ஜெயின் கிச்சடியும் பத்லா கடியும்
செப்ரெம்பர் 28, 2016 at 12:05 பிப 20 பின்னூட்டங்கள்
ஜெயின் கிச்சடியும்,பத்லா கடியும்.
ஜெயின் சமூகத்தினர் செய்யும் விஜிடபிள் கிச்சடியும் அதற்கான நீர்த்த மோர்க்குழம்பும் ருசியாக இருக்கும். இதோடு கூட சுட்ட மிளகு அப்பளாமும் எல்லோரும் சாப்பிட ஒரு அருமையான ,சுலபமான உணவு. வாய்க்கு ருசியாக இருப்பதோடு பூரா ஸத்துகள் நிரம்பியதாகவும் இருப்பது இதன் விசேஷம். ஸாதாரணமாக பூமிக்கடியில் விளையும், கிழங்கு,இஞ்சி போன்றவைகளை ஆசாரமானவர்கள் சமையலில் சேர்ப்பதில்லை. இது அம்மாதிரி முறையில் செய்யப்படவில்லை.யாவும் சேர்த்துச் செய்தது.
வேண்டியவைகள்
பெரிய வெங்காயம் —2
பூண்டு இதழ்கள்—3,
பீன்ஸ்—6, கேரட்—1,தக்காளி—1, காப்ஸிகம் சிகப்பு,பச்சை –பாதிபாதி. பட்டாணி உரித்தது அரைகப். உருளைக்கிழங்கு –1 இரண்டாக் கீறிய பச்சை மிளகாய் ஒன்று.
தாளித்துக் கொட்ட— வற்றல் மிளகாய்—2, சீரகம்—1 டீஸ்பூன்,மிளகு—1 டீஸ்பூன்,லவங்கம்—6 , ஒரு துளி லவங்கப்பட்டை, இஞ்சி சிறிது, பிரிஞ்ஜி இலை1 எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
அரிசி—பெரியடம்ளரால் ஒரு டம்ளர். பயத்தம் பருப்பு கால் டம்ளர். ருசிக்கு உப்பு.
செய்முறை. பிரமாதமொன்றுமில்லை.
கரிகாய்களை ஒன்றுபோல் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி,பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை விட்டுக் காய்ந்ததும் தாளித்துக் கொட்டக் கொடுத்தவைகளைப் போட்டு வறுக்கவும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி,பூண்டு இஞ்ஜியைச் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பிறகு காய்களையும்,பிரிஞ்ஜி இலையையும் சேர்த்து வதக்கவும். இதனுடன்அரிசிப்,பருப்பை நன்றாகக் களைந்து அதனுடன் மூன்று பங்கு அளவு தண்ணீரையும் சேர்க்கவும் துளி மஞ்சள்ப்பொடி வேண்டிய உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விஸில் வரும் அளவிற்கு வேக வைக்கவும். நீராவி அடங்கியபின் ஒரு கிளறு கிளறி மூடி வைத்துச் சுடச்சுட பறிமாறவும்.
நான்கு ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும்.
உடன் சாப்பிட மிளகு அப்பளாம் சுட்டதும், பத்லா கடியும்.
கடி என்ற சற்றுத் நீர்க்க இருக்கும் மோர்க்குழம்பும்.
பத்லா கடி எப்படி?
நான்கு கப் மோரில் 2 டேபிள்ஸ்பூன் கடலைமாவைப் போட்டுக் கட்டி இல்லாமல் கரைக்கவும். வேண்டிய உப்பும் மஞ்சளும் சேர்க்கவும்.
பச்சைமிளகாய் இரண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்கடுகு,வெந்தயம், சிறிது லவங்கம்,மிளகு சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டி மிளகாயையும் வதக்கி மோரில் சேர்த்து நிதான தீயில் நன்றாகக் கிளறி ஒரு கொதி விட்டு இறக்கி கொத்தமல்லி இலையோ,கறிவேப்பிலையோ போட்டு இறக்கவும்.
மிளகு அப்பாளாத்தைச் சுட்டு கிச்சடியுடன் பத்லா கடியும் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கிரார்கள். கிச்சடியின் மணம் வீடுபூராவும்.
மிகவும் ருசியாகத்தானிருக்கிறது. கமகமக்கிறது.
என் மருமகள் செய்தது. நீங்களும் ருசித்துப் பாருங்கள். நமக்கு மஸாலா அதிகமாகத் தோன்றும். நன்றி ஸுமன்.
Entry filed under: கிச்சடி வகைகள்.
20 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:47 பிப இல் செப்ரெம்பர் 28, 2016
புதுசா இருக்கு. குறித்து வைத்து பாஸ் கிட்ட சொல்லியிருக்கேன்!
2.
chollukireen | 8:14 முப இல் செப்ரெம்பர் 29, 2016
நமக்குப் புதுசுதான். எங்கள் வீட்டில் பலவித இந்திய மருமகள்கள். எப்பொழுதாவது அவர்கள் பாணி செய்யும் போது எனக்குப் பிடித்ததைப் பகிர்கிறேன். குறித்து வைத்திருக்கிறீர்கள் என்பதே நல்ல பதில்தான்.
படித்ததெல்லாம் செய்து பார்க்க யாராலும் முடியாது. எப்பொழுதாவது இப்படியும் செய்து பார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றும் போதுதான் குறிப்பின் தரமே புரியவரும். நீண்ட பதிலா? பாஸ் எப்போதாவது செய்தால் விருப்பம் எப்படி என்று தெரிவியுங்கள். நன்றி அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 2:16 பிப இல் செப்ரெம்பர் 28, 2016
ஆஹா, எல்லாமே பார்க்க அழகாகவும், பசியைத் தூண்டக்கூடியதாகவும் உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
4.
chollukireen | 8:17 முப இல் செப்ரெம்பர் 29, 2016
வாய்க்கு ருசியாகவும் இருக்கிறது. உங்கள் பின்னூட்டத்திற்கும்,வரவிற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
5.
chitrasundar5 | 2:49 முப இல் செப்ரெம்பர் 29, 2016
காமாட்சிமா,
பளிச் காய்களுடன் சுவையான கிச்சடி, கூடவே கடியுடன் பார்க்கவே சாப்பிடணும்போல தோணுது.
போன வாரம்தான் பொண்ணு காலேஜுக்குக் கிளம்பினாள். கூடவே நாங்களும் போய் ரெண்டு நாள் தங்கிவிட்டு வந்தோம். இப்போதான் கொஞ்சம் ஃப்ரீ ஆனேன்மா 🙂
6.
chollukireen | 8:00 முப இல் செப்ரெம்பர் 29, 2016
நானும் அதையேதான் நினைத்தேன். கடைசி மருமகள் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவள். எதொன்றும் நன்றாகச் செய்வாள். பேரே பத்லா கடி. நீர்க்க இருக்கும். கிச்சடியுடன் நன்றாக இருந்தது. இப்படி டால் முதலானவைகளும் சற்று வித்தியாஸமாகவும் சில ஸமயம் செய்கிறாள். இங்கிருக்கும்போது அவைகளையும் பதிவாக்க நினைக்கிறேன்.. உன்னுடைய வரவிற்கும்,பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி. காமாட்சியிலும் சில பதிவிட நினைக்கிறேன். அன்புடன்
7.
'நெல்லைத் தமிழன் | 6:34 முப இல் செப்ரெம்பர் 29, 2016
குஜராத்தி ‘கடி’ ஒரே இனிப்பான்னா இருக்கு. அதனால் சாதத்துக்கு அவ்வளவு நல்லா இல்லை. கிச்சடி பார்த்தேன். பிடிக்குமான்னு தெரியலை.
8.
chollukireen | 7:52 முப இல் செப்ரெம்பர் 29, 2016
இந்தக்கடியில் இனிப்பு எங்கேயிருந்து வரும்? பச்சைமிளகாய்,மிளகு,லவங்கம் எல்லாம் போட்டிருக்கே! குஜராத்தி கடி எனக்குத் தெரியாது. சாதத்துக்கானது இல்லை இது. கிச்சடியும் இதுவும்,மிளகு அப்பளாத்துடன் காரஸாரமாக இருப்பதுபோல நான் சாப்பிட்டேன். இது மத்தியப்பிரதேச ஜெயின் கிச்சடி,கடியாக இருக்கும். சாப்பிட்டால் தெரியும். கிச்சடியோடு சாப்பிடுங்கள். பக்கா ஜெயின் மருமகளின் தயாரிப்பு இது. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
9.
chollukireen | 8:37 முப இல் செப்ரெம்பர் 30, 2016
குஜராத்திக்காரர்கள் இனிப்பும் சேர்ப்பார்கள் என்று நாட்டுப் பெண் சொன்னாள். நீங்கள் அம்மாதிரி செய்ததை சாப்பிட்டிருப்பீர்கள். அதான் அப்படி உணர்ந்திருப்பீர்கள். அன்புடன்
10.
merabalaji | 6:12 பிப இல் செப்ரெம்பர் 29, 2016
very nice amma i made same but not prepared kadi next time i will prepare with kadi .but kichadi is very tastey i already prepared at my home.thankyou amma. take care convey my records to uncle also.
11.
chollukireen | 8:24 முப இல் செப்ரெம்பர் 30, 2016
மீீரா மிக்க நன்றி உன் மறுமொழிக்கும், வரவிற்கும். ருசிபார்த்து எழுதியிருந்தாய். இம்மாதிரி மறுமொழிகள் வந்தால் ஏற்படும் மகிழ்வே அலாதி. நம்முடைய சமையல்களில் இதற்கிது என்று ஜோடி சேர்த்து சமைப்பது மாதிரி கிச்சடியும்,கடியும்,மிளகு அப்பளாமும். அங்கிளைப் பற்றி விசாரித்திருக்கிறாயே! எங்களைப் பற்றி தெரிந்தவளோ என்று மனதில் தேடிக்கொண்டு இருக்கிறேன். அன்பிற்கு ஆசிகள். அன்புடன்
12.
Geetha Sambasivam | 8:20 முப இல் செப்ரெம்பர் 30, 2016
கிச்சடி வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்து சாப்பிட்டிருக்கேன். இந்தக் கடி அவ்வளவாகச் செய்வது இல்லை. மிளகு அப்பளம் பதஞ்சலி தயாரிப்பில் இங்கே கிடைக்கும்.
13.
chollukireen | 8:31 முப இல் செப்ரெம்பர் 30, 2016
நம்முடையது தேங்காய் சேர்த்து அரைத்துக் கரைத்துதான் மோர்க்குழம்பு. இது கொஞ்சம் நீர்க்க இருந்தாலும் கிச்சடியுடன் சேர்க்க நன்றாகவே இருக்கிறது. பழகாத ஒன்று அவ்வளவாகச் செய்து பார்க்க மனம் வருவதில்லை. சாப்பிடவும் ஆள் வேண்டுமே! உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி. நவராத்திரி களை கட்டுகிரதா?ஆசிகள். அன்புடன்
14.
MahiArun | 4:52 முப இல் ஒக்ரோபர் 9, 2016
அம்மா, இன்னிக்கு லன்ச்சுக்கு கிச்சடி செய்தேன். ரொம்ப அருமையா இருந்தது. சப்பாத்திக்கு செய்திருந்த வெண்டைக்காய் கறியுடன் சாப்பிட்டோம், நன்றாக இருந்தது. கடி செய்ய நேரம் போதலை..அடுத்த முறை ஜோடியா செய்து பார்த்து சொல்றேன். 🙂
15.
chollukireen | 8:43 முப இல் ஒக்ரோபர் 11, 2016
ரொம்ப மகிழ்ச்சி மஹி. யாராவது செய்து சாப்பிட்டேன் என்று எழுதினால் ஏதோ ப்ரைஸ் கிடைத்த மாதிரி ஒரு உணர்ச்சி. மற்றவர்களும் ஸரி இது நன்றாகத்தான் இருக்கும் போல இருக்கு என்று நினைப்பார்கள். செய்யாத எதையும் நான் எழுதுவதில்லை. அதுவும் உன்னைப்போன்ற என் பெண்கள் எழுதினால் ஆகாயத்தில் பறக்காத குறைதான். இல்லையா? முடிந்தபோது வருகை கொடு. அன்புடன்
16.
chollukireen | 11:05 முப இல் மே 9, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்தக் கிச்சடியும் கடியும் சாப்பிட ருசியாக இருக்கிறது.நானே சொல்வதில் அர்த்தமில்லை.நீங்களும் முந்தியே படித்திருக்கிறேன் என்று சொல்லாமல் படித்தால் செய்து சாப்பிடத் தோன்றும். அன்புடன்
17.
Geetha Sambasivam | 1:12 பிப இல் மே 9, 2022
Aaha! Super kichadi amma. Here in Tamilnadu vegetable rava uppuma is called kichadi. Rava kichadi, semiya kichadi, aval kichadi
18.
chollukireen | 10:20 முப இல் மே 10, 2022
நான் கூட கிச்சடி என்றால் வேறு ஏதோ இருக்கும் என்றுதான் சின்ன வயதில் நினைத்திருந்தேன். ஹோட்டல்களில்தான் உப்புமாவிற்கு கிச்சடி என்று பெயர் வைத்திருப்பார்கள்போலும். இதற்கும் உடன் பிறந்தவர்கள்தான்கிச்சடி எல்லாம். ஸரிதானே. அன்புடன்
19.
நெல்லைத்தமிழன் | 11:03 முப இல் மே 16, 2022
ஜெயின் கிச்சடி நன்றாகவே இருக்கும். பத்லா கடி பற்றித் தெரியவில்லை
20.
chollukireen | 11:27 முப இல் மே 16, 2022
பியாணங்களின் இடையே இங்கும் வந்தது மிக்க ஸந்தோஷம். அந்தக் கிச்சடியுடன் ஜோடி பத்லா கடி என்கிற நீர்த்த மோர்க்குழம்பு. எனக்குப் பிடித்தது.பலஊர்களின் பயணம்.உங்களுக்கு. நிதானமாக சமையல் ரூம் கிடைக்கும் போது செய்தும் பார்க்கலாம்.மிக்க நன்றி. அன்புன்அன்புடன்