தொட்டில் 12
ஓகஸ்ட் 19, 2016 at 10:20 முப 20 பின்னூட்டங்கள்
வீட்டுக்குள்ள நுழைந்தப்புறம் எல்லாம் நமக்குத் தெரிந்தது ஓர்ப்படிக்கும் தெரியும். புதுசா சொல்ல என்ன இருக்கு? நீலாவையே போய்ப்பார்த்து மீதி ஸமாசாரங்களையும் கேட்டு எதை, எப்படிச் சொல்லலாம் என்று அவளையே யோசித்துச் சொல்லச் சொல்லணும்.
என்ன பாட்டி நீவேறெ எனக்குப் மாப்பிள்ளை பார்க்கிறயா என்று கேட்டு விடும்அந்தப் பெண்.
நீலாவாத்து சாப்பாடெல்லாம் ஆகட்டும். யோசனை முடிந்து ஈரப்புடவையை ஓர்ப்படியிடம் கொண்டு கொடுத்து விட்டு மத்தியானமா வரேன். நீலா என்னவோ சொன்னா. ஸரியா கேட்டுண்டு வரேன். நீயும் தினம் கேக்கரே மன்னி.
ஸரி ஏதாவது நல்லதா வரணும்.
என்ன ஒரு வத்தக் குழம்பும்,சுட்டஅப்ளாமும். இரண்டுநாளா தோசை ராத்தரியில். மாவு புளிச்சு வழியறது. ஊறுகாமிளகாயும்,கடுகு பெருங்காயம் தாளிச்சுக்கொட்டி வாணலியில் இரட்டை விளிம்பு தோசையாக இராத்திரி இரண்டு வார்த்தால் மாவும் காலியாகும். எண்ணெய் நிறைய விட்டு வார்த்தால் தானே ருசி கொடுத்துவிடும்.
இரவு ஆகாரத்தையும் கற்பனையில் செய்தாகிவிட்டது.
நன்றி கூகல். படம் ஒரு மாதிரிக்கு.
பானுவின் புக்ககம் ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்தது ஒரு காலத்தில். அவள் மாமனார் இராமாயணம்,பாரதம், பாகவதம் என்று கதை வாசிப்பவர். மனைவி இல்லை. பிள்ளைகள் மூன்று பேர்.
அக்கால முறைப்படி காலாகாலத்தில் பிள்ளகளுக்குக் கல்யாணமாகி ஒரே கூட்டுக் குடும்பம். கடைசி பிள்ளைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மற்றவர்களுக்கு ஸந்தானம் ஏற்படவில்லை. நாகப்பிரதிஷ்டை,ராமேசுவரம்போய் திலஹோமம், சாந்திகள் எல்லாம் காலா காலத்திலேயே செய்து விட்டனர். அந்தகாலத்து அரசப்ரதக்ஷிணம் என்று எல்லாம் வரிசைக்கிரமாக நடந்தது.
மனதில் அசைபோட்டுக்கொண்டு நீலாவாத்திற்குப் போனால் அவளும் மிகுதியைக் கூட சேர்த்து அசைபோட்டாள்.
முன்னாள் கதைகளென்றால் மருத்துவ வசதி குறைவு,அகால மரணம் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை . இவைகளைப் படிப்பவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். சின்ன நாட்டுப்பெண் திடீரேன்ற ஜுரத்தில் போய்விட்டாள்.
ஜெயா எல்லோருக்கும் அருமைப் பெண் ஆகிவிட்டாள். பெற்றவன் மறு கல்யாணம் வேண்டாமென்ற விரக்தி.
என்பெண்,உன் பெண் என்று போட்டா போட்டியில் ஓரகத்திகளுக்குள் சண்டை.
நமக்கென்று ஏதாவது செய்து கொள்ள வேண்டுமே தவிர இவளுடன் இருக்க முடியாது என்று பெரியவள் தனிக்குடும்பம் போய்விட்டாள்.
பெரியவர் அதான் குடும்பத்தலைவர் பேத்திக்கும் பங்கு கொடுத்து பத்திரம் எழுதிவிட்டுப் போய்ச் சேர்ந்து விட்டார். சொத்து விஷயமாக கோர்ட் கேஸ் என்று அண்ணந்தம்பிக்குள் மனஸ்தாபம்.
பெண் குழந்தை நடு பிள்ளையின் பராமரிப்பில் இருந்து ஒட்டுதலும் ஏற்பட்டு விட்டது. விவரமறிந்த வயதாகவும் ஆகிவிட்டது. பெண் குழந்தைக்கு பராமரிப்பில் பெண் துணையும் அவசியம். ஸமாதானமாகப் போங்கள் உரிமை உங்களுக்குத்தான். என்று ஜட்ஜ் தீர்ப்பு கூறிவிட்டார்.
பிரிந்து வாழ்ந்தாகி விட்டது. பெண்ணையும் ஒட்டவிடவில்லை. அவர்களுடன் சேர்ந்து இருக்கவும் முடியவில்லை. தனக்கென்று எதுவும் ஒரு பைஸா கூட வைக்கவும் முடியவில்லை.
இது யார்,யார் யாருக்கு என்னென்ன தூண்டி விடுவார்களோ? எப்படி இக்குடும்பம் இம்மாதிரி ஆகியதோ? எல்லாம் புதிராக இருந்தது. இதெல்லாம் அறிந்த விஷயம். இப்போதைய நிலவரம் என்ன அதைச்சொல்லு. அதுதானே முக்கியம்.
அவனுடைய சித்திதான் கூப்பிட்டிருந்தாள் போயிருந்தேன். அவனைக் கல்யாணம் செஞ்சுக்கோ. என்ன வயஸாயிடுத்து உனக்கு நாப்பது இருக்கும். இப்படி தனியாக அலைகிராயே! உன் பெண்ணிற்கும் அவர்கள் வரன் பார்த்திருக்கிரார்கள். உன்னிடம் சொல்லவில்லை.
எனக்கு எதற்கு கல்யாணம் என்று திட்டுவார்கள் என்றான். போக்கு வரத்தே இல்லை. பெரியவளும் ஏதோ தூர உறவில் ஸ்வீகாரத்திற்கு ஏற்பாடாம்.
நான் சொன்னேன் உனக்குன்னு குடும்பம் வேணும். வேலையில் இருக்கே. ஸம்பாதிக்கிறே! அவனுக்கும் மனதில் தோன்ற ஆரம்பித்து இருக்கு. நான் பார்க்கிறேன் என்றேன். ஹூம் கொட்டி இருக்கிறான்.
பொருப்பான பொண்ணா இருந்தா போரும். ஒண்ணும் பண்ண வேண்டாம். மீதியை நான் பாத்துக்கறேன் என்றேன்.
சித்தியும் வயதானவள்தான். ஸ்டேட்மென்ட் கொடுக்க ஒரு ஆஸாமி, வேண்டுமே. யாரையும் கூப்பிடவேண்டாம். அவன் அண்ணாமார்களுக்கு ஒரு மரியாதையாக சொன்னால் போதும் என்ற அளவிற்கு சொல்லி வைத்திருக்கேன். என்றார்.
நீங்க ஊருக்கு போவதற்கு முன் உங்க மன்னியைக் கேட்டு விவரம் சொல்லுங்கள். நானும் போய்ச் சொல்றேன். அந்தப் பெண்ணிற்கும் நான் போய் ஸம்மதமா என்று கேட்கிறேன்.
அவன் ஒன்றும் ஊருக்குப் புதியவனில்லை. எல்லாருமே தூரத்து உறவாகத்தான் இருக்கும். ஸரி நான் போய் விசாரிக்கிறேன்.
மாமி தேங்காத் துகையல் அரைச்சேன் நிறைய இருக்கு . கொஞ்சம் எடுத்துண்டு போங்கோ. சின்ன கிண்ணத்தில் துண்டு இலையைப் போட்டு மூடித் துகையல் தூது போகிறது.
மன்னிக்கு ஸமாசாரம் அஞ்ஜலாகிறது. மாப்பிள்ளை ,பெண்ணை வரச்சொல்லி ஆளனுப்புகிராள். அவர்களும் வந்தார்கள்.
நீலா பெண்ணோடு பேசி மனதை ஆராய்கிராள். பளிச்சென்று சொல்லாவிட்டாலும் இந்த அடைந்து கிடக்கும் தளையிலிருந்து, வெளியே போனால் போதும் என்ற மனநிலை பளிச்சிட்டது. ஆனாலும் அங்கும் உறவுகள் தொல்லை கொடுக்காமல் இருப்பார்களா என்பதை உறுதிப்படுத்திச் சொல்லுங்கள் என்ற வார்த்தையே பதிலாக வந்தது. பெண் ,பிள்ளை பார்க்க என்ற ஸம்பிரதாயத்திற்கு அவசியமில்லை. எல்லோரும் தெரிந்தவர்களே!
இக்காலத்தில் பெண்கள் பிள்ளைக்கு லக்கேஜ் இருக்கா என்று விஜாரிக்கிறார்களாம். அதாவது அப்பா,அம்மா கூட இருப்பார்களா என்பதற்கு. அக்காலத்திலும் இந்தச் சுவடுகள் ஆங்காங்கே இருந்திருக்கிறது.
ஏராளமான வாக்கு வாதங்களிடையே அப்பாவின் எக்கேடு கெட்டுப்போங்கோ என்ற கோபமான ஸிக்னல்.
அப்புறம் என்ன ஆச்சு?
பெண்ணுக்கு கல்யாணம் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து புருஷனுடைய ஏச்சும்,பேச்சும் மனஸு வெறுத்தே போச்சு அம்மாவுக்கு. தான் சொன்ன பிள்ளையையே கொண்டு வந்து பலவந்தமாகத் தாலி கட்டவைக்கிறேன் என்ற புருஷனின் ஸவால் வெளியே சொல்ல முடியாமல் பயமுறுத்தியது.
இங்கேயும் ஒற்றுமை இல்லை. வாயளவில் கல்யாணம் நிச்சயித்தாயிற்று. வெளியில் எங்கும் சொல்லவில்லை. மிக்க வேண்டியவர்களுக்குதான் தெரியும்.
மன்னி விசாரப்படாதே. கல்யாணிக்கு எல்லாம் ஸரியா நடக்கும். தொடரும்.
Entry filed under: கதைகள்.
20 பின்னூட்டங்கள் Add your own
Geetha Sambasivam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 11:47 முப இல் ஓகஸ்ட் 19, 2016
அவர்களின் விசாரம் எனக்கும் தொற்றிக்கொண்டு விட்டது. கல்யாணிக்கு எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே.
விசாரத்தை விட்டுவிட்டு இரட்டை விளிம்பு தோசைக்குப் போகிறேன். அது என்ன இரட்டை விளிம்பு தோசை?
இப்போது பெற்றோர்கள் லக்கேஜ் ஆகிவிட்டார்கள். குழந்தைகளுக்குப் பெற்றோர் வேண்டாம் என்பது போல பெற்றோர்களும் தனியாக இருக்கவே பிரியப்படுகிறார்கள்.
ஒவ்வொரு தொட்டிலும் ஒவ்வொரு விதத்தில் சுவாரஸ்யமாக இருக்கிறது.
2.
chollukireen | 9:25 முப இல் ஓகஸ்ட் 24, 2016
பாருங்கள். இது ஒரு விதமான தொட்டில். இந்த நாளில் பெற்றவர்கள் முதலிலிருந்து தனியாக இருக்கப் பழகினால் நல்லதுதான். சொல்லலாமே தவிர காலத்திற்குத் தகுந்தாற்போல நாம் தான் மாறவேண்டும் என்பதுதான் பொதுஜன வாக்கு. எல்லாமே தனித்தனிரகம். உவமை சொல்ல முடியாது. இரட்டை விளிம்பு தோசை விவரம் கீதா சாம்பசிவம் கொடுத்து விட்டார். அப்பம் மாதிரி ஜாக்கிரதையாகத் திருப்பி விட்டுக் குழிவு வாணலியில் வார்க்கும் காரஸாரமான புளிப்பு அப்பம்தான்.
ஸ்வாரஸ்யமாக இருக்கிறது தொட்டில் என்றதற்கு மிகவும் ஸந்தோஷம். தொட்டிலை ஆட்ட ஆள் வேண்டுமே. அன்புடன்
3.
chitrasundar5 | 3:47 முப இல் ஓகஸ்ட் 20, 2016
காமாக்ஷிமா,
ஒரு திருமணம் நடந்து முடிய எவ்வளவு பேர் ஈடுபடுகிறார்கள் !! திருமணம் நல்லபடியாக நடந்து, முடிந்து அவர்கள் வீட்டில் ஆடும் தொட்டிலையும் காண ஆவல் !
பெற்றோருக்கு இப்படி ஒரு பேரா ? இப்போதான் கேள்விப்படுறேன். அன்புடன் சித்ரா.
ஹி ஹி எனக்கும்கூட இரட்டை விளிம்பு தோசையின்மேல் ஒரு கண் 🙂
4.
chollukireen | 9:29 முப இல் ஓகஸ்ட் 24, 2016
பெற்றோர் அல்லவா? பலவித பெயர்களைப் பெற்றுக் கொண்டே இருப்பதற்காகத்தான் பெற்றோர்கள்.
கீதா சாம்பசிவம் அவர்கள் இரட்டை விளிம்புத்தோசை எது என்று சொல்லி இருக்கிரார் பார். ஆடும் தொட்டில்களும் வந்து விட்டது பார். அன்புடன்
5.
Geetha Sambasivam | 8:10 முப இல் ஓகஸ்ட் 20, 2016
சின்ன இரும்பு வாணலியில் ஊற்றிக் குண்டு குண்டாக மேலே மொறு மொறு உள்ளே மெதுவாக இருக்குமே அதானே இரட்டை விளிம்பு தோசை!
6.
chollukireen | 9:11 முப இல் ஓகஸ்ட் 24, 2016
ஆமாம் ஆமாம் அதுவேதான். இரவல் துவையலுடன் என் கதையில் அவர்கள் ரஸித்துச் சாப்பிட நினைத்ததை நீங்களே சொல்லி விட்டதற்கு மிகவும் நன்றி. அன்புடன்
7.
கோமதி அரசு | 1:20 பிப இல் ஓகஸ்ட் 31, 2016
இரட்டை விளிம்புதோசை படித்து விட்டேன்.
கீதா பதிவு(ரஞ்சனிக்காக ) இரட்டைவிளிம்பு தோசை படித்து விட்டேன்.
தொட்டில் பகிர்வு அருமையாக இருக்கிறது.
8.
chollukireen | 3:31 பிப இல் ஓகஸ்ட் 31, 2016
இரட்டை விளிம்பு தோசை உங்களை கீதாவின் பதிவு மூலம் இங்கே அழைத்து வந்ததில் ஸந்தோஷம். தொட்டில் பகிர்வும் பார்த்து ரஸித்ததில் இரட்டை ஸந்தோஷம். அன்புடன்
9.
chollukireen | 3:23 முப இல் திசெம்பர் 8, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்தவாரம் தொட்டில் 12 வரனின் விவரங்கள் சேகரிப்பாக மேலும் தொடர்கிரது. ஊர்க்கதை என்றாலும் விஷயங்கள் ஸ்வாரஸ்யம் பாருங்கள். அன்புடன்
10.
Geetha Sambasivam | 7:18 முப இல் திசெம்பர் 8, 2020
மிக அருமை. இரட்டை விளிம்பு தோசை இப்போதும் அனைவரையும் அழைத்து வரலாம். அடுத்து என்ன என்பதை மறந்துட்டேன். நீங்கள் போடுங்கள் படித்துக் கொள்ளலாம்.
11.
chollukireen | 11:18 முப இல் திசெம்பர் 8, 2020
எண்ணெய் நிறையவிட்டு நமக்கு நாமே பதமாகவார்த்தால்தான் ருசி. நீங்கள் பதம் சொன்னதுடன் ஸரி நான் அதைப்பற்றி எழுதவே இல்லை. மீண்டும் ரஸிக்க யார் வருகிரார்கள் பார்ப்போம். நெல்லைத் தமிழருக்கு நீங்கள் வார்த்துக் கொடுத்ததாக அவர் எழுதினதாக ஞாபகம். ஸரிதானா? திரும்பிப் பார்த்தால் செவ்வாய்க்கிழமை வந்துவிடும் தொட்டிலுடன். அன்புடன்
12.
Geetha Sambasivam | 11:35 முப இல் திசெம்பர் 8, 2020
ஆமாம் அம்மா. முதலில் எதுவுமே சாப்பிட மாட்டோம் என்றார்கள். அவருடைய மனைவியின் ஆசாரம் குறித்து அவர் சொல்லி இருந்ததால் எனக்கும் பண்ணி வைக்கத் தயக்கம். பின்னர் இருவரும் ஒத்துக் கொண்டதால் இலுப்பச்சட்டி தோசை தான் வார்த்துக் கொடுத்தேன். இருவருமே சாப்பிட்டார்கள். சந்தோஷமாக இருந்தது.
13.
chollukireen | 11:44 முப இல் திசெம்பர் 8, 2020
பரவாயில்லை. நானும் கொஞ்சம் ஞாபகம் ஸரியாகச் சொல்லுகிறேன் என்பதில் ஒரு மகிழ்ச்சி. இப்போது நான் கஞ்சியும், வேகவைத்த காய்களும். மனதில் செய்தவைகள் எல்லாம் அணி வகுக்கும். கருப்பா,சிகப்பா சமையல் உள்? அன்புடன்
14.
Geetha Sambasivam | 11:48 முப இல் திசெம்பர் 8, 2020
பரவாயில்லை அம்மா. உங்க வயசுக்கு நிறையச் செய்து போட்டாச்சு! ஓய்வில் இருங்கள்.
15.
chollukireen | 11:03 முப இல் திசெம்பர் 9, 2020
அனுதாபமான வார்த்தைகளுக்கு மிகவம் நன்றி. அன்புடன்
16.
நெல்லைத்தமிழன் | 12:37 முப இல் திசெம்பர் 11, 2020
தொட்டில் பழங்கால கூட்டுக் குடும்ப கஷ்டங்களையும், அன்பையும், திருமணம் செய்ய நிறையபேர் மெனெக்கிடுவதையும் தொட்டுச் செல்கிறது.
இலுப்புச்சட்டி தோசையை இரட்டை விளிம்பு தோசை என நீங்கள் குறிப்பிடுவதை முன்பே படித்திருக்கிறேன்.
கூட்டுக் குடும்பம் என்றால் அடைசல்தான். போட்டி பொறாமைகள் தவிர்க்க முடியாது. என் பாட்டி வீட்டில், அம்மா தூரத்து உறவினர் என்பதால் தனிச் சலுகை, கடிந்துகொள்வதில்லை, அம்மா வேலைகளைச் செய்யாமல் சாக்குச் சொன்னாலும் ஒன்றும் சொல்வதில்லை என்று பெரியம்மா சித்திக்கு மனதில் கொஞ்சம் வருத்தம் என்று சொல்வார்கள்
17.
chollukireen | 11:38 முப இல் திசெம்பர் 11, 2020
தெரிந்த இடத்தில் ஸம்பந்தம் செய்து, தேள் கொட்டினதுபோல அவஸ்தைப் பட்டாலும் படுவார்களே தவிர நூதன ஸம்பந்தங்கள் செய்ய மாட்டார்கள். ஆதலால் ஒருவர்க்கொருவர் சொல்லியே ஸம்பந்தங்கள் நடந்தது.
இந்தநாளில் மாவுபுளிக்க விடாமல் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. கல்சட்டியில்தான் தோசைமாவுஅ ரைத்தது இருக்கும்.. கல்லுரலில் கையால் அரைத்தமாவு.. அதுவும் நிரையவே அரைப்பார்கள். புளிக்க வாய்ப்புகள் அதிகம். நான்கூட காட்மாண்டுவில்இருக்கும் வரையில் கல்லுரல்தான். அங்கு போகும்போதே கொண்டு போனோம்.. அங்குள்ளவர்கள் தேவதா மாதிரி என்பார்கள்.அதாவது சிவலிங்கம்.. அவர்களுக்கு இப்படி ஒன்றா என்று அதிசயமாகப் பார்ப்பார்கள். மற்றபடி ஒரு அனுபவம்தான் கூட்டுக் குடும்பம். உங்களைக் காணோமே என்று பார்த்தேன். நன்றி. அன்புடன்
18.
ஸ்ரீராம் | 10:27 முப இல் திசெம்பர் 11, 2020
என் மாமனார் வாணலி தோசை அடிக்கடி செய்வார் என்று பாஸ் சொல்வார். நாங்களும் எப்போதோ செய்திருக்கிறோம்!
19.
chollukireen | 11:42 முப இல் திசெம்பர் 11, 2020
எஙகள் பிளாகில் வந்தால் எல்லோரும் ருசிபபார்கள். போடுங்கள். மிக்க நன்றி நீங்ளும் ருசித்ததுண்டு. அன்புடன்
20.
நெல்லைத்தமிழன் | 11:53 பிப இல் திசெம்பர் 11, 2020
தோசைமாவு அரைத்தது, புளித்தது – குளிர்சாதனப் பெட்டி உபயோகத்துக்குப்பின் புளித்தமாவு தோசை அபூர்வம் ஆகிவிட்டது.
நான் பெரியம்மா வீட்டில் இருந்தேன். அவங்க நவீன சாதனம் உபயோகிக்க மாட்டார்கள். பிறர் செய்ததை வாங்க மாட்டார்கள். இட்லி மிளகாய்ப்பொடி கூட அம்மியில்தான் அரைப்பார்கள்… இப்போ நினைத்தால் அந்த வாழ்வு எவ்வளவு கஷ்டம், அதுவும் மூத்த மருமகளாக இருந்துவிட்டால் இன்னும் கஷ்டம் என்று புரிகிறது
இந்தக்காலப் பசங்களுக்கு அப்படி ஒரு வாழ்வு இருந்ததுன்னே தெரியாது.