிருக்கும் காரியம்தான் என் மனதை மிகவும் நெகிழ்த்தியது.
பார்க்கப்போனால் இவர் அன்றாடும் காய்கறிகளைத் தள்ளு வண்டியில் வைத்து விற்று அந்த வருமானத்தில் இரவு,பகல்,மழை,வெயில்,குளிர் எதுவும் பாராது,அலைந்து திரிந்து சம்பாதித்தால்தான் குடும்பம் ஓடும். மும்பை அந்தேரி பகுதியில் விஜயாநகர் இவர் வியாபார ஏரியா. தான் படும் கஷ்டம் பிள்ளைக்கு வரக்கூடாது என்று,ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பிள்ளையைப் படிக்கவைத்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு,டிப்ளமா என்ஜீயனிரிங் படிப்பதற்காக ஒரு பாலி டெக்னிக் கல்லூரிக்குஅவருடைய பிள்ளை தனது நண்பருடன் சென்றுவிட்டு மோட்டர் ஸைக்கிளில்வரும் போது, எதிர் பாராத வகையில் வீதியில் மழை நீரால் மூடப்பட்ட ஒரு பள்ளத்தில் வீழ்ந்து இருவரும்தூக்கி எறியப்பட்டனர். இவரின் பிள்ளை பலத்த அடியில் உயிரிழந்தான் தந்தை தாதாராவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு. தனது பெண்ணிற்காக அதிகம் துக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை. அதன்பிறகு மகனுக்கு செலுத்தும் அஞ்ஜலியாக, பிரருக்கு இம்மாதிரி கஷ்டம் நேரிடாமலிருப்பதற்காக, காய்கறி விற்கும்போதே வீதியில் எங்கு குழி,பள்ளங்கள் இருக்கிறதோ, அதைப் பார்த்துப் பார்த்து நிரப்புகிரார்.
இதை ஆரம்ப நாட்களில் பலர் வேடிக்கைப் பார்த்தனர். தற்போது என்னுடன் ,பலர்ஒத்தாசையும் புரிகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது. இது ஸம்பந்தமாக சாலை பராமரிப்பு நிறுவனம்மீது, போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். கோர்ட்டில் 6,7 மாதங்களாகியும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மகன் படித்து பெரிய ஆளாக வருவான் என்று கனவு கண்டேன் அவ்வளவு புத்திசாலிமகன். எங்களைவிட்டு மகிழ்ச்சி சென்று விட்டாலும், என் மகனுக்குச் செலுத்தும் அஞ்ஜலியாக இதைச் செய்து வருகிறேன் என்கிரார் தாதாராவ்.
பின் குறிப்பு. மனம் நெகிழ்ந்த வேளையிலும், தாதாராவ் குழிகளை நிரப்பி அஞ்ஜலி செய்வது மனதை நெகிழ்த்துகிறது. இது ஒரு மாதத்திற்கு முந்தைய பேப்பரில் வந்த ஸமாசாரம்தான்.பெற்றமனம். இதுதான். என்னுடைய கேமரா பழுதாகி இருந்ததால் அப்போது போட நினைத்த ஸமாசாரமிது.
Entry filed under: அதிசயம்.ஆனால் உண்மை..
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 7:08 முப இல் மார்ச் 16, 2016
// மனம் நெகிழ்ந்த வேளையிலும், தாதாராவ் குழிகளை நிரப்பி அஞ்ஜலி செய்வது மனதை நெகிழ்த்துகிறது.//
ஆமாம். இதனைப்படிக்கும் போதே அந்தத்துயரச் சம்பவத்தை நினைத்து மிகவும் வருத்தப்படவும், இவரின் இப்போதைய பொதுநலத் தொண்டினை நினைத்துப் பெருமைப்படவும் முடிகிறது.
2.
chollukireen | 5:42 முப இல் மார்ச் 21, 2016
ஆமாம். இம்மாதிரி மனிதர்களைப் பார்ப்பதும் அபூர்வம்தான். அவர் மனதும் நாளடைவில் ஸமாதானமாக வேண்டுகிறேன். நன்றி அன்புடன்
3.
ranjani135 | 9:39 முப இல் மார்ச் 16, 2016
தனது இழப்பையும், துக்கத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு பரோபகாரம் செய்யும் இந்த தந்தையை எத்தனை பாராட்டினாலும் போதாது. அரசு இயந்திரம் இவருடன் ஒத்துழைத்து தெருவில் உள்ள எல்லாக் குழிகளையும் மூட வேண்டும்.
நல்ல பகிர்வு.
4.
chollukireen | 5:49 முப இல் மார்ச் 21, 2016
மும்பை நகராட்சி கவனித்து நல்லபடி செய்ய வேண்டும். தொண்ணூருடன் துவரம்பருப்பு என்று சொல்வார்களே அதுபோல இன்னும் எத்தனை இடங்களில் இந்தக் குறைகளுள்ளதோ? நடவடிக்கை எடுப்பார்கள்என்று நம்பிக்கை வைக்க வேண்டியதுதான் நம்மால் செய்ய முடிந்தது. நன்றி அன்புடன்
5.
angelin | 5:07 பிப இல் மார்ச் 16, 2016
தன்னுடைய துக்கத்தை விட பிறருக்கு அதே நிலை ஏற்படகூடாது எனும் எண்ணம் மிக அருமையான குணம் எங்கள் ப்ளாகிலும் படித்த நினைவிருக்கு ..இப்படிப்பட்ட விஷயங்களை அடிக்கடி ஒவ்வொருவரும் பகிரணும்..அப்போதான் மனித நேயம் வளரும்
6.
chollukireen | 5:55 முப இல் மார்ச் 21, 2016
நானும் எங்கள் ப்ளாக் வாசகிதான். சிறிது காலமாக அதிகம் கவனக்குறைவும் ஏற்படுகிறது. நான் சென்னை வந்துள்ளேன். இவ்விடமுள்ள சிலபதிவர்களையாவது ஸந்திக்க ஆசை. முதுமை தடைசெய்கிரது. உன்னுடைய பதில் அர்த்தமுடன் இருந்தது. நன்றி அன்புடன்
7.
மது | 6:06 முப இல் ஏப்ரல் 3, 2016
நிச்யம் பெரிய செயல்தான்
8.
chollukireen | 6:57 முப இல் ஏப்ரல் 3, 2016
முதல் வரவிற்கும், கருத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
9.
Geetha Sambasivam | 7:46 முப இல் ஏப்ரல் 4, 2016
அருமையான நபர்! தான் கஷ்டப்பட்டது போல பிறரும் கஷ்டப்படக் கூடாது என்று பாடுபடும் நல்ல மனம். அந்த மனதுக்காவது பிள்ளை பிழைத்திருக்கலாம்! மனசே பதறுகிறது, செய்தியைப் படித்துவிட்டு! 😦