விருந்து சமையலில்கொறடா.
ஓகஸ்ட் 4, 2016 at 1:52 பிப 28 பின்னூட்டங்கள்
கொறடா என்ற பெயரைப் பார்த்தால் இடுக்கி மாதிறி ஏதோ இரும்பு ஸாமான் என்று தோன்றும். ஆனால் இதுவும் ருசியை இடுக்கிப் பிடிப்பதால் இதற்குக் கொறடா என்ற பெயர் போலும்!!!!!
செய்வது மிக எளிதுதான். இதை தோசை,இட்லி,அடை வடை என்று யாவற்றினும் சேர்த்துச் சுவைக்கலாம். எங்கள் ஊர் விசேஷ சாப்பாடுகளில் ஒரு ஓரத்தில் இதுவும் இருக்கும்.
இப்போது சாப்பாடே வேறு விதமாக மாறி விட்டது. மெனுவும் மாறி விட்டது. அதனால் என்ன? என்ன பிரமாதம்,துவையல் மாதிரி தானேஎன்று சொல்வதும கேட்கிறது. சமையல் எழுதி ஏராளநாட்களாகிவிட்டது. எதையாவது எழுதுவோம் என்றால் வகையாக கொறடாப் பிடியில் சிக்கியது.
வேண்டியவைகள்—நல்ல நிறமான புளி ஒரு எலுமிச்சையளவு. பச்சை மிளகாய்–8, வற்றல் மிளகாய்– 3, தோல் சீவிய இ்ஞ்சி–2 அங்குல நீளம் [ கூடக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை], சுத்தம் செய்த பச்சைக் கொத்தமல்லி 2,அல்லது,3 பிடி. காம்புகள் உட்பட போடலாம். பெருங்காயம் பிடித்த அளவு, உப்பு தேவையானது. நல்லெண்ணெய்–3 டேபிள்ஸ்பூன், கடுகு வேண்டிய அளவு.
செய்முறை–வற்றல் மிளகாயைக் கிள்ளியும்,புளியைப் பிய்த்துப் போட்டும் சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும். புளி நீரை உறிஞ்சும் அளவு தண்ணீர் போதும். புளி ஊறியவுடன், சிறியதாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், பச்சைக்கொத்தமல்லி இவைகளைச் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைக்கவும்.
களிம்பு ஏறாத வாணலியில், நல்லெண்ணையைக் காயவைத்து கடுகை வெடிக்க விட்டு பெருங்காயத்தையும் சேர்த்து அறைத்த கலவைையைச் சேர்த்துக் கிளறவும். வேண்டிய உப்புடன், ஒரு கொட்டைப்பாக்களவு வெல்லத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியுமளவிற்குக் கிளறி இறக்கவும்..
பந்தி சாப்பாடுகளில் உப்பு உரைப்பு,புளிப்பு எது குறைவாகஇருந்தாலும், இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடும்போது யாவும் ஸமனாகி விடும். ருசி பார்த்துச் சொல்லுங்கள்.
அதிக நாட்கள் வைத்து உபயோகிக்கலாம். காரப் பிரியர்களுக்கு ஏற்றது. மிதமான காரம் வேண்டுமானால் மிளகாயைக் குறைக்கவும்.
Entry filed under: தொக்கு வகைகள். Tags: ருசி கொடுக்கும் கொறடா.
28 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Venkat | 1:55 பிப இல் ஓகஸ்ட் 4, 2016
செய்முறை படிக்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. சாப்பிட வேண்டும்….. 🙂
2.
chollukireen | 2:04 பிப இல் ஓகஸ்ட் 4, 2016
வாங்கோ,வாங்கோ முதல் விமரிசகரான உங்களுக்கு நல்வரவும்,எனக்கு ஸந்தோஷமும். நன்றி அன்புடன்
3.
ஸ்ரீராம் | 3:17 பிப இல் ஓகஸ்ட் 4, 2016
கேள்விப்பட்டதில்லை. நன்றாக இருக்கும் என்று தெரிகிறது.
4.
chollukireen | 11:31 முப இல் ஓகஸ்ட் 5, 2016
இப்போது கேள்விப்பட்டதோடு படத்தையும் பார்த்துவிட்டீர்கள். என்ன பிரமாதம். சின்ன அளவில் ஒருநாள் அதற்கான வேளை வந்தால் செய்தும் விடுவீர்கள். ஸந்தோஷம் அன்புடன்
5.
chitrasundar5 | 12:22 முப இல் ஓகஸ்ட் 5, 2016
காமாக்ஷிமா,
எனக்கும் இரும்பு சாமான்தான் முதலில் நினைவுக்கு வந்தது. ஏதோ ஒரு பதவிகூட இந்தப் பெயரில் கேள்விப்பட்டிருக்கேன்.
பெயரும் வித்தியாசம், செய்முறையும் வித்தியாசமா இருக்கே. சேர்த்துள்ள சாமான்களைப் பார்த்தால் நாவில் எச்சில் ஊறுகிறது. அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 11:41 முப இல் ஓகஸ்ட் 5, 2016
சட்ட,பையில் நிர்வாகங்களை கவனிக்க கொறடா என்பது ஒரு கௌரவமான பதவி என்று நினைக்கிறேன். ஸரியா தெரியாது. உப்பு,புளி,காரம்,கூட கொத்தமல்லித் தழை எல்லாம் சேர்ந்த கலவை கார ஹல்வாதான். பண்ணிச் சாப்பிடு. கொஞ்ஜமாக மிக்ஸியில் அரைப்பதுதான் கஷ்டம்., அம்மியானால் குறைந்த அளவும் செவ்வனே அறைபடும். பண்ணிவிட்டுக் கூப்பிடு. பறந்து வந்து விடுகிறேன். அன்புடன்
7.
sitalakshmi | 5:06 முப இல் ஓகஸ்ட் 5, 2016
Recipe appears to be very tasty. Thanks for sharing
8.
chollukireen | 11:51 முப இல் ஓகஸ்ட் 5, 2016
வாருங்கள் ஸீதாலக்ஷ்மி. முதல் வருகைக்கு வரவேற்பு. ருசி பார்த்து எழுதவும். ஸந்தோஷமாக இருக்கும்.. மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
9.
Geetha Sambasivam | 10:33 முப இல் ஓகஸ்ட் 5, 2016
பச்சைமிளகாய் சேர்க்காமல் செய்திருக்கேன். ஆனால் மி.வத்தலை வறுத்துப்போம். மற்றபடி இதே செய்முறை தான். இஞ்சி சேர்ப்பது அவரவர் வீட்டு வழக்கப்படி. கருகப்பிலை நிறைய இருந்தால் கூட இது போல் செய்துக்கலாம்.
10.
chollukireen | 12:03 பிப இல் ஓகஸ்ட் 5, 2016
எண்ணெயில் அரைத்தது சுருள வதக்குவதால் வருபடுதல் அதில் அடங்கி விடுகிறது. சிறிது நிறமும் நன்றாக இருக்கும். சீஸன் இல்லாவிட்டால் , அ தே ஸாமான்கள்தான் வேண்டுமென்ற அவசியமில்லாது ஸமாளிப்பதுதான் கெட்டிக்காரத்தனம் என்று சொல்வார்கள். எங்கள் பாட்டி கறிவேப்பிலைதான் நிறைய உபயோகிப்பார்கள். வருஷம் முழுவதும் கிடைக்கும் வஸ்து. அதிக வெயில் நாட்களில் பச்சைக் கொத்தமல்லிக்கு ரேஷன் வந்துவிடும். முறைகள் ஒன்று. சிறிதளவு ருசி வேறு. உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது கறிவேப்பிலைதான். நன்றி அன்புடன்
11.
ranjani135 | 11:23 முப இல் ஓகஸ்ட் 5, 2016
கேள்விப்படாத ஒரு சமையல் ஐட்டம். உங்கள் முன்னுரையை ரொம்பவும் ரசித்தேன்.
அது என்ன நல்ல நிறமான புளி? (சும்மா ஜோக்!)
கொறடா பளபளவென்று எண்ணெய் வெளியில் வந்து சூப்பர் ஆக இருக்கிறது புகைப்படத்தில்.
கொறடா என்பது சட்டமன்றத்தில் ஒரு பதவி என்று நினைக்கிறேன்.
கீதா சொல்வதுபோல கறிவேப்பிலையையும் போட்டுப் பண்ணலாம் என்று தோன்றுகிறது.
12.
chollukireen | 12:13 பிப இல் ஓகஸ்ட் 5, 2016
நல்ல நிறமான புதுப்புளி உங்கள் தும்கூர் புளிபோல பேரீச்சம் பழம் போன்ற கலர். பழைய புளியானால் நிறம் சற்று கருப்பாக ஆகிவிடுமல்லவா? துளி ருசி வேறுபடும். எல்லா ஸீஸனிலும் கிடைக்கும் கறிவேப்பிலை. கொறடா சட்டமன்றத்தில் ஒரு கௌரவமான பதவிதான். கொறடா பண்றது கஷ்டமில்லை. மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டுமே!!!!!!! கொறடாவை ரஸித்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்
13.
JAYANTHI RAMANI | 9:11 முப இல் ஒக்ரோபர் 7, 2016
ஆமாமாம். அந்த காலத்துல போஜனக் கொறடான்னு சொல்லுவா. எங்க அம்மா பண்ணுவா. இப்பதான் புளி இஞ்சி பண்ணி வெச்சேன். தீர்ந்ததும் அடுத்தது இந்த போஜனக் கொறடா தான். அம்மாவை நினைவு படுத்திட்டேள். மகிழ்ச்சி தான். நன்றியும் தான்.
14.
chollukireen | 9:12 முப இல் ஒக்ரோபர் 11, 2016
போஜனக்கொறடா, ஸரியாகச் சொன்னீர்கள். உங்க அம்மா , எங்க அம்மா எல்லோரும் செய்வார்கள். புளி இஞ்சியும் ருசிமிக்கது. இன்னும் ஒருபிடி சாதம் உள்ளிரங்கும். உங்கள் அம்மாவின் படமும் கண் முன் நிற்கிறது. ருசியில் அவரவர் அம்மாவின் கைமணத்திற்கு முன் எதுவும் நிகரில்லை. அன்புடன், நன்றி.
15.
chollukireen | 10:51 முப இல் ஜூன் 6, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
மீள் பதிவிற்கு வசமாக சிக்கியது கொறடா. நல்ல காரஸாரமான சட்னிதான் இது என்று சொல்கிறீர்களா?ஆமாம் இல்லையா. ருசியுங்கள். அன்புடன்
16.
Geetha Sambasivam | 11:35 முப இல் ஜூன் 6, 2022
Super amma. My favorite chutney. I like it with pulia dosai. And more satham also.
17.
Geetha Sambasivam | 11:36 முப இல் ஜூன் 6, 2022
Super amma. My favorite chutney. I like it with pulia dosai. And more satham also.
18.
chollukireen | 11:45 முப இல் ஜூன் 6, 2022
முதல்வரவு உங்களின் பின்னூட்டம். மிக்க ஸந்தோஷம். அன்புடன்
19.
ஸ்ரீராம் | 11:44 பிப இல் ஜூன் 6, 2022
இட்லி தோசைக்கு நல்ல காம்பினேஷன். மோர் சாதத்துக்கு கூட நன்றாக இருக்குமோ… கடவுளே.. இதாவது பிரசுரம் ஆகவேண்டும்!
20.
chollukireen | 11:01 முப இல் ஜூன் 11, 2022
எரிதத்தில் கண்டு பிடித்தேன். மிக்க நன்றி அன்புடன்
21.
ஸ்ரீராம் | 11:45 பிப இல் ஜூன் 6, 2022
கடவுளே.. இதாவது பிரசுரம் ஆகவேண்டும்! இட்லி தோசைக்கு நல்ல காம்பினேஷன். மோர் சாதத்துக்கு கூட நன்றாக இருக்குமோ…
22.
chollukireen | 11:00 முப இல் ஜூன் 11, 2022
மிக்க நன்றி அன்புடன்
23.
நெல்லைத்தமிழன் | 1:07 முப இல் ஜூன் 7, 2022
கடுத்த தோசைக்கு ஏற்ற கொறடா. பேரை எங்கோ கேட்ட நினைவு இருக்கிறது. செய்முறை சுலபம்.
24.
chollukireen | 9:10 முப இல் ஜூன் 7, 2022
அடுத்த தோசையையும் சாப்பிடத் தோன்றும் உதவிகரமான சட்னி இல்லையா மிக்க சந்தோஷம் அன்புடன்
25.
Geetha Sambasivam | 10:57 முப இல் ஜூன் 7, 2022
இன்னிக்கு இதைக் கொத்துமல்லி, பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்துப் பண்ணி வைச்சிருக்கேன் அம்மா. சாயங்காலமாய் தோசைக்குத் தொட்டுக்கலாமே! மத்தியானமே ருசி பார்த்துட்டேன். சாதாரணமாக இதுக்குப் புளி, இஞ்சி, மி.வத்தல், பெருங்காயம் மட்டுமே வைச்சு அரைச்சிருக்கேன். போன முறையும் நீங்க சொல்லி இருந்ததாலே கருகப்பிலை சேர்த்து ஒரு தரம் அரைத்தேன். அது கருகப்பிலைத் துவையல் போலத் தான் இருக்குனு சொல்லிட்டார். பின்னர் அதை அப்படியே கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து உ.பருப்பு, மிளகு வறுத்துச் சேர்த்துக் குழம்பாக்கித் தீர்த்தோம். இந்தத் தரம் அப்படியே வைச்சிருக்கலாம்னு எண்ணம். முதல் முறையாகக் கொத்துமல்லி சேர்த்து அரைச்சிருக்கேன். எண்ணெய் விட்டு வதக்காமலேயே ருசி நன்றாக இருந்தது.
26.
Geetha Sambasivam | 11:26 முப இல் ஜூன் 7, 2022
https://sivamgss.blogspot.com/2022/06/blog-post.html இன்னிக்குப் பண்ணினதைப் படமாக எடுத்துப் போட்டிருக்கேன் அம்மா. கூடவே சின்னத் திப்பிசமும் சேர்ந்து! 🙂
27.
chollukireen | 11:03 முப இல் ஜூன் 8, 2022
ஆமாம். நீங்களும் முன்பு கருகப்பிலை சேர்த்தும் செய்யலாம் என்றீர்கள். எங்கள் பாட்டியும் அப்படிச் செய்வார்கள் என்றேன்.அது ஸரியில்லை என்று தெரிகிறது. எப்போதாவது செய்வதற்கு நம் இஷ்டம் என்று ஒன்று இருக்கிறதே அதன்படி செய்து விட்டால் போகிறது. திப்பிசங்கள் ஸமாளிக்கக் கைகொடுக்கிறது. அதில் ஆராய்ச்சி அரசி என்றே உங்களுக்குப் பட்டம் கொடுக்கலாம். இப்போது திப்பிசத்திற்கு உதவி செய்ய நல்ல சான்ஸ்.
அருமையான மறு மொழி உங்களுடையது. மிகவும் நன்றி. அன்புடன்
28.
chollukireen | 10:57 முப இல் ஜூன் 11, 2022
ஸ்ரீராம் உங்கள் மறு மொழியைக் கண்டு பிடித்து விட்டேன். அன்புடன்