தொட்டில் 1
ஏப்ரல் 27, 2016 at 2:23 பிப 19 பின்னூட்டங்கள்
பொழுது போகாமல் ஏதோ யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும்,வெளியில் போகாமல் தன் தள்ளாமையைக் காரணம் காட்டும் தாயைப் பார்த்தவுடன் மனம் கனத்தது. பிள்ளையல்லவா?
ஆபீஸிலிருந்தும் வந்ததும் வராததுமாய் அம்மா நான்உன்னைக் கூட அங்கு அழைத்துப்போகிறேன்.கட்டாயம் பெரியவர்கள் வந்துதான் ஆசீர்வாதம் செய்ய வேண்டுமாம்.வந்ததும் வராததுமாக அவ்வளவு முக்கிய செய்தி அம்மாவிற்கு.
ஆமாம் 75வயது முதியவளை அழைத்துப் போகிறானாம். வந்ததும் வராததும் அம்மாவிற்கு மனம் குளிர வார்த்தைகள். இந்த வயதானவர்கள் வீட்டிலிருந்தால் ஏதோ பெரிய உபசாரம் அவர்களுக்கு. வீட்டில் எத்தனைப் பிரசினைகளை நாம் கவனிக்கிறோம். நாம் பின்னுக்குப் போவது இவர்களால்தான் போலுள்ளது. இப்படி சில மருமகள்களின் எண்ணம் முகத்தில் பிரதிபலிக்கிறது.
என்ன அவஸரம் எங்கு ஓடிவிடப் போகிரார்கள். அப்புறம் விசாரித்தால் போதாதா. தான்தான் பெரிய ஆஸாமி என்ற எண்ணம் இப்படிதான் வந்து விடும் இவர்களுக்கு.
அழைத்துப் போகிறேன் என்று சொன்ன ஒரு வார்த்தையே அம்மாமார்களுக்கு வேண்டியவர்கள் வீட்டிற்குப்போய், வந்திருப்பவர்களிடம் அளவளாவிய ஒரு பெருமையை மனது ஒரு க்ஷணத்தில் அனுபவித்து விடுகிறது.போய் என்ன செய்யப்போகிறோம்?
நம்மை சற்று ஜாக்கிரதையாக அழைத்துப் போகும் பொருப்பு, இன்னும் போன இடத்திலும் நம்மைசற்று கவனிக்கும் பொருப்பு இவையெல்லாம் பிள்ளைக்கா?இன்னும் அக்கரையாக வேலைதான் பிரமோஷன் ஆகும். வாஸ்தவமும் அதுதானே.இப்படி சிந்திக்கும் மருமகளின் முகத்தை பார்த்து விட்டு நீங்கள் போய்விட்டு வாருங்கள். நான் போன மாதிரிதான் என்று ஒரு நொடியில் மனதை மாற்றிக்கொண்டு வாய்கள் மொழியை உதிர்க்கும். வாஸ்தவமும் அதுதானே!
முகமே காட்டிக் கொடுக்கிறதே
ஏன் அப்படி சொல்லணும் என்ன விசேஷம் கேட்டு விட்டுப் பதில் சொல்லுங்கள். நான் காபி கலக்கப்போகணும். மேலே போய் ட்ரஸ் மாத்திண்டு வரேன். நீ ஸந்தோஷப் படுவாய் அதான் வந்தவுடனே சொன்னேன். பிள்ளை மேலே போயாச்சு. என்ன நாம் ஸந்தோஷப்படும்படியான அவ்வளவு பெரிய ஸமாசாரம். யோசனை பலத்தது.
ஆவல் அதிகரித்தது. என்னுடைய சினேகிதன் குழந்தைக்கு நாளைக்குத் தொட்டில் போட்டு பெயரிட வேண்டுமாம் . பெரியவளாக நீ வரவேண்டுமாம்.
என்னது,தொட்டிலா.குழந்தையா என்ன சொல்றே நீ! அதெல்லாம் நாளைக்குப் போனால்தான் தெரியும். வீட்டுக்கு வரும்போது அவஸரமா சொல்லிவிட்டுப் போனான். எனக்கும் ஒன்றும் புரியலே. போனால்த் தெரியும். அவ்வளவுதான்.
வயதானவர்களுக்கு எண்ண ஓட்டமா பஞ்சம். இரவு படுத்தால் எண்ண ஓட்டம் கனவா,நினைவா இது எத்தகையது?
எத்தனை தொட்டில்கள் போட்டுப்பார்த்து பேரிட்டு வாழ்த்தி இருக்கிறோம். குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை என்று பல காலமான பிறகு அவர்கள் வீட்டில் தொட்டில். ஆச்சரியம். மனது சிந்திக்க ஆரம்பித்து விட்டது.
என்ன ஒரு இருபதுவயதில் லேட் கலியாணம்தான் அந்தக் காலத்தில் எனக்கு வாசலில் நிக்காதே, பெரியவா வாசலில் நடந்துபோனா அதுவும் நாம் எழுந்து நிற்க வேண்டும். அறியா பிள்ளைகள் ரோடில் போனால் எழுந்து உள்ளேயே ஓடிப்போய்விட வேண்டும். எங்கேயாவது போகவேண்டுமானால் அதுவும் கல்யாணம் கார்த்திக்கு வயதானவர்களுடன் உட்கார்ந்து பதவிசாக இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்து ஊர் கதைகளெல்லாம் பேசுபவர்கள் பேச்சை மட்டும் தாராளமாக காதில் விழும். வம்பு என்று சொல்வதா நியூஸ் பேப்பர் என்று சொல்வதா? அது அந்தக்காலம். நல்லது கெட்டது எல்லாம் அத்துபடியாகும்.
ஜெயாமாமி பெரிய பணக்கார பாட்டி என்று கூடச் சொல்லலாம். மாமா இல்லை. ஒவ்வொரு காரியமும் அவ்வளவு விதரணை. கூடப் பிறந்தவர்கள் உறவு, தெரிந்தவர்கள் என்று யாவருக்கும் அவ்வளவு உபகாரம். தயை,தாக்ஷண்யம் எல்லாம். குழந்தைகள் கிடையாது. மிகவும் யோசித்து யோசித்துச் சின்ன தங்கையின் பிள்ளையை ஸ்வீகாரம் எடுத்தார். நல்ல அருமையான பிள்ளை. தன் கூடவே வைத்துக்கொண்டு சீராட்டி,பாராட்டி,படிக்க வைத்துகாலேஜும்படிக்கவைத்து,மனமகிழ்ந்து இருந்தார். கிராமங்களில் வேலை கிடைக்குமா? நல்ல வேலை சென்னையிலும் வேலை கிடைக்கப்போகிறது.. ஊரார்முதல் யாவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. நான் ,நீ என்று பெண் கொடுக்க முன் வந்தனர். அழகான பெண்,படித்தபெண்,நல்ல குணமுள்ளவள் என்று தூரத்து உறவினரின் வழியில் மருமகளும் வந்தாயிற்று. மருமகளோ நகரத்தில் படித்தவள். பார்க்க,பேச அழகுதான். நல்ல பெண்
ஊரே கொண்டாடியது. புதுப்பொண்ணு ஒரு காரியம் கண்ணில் காட்டாமல் எல்லாம் செய்து மாதங்களோடி விட்டது. பண்டிகை,பருவம் ஐயோ இந்தப் பெண்ணிற்கு மடி ஆசாரமே தெரியவில்லையே! மாமிக்கு தோன்றியது. நாம் சொல்லிக் கொடுப்போம். காத்தாலே எழுந்ததும்,பல் கில்தேச்சுட்டுவந்து ஸாமியை நமஸ்காரம் பண்ணணும்னு சொன்னோம். ஒரு நாள் கூட பண்ணி பாக்கலே. குளிச்சுட்டு மடியா புடவை கட்டிண்டுதான் சமையல் பண்ணணும். அட கூட மாடவாவது ஒத்தாசை பண்ணும்மான்னு சொன்னா அதுவும் இல்லே. நம்ம அளவு மடி இல்லாவிட்டாலும்,லாண்ட்ரிலேந்து இஸ்திரி பண்ணி வந்த புடவையைக் கட்டிக் கொண்டு வந்து, கூடமாட செய்ய வரா. சொன்னா புடவை சுத்தம்தானே அம்மா வேணும் இதெல்லாம் என்னம்மா? எனக்கு சுத்தமா இதெல்லாம் பிடிக்காது என்று நேரில் சொல்லி விட்டாள். ஸரி நாம் எதுவும் சொல்லக்கூடாது. நல்ல பேர் கிடைக்காது. மனம் குமுறினாலும் பார்க்கலாம். நாமே செய்து கொள்வோம் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள். எச்சல் பண்ணி சாப்பிட்டால் கை அலம்பணும் இப்படி செய்யணும்மா என்று நல்ல முறையில் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு மறு நாளே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஸகஜபாவம் தொலைந்து விட்டது. எதையும் சொல்ல முடிவதில்லை. நாம் ஏதோ வேண்டுமென்று சொல்வதுபோல பிள்ளையிடம் உருவேற்றி விட்டாள்.
என்ன பெரிம்மா வரவர அதோட ரொம்ப மல்லு கட்ரே போலெருக்கே. வேலைக்கு நான் போகும்போதேஎன்னோட அவ வந்துடணுமாம். அதுவரை பொறந்தவீடு போகிறேன் என்கிறாள் . அப்படி என்னதான் நடக்கிறது இங்கே. என்னாலே நம்ப முடியலே. ஒண்ணுமே இல்லப்பா நடந்தது இதுதான். வேண்டாம் பெரிம்மா போகட்டும். வீடு பார்த்து அப்புறம் அவவரட்டும். நான் அவளைக் கொண்டு விட்டுடறேன். உன் மடி ஆசாரம்,அன்பு அவளுக்குப் புரியாது. நான் எப்படியும் அடுத்த வாரம் போகணும். மறுத்து எதுவும் சொல்ல முடியலே. துக்கம்,தொண்டையை அடைக்க பிரமித்து நின்றாள். எல்லாம் ஒவ்வொன்றாக நாளாவட்டத்தில் அவளிஷ்டப்படியே நடந்தது.பேரன்,பேத்தி பிறந்தது. போய்ப் பார்த்து விட்டு வந்தாள். அவள் திரும்பவராததுடன் கணவனையும், ஸொத்தில் விற்கவும்,இதை விற்கவும் என்று மனஸ்தாபம், அபிப்ராய பேதமுண்டாக்கி பேச்சு வார்த்தை அற்றுப் போகும் அளவிற்கு வளர்ந்து விட்டது. மாமி எதைக் கேட்டாலும் கொடுத்தாள். ஊர் அக்கம் பக்கம் அருகில் தெரிந்த,அரிந்த பெண்களிடம் பாசம் காட்டி காலம் முழுதும் அவர்களின் அன்புடன் காலத்தைக் கழித்தாள். ஆஸ்திக்குப் பிள்ளையாக எல்லாம் அவர்களுக்குப் போயிற்று. மாமியும் ஊராரின் அன்பிலேயே நல்லபடி போனார்.வளர்த்த ஸ்வீகாரம்.தொட்டில்போடாதது.
இது மனதை விட்டு அகலுமுன்னரே லக்ஷ்மி அக்காவாத்துத் தொட்டில் ஞாபகம் வந்து விட்டது.
தொடரும்
Entry filed under: கதைகள்.
19 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 3:03 பிப இல் ஏப்ரல் 27, 2016
தொடர்கதையா அம்மா.. தொடர்கிறேன்.
2.
chollukireen | 1:56 பிப இல் ஏப்ரல் 29, 2016
தொடர்கதை என்று சொல்ல முடியுமா, தெரியவில்லை. ஸம்பந்தப்பட்ட நிகழ்வுகள். பழமையானது. வருகைக்கு மிக்க நன்றி. அன்புடன்
3.
chitrasundar5 | 3:37 பிப இல் ஏப்ரல் 27, 2016
காமாக்ஷிமா,
நீண்ட நாட்கள் கழித்து வலைப்பக்கம் வந்தேன். ‘தொட்டில்’ பெயரைப் பார்த்ததுமே கதையாகத்தான் இருக்குமென நினைத்தேன். எவ்வளவு நாட்களாயிற்று, உங்களின் விறுவிறுப்பான கதைகளைப் படித்து ! இங்குள்ள கேரக்டர்கள் எனக்கும் பலரை நினைவுபடுத்தியது.
அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன், அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 2:03 பிப இல் ஏப்ரல் 29, 2016
என்னுடைய காலத்து நிகழ்வுகள் ஸம்பந்தப்பட்டது. மனதிலுள்ளதை எல்லாம் எழுத்தில் கொண்டு வந்தால் மூளைக்கு சற்று வேலை குறைவாகுமோ என்ற எண்ணம். இன்னும் பல கேரக்டர்களைப் பார்க்கலாம். வர்ணனை இல்லாத நபர்கள் வந்து போவார்கள். உன்னுடைய பின்னூட்டங்களை எதிர்ப் பார்க்கிறேன். நன்றி. அன்புடன்
5.
ranjani135 | 5:49 பிப இல் ஏப்ரல் 27, 2016
தொட்டில் ஆரம்பமே விறுவிறுவென்று தொடங்கியிருக்கிறது. எத்தனை எத்தனை கதைகளோ தொட்டிலினுள். காத்திருக்கிறேன், படிக்க.
6.
chollukireen | 2:05 பிப இல் ஏப்ரல் 29, 2016
வாஸ்தவம். நினைவுகள் வரும்போதே தொட்டிலிலிட்டு தாலாட்ட வேண்டும். வருகைக்கு நன்றி. அன்புடன்
7.
MahiArun | 5:27 பிப இல் ஏப்ரல் 28, 2016
நல்லா இருக்கும்மா…பல நாட்களா படித்துப்பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகிருவேன், இன்று உட்கார்ந்து கமெண்ட் போடுகிறேன்! 🙂 😉
8.
chollukireen | 2:10 பிப இல் ஏப்ரல் 29, 2016
எஸ்கேப் ஆகாததற்கு மிகவும் நன்றி. வரவர நான் வந்தால்தானே பிறரும் வருவார்கள். தொடர்ந்துவா. பழைய நாட்கள் எனக்கு மிக்க ஸந்தோஷத்தைக் கொடுத்தது. அன்பான நாட்களவை. இப்போது நீ ஸம்ஸாரி.அன்புக்கு நன்றி அன்புடன்
9.
Geetha Sambasivam | 10:13 முப இல் மே 2, 2016
இங்கேயும் தொட்டில் குறித்த பேச்சு நடந்து வருகிறது! 🙂 உங்கள் கதையிலும் தொட்டில்! சொந்தப் பிள்ளைகளே இந்தக் காலத்தில் மாறிவிடும்போது ஸ்வீகாரப் பிள்ளையிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? 😦
10.
chollukireen | 5:39 முப இல் மே 3, 2016
பலஇடங்களில் ஸிவீகாரம் கொடுத்தவர்ளே நன்றாக மேற்பார்வையுடன் கௌரவமாக இரண்டு குடும்பங்களையும் ஒற்றுமையுடன் கடமைகள் நிறைவேற்றுகிரார்கள் அதுவும் இருக்கிறது. ஸொந்தப்பிள்ளையுடன் , நாமும் நமக்காக எல்லா விதங்களிலும், பிறறை எதிர்ப் பார்க்காத நிலையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இதுதான் இப்போது நம்முடைய முதற்படிப்பினை. நன்றி அன்புடன்
11.
Jayanthi Sridharan | 7:22 பிப இல் மே 2, 2016
viru viru aarambam mami. Looking forward to read your wonderful autobiographical touches in the story…
12.
chollukireen | 5:52 முப இல் மே 3, 2016
ஓஹோ நீ ஊரிலில்லை என்று நினைத்தேன். என் சென்னை விஸிட்டின்போது ஸந்திக்க முடியவில்லை. எது ஒன்றும் உடல் அஸௌகரியங்களால் நினைப்பது நடப்பதில்லை. உன் மறுமொழியை வரவேற்கிறேன். அன்புடன்
13.
கோமதி அரசு | 1:02 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
அன்பான பெரிய்ம்மாவிற்கு ஊரில் எல்லோரும் சொந்தமாகி காலம் கழிந்ததும், ஊரார் அன்பில் நல்லபடியாக போனார் என்று படிக்கும் போது மனம் கனத்து போகிறது.
14.
chollukireen | 1:14 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
கதையாக நினைத்துக் கொள்ளுங்கள். எழுதும்போதும் மனம் கனக்கிறது. அன்புடன்
15.
chollukireen | 11:55 முப இல் செப்ரெம்பர் 22, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
எதுவும் எழுத முடியவில்லை. இந்தத் தொட்டிலையாவது மறுபதிவு செய்து தாலாட்டுவோம் என்று தோன்றியது. கட்டாயம் வந்து மறுபடி படித்து அபிப்ராயம் சொல்லுங்கள் அன்புடன் காத்திருக்கிறேன். அன்புடன்
16.
Geetha Sambasivam | 12:17 பிப இல் செப்ரெம்பர் 22, 2020
கருத்தை ஏற்குமா தெரியலை. நீங்கள் மறுபடியும் இந்தப் பதிவைப் போட்டதுக்கு சந்தோஷமும், நன்றியும்.
17.
chollukireen | 10:52 முப இல் செப்ரெம்பர் 23, 2020
கருத்தை ஏற்றுக்கொண்டு விட்டது. நீங்கள் அன்புடன் மறுமொழி இட்டது ஸந்தோஷம். நன்றி. அன்புடன்
18.
Seshadri | 10:54 முப இல் செப்ரெம்பர் 25, 2020
Arputhamana thoughts chithi….. Kumar
19.
chollukireen | 11:09 முப இல் செப்ரெம்பர் 25, 2020
குமார் உன்னுடையபின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. மறுபதிவு இது. நான்கு வருஷத்திற்கு முன்பு எழுதியது. எல்லோருக்கும் ஆசிகள் அன்புடன்