பிறக்கும்போதே ஹெச் ஐ வி யுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம்.
ஏப்ரல் 20, 2016 at 6:50 முப 6 பின்னூட்டங்கள்
UNAIDS Deputy Executive Director Dr Luiz Loures அவர்கள் தலைமைதாங்கி இந்த கூட்டங்களை நடத்தினார்.
பிறக்கும் போதே H.i.V நோயுடன் பிறக்கும் சிறார்களுக்கு எந்த வகையில் உதவுவது என்பதைப் பற்றிய விழிப்புணர்விற்காக என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க ரோமின் வாடிகன் ஸிடியும் Unaids உம் சேர்ந்து ஒரு பெரிய கூட்டம் நடத்தஏற்பாடு செய்தது. வாடிகன்ஸிடி ரோமில்இக்கருத்தரங்கு நடந்தது .
முதல் மீட்டிங் அதாவது கூட்டம் ரோம் வாடிகன் ஸிடியில் நடந்தது. ஹெச்ஐவி வந்த சிறியகுழந்தைகளுக்கு வைத்திய வசதி,படிப்பு,மேற்கொண்டு முன்னேற்றம் முதலான வகைகள் எந்த விதத்தில் செய்யலாம் என்ற கலந்தாய்வு நடந்தது. எய்ட்ஸ் இருக்கிறதென்று பிறப்பின்போதே தெரிவதில்லை. தாய்க்கு இருந்து,மருந்து மேற்கொள்ளாதவர்களும் இருக்கிரார்கள். தனக்கிருப்பதே தெரியாத தாய்மார்களும் இருக்கிரார்கள். ஆதலால் பிறந்த குழந்தைகளை டெஸ்ட் செய்து, அதனுடைய நிலைமையை அறிந்து உடனே வைத்தியம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தாய்க்கும் அப்படியே. சில குழந்தைகளுக்குத் தாய்ப்பால் பருகி வரும் ஒன்றரை வயதிற்குள் இந்த வியாதி பீடிக்கப் படுகிறது. குழந்தைக்குத் தாய்ப் பால் அவசியம். தாய்க்கும்,சேய்க்கும் மருந்துகள் கொடுப்பது அவசியமாகிறது. தாய்ப்பால் நிறுத்த வேண்டாம். தாயாருக்கு வியாதி இருந்து தக்க மருந்துகள் சாப்பிடாவிட்டாலும் இம்மாதிரி நிலை ஏற்படுகிறது.
இதைத்தவிர குழந்தைகளுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களிடம், அவர்களின் வியாதியைப் பற்றியும்,பிறறிடம் பழகும் முறை பற்றியும், பருவ வயதில் அவர்களின் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதைப் பற்றியும் அவர்களுக்குத் தெளிவாகப் போதிக்க வேண்டும். இதைப்பற்றிய கருத்தரங்குகள் நடந்தது. தாய்,தந்தையர்களை இழந்து அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அதே கம்யூனிடியிலேயே வைத்து படிப்பு,உணவு,உடை, இருக்கை,மற்றும் வைத்திய வசதிகளையும் செய்து கொடுத்து,ஸமயங்களில் உறவினர்களை சந்தித்து போக வர வசதிகளையும் கொடுத்து முன்னுக்குக் கொண்டு வரும்படியான ஏற்பாடுகளையும் செய்து நடத்திக் கொடுத்து வருகிரார்கள் நம் இந்தியாவில். இது போற்றத்தக்கதல்லவா?
கருக்கலைப்பும் கூடாது,காண்டமும் கூடாது,குழந்தைகள் மட்டும் வேண்டுமென்கின்றபோது முன்னெச்சரிக்கை மிகவும் அவசியமாகிறது.
இரண்டாவது நாளைய கூட்டம் மிகவும் பெரிய மருந்து தயாரிப்பாள நிர்வாகிகளும், மருந்து தயாரிக்கும் முறை தெரிந்தவர்களும், தயாரிப்பாளர்கள், நிறுவனர்கள் ஆகியோரின் கூட்டம் நடைபெற்று பல முடிவுகள் எடுக்கப் பட்டன.
நிதி வசதி இல்லை என்றவகையில் மருந்து வாங்க முடியாத நிலையில் எவரும் உயிரிழக்கக் கூடாது.
எந்த முறையிலாவது யாவருக்கும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும். மருந்து தயாரிப்பவர்களும், விற்பனை செய்பவர்களும் அதிக லாப நோக்கமின்றி,ஓரளவு லாபத்துடன் நல்ல விதத்தில் மருந்துகளை வழங்க வேண்டும். ஏழைகளுக்கு மருந்துகள் இலவசமாகப் போய்ச்சேரவேண்டும். இவைகளுக்கான வழி முறைகள் ஆராயப்பட்டு முடிவெடுக்கப் ப/ட்டது.
எது ஸரியாக இருக்கும்?[
இலவசமருந்துகள் வழங்க முடியாத ஏழை தேசங்களாக இருந்தால், க்ளோபல் பண்டுகள் மூலம் அத்தேசங்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்க வகை செய்யப் படுகிறது. க்ளோபல் பண்ட் நிறுவனம் பல நிதி வசதியுள்ள நாடுகளிலிருந்து நிதி உதவிபெற்று ஏழை நாடுகளுக்கு மலேரியா, டி.பி,எய்ட்ஸ், போன்ற தீவிர வியாதிகளுக்கு அத்தேசத்திலுள்ளவர்களுக்கு பலவிதத்திலும் தக்கபடி நிலமையை அறிந்து, பரிசோதித்து தக்க உதவியைச் சமயங்களில் செய்து உதவி வருகிறது.
இந்த மகா நாட்டிற்கு போப் ஆண்டவர் செய்தி அனுப்பி ஆசீர்வதித்திருந்தார்.
இந்தக் கூட்டத்துடன் இக்காரியங்கள் முடிவு பெறுவதில்லை. இந்த வியாதியை முற்றிலும் ஒழிக்கும் வரைக்கும் எல்லாவித உபகாரங்களும் தொடர்ந்து நடைபெற வேண்டும். உலகத்தில் யாவருடையமனித உயிர்களும் விலை மதிப்பில்லாதது. ஏழை,மற்றும் பணக்கார பாகுபாடுகள் இல்லாதது. யாவருக்கும் மருந்துகள் போய்ச்சேர வேண்டும். மற்றும் அவர் அனுப்பிய ஆசிக் கடிதத்தின் நகலையும் இத்துடன் சேர்த்துள்ளேன்
எதிர் பாராத விதமாக என்னுடைய 85 ஆவது பிறந்தநாளின் ஆசிகளை வாங்கிக் கொள்வதற்கான திடீர் வரவு. நேராக ரோமிலிருந்து வந்தான் என் சிறிய மகன். தில்லி மகனும்.அமெரிக்காவிலிருந்து பேரனும் வந்திருந்தனர். சொல்லாமல் கொள்ளாமல். ஏதாவது நல்ல விஷயங்கள் எனக்கு கிடைத்தால்ப்போதுமே. அதைப் பதிவிட்டுப் பார்த்து விட்டால் மகிழ்ச்சி. வழக்கம்போல என்னைப் பாராட்டும் இரண்டொருவர் கமென்ட் எழுதிவிட்டால் அசுவமேத யாகம் செய்து விட்ட மாதிரி ஒரு ஸந்தோஷம்.உங்களுக்குத் தெரியாத காமாட்சிம்மாவா? எல்லோருக்கும் ஆசிகளும் நன்றிகளும்.ஜெனிவா மகன் சொல்லக்கேட்டு முடிந்தவரை எழுதி இருக்கிறேன் அவ்வளவுதான்..
Entry filed under: மனதிற்குகந்த கட்டுரை.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 6:53 முப இல் ஏப்ரல் 20, 2016
மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 6:06 முப இல் ஏப்ரல் 21, 2016
இக்காலத்தில் பரவலாக எல்லோரும் தெரிந்து கொண்டதைகொண்டதை பிறர்கும் சொல்லலாமே என்று எழுதினேன். மிக்க நன்றி. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 9:54 முப இல் ஏப்ரல் 20, 2016
நல்ல தகவல்கள் அம்மா.
4.
chollukireen | 6:08 முப இல் ஏப்ரல் 21, 2016
ஆமாம். எழுதவும் ஒரு விஷயம் கிடைத்தது. மிக்க நன்றி. அன்புடன்
5.
ranjani135 | 5:57 பிப இல் ஏப்ரல் 27, 2016
பாவம் அந்தக் குழந்தைகள். அவர்கள் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கிறார்கள். அவர்களை இந்த சமூகத்தில் வாழவைக்க இது ஒரு நல்ல முயற்சி. போப் சொல்லியிருப்பதைப் போல இத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்து இந்தக் குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்களையும் சாதாரண மனிதர்களைப் போல வாழச் செய்வது மிகவும் அவசியமான பணி.
இந்த உயரிய காரியத்தில் ஈடுபடும் அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்!
6.
chollukireen | 11:25 முப இல் ஏப்ரல் 29, 2016
இந்த எய்ட்ஸ் ஒழிப்பு நோய் எப்பொழுது ஒழிக்கப் படுகிறதோ அப்போதுதான் உலகத்தில் யாவருக்கும் நிம்மதி. உங்களின் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்