எங்கள் வீட்டு கணபதிகள்
செப்ரெம்பர் 6, 2016 at 11:12 முப 10 பின்னூட்டங்கள்
எங்கள் வீடுகளில் பூசித்த கணபதிகளையும் உங்கள் பார்வைக்கு வைக்க வேண்டாமா? காட்மாண்டு,மும்பை,ஜெனிவா என்று எளிய கணபதிகளையும் தரிசியுங்கள்
முதலில் பார்ப்போம். காட்மாண்டு கணேசரை.
அடுத்து வருகிறார் எங்கள் மும்பை கணபதி.
அவரின் நிவேதனம்.
Entry filed under: பூஜைகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 11:28 முப இல் செப்ரெம்பர் 6, 2016
நமஸ்காரங்கள்.
படங்கள் அனைத்தும் அழகோ அழகு !
பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 2:16 பிப இல் செப்ரெம்பர் 7, 2016
ஆசிகள். அழகோ அழகு. நன்றிகள். அன்புடன்
3.
Geetha Sambasivam | 11:44 முப இல் செப்ரெம்பர் 6, 2016
எல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன. பிரசாதங்களும் நன்றாக இருக்கும்போல் தெரிகிறது. 🙂
4.
chollukireen | 2:15 பிப இல் செப்ரெம்பர் 7, 2016
நன்றி. நானும் படத்தில் பிரஸாதங்களைப் பார்த்தேன். நிவேதனம் செய்தது எல்லாமே நன்றாகத்தான் இருக்க வேண்டும். வடைகளில் பட்டாணி பருப்பு வடை கலர் இல்லாமல் இருந்தது. உளுந்து வடைகள். நானும் உங்களைப்போல் நினைத்துக் கொண்டேன். உங்கள் பாங்கு யாருக்கும் வராது. அன்புடன்
5.
ஸ்ரீராம் | 3:42 பிப இல் செப்ரெம்பர் 6, 2016
அருமை அம்மா. விநாயகரை விட நிவேதனங்கள் கருத்தையும், கவனத்தையும் கவர்கின்றன! நான் ஒரு சாப்பாட்டு ராமனாக்கும். எனது அபிமான கொழுக்கட்டையைத் தேடினேன். மோதகம் கண்ணில் பட்டது. மோதகங்களில் ஒன்றுதானா அம்மா?
6.
chollukireen | 2:09 பிப இல் செப்ரெம்பர் 7, 2016
பாருங்கள். இட்லியைக்கூட பார்த்திருக்க முடியாது. வேலைக்குப்போகும் மருமகள்கள். என்னால் இப்போது ஒன்றும் முடிவதில்லை. கொழுக்கட்டை ஒருவரும் செய்யவில்லை. மோதகம்கூட வேறு விதமான இனிப்பு. உருவம்தான் மோதகம். வாட்ஸப்பில் போட்டோ அனுப்பினார்கள். போடலாமே என்று போட்டேன். நான் சென்னை வரும்போது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். ஒர்க்கிங் உமன்ஸ் வீடுகள். செய்வது பெரிதில்லை.சாப்பிட்டு ரஸிப்பதுதான் கிடைக்க முடியாதது. ஜெனிவா வாஸம் எனக்கு இப்போது. வினாயகர்கள் எல்லாம் நம் பக்கம்போல் புத்தம் புதியது இல்லை. இன்றையதினம் என் மாமனாரின் சிரார்தம் எப்போதும் வருவதால் வினாயக சதுர்த்தி அவ்வளவாக கொண்டாடத பண்டிகையாக மாறி விட்டது. மருமகள்கள் கொண்டாடுகிறார்கள். மும்பையில் விதவிதமான மோதகங்கள்.இனிப்பை மோதக அச்சில் வைத்து எடுப்பார்கள். அதே மாதிரி இது பயத்தம் லட்டு போன்ற இனிப்பு மோதகமாக உருமாரி இருப்பது. ஒரு இடத்து நிவேதனம் எல்லாமே எண்ணெயில் பொரித்தது போலத் தோன்றியது. இப்படிப் பலவித நிவேதனங்கள். மனதில் நினைத்துக் கொண்டேன். வருகைக்கு நன்றி அன்புடன்
7.
கோமதி அரசு | 1:34 பிப இல் செப்ரெம்பர் 7, 2016
படங்கள் எல்லாம் மிக அழகு. பிரசாதங்கள், அலங்காரமும் அழகு.
8.
chollukireen | 1:44 பிப இல் செப்ரெம்பர் 7, 2016
எல்லா பூஜை விசேஷங்களின்போது, அவைகளை முடித்துவிட்டு நாட்டுப் பெண்கள் ஆசிகளைக் கோருவார்கள். இப்போது வாட்ஸப்பிலும் சிறிது பரிச்சயம் ஆகி உள்ளது. பிரஸாதங்கள் அவரவர்களின் நேரத்திற்கேற்ப. உங்களின் வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
9.
chitrasundar5 | 2:41 முப இல் செப்ரெம்பர் 10, 2016
விநாயகர் ஸ்பெஷல் சூப்பர்மா, அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 6:23 முப இல் செப்ரெம்பர் 10, 2016
நீசொன்னால் அதில் எனக்கு ஒரு திருப்தி. நன்றி. அன்புடன்