மயிலத்திலிருந்து திருவருணை 2
மே 31, 2016 at 7:06 முப 10 பின்னூட்டங்கள்
பெண்ணும் பிள்ளையும் உட்கார்ந்து சாப்பிட நியூஸ் பேப்பர் ஆஸனம்போலுள்ளது. அடேடே ஃபோட்டோ கிராபரும் இருக்கிறார். அதெல்லாம் அவர் எடுத்துக் கொள்ளட்டும். நாம் முன்னாடி தரிசனம் பண்ணலாம். திரும்பிப்பார்த்துக் கொண்டே மேலே கோவிலுக்கு நடைபோட வேண்டியதாயிற்று.
சொல்லமுடியாத கூட்டம் இருக்கும் என்ற நினைப்புடன் பார்த்தால், ராகுகாலத்திற்கு முன் விவாகங்கள் முடிந்து அவரவர்கள் தெருவோர அமைப்பிற்குப் போய் விட்டதால், அடுத்த நல்ல நேரத்தை நோக்கி ஏற்பாடுகள் நடப்பது ஓரளவு யூகிக்க முடிந்தது. கோவிலுள்ளே கட்டண தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு ஓரளவு கூட்டமின்றியே ஸன்னிதானத்தை அடைய முடிந்தது.
லக்ஷணமாக ஓரளவு நபர்களாக தரிசனத்திற்கு அனுமதித்ததால் தெரிந்த குருக்கள் அவர்களும் இருந்தபடியால், நல்ல தரிசனமும்,அர்ச்சனையும் செய்து பிரஸாதம் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு சுற்று சுற்றி விட்டு நான் ஓரிடத்தில் தங்கிக் கொண்டு, பெண்,மாப்பிள்ளை இருவரையும் நிதானமாக எவ்வளவு பிரதக்ஷிணம் செய்ய வேண்டுமோ, செய்து கொண்டு வாருங்கள் என்று சொல்லி விட்டேன்.
அவர்களுக்கு அடிக்கடி எங்காவது கோவில்களுக்குப் போய்க்கொண்டே இருப்பது வழக்கம். மயிலம் வந்து சேருமுன்னரே வழியில் காரை நிறுத்தி டிபனும் உட்கொண்டாயிற்று. அந்த விசாரமும் இல்லை. ஒரு வழியாக எல்லோரும் வெளியே வந்தால் ஆங்காங்கே காது குத்தும் வைபவங்களுக்கான வைபோகங்கள். தனித்தனி கும்பல், இராகுகாலம் கழித்து முகூர்த்தம் வைத்துக்கொண்டிருப்பவர்கள் என்று நினைக்கிறேன். இப்படிப் பலதரப்பட்ட வைபவங்கள் கண்ணிற்குக் குளிர்ச்சியாகக் காத்திருந்தது.
மயிலத்திலிருந்து பாண்டிச்சேரி சென்று என்பெண்ணின் நாத்தனாரையும் பார்ப்பதாக நிரல். அது காரில்தானே போகிறோம். இவ்விடநிகழ்ச்சிகள் படம் வேண்டும். நீங்கள் யார் எடுத்துக் கொடுத்தாலும் ஸரி, இதை எடுங்கள்,அதை எடுங்கள் என்று விரைவாக இயங்க முடியாததால் சொல்லி விட்டேன்.
தட்டுத் தட்டாய்ப் பக்ஷணங்கள், எல்லாதினுஸு பழவகைகள், இனிப்பு பக்ஷணங்கள் பல தினுஸில், என்ன இல்லை என்று வேண்டுமானால் ஆராய்ச்சி செய்யலாம். சீர் வகைகள் போலும்.! பரப்பப் பட்டிருந்தது. குலையோடு வாழைப்பழம். ஆப்பிள்,அன்னாஸி, ஆரஞ்ச்,சாத்துக்குடி. கவனித்துப் பார்த்தால் நேர்ந்து கொண்டு மொட்டையடித்துக் காது குத்தும் வைபவம். இரண்டு குழந்தைகளுக்கு. ஓஹோ இதுவும் நான் பார்த்து கண்டு களிப்பதற்காகவே என்று நினைத்துக் கொண்டேன். இந்தியாவை விட்டு வெளியிலிருந்தால் எல்லா நிகழ்ச்சிகளுமே அபூர்வம்தான். அதுவும் கோவில் போன்ற புண்ணிஸ்தலங்களில். வகைவகையான சீர் வரிசைகளுடன் பாருங்கள் இரண்டு குழந்தைகள் மழித்த தலையில் சந்தனப் பூச்சுடன். இதுவும் ஒரு அழகுதான்.
ஒன்றோடொன்று சிரித்துக் கொண்டே குழந்தைகள் மாமாமடியில். தாத்தா பிள்ளையார் பூஜை செய்து கற்பூர மேற்றும் தாத்தா போலும் பக்ஷணம் பழம் இன்னும் வரும் பாருங்கள் மாலை போட்டுக் கொள்ள வேண்டாமா? அடுத்து
அழாமல் சமத்தாக காது குத்திக் கொள்கிறதா? கொஞ்சம் பார்க்கலாம்.
பக்கத்திலேயே இன்னொரு வசதியான சீர் வரிசையுடன் ஆனால் அழகான எவர்ஸில்வர் தவலை,ஜோடுதவலைகளுடன் என்னென்ன பக்ஷணங்களோ? பார்க்க ரம்யமாக, முடிந்த கல்யாணம் போலத் தோன்றுகிறது. மங்களகரமாக விளக்கு பூஜை ஸாமான்களுடன் சும்மா ஒன்றிரண்டு படங்கள். பார்க்கலாமா? பெண்ணின் தலை மட்டும் படத்தில் என்று நினைக்கிறேன்.
வெளியில் முருகருக்குப் பொங்கலிடுவதைப் பார்க்க வேண்டாமா?வாருங்கள்.

பொங்கல்[/caption
]எல்லா வைபவங்களும் பார்த்தாயிற்று. வீல்சேர்தான் வரும்போது பார்த்தாயிற்று.படி வழி இறங்க முடியுமா?மெல்ல இறங்கினால் ஆயிற்று. நாங்களும் பிடித்துக் கொள்கிறோம் என்றனர். நானே மாற்றி இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு இறங்கி விடுவேன். இந்த வழிதான் இறங்கியாயிற்று.
[caption id="attachment_8393" align="aligncenter" width="455"] மயிலத்துப் படிகள்
தரிசனம் நல்லபடி முடித்து விட்டோம். அடுத்து கோவில் மூடுமுன் மணக்குள வினாயகரைத் தரிசிக்க புதுவையை நோக்கி வண்டி விரைகிறது. மானஸீகமாக நீங்கள் யாவரும் உடன் வருகிறீர்கள். போவோம் யாவரும் புதுவைக்கு. முருகா,முருகா!!!!!!!!!!!!
Entry filed under: நான் விரும்பிய தரிசனங்கள்.
10 பின்னூட்டங்கள் Add your own
chitrasundar5 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 7:47 முப இல் மே 31, 2016
இயல்பான நடை! அருமையான வர்ணனை. நேரில் பார்ப்பது போல் இருந்தது.
2.
chollukireen | 9:12 முப இல் ஜூன் 2, 2016
கூடவே வருவதுபோல் நினைத்துக் கொள்கிறேன். நன்றி அன்புடன்
3.
ஸ்ரீராம் | 3:42 பிப இல் மே 31, 2016
முருகன் என் இஷ்ட தெய்வமாக்கும்! ஆனால் மயிலம் பார்த்ததில்லை. படங்களுடன் சுவாரஸ்யமான பதிவு.
4.
chollukireen | 9:15 முப இல் ஜூன் 2, 2016
மனம் வைத்தால் ஒரு முறை சென்று தரிசனம் செய்து வாருங்கள். போவதற்கு எல்லா வசதிகளும் இருக்கிறது.பாராட்டிற்கு நன்றி.அன்புடன்
5.
A Kumar | 11:36 முப இல் ஜூன் 1, 2016
Mailathil irupathupol irukkirathu.
Pondy Manakula Vinayagar Dharisanathukku kathirukkirom
Rombavum nanri.
6.
chollukireen | 9:18 முப இல் ஜூன் 2, 2016
நியூஜெர்ஸியில் மயிலம் வந்துவிட்டது. புதுவைதான் போய்க்கொண்டுள்ளோமே!!!!!!! நன்றி அன்புடன்
7.
RAMU | 12:06 பிப இல் ஜூன் 1, 2016
Dear Mami,
Mylam trip write up was excellent.
As if we all were there with you.
Will wait for Manakkula vinayagar.
RAMU
8.
chollukireen | 9:22 முப இல் ஜூன் 2, 2016
இன்னும் புதுவை,வளவனூர்,கோலியனூர்,திருவண்ணாமலை என்று பயணிப்போம். நிறைய பழங்கதைகளும், பறிமாறிக் கொள்ளலாம். நன்றி அன்புடன்
9.
chitrasundar5 | 5:07 முப இல் ஜூன் 3, 2016
காமாக்ஷிமா,
உங்களின் காமிரா உபயத்தால் காதுகுத்து விசேஷத்திற்கு நேரில் போய்வந்த மாதிரியே இருக்கிறது. மணக்குள விநாயகர் உட்பட வரவிருக்கும் ஊர்களின் பெயரைக் கேட்கும்போதே ஆவல் அதிகமாகிறது. அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 8:52 முப இல் ஜூன் 3, 2016
இந்தமாதிரி காது குத்தும் வைபவங்கள் நான் கூட கோவில்களில் அதிகம் பார்த்ததில்லை. பழங்களும்,பக்ஷணங்களும், வைபவத்திற்கான சிறு பிள்ளைகளும் மனக்கண் முன்னாலேயே நிற்கிறது. ஸந்தோஷத்தை அள்ளிக் கொடுத்த படங்கள் என்னைப் பொருத்தவரை. நீ போகாத ஊரா?மற்றவைகள். அன்புடன்