அன்னையர் தினம்.
மே 7, 2016 at 10:20 முப 8 பின்னூட்டங்கள்

அன்னையர்கள்.
பிரதி வருஷம் மேமாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம் இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும் யாவரையும் ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யாவருக்கும் வாழ்த்துகள். அன்னையர் தினம் கொண்டாடி அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதுடன் நின்று விடாமல் பெற்றவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை உடன் வைத்துக் கொண்டு நல்ல அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி அவர்களை மகிழ்வித்துக் கொண்டு ஆதரியுங்கள். பணம்காசு,வீடு,வாசல் எல்லாமிருந்தாலும், இவைகளை நிர்வகித்துக் கொண்டு கையாளவும் முடியாதபோது,நீயா,நானா என்று பேச்சுக்கிடமில்லாமல் அன்புடன் ஆதரிப்பதுதான் அன்னையர்தின சிறப்புப் பரிசு. கணவன்மனைவி ஆக உங்கள் இரு குடும்பத்தினரையும் ஒன்றுபோல மதித்து அவசியமானவர்களுக்கு உதவுங்கள்.
முதுமையில் அன்பு காட்டி அரவணையுங்கள். ஏழைத் தாய் தந்தைகளாயின் உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு முன்பே அவர்களுக்கும் ஓரளவு வசதிகளை ஏற்படுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். இது பொதுவான வேண்டுகோள். அன்னையர் தின உறுதி மொழியாக இதை ஏற்று, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். வாழ்க அன்னையர் தினம். வளர்க மக்களின் அன்பு.
8—5—2016 அன்னையர்தினம். போற்றுங்கள் அன்னையை.அன்புடன் சொல்லுகிறேன்.
Entry filed under: அன்னையர்தினம்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
A Kumar | 12:42 பிப இல் மே 7, 2016
Akka/Amma
Ungal Anniyar Dhina Vazhthukkal rombavum arumai.
Innum pala andugal ungal asirvathangal engalukku vendum.
Anbudan
kumar, and Sudha
2.
chollukireen | 1:22 பிப இல் மே 8, 2016
மிக்க ஸந்தோஷம். வாழ்த்துகள். அன்புடன்
3.
vijayalakshmi | 5:33 பிப இல் மே 7, 2016
Very truly said…we should follow your words
4.
chitrasundar5 | 12:32 முப இல் மே 8, 2016
காமாக்ஷிமா,
அன்னையருக்கான பரிசாக சொல்லியுள்ளவை அனைத்தும் உண்மை. இவ்வாறு நடந்துகொண்டால் பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது ஒரு திருப்தி வரும்.
உங்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள் அம்மா !
5.
ஸ்ரீராம் | 12:53 முப இல் மே 8, 2016
உண்மைதான் அம்மா. கடமைக்கு வாழ்த்துச் சொல்லாமல் அவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் மனம் வரவேண்டும். இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
6.
Banumoorthy S | 5:49 முப இல் மே 8, 2016
Hi,
It should be 08-05-2016.Pl. notify to others.
2016-05-07 15:50 GMT+05:30 “சொல்லுகிறேன்” :
> chollukireen posted: ” பிரதி வருஷம் மார்ச்மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்
> கிழமையை நாம் யாவரும் அன்னையர் தினமாகக் கொண்டாடுகிறோம் இப்போது. முன்பெல்லாம்
> இது தெரியாது. மாதர்குல திலகங்களான எல்லா தாய்மார்களும் யாவரையும்
> ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். யாவருக்கும் வாழ்த்துக”
>
7.
chollukireen | 9:06 முப இல் மே 8, 2016
அன்பு மிக்க பானு மூர்த்தி தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு மிகவும் நன்றி. இப்போது திருத்திவிட்டேன். எந்த முறையில் இவ்வாறு தவறுதல் செய்தேன் புரியவில்லை. வயது காரணமாக இருக்கலாம். உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்களும் என் பதிவைப் படிக்கிறீர்களென்று மிக்க ஸந்தோஷம்.உதவிக்கு நன்றி பெண்ணே என்று சொல்லலாமா? ஆசிகளும்,அன்புடனும் சொல்லுகிறேன்.நன்றி.
8.
chollukireen | 9:08 முப இல் மே 8, 2016
மே மாதம் என்று திருத்தி விட்டேன். அன்புடன்