தொட்டில்—8
ஜூன் 21, 2016 at 12:29 பிப 9 பின்னூட்டங்கள்
மும்முனைத் தொட்டிலாக ஆட ஒன்று வருகிறது. பாருங்கள்.
இவ்வளவு நாழி ஆயிற்று இன்னும் தியாகுவைக் காணோமே! என்ன பையன் இவன். வாசல்லேயும் கரிகாக் காரியைக் காணோம்.
வருவான் வருவான். எங்கு ஓடிப்போய் விடுகிறான் ? உங்களுக்கு விசாரமில்லே. கம்பத்து வீட்டிலிருந்து வயணமா சாப்பாடு வந்து விடுகிறது. எனக்கு சமைத்தால்தானே உண்டு. கோவில் கெணத்துக்குப் போய் ஜலம் கொண்டு வரணும். கணவன் மனைவி வாக்குவாதம்.
தோட்டத்து கிணத்து ஜலம் கொண்டு ரொப்பியாகி விட்டது. ஒரு குடம் தானே நல்ல ஜலம். அதையும் நானே கொண்டு கொடுத்து விட்டுப் போகட்டுமா?
சோம்பேறி மனைவியின் மீது கரிசனம். என்ன செய்றது. அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவர் நிலச்சுவான்தார் நிலங்களை மேற்பார்வை செய்பவர்.கம்பத்தத்திலிருந்து நேராக சாப்பாடு வயல்வெளி பம்ப் கொட்டாய்க்கேவந்து விடும்.
வேண்டாம்,வேண்டாம் இதுவும் புருஷன்தான் செய்யறான் என்று மத்தவா வம்பளக்கவா, அவனே வந்து விட்டான்.
தியாகு யார் ராஜியுடைய தங்கை பையன். பதினைந்து வயதாவது இருக்கலாம். ஊரில் எட்டு வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம். அதுவும் கட்டணமில்லாத பள்ளி. அப்பா ஏதோ கடையில் கணக்கு வழக்கு எழுதுவார். எட்டோ,பத்தோ ரூபாய் சம்பளம். மலிந்தகாலத்தில் கஷ்ட ஜீவனம் செய்ய போதுமானது. குடும்பக் கட்டுப்பாடு என்றதெல்லாம் யாருக்குமே தெரியாத வார்த்தைகள். மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கிறான். இந்த வார்த்தைகள்தான் பிராபல்யம்.
ஆனால் தியாகுவோடு ஐந்து,ஆறுபேர்கள் அப்பா,அம்மா என்ற எட்டுபேர் கொண்ட குடும்பத்தில் எட்டும்,பத்தும் எந்த மூலை. வரட்டு கவுரவம். பெண்டாட்டி வெளியில் போகக் கூடாது. பெண் வளர்ந்து அவளுக்குக் கல்யாணம் செய்ய முடியாத நிலை. அவளும் வெளியில் வரக்கூடாது. வெளியூருக்கு அனுப்பி பசங்களை படிக்க வைக்க பணம் வேண்டும்.பசங்களும்படிக்கவில்லை.மனைவிக்கோ
அவ்வளவாக சமத்து போதாத அக்கா. அவள் கணவரால் முடிந்தது ஸமயத்தில் வீட்டில் விளைந்த அரிசி கொடுத்து உதவுவார். எவ்வளவு நாட்களுக்கு வரும்? தியாகு பெரிம்மாவிற்கு உதவிவிட்டு அவ்விடமே சாப்பாடு முதலானது முடித்துக் கொண்டு காலந் தள்ளி விடுவான். ஸமயத்தில் தெரிந்து தெரியாமல் அரிசி,பருப்பு எது முடிகிறதோ அதைக் கடத்தல் மன்னனாகவும் மாறி விடுவான். அரிசி நிறைந்த பொருளாதலால் கணக்கு வழக்குகள் தெரியாது.
அக்காலத்தில் பணப்புழக்கம் கிடையாது. உத்தியோகமும் எட்டு பத்து ரூபாய் சம்பளந்தான். பண்ட மாற்றுதலிலேயே காலம் தள்ளி விடுவார்கள். நிலமில்லாதவர்கள் அபூர்வம். இவர்கள் அதிலொருவர்.
பிள்ளைகளை யார் படிக்க வைப்பது, போக்குவரவு சிலவு,கட்டணம் இவைகள் பணம்பணம்பணம். மெள்ள மெள்ள கடைகளில் வேலைக்கு சேர்ப்பதானால் கௌரவக் குறைவு.
அக்காவீட்டில் சிரார்த்தம். இது ஒரு முக்கியமான நிகழ்வு.வேண்டியவர்கள்,பங்காளிகள்,அக்கம்பக்கத்துக் குழந்தைகள் , உறவினர்கள்என்று எல்லோரும் அழைக்கப் படுவார்கள். ஒரு மாத முன்பிருந்தே
சேகரமாகும் ஸாமான்கள். எல்லோரும் ஒன்று கூடும் நிகழ்ச்சியில் சிரார்த்தம் முடிந்த பின் பசங்கள் பட்டாளம் சாப்பாடு முதலில்.
பங்காளி அவனுக்குப் பார்த்துப் போடுங்கள். அவன்தான் வாரிசு. எக்கு பிக்கென்று பேசுவாள் அக்கா. ஏன் நான்தான் பெரிம்மாக்கு வாரிசு என்பான் தியாகு. எனக்கு யாருமே வேண்டாம் பெரிம்மா வாக்கு மூலம்.
இங்க பாரு பங்காளி என்று நாங்கள் எதுக்கும் வரமாட்டோம். எங்க பையனைப் பற்றி பேசாதீர்கள்.
இல்லே,யில்லே பாத்து பாத்து போடறீங்களே.
இங்கே பாருங்கள். அண்ணா கூப்பிட்டா வராம இருக்கக் கூடாது. வந்தோம்.
கையாலானதை செஞ்ஜோம்.
தங்கை பெண்கள் கொடி தூக்கி விடும். நாங்கமட்டும் என்ன தினமா வரோம். கூப்பிட்டுதான் வந்திருக்கோம்.
நிம்மதியா எல்லோரையும் சாப்பிட விடுங்கள். ஏதோ தெரியாத்தனமா பேசறது அவ வழக்கம். இது உங்கள் எல்லாருக்கும் தெரியுமே. ஸரிஸரி பசங்கள் யாவருக்கும் பக்ஷணங்கள் நிறைய கொடு என்பார் அக்காவின் கணவர்..
பக்ஷணம் செய்ய தனி ஒருவர். அரைத்துக் கரைத்துக் கொடுக்க ஒருவர், சிரார்த்த சாப்பாடு .சாப்பிடாத இஷ்டபந்தி சமையல் ஒரு அடுப்பு. இரும்படுப்பும்,கொடியடுப்பும், ஒத்தையடுப்பும் இவர்கள் வார்த்தைகளைக் கேட்டு இன்னும் சற்று புகையை கக்கும்.
எல்லாம் ஸகஜமாக வார்த்தைகள் ,பக்ஷண பொட்டணங்கள், கைமாறி போய்விட்டு வருகிறேன் என்ற வார்த்தைகளுடன் நிறைவேறும் சிரார்த்தம். இது வருஷத்திற்கு இரண்டு முறை நடக்கும் .இவர்களின் கூத்து. தங்கை பிள்ளையை தத்தெடுத்துக் கொள்ள வார்த்தைகள் வரும் என்ற எதிர் பார்ப்பு அவர்களுக்கு
. சிரத்தையாக செய்யும் சிரார்தத்தைப் பற்றி அதிகம் வர்ணிக்கவில்லை நான்.
மற்றவர்களுக்கு அவர்களின் உத்தேசம் என்ன இனி குழந்தைகள் பிறக்க வயதில்லை அவர்களுக்கு. நேத்திரமான நிலங்கள் அவருடையது.
வீட்டிற்கு வந்ததும் வராததுமாக வயது மீறியபெண் உனக்கு ஸாமர்த்தியமிருக்கா. அக்கா, தியாகுவை ஸ்வீகாரமெடுத்துக் கொள். உனக்கும் யார் இருக்கா.அப்படி இப்படி வார்த்தைகளைக் கொட்ட வேண்டாமா. ஒரு சமத்தும் உனக்கும் போறலை. நாங்கள் எவ்வளவு நாள் இப்படி இருப்பது? இன்னும் பல வார்த்தைகள் கொட்டி சதாய்க்கிராள்.
திடீர்னு என்னால் எதுவும் கேட்க முடியாது.தங்கை
பசங்களுக்குப் பூணூல் போடணும் என்று வார்த்தையை ஆரம்பித்து விட்டு வா. நாளைக்கு நீ கட்டாயம் அங்கு போறே.
இரண்டு நாட்கள் கழித்து அக்கா வீட்டுக்குப் போகிராள் தங்கை. அப்படி இப்படி ஆரம்பித்து பசங்களுக்கு பூணல் போட வயதாகிறது. அத்திம்பேர்தான் பண்ணணும். நீயும் தியாகுவை ஸ்வீகாரம் பண்ணிக்கோ.
இல்லைம்மா ஸ்வீகாரம் என்ற பேச்சே வேண்டாம். எங்களால் என்ன செய்ய முடியும். எங்களுக்கு அரை வயிறு சாப்பிட நெல் வரது. வேறெ என்ன இருக்கு. நாங்க இப்படியே இருந்துட்டுப் போறோம். என்னை மாதிரி பசங்களுக்கு நிலம்நீர் கவனிக்கிற வேலையெ வாங்கித்தரேன். கத்துகட்டும். அதான் என்னால் முடிந்தது.
மேலே பேச வழியில்லே. அதாவது செய்யட்டும். வீடு திரும்புகிறாள்.
வீட்டிற்கு வந்து நடந்த விஷயங்களைக் கேட்டு, யாரடி உன்னை பிச்சைக்குப் போகச் சொன்னார்கள் என்று வாக்கு வாதம் முற்ற கைஓங்கி அடிக்க ,பெண் குறுக்கிட முன்கோபி புருஷன் பிள்ளைகள் வேலைக்குப் போய் ஸம்பாதிக்கட்டும் என்று வீட்டை விட்டு வெளியேறி தனியாக இருக்க முன்னேற்றங்கள் இந்த வகையில் ஆரம்பமாகியது.
எவ்வளவோ ஆக்ஷேபணை,ஸமாதானத்திற்குப் பின் பசங்கள் இரண்டு பேர் வேறு வேறு இடங்களுக்கு வேலைக்குச் செல்கிரார்கள். கேட்டது கிடைக்கவில்லை. ஸுமுக உறவு இல்லை. மேலும் பார்ப்போம். தொடருவோம்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 2:13 பிப இல் ஜூன் 21, 2016
படித்து விட்டேன். பாதிப் பிரச்னைகள் வாயால்தான். இல்லையா?!!
சிரார்த்தம் என்று சொல்வதை விட சிராத்தம் என்று சொல்வதே சரி. கீதாக்கா வந்து சொல்லுமுன் நான் சொல்லி விடுகிறேன்! ஹிஹிஹி..
2.
chollukireen | 12:56 பிப இல் ஜூலை 12, 2016
இரண்டுவாரமாக எதுவும் எழுத முடியவில்லை. சிரத்தையுடன் செய்வதால் சிரார்தம் என்று பெயர் எனச்சொல்லிக் கேட்டிருக்கிறேன். நான் ஒரு த் ஐ தாராளமாகச் சேர்த்து விட்டேன். குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி. பதிலுக்கும் மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
3.
Geetha Sambasivam | 7:56 முப இல் ஜூலை 25, 2016
ச்ராத்தம் தான் சரியானது. “ச்ரா”ர்”த்தம் தப்பு. சிரத்தையுடன் செய்வதால் ச்ராத்தம்! 🙂
4.
chitrasundar5 | 2:37 முப இல் ஜூன் 23, 2016
காமாக்ஷிமா,
அந்நாட்களில் கௌரவம் பார்த்தே நிறைய குடும்பஙள் காணாமல் போய்விட்டன.
ஏதாவது ஒரு வழி பிறக்கவேண்டும், என்ன நடக்கிறது என பார்ப்போம் ! அன்புடன் சித்ரா.
5.
chollukireen | 1:01 பிப இல் ஜூலை 12, 2016
அடுத்தது எழுத முடியாமல்எனக்கும் உடம்பு மிகவும் முடியாமற் போய்விட்டது. ஐயா வேறு விழுந்து தலையிலடிபட்டு தையல் போட்டு இன்றுதான் தையல் பிரித்தது. மூளையே வேலை செய்வதில்லை என்று தோன்றுகிறது. உன் பதிலுக்கு நன்றி. அன்புடன்
6.
Geetha Sambasivam | 7:56 முப இல் ஜூலை 25, 2016
இந்தப் பதிவையே இப்போத் தான் பார்த்தேன். பார்த்தவுடன் ஶ்ரீராம் கருத்து கண்ணில் பட்டது! அடுத்ததும் தொடர்கிறேன். 🙂
7.
கோமதி அரசு | 12:47 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
நன்றாக சொல்லி வருகிறீர்கள்.
தலையில் அடிபட்டு தையல் என்று போட்டு இருக்கிறீர்கள் இப்போது முற்றிலும் குணமாகி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
8.
chollukireen | 1:11 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
அப்படியா? நன்றி.இ ப்போது முற்றிலும் குணம். அவரும் வயதானவர். ஞாபக மறதி நோய் இருக்கிறது.
வீட்டுவரை நடமாட்டம். இந்தக் கடைசிப் பிள்ளையிடம் பன்னிரண்டு வருஷங்களாகத் தொடர்ந்து இருந்தோம். மும்பை சென்று நான்குவருடங்களாகிறது. மூன்றாவது பிள்ளையுடன் இருக்கிரோம். இரண்டு வேளைக்கும் உடனிருந்து கவனிக்க ஆள் போட்டு நன்றாகக் கவனித்துக் கொள்கிரார்கள். பெண்களாகிய நம் மனநிலை வேறு.
ஜெனிவா பிள்ளை வந்திருந்தான் குடும்பத்துடன். நல்ல படியாக இருக்கும்போது நாம் ஒரு முறை வந்து போவோம் என்று தோன்றியது. நான் மட்டும் வந்துள்ளேன் அவர்களுடன். என் கதை தொடருகிறது.
என்னவோ எழுத வேண்டும் என்று தோன்றியது. இதெல்லாம் வயோதிகத்தில் ஸகஜம். உங்கள் வரவிற்கு நன்றி. நானும் வருகிறேன். அன்புடன்
9.
chollukireen | 3:36 முப இல் நவம்பர் 10, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
ஸ்வீகார விஷயத்திற்காக எந்தெந்த குடும்பங்களில் விஷயங்கள் எவ்வெப்படி பயணிக்கிறது பாருங்கள். தொட்டில்கள் ஆடுகிறது. ஆனால் எதிர்பாராத விதத்தில்.