குட்டி கணபதி அம்மை,அப்பனுடன்
செப்ரெம்பர் 4, 2016 at 1:02 பிப 8 பின்னூட்டங்கள்
ஸ்ரீகிருஷ்ணபகவானை குழந்தையிலிருந்து பலவித வளர்ச்சியில் பார்ப்போம். முதுமை என்பதை அவரிடம் எப்போதும் பார்க்கவில்லை. மஹா பாரத யுத்தத்தின்போது அவருக்கு ஏராளமான பேரன்களிருந்தார்கள். அவர் என்னவோ இளமையுடன்தானிருந்தார். அதுபோல
ஸ்ரீகணேசரும் ஊர்,உலகம்,ஆறு,குளம்,மரம் வீடு,காடு எங்கு வீற்றிருந்தாலும் இளமையுடன்தான் இருந்தார் என்று நினைக்கிறேன். தாத்தா கணேசரைப் பார்க்கவில்லை. தாய் பார்வதியுடனும்,திரிசூலதாரி,கங்காதாரி சிவனுடனும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பது போன்ற இச் சித்திரம் யாவரையும் மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன். வினாயக சதுர்த்தி வாழ்த்துகளுடன் அன்புடனும். காமாட்சி
Entry filed under: படங்கள்.
8 பின்னூட்டங்கள் Add your own
chitrasundar5 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:06 பிப இல் செப்ரெம்பர் 4, 2016
விநாயக சதிர்த்தி வாழ்த்துகள் + நமஸ்காரங்கள்.
படமும் பதிவும் நல்லாயிருக்கு. யோசிக்க வைக்குது. பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 11:00 முப இல் செப்ரெம்பர் 5, 2016
ஆசிகளும்,வாழ்த்துகளும். உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
ranjani135 | 1:21 பிப இல் செப்ரெம்பர் 4, 2016
இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
உங்களைப் பற்றி குங்குமம் தோழியில் சூப்பர் சீனியர் என்று வந்திருக்கிறது. இணைப்பு http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3384&id1=84&issue=20160901
4.
chollukireen | 11:00 முப இல் செப்ரெம்பர் 5, 2016
வாழ்த்துகள் யாவருக்கும். இணைப்பு கொடுத்தற்கு மிகவும் நன்றி. போய்ப் பார்த்தேன். ஸந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்புடன்
5.
ஸ்ரீராம் | 1:42 பிப இல் செப்ரெம்பர் 4, 2016
கடவுளர்கள் குழந்தையாய்க் கூட இருக்கிறார்கள். வயதான கடவுளை பார்க்க முடிவதில்லைதான்! குழந்தியாய்க் கூட முருகன், பிள்ளையார், கிருஷ்ணனைத் தவிர வேறு இந்தக் கடாவாக்குளையும் குழந்தையாய்ப் பார்த்ததில்லை.
6.
chollukireen | 11:06 முப இல் செப்ரெம்பர் 5, 2016
குட்டி கணேஷிற்கு ப்ளாகில் வர ஆசை. அப்பா அம்மாவோடு. படம் பார்க்கும்போது எனக்கும் போட ஆசை. அவ்வளவுதான்.
ஏசுபகவானை குழந்தையாகப் படம் பார்த்திருக்கிறேன். நன்றி. அன்புடன்
7.
chitrasundar5 | 3:44 முப இல் செப்ரெம்பர் 5, 2016
காமாக்ஷிமா,
ஓவியம் அழகா இருக்கு ! நினைவில் முருகன், அய்யப்பன் இவர்களும் வந்து போகிறார்கள்.
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
8.
chollukireen | 11:09 முப இல் செப்ரெம்பர் 5, 2016
யா வருக்கும் வாழ்த்துகள். நீ சொன்னமாதிரி அவர்களும் கூட இருக்கும்படி ஓவியம் தீட்டினால் அழகாக இருக்கும். அன்புடன்