தொட்டில்–4
மே 18, 2016 at 1:47 பிப 12 பின்னூட்டங்கள்
உதவி—கூகல்—நன்றி
என்னது திரும்பவும் ஆசாரமான குடும்பத்துத் தொட்டிலேவாா? நீங்கள் கட்டாயம் நினைப்பீர்கள் . இம்மாதிரி கதைகளெல்லாம் நான் சொன்னால்தானே உண்டு. எல்லா இடத்திலேயும் எதிர்மறையேதானா? நல்லது ஒன்றுமே இல்லையா? சொல்லிக் கொண்டேதான் வருகிறேன்.. ஞாபகம் வரும் அளவிற்கு எழுத்து வேகம் போதவில்லை.ஆமாம் இன்னொரு வைதீகக் குடும்பம் இப்படிதானே ஆரம்பிப்பீர்கள். என்ன செய்வது. இப்படிப்பட்ட ஸமுதாயத்தில்தான் புத்ரன் இல்லைவிட்டால் பித்ருக்கள் கடைதேற மாட்டார்கள் என்ற எண்ணங்கள் ஆழப் பதிந்திருந்த காலம். அவர் ஒருவேதமூர்த்தி.
வேதவித்துஎன்றேசொல்வார்கள்வேதங்கள்,தர்மசாஸ்திரம்,தத்துவ வியாகரணங்கள் எல்லாம் கரைத்துக் குடித்தவர். கிரஹஸ்தன் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு உதாரணமானவர். குடும்பத்துக்கு ஒரே பிள்ளை. அவருக்குப் பெண்தானா கிடைக்காது. நல்ல குடும்பத்துப் பெண்ணுடன் விவாகமாகி பல வருஷங்களுக்குப் பின் பெண் மகவு. ஸந்தோஷம் அநுபவிக்கக விடாமல், அடுத்த மூன்று நாட்களிலேயேே மகராஜி போய்ச் சேர்ந்து விட்டாள். அம்மாவினால்க் குழந்தையை எவ்வளவு நாட்கள் பார்த்துக் கொள்ள முடியும்? அப்படியும் ஐந்தாறு வருஷங்கள் போயிற்று. இன்னொரு விவாகம் செய்தாலும் சிறிய பெண்கள்தானே கிடைக்கும். திரும்பவும் விவாகம் செய்தார்கள்.. நாலைந்து வருஷங்கள் கடந்தது.பாட்டிக்கு பேரன் பிறக்கப் போகிறான் என்று ஸந்தோஷம்.
பார்க்கிறவர்கள் எல்லோரும் தாயும்,பிள்ளையும் நல்லபடி வெவ்வேறாகி ஸுகப்பிரஸவம் ஆக வேண்டும் என்றே ஆசிகள் வழங்கும் காலமது. பிரஸவம் என்பது மறு பிறவி.. ஆயிரம் காலத்துப் பயிராக இருக்க வேண்டும் என்பார்கள். வைத்திய வசதி கிடையாது. நம்மது என்ன ஆயிற்று பார்ப்போமா?
எவ்வளவு ஜாக்கிரதை,எப்படி இருந்தாலும் நடப்பது நடந்தே தீரும். சோதனை என்பது இதுதானோ? மூத்தவளாவது ஒரு குழந்தையை விட்டுப் போனாள். இவளது குழந்தை உலகத்தையே பார்க்கவில்லை.மறுபடியும் சோகம்.இவளும் போய்ச் சேர்ந்தாள். அந்தகாலகட்டத்தில் பெண்களைக் கொடுக்கவும் மனிதர்கள் தயார். காலம் ஓடவேண்டுமே. பெண்ணுக்கும் நல்ல இடமாகப் பார்த்து பிறகும் ஒத்தாசை
வேண்டுமே!
ஊருக்குள்ளேயே ஸம்பந்தம் வேண்டுமே? அவரும் பெண்ணுக்கு முதலில் நல்ல இடத்தில் விவாகம் செய்து விட்டுத் தானும் கலியாணம் செய்து கொள்கிரார். நல்ல வேளை இந்தக் கல்யாணத்தின் மூலம் ஸந்ததி உண்டாகவில்லை..
பெண் கர்பவதி ஆகிராள். நல்லபடி ஆகவேண்டுமே என்ற பயம்தான் மேலிடுகிறது. அந்த நாட்களில் இப்படி எவ்வளவு காலம் முன்நின்றது யூகிக்க முடியவில்லை. குடும்பத்தின் முதல் ஸந்தோஷமாகப் பேரன் பிறந்தான். ஸந்தோஷம் கரை புரண்டது. எவ்வளவுவருஷங்களுக்குப்பின்வீட்டில்சம்பந்திகள்,மாப்பிள்ளை,வருவோர்,போவோர் என களை கட்டியது.மூன்றாவதாக பெண்ணைக் கொடுத்தவர்களுக்கு மட்டும் நம் பெண்ணிற்கு ஒன்றுமில்லாது போய்விடுமோ என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்து விட்டத
.எந்த காலத்திலும்எல்லோரிடமும் எல்லா குணங்களும் ஆங்காங்கே தலை தூக்கிக் கொண்டுதான் இருந்தது.ஆனால் ஸம்பந்தப் பட்டவளோ எவ்வளவோ கஷ்டங்களை நேரில் பார்த்ததின் பயன் குடும்பத்தின் ஸந்தோஷத்தை அவளுடயதாகவே ஏற்றுக்கொண்டு நல்ல முறையில் தோழமையுடன் பாராட்டுவதும்,சீராட்டுவதாகவும் பெரிய மனுஷியாகவே செயல்பட்டு குடும்பத்தை அழகுற நடத்தினாள். குழந்தை பேரனாகவும்,பிள்ளையாகவும் அவ்வளவு உயர்வுடன் கொண்டாடப்பட்டு ஊரே அவர்களை மெச்சும் படி அவ்வளவு ஸந்தோஷமாக இருந்தது குடும்பம்.
. நாட்டிலும் வியாதிகள் கண்டு பிடிப்பும்,நிவாரணங்களும்,டாக்டர்களும் வைத்திய வசதிகளும் ஓரளவு பெருகின என்றே சொல்ல வேண்டும்.
வசூரி,விஷ ஜுரங்கள், குழந்தைகளுக்கு ஈரல் குலைக்கட்டி இன்னும் இப்படி எத்தனையோ வியாதிகளும் ,அவைகளுக்கான மருந்துகளும் கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் நேரம்.நாமும் தொட்டிலுடன் இன்னும் சற்று மேலே போவோமா? தொடருவோம். மே மாதம் 18 ஆம்தேதி 2016 அன்று பதிப்பிக்கப் பட்டது இந்த நான்காவது பாகம்.
Entry filed under: கதைகள்.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 7:01 முப இல் மே 18, 2016
ஆஹா, அந்தக்காலத்தில் இதெல்லாம் மிகவும் சகஜமாச்சே !
தொடரட்டும் இதுபோன்ற தங்களின் சுவையான விறுவிறுப்பான உண்மை சம்பவ நிகழ்ச்சிகள்.
2.
chollukireen | 10:47 முப இல் மே 20, 2016
இந்த காலத்துக்காரர்களுக்கும் சிறிது தெரியட்டுமே என்று எழுதிவருகிறேன். உங்கள், தொடரட்டும் என்ற சொல் ஸரி இன்னும் சிறிது எழுதலாம் என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றி. அன்புடன்
3.
Geetha Sambasivam | 11:20 முப இல் மே 18, 2016
அருமையான மனுஷி! இப்படியும் இருந்தாங்கனு சொல்வதைக் கேட்பதே சந்தோஷமாக இருக்கிறது.
4.
chollukireen | 10:48 முப இல் மே 20, 2016
இருந்ததைப் பார்த்துப் பழகியது இது. இன்னும் சற்று இதுவே நீளும். நன்றி. அன்புடன்
5.
chitrasundar5 | 2:38 முப இல் மே 24, 2016
காமாக்ஷிமா,
மருத்துவம் முன்னேறியது பெண்களுக்கு எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்! மூன்றாவதாக வந்த பெண்ணை பாராட்டாமல் இருக்க முடியாது. அவ்வாறு வர அவள் வீட்டில் என்ன கஷ்டமோ ! இபபடியானவர்கள் எல்லாம் இருந்தார்கள் என்பதையே நம்பமுடியவில்லை.
6.
chollukireen | 6:53 முப இல் மே 24, 2016
அந்த நாட்களில் குறிப்பிட்ட வயதிற்குள் விவாகம் செய்யவேண்டும். தகப்பன் இருக்கமாட்டார். அயலூரில் ஸம்பந்தம் செய்ய மாட்டார்கள். சாப்பாட்டுக்கு கஷ்டமில்லாத ஸொத்து,வீடு,ஏதோ உறவுகளும் இருக்கும்.. கஷ்டப்படாமல் காசு அதிகமில்லாமல் கல்யாணம் ஆகிவிடும். இதெல்லாம் ஸகஜமானது அக்காலம். இதுவும் என் அன்னைர்தினக்கால ஸம்பவங்கள்தானே. கதையல்ல நிஜம்தானிது. நன்றி அன்புடன்
7.
ranjani135 | 4:52 பிப இல் ஜூன் 10, 2016
இன்னொருவரின் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று நடப்பது எவ்வளவு அரிய செயல்! பாராட்டப்பட வேண்டிய மனுஷி!
8.
chollukireen | 11:23 முப இல் ஒக்ரோபர் 14, 2020
ஆமாம். உங்களுக்கு அப்போது பதில் போடவில்லை.இப்போதுதான்போடுகிறேன். அன்புடன்.
9.
ஸ்ரீராம் | 2:20 பிப இல் ஒக்ரோபர் 13, 2020
மிகவும் பெருந்தன்மை குணம் உடைய பெண்.
10.
chollukireen | 11:04 முப இல் ஒக்ரோபர் 14, 2020
இப்படியும் மனம் இருந்தது.
11.
Geetha Sambasivam | 12:44 முப இல் ஒக்ரோபர் 14, 2020
இது மறுபடி வந்ததை இன்னிக்குத் தான் பார்த்தேன். தொடருங்கள் அம்மா. காத்திருக்கேன். பெரிய மனுஷி பெரிய மனுஷி தான். அந்தக் குழந்தைக்கு ஒண்ணும் ஆகாமல் இருக்கணும்னு வேண்டிக்கறேன்.
12.
chollukireen | 11:08 முப இல் ஒக்ரோபர் 14, 2020
அடுத்த வாரம் அந்த ஸந்தேகமும் தீர்ந்து விடும். சிலது இந்தக்கால ஸம்பவங்களையும் ஒத்தமாதிரி நடககிறது. காலச் சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கிறது.அன்புடன்