தொட்டில்—14
செப்ரெம்பர் 15, 2016 at 10:50 முப 20 பின்னூட்டங்கள்
என்னடி இவ்வளவு நேரமா பேசறே யார் என்ன ஸமாசாரம்?
இரு வந்து சொல்றேன். என்ன விசேஷம் என்று சொல்லாமல் டிக்கெட் ரிஸர்வ் பண்ணி அனுப்பிச்சா அம்மாவுக்கு சொல்ல வேணாமா? அதெல்லாம் ஒண்ணும் வாணாம். அக்காங்களுக்கும் இவரு டிக்கட் புக் பண்ணி அனுபிச்சாச்சுன்னு சொல்ராரு. நீங்களும் எல்லாரும் வந்திடுங்க. எல்லாம் ரிஸர்வ் டிக்கட்டுங்கதான்.
என்னடி உனக்கு தெரியாம என்ன விஷயம் இருக்கும். ஒரு விஷயமும் இல்லே. எல்லாரும் கும்பலா கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செலுத்துவதாக வேண்டுதலாம். சும்மா வேடிக்கைக்குச் சொல்ராருன்னு நெனச்சா டிக்கட்டெல்லாம் காமிச்சுதான் அனுப்பிச்சாரு. தெரியுமே உனக்கு. இவரு மனஸுலே பட்டதை உடனே செஞ்சாகணும். நான் சொன்னேன் என்னங்க இது. அவங்க என்னவோ ஏதோ என்று நினைப்பாங்க என்று.
கோயிலுக்குப் போக அவங்க நெனைக்க என்ன இருக்குது? உனக்குதான் ஏதாவது நினைப்பு.இப்படிதான் அவங்க சொல்ராரு. வாங்க எனக்கும் ஸந்தோஷமாயிருக்கும். அத்தையும் இதையே சொல்ராங்க. வந்திடுங்க என்ன
இத்தனைநேரம் பேசரையான்னு ஸுலபமா கேட்டா போதுமா. ஒம் பொண்ணுதான் பேசிச்சு. அவுங்க வீட்லே சாமி கும்பிட போவதற்கு நாமெல்லாம் வரணுமாம். டிக்கட் அனுப்பிச்சு கூப்புடரா?
ஏதாவது விசேஷம் இல்லாங்காட்டி இப்படிச் செய்வாங்களா?
அவங்க வூட்லேதான் எல்லாமே மூடு மந்திரம்தான். கடைசிலேதான் என்னான்னு சேதியே தெரியும். ஒரு புது ஸாமான் வாங்கினா கூட திருஷ்டி பட்டுடும்னு ,சினேகிதங்க வைச்சுட்டுப் போயிருக்காங்கன்னு சொல்லுவாங்க. அப்புறமா, இல்லே நாங்களே வாங்கிட்டேன்னு சொல்லுவாங்க. எல்லாமே அப்படிதான் அவங்க ஊட்டு வழக்கமே. இவ மட்டும் என்ன அவங்களுக்கு ஒத்து ஊதியே பழகிட்டா.
நம்ம மனுஷங்கன்னு கண்ணெ வாயைத் தொறக்கப்போறா மவராசி. நல்லா இருந்தாஸரி.. இல்லே வஸந்தா அக்காக்கு போன் போட்டு பேசறேன். அதுக்காச்சும் தெரியுமா ஏதாவதுன்னு கேக்கணும்.
எங்க வீட்லே அவரு கேப்பாரு. என்ன விஷயம், வான்னா வரணும்,போன்னா போகணும், நான் என்ன அவரைப்போல மருமவன் இல்லையாம்பாரு.
வஸந்தா அக்காவும் இதையே சொல்லுது. பிள்ளைங்களுக்கும் சேந்து டிக்கட் வந்திருக்கு. அவங்க மனஸுலே என்ன நினைப்பு. கமலாக்காக போயே ஆவணும்.இல்லாட்டி அதைப்பிடிச்சு எதுங்காட்டியும் சொல்லியே அலைவாரு. அம்மா உங்கூட இருக்குது. அவங்களுக்கு மனம் நோவக்கூடாது.
ஆமாம் அவங்க குணம் ஒரு மாதிரின்னுதான் நாம யாரும் அவங்களுக்குன்னு பிள்ளைங்களை கொடுக்கலைன்னு கோவம் வேறெ.
அம்மாவிடம் எல்லாம் ஒப்பிச்சேன். என்ன பண்றது. பகவான் அதுக்கு ஒரு புள்ளையைத் தரலே. அவிங்க குணம் அப்படின்னா கமலா என்ன செய்யும். மத்தபடி நல்லவங்கதான். எல்லாரும் வந்திடுங்கன்னு கூப்பிடராங்கன்னா நல்ல ஸமாசாரம்தான் இருக்கும்.
அவங்கவங்க காலைலே வந்து சேரும்படியா டிக்கட்டுகள். கமலா புருஷனே நேரில் ஸ்டேஷனுக்கு வந்திருந்து வரவேற்றார்.
என்னங்க எந்த கோயிலுக்கு போகப்போறோம். ஒவ்வொரு குடும்ப கேள்விக்கும், இங்கே மெட்ராஸுலேதாங்க கோயிலே. வாங்க வீட்டுக்குப் போயி பேசுவோம். ஒத்தர் முகத்தை ஒத்தர் பார்த்துக்கிட்டு வீடு வந்து சேர்ந்தால், பெரிய வீட்டுவாசல் கொள்ளாத கோலம். செம்மண். இட்டிருக்கு.
வாங்கம்மா வாங்கஎல்லாரும். பேத்தி பொறந்திருக்கா . ஸந்தோஷமா வாங்க கமலா மாமியார் அழைக்கறாங்க. கமலாவும் சிரித்தபடி பின்னாடி நிற்கிறாள். எல்லோரும்தெகைக்கிறாங்க.
கைகால் கழுவிட்டு வாங்க. காப்பி குடிச்சுட்டு குழந்தையைப் பாருங்க. திகைப்பு மாறாமல் எல்லோரும் அசட்டுச் சிரிப்புடன் வந்தால் நல்ல சுத்தமான அறையில் கட்டிலில் இரண்டு பக்கமும் அண்டை கொடுத்த மெத்தென்ற தலைகாணியின் நடுவே காலை உதைத்து அழுதுகொண்டு வரவேற்பு கொடுக்கிறது ஒரு பிஞ்சுப் பொதி. ஆச்சரியம் தாளமுடியவில்லை. என்ன எங்களுக்கு எதுவும் சொல்லலியே என்று கேட்கும்போதே இதுவும் இவர்களின் ரகசியத்தில் அடங்கியதாக இருக்கும் என்ற எண்ணமும் ஒவ்வொருவர் முகத்திலும் பளிச்பளிச்.
என்னங்க எனக்கே தெரியாம எம் பேத்தி வந்திருக்கா!!!!!!!!!!!!!! எல்லோரும் பலவித எண்ணங்களுடன் தயாராகிரார்கள் காஃபிக்கு.
படம் உதவி. கூகல். மிக்க நன்றி.
கூடவே ஒரு அனுபவமுள்ள நர்ஸ்.
ஐயருக்கு சொல்லியாச்சு புண்யாதானம் செஞ்ஜ பொரவு பிள்ளையைத் தூக்கலாம். சம்மந்திம்மா எச்சரிக்கை.
அப்பறம் சொல்றேன். எதுவும் இப்போ கேக்காதீங்க என்ற ஸிக்னல் கமலாவின் முகத்தில். எல்லோரும் குளித்து முடித்து தயார். எந்தமாதிரி கதை ? எந்தமாதிரி கதை வரப்போகிறதோ?
ஐயர் வந்து புண்யாதானம் ஆயிற்று. குழந்தையை நர்ஸே கவனிக்கிறாள். தடபுடலான சாப்பாடு. சாயங்காலம் தொட்டிலுக்கு அக்கம்,பக்கம் எல்லாம் வருவாங்க. எல்லாம் சித்த படுத்து என்திருங்க. உபசாரங்கள் பலம். யாரும் கேள்வி எழுப்பவில்லை.
பெண்கள்,அம்மா,சம்மந்தி சொல்லு கமலா. உங்க அம்மாவிற்கு. அம்மாவிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.
அம்மா இது எங்களின் குழந்தைதான். அத்தைக்கும் இது விவரம் சொல்லவில்லை.
அவங்களுக்கும் முதலில் நம்ப முடியலே. என்னிடமே மறைச்சுட்டிங்களேன்னு புலம்பினாங்க.
எனக்கு எல்லா வைத்தியமும் ஆன பிறகு என்னுடடைய கரு முட்டை அவ்வளவாக நல்ல முறையில் இல்லை. அவருடைய விந்தணு நல்ல நிலையில் இருக்கிறது. கருமுட்டையை தானமாகப் பெற்று , அதனுடன் அவரின் விந்தணுவைச் சேர்த்து , வாடகைத் தாய் முறையில் பயனளிக்கலாம் என்று டாக்டர்கள் அபிப்ராயப் பட்டனர். மிக்க யோசனைக்குப் பிறகு அவரின் குழந்தை என்னுடையதுதான் என்று மனம் சொல்லியது. அத்தை உறவு முறையில் ஏதாவது குழந்தை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டாங்க.
அவருக்கு நம்முது,என பிள்ளை வேணும்னு எண்ணம்.
புதுசா வாடகைத்தாய் மூலம் வெளிநாடுங்களிருந்தெல்லலாம் வந்து பெத்துப் போவராங்க. நாமும் செய்வோம் என்று ஒரே மாதிரி எண்ணம் வந்துச்சு இரண்டு பேருக்கும்.
இப்பதான் எல்லாத்துக்கும் வழிங்கயிருக்கே. பணத்துக்கும் குறையில்லே. அத்தை ஒப்புக்க மாட்டாங்க. நமக்கும் எல்லாம் ஸரியா வரணுமே என்ற பயம் மனதிலே திகதிக்குனு அடிச்சிகிட்டே இருந்தது.
புண்ணியகாலமாக அவருக்கு நல்ல டாக்டராகக் கிடைச்சாங்க.
கருமுட்டை எல்லாம் அவங்களே எப்படி வாங்கி,என்ன செய்யணுமோ அதைச் செஞ்சாங்க. கடசி வரை நல்லபடி ஆகும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று நாங்க பேசிக்கிட்டோம்.
எந்த ஏற்பாடும் நாங்க செய்யலே. நல்லபடியா முடிஞ்சப்புறம் வீட்டுக்கு குழந்தையைத் தூக்கியார வேண்டுமே. அத்தைக்குச் சொன்னோம். குழந்தை எங்க ஊட்டுக்காரரையே அப்படியே உறிச்சு வைச்சிருக்கு. பாருங்க. அத்தைக்கும் ஸந்தோஷம் வந்திடுச்சு. டாக்டரம்மாவே ஒரு வயதான நர்ஸம்மாவையும் அனுப்பிச்சாங்க. அப்புரமென்ன கடகடன்னு டிக்கட் புக் பண்ணிட்டாரு. நமக்கு,நம்ம குழந்தைக்கு உறவுகள் வேண்டாமா?
அடுத்த வாரம் அத்தைவழி உறவுங்களுக்கெல்லாம் வரச்சொல்லி டிக்கட் அனுப்பிட்டாரு. அன்னிக்கும் ஒரு தொட்டில். இதான் கதை.
குழந்தை அழுகிறது. நீ,நான் என்று தூக்கிக்கொள்ள எல்லோரும் போட்டி.போடுகிறார்கள்.
நல்ல ஏற்பாடு.ஸந்தோஷம் எல்லோர் மனதிலும்..அலங்காரமான தொட்டிலில் வர லக்ஷ்மி தூக்கத்தில் சிரிக்கிறது. ஆராரோ,ஆரிரரோ,ஆரமுதே ஆராரோ, நீயாரோ,நான்யாரோ, உன்னைப் பெற்றவர்தான் யார்யாரோ, கண்மணியே கண்வளராய்.கண்வளராய். கமலா கம்பீரமாக உருக்கத்துடன் பாடுகிறாள்.
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!!!!!!!!!!!
Entry filed under: கதைகள்.
20 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 11:25 முப இல் செப்ரெம்பர் 15, 2016
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !!!!!!!!!!!!
மிகவும் ஆனந்தமான பதிவு. பாராட்டுகள்.
2.
chollukireen | 9:56 முப இல் செப்ரெம்பர் 16, 2016
ஆனந்தம் எல்லோருக்கும் ஒரு இளம் குழந்தையைக் கண்டால். நன்றி பாராட்டுதல்களுக்கு. அன்புடன்
3.
Geetha Sambasivam | 12:32 பிப இல் செப்ரெம்பர் 15, 2016
மிக அருமை. கண்ணீரே வந்துவிட்டது!
4.
chollukireen | 10:02 முப இல் செப்ரெம்பர் 16, 2016
சிலஸமயங்கள் மனது நிகழ்ச்சிகளை கற்பனையில் பார்க்கும்போது அதன் வெளிப்பாடு கண்ணில் நீர். உங்கள் பின்னூட்டம் கதையின் கரு. அருமை என்ற வார்த்தை பெருமையைக் கொடுக்கிறது.நன்றி. அன்புடன்
5.
ஸ்ரீராம் | 2:18 பிப இல் செப்ரெம்பர் 15, 2016
நெகிழ்ச்சி. மகிழ்ச்சி.
6.
chollukireen | 10:12 முப இல் செப்ரெம்பர் 16, 2016
புகழ்ச்சியாக எடுத்துக் கொள்கிறேன். ஸந்தோஷம்.நன்றி அன்புடன்.
7.
கோமதி அரசு | 7:44 முப இல் செப்ரெம்பர் 16, 2016
காலை உதைத்து அழுதுகொண்டு வரவேற்பு கொடுக்கிறது ஒரு பிஞ்சுப் பொதி.//
படிக்கவே மகிழ்ச்சி, பார்த்தால் இன்னும் மகிழ்ச்சி.
அருமை.
8.
chollukireen | 10:19 முப இல் செப்ரெம்பர் 16, 2016
சின்ன குழந்தைகளைத் தூக்கினால் பஞ்சுமாதிரி மெத்தென்ற ஒரு ஸந்தோஷம் ஏற்படுகிறது. முகத்துடன் முகம் சேர்த்தால் இன்னும் ஆனந்தம். உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். அருமை என்ற வார்த்தை எழுதியது எனக்குப் பெருமை. . மிகவும் நன்றி. அன்புடன்.
9.
ranjani135 | 2:48 பிப இல் செப்ரெம்பர் 17, 2016
உங்கள் தொட்டில் தொடர் கட்டுரைக்கு ஒரு முத்தாய்ப்பு இந்தக் கட்டுரை. அந்தக் காலத்திலிருந்து இந்தக்காலம் வரை ஒவ்வொரு வீட்டிலும் ஆடிய எல்லாவிதமான தொட்டில்களையும் அறிமுகப்படுத்தி விட்டீர்கள். குழந்தையின்மையை சரிசெய்துகொள்ள எத்தனை எத்தனை வழிவகைகள்!
ஒரு குழந்தை என்பது வீட்டில் உள்ள அத்தனை பேர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது, இல்லையா? எல்லா கோணல்களையும் நேர் செய்துவிடுகிறது ஒரு குழந்தையின் வருகை.
சமீபத்தில் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெண்மணி ஒருநாள் வீட்டிற்கு வந்து ‘என் குழந்தைக்கு இன்று தொட்டில். கட்டாயம் வந்துவிடுங்கள்’ என்று கூப்பிட்டு விட்டுப்போனார். பலவருடங்களாகக் குழந்தையில்லாமல் இருந்தவர் அவர். அவரது உறவினர் ஒருவரின் குழந்தையையே தத்து எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாங்கள் எல்லோரும் போய் அந்தக் குழந்தைக்கு ஆசிகளைச் சொல்லிவிட்டு வந்தோம். அந்த குழந்தை செய்த புண்ணியம் நல்ல செல்வச்செழிப்புள்ள குடும்பத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.
கடவுள் எந்த வரத்தைக் கொடுக்கிறாரோ இல்லையோ, குழந்தை வரத்தை நிச்சயம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
எல்லோர் வீட்டிலும் தொட்டில்கள் ஆடட்டும்.
10.
chollukireen | 1:20 பிப இல் செப்ரெம்பர் 19, 2016
தொட்டிலின் மகத்துவமே அதில்தான் அடங்கியுள்ளது. குழந்தைவரம் யாவருக்கும் இன்றியமையாதது. நீங்களும் ஒரு வளர்புக் குழந்தையின் தொட்டிலில் பங்கு கொண்டது மிக்க ஸந்தோஷம். தொட்டில் இன்னும் ஓரிரண்டு எழுத எண்ணம். உங்கள் பின்னூட்டம் என்னை மேலும்எழுதுங்கள் என்று சொல்வதுபோலத் தோன்றியது. நன்றி. பெண் குழந்தைகளை இப்போது தத்தெடுப்பது அதிகம் விரும்பப் படுகிறது. பாசமலர்களாக மாறி விடும் தன்மையால். அன்புடன்
11.
chollukireen | 5:57 முப இல் திசெம்பர் 22, 2020
என் மொழி இடுவதற்கு முன்னே மீள் பதிவு போஸ்ட் ஆகிவிட்டது. பார்த்து ரஸிக்க உங்களைக் கூப்பிடுவேன். அதைத் தாமதமாகச் செய்கிறேன்.அவ்வளவுதான்.அன்புடன்
12.
chollukireen | 6:04 முப இல் திசெம்பர் 22, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இது ஒரு புதிய தொட்டில். பாருங்கள்
13.
Geetha Sambasivam | 7:51 முப இல் திசெம்பர் 22, 2020
நல்ல கதை. மறுபடியும் படித்தேன். மறுபடியும் மனசு விம்முகிறது. எங்கள் சுற்றத்திலேயே குழந்தை இல்லாதவர்கள் சிலர் தத்து எடுத்திருக்கிறார்கள், இம்மாதிரியும் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் எதுவுமே அவன் செயல், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதையும் இது காட்டுகிறது அல்லவோ. கண்ணிர் தான் பெருகுகிறது.
14.
chollukireen | 11:40 முப இல் திசெம்பர் 22, 2020
வேறு விதமாகவும் பல,வருஷங்கள் கழித்தும் தானாகவும் பிறந்து விடுவதுதான் ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதைப்பற்றி விசாரப்படாமலும் சிலர் இருப்பதாகத் தோன்றவும் கேள்விப்பட்டு இருக்கிறோம். காலா காலத்தில் பிறந்துவிட்டால் அந்த நிம்மதியே வேறு. அநுபவத்தில் யாவும் தெரிந்ததுதான். ஸந்தானம் கடவுளனுக்கிரஹம் வேண்டும். எப்படிக் கிடைத்தாலும் ஸரி. இல்லையா. லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸுகினோ பவந்து.அன்புடன்
15.
சஹானா கோவிந்த் | 11:50 முப இல் திசெம்பர் 22, 2020
வாவ்… அழகுத் தொட்டில், சுபமான முடிவு
16.
chollukireen | 11:21 முப இல் திசெம்பர் 23, 2020
கொஞ்சம் புதுமாதிரி. வாவ் ரஸித்திருப்பதைக் காட்டுகிறது.அன்புடன்
17.
athiramiya | 6:33 பிப இல் திசெம்பர் 22, 2020
விசயத்தைச் சொல்லாமல் கோயிலுக்கு எனச் சொல்லி ரிக்கெட் போட்டுக் குழந்தையைக் காட்டியதுமே நினைத்தேன் இப்படி ஏதும் முறையாகத்தான் இருக்கோணும் என… அழகான எழுத்து ரசித்தேன் காமாட்ஷி அம்மா.
18.
chollukireen | 11:26 முப இல் திசெம்பர் 23, 2020
இருந்தாலும் எல்லாமே ரகஸியமாக வைக்கும் சுபாவம் என்று முன்பே பெயர். இது நல்ல காரியமாதலால் எல்லோரும் ஸந்தோஷப்பட்டு விட்டார்கள். ஸந்தோஷம்தான் உங்களுக்கும். அன்புடன்
19.
நெல்லைத்தமிழன் | 10:31 முப இல் திசெம்பர் 28, 2020
கதை ஒரு பாதையில் ஆரம்பித்து எங்கோ திடீர் திருப்பமாக முடிந்தது. குழந்தை வரம் என்பது சும்மாவா?
குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்
என்று சும்மாவா சொல்லியிருக்காங்க.
கணவனின் குழந்தை கான்சப்ட் நல்லாவே இருக்கு…. 30 வருடங்களுக்கு முன்னால், ஊரில் முள் வேலியில் தூக்கிப் போட்டிருந்த பிறந்த பெண் குழந்தையை, என்னுடன் வேலை பார்த்துவந்த குழந்தை இல்லாத பிராமணர், தக்க சட்ட முறைகளுடன் தன் குழந்தையாக வீட்டிற்குக் கொண்டுவந்து வளர்த்தார். அப்போ எனக்கு அது மிக மிக அதிசயமாகத் தெரிந்தது.
எல்லாம் அவன் போட்டிருக்கும் கணக்குதானே.
(தாமதமானதற்குக் காரணம், ஊரில் இல்லை…கோவில் சேவைக்காக வெளியூர் சென்றிருந்தேன்)
20.
chollukireen | 11:30 முப இல் திசெம்பர் 28, 2020
மனிதர்களின் ஸுபாவமும், அதற்கேற்றார்ப்போல ஸம்பவஙகளும் நடந்து ஒரு தொட்டிலாகப் பரிணமித்தது. இப்போது ஏராளமாகத் தூக்கி்போடும் குழந்தைகளின் செய்திகள் வருகிறது. உயிரோடு காக்கப்பட்டால் அது அவர்களின் பாக்கியம். அ ம்மாதிரி பாக்யம் செய்த குழந்தையைப் பார்த்துள்ளீர்கள். நீஙகள் பிரயாணத்தில் இருப்பது எங்கள் பிளாக் மூலம் தெரிந்தது. வந்ததும் எனககும் பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி. அன்புடன்