காஃபியிலும் ஆர்கானிக்முறை இருக்கிறது.
ஏப்ரல் 8, 2016 at 10:39 முப 2 பின்னூட்டங்கள்
.
கேரளாவில கூட்டமைப்பினர் ஆர்கானிக் காஃபியைப் பயிரிடுகின்றனர். கோட்டயத்தைச் சேர்ந்த விவஸாயிகள் ரஸாயனக் கலப்பில்லாத இயற்கை உரம் போட்டு விளைவிக்கும் ஆர்கானிக் காஃபியை நாடு முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். மன்னார்காடு ஸோஷியல் ஸர்வீஸ் ஸொஸைட்டி மாஸ் என்ற கூட்டுறவுஅமைப்பின் மூலம் இதனைச் செய்கின்றனர்.
இந்த அங்காடிகளுக்கு காஃபிடோமென்ட் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. இவைகளைமட்டுமல்லாமல் பிற ஆர்கானிக் காய்கறி பழங்களையும் விற்க திட்டமிட்டுள்ளது. இயற்கைஉரம் போட்டு உற்பத்திச் செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. கோடிக்கணக்கில் வருமானமும் பெற்றுள்ளதாம்.இந்தக் காப்பிக் கொட்டைக்கு விலை அதிகமானாலும் விசேஷ மார்க்கெட் உள்ளதாம்.
மாஸ் நிறுவனம் ரஸாயனக் கலப்பில்லாத 12 வித பொருட்களை உற்பத்தி செய்கிறது..இந்தியாவிலும் இந்தவகை பயிர் வகைகள் செய்ய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மாஸ் நிறுவத்தினர் தமிழ் நாட்டிலும் ஆர்கானிக் காஃபியைப் பயிரிடுகின்றனர்.
கேரளாவில் 3110 ஹெக்டேர்நிலஅளவில்,18 கிராமங்களில் மூன்று ஆயிரம் விவசாயிகள் இந்த ரஸாயனக்கலப்பில்லாத உர விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.மார்க்கெட்டில் வரஆரம்பித்த பின்னர்
கூடிய விரைவில் நீங்கள் என்ன காஃபி பருகிறீர்கள் என்ற கேள்வியை எல்லா இடங்களிலும் எதிர் பார்க்கலாமா? பேப்பரில் படித்த செய்திதான். காஃபி விவகாரம்
ஆயிற்றே! படித்துப் பாருங்கள். படங்கள் உதவி கூகல். நன்றி.
காப்பிச்செடி.
Entry filed under: மனதிற்குகந்த கட்டுரை.
2 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 10:43 முப இல் ஏப்ரல் 8, 2016
பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 10:52 முப இல் ஏப்ரல் 8, 2016
முதலில் முக்கிய பாராட்டு. நன்றி. அன்புடன்