நவரத்ன ஸ்தோத்ரமாலை
செப்ரெம்பர் 30, 2016 at 6:35 பிப 17 பின்னூட்டங்கள்
நவராத்திரியில் எளிதாக ஸ்தோத்திரம் செய்ய உகந்த தமிழ்த் துதி இது. அகத்தியர் அருளிச் செய்தது. நவராத்ரி,குத்து விளக்கு பூஜை, வாரா வாரம் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் என எல்லா ஸமயங்களிலும் சேர்ந்து சொல்லியது. டில்லியிலிருக்கும்போது இவைகள் மனதிற்குகந்ததாக இருந்தவற்றின் ஞாபகம் வருகிறது. நீங்களும் பாடிப் பயனடையுங்கள்.
1 ஞானகணேசா சரணம் சரணம் ஞானஸ்கந்தா சரணம்சரணம்,
ஞானசத்குரோ சரணம் சரணம், ஞானானந்தா சரணம்சரணம்.
ஆக்கும் தொழில் ஐந்தரநாற்றநலம், பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்,
சேர்க்கும் நவரத்தின மாலையினை, காக்கும் கணநாயக வாரணமே.
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
வைரம்
2. கற்றும் தெளியார் காடே கதியாம், கண்மூடிநெடுங்கின வான தவம்
பெற்றும் தெளியார் நினைப் பென்னில் அவம், பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வைர படைவாள் வைரப், பகைவர்க்கு யமனாக எடுத்தவனே,
வற்றாத அருட்சுனையே வருவாய். மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
நீலம்
3. மூலக்கனலே சரணம்சரணம் , முடியா முதலே சரணம்சரணம்,
கோலக்கிளியே சரணம்சரணம், குன்றாத ஒளிக் குவையே சரணம்.,
நீலத்திருமேனியிலே நினைவாய், நினைவற்றறியேன் நின்றாய் அருள்வாய்,
வாலைக்குமரி வருவாய்வருவாய் , மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
முத்து.
4. முத்தே வரும் முத்தொழில் ஆற்றிடவே, முன்னின்று அருளும் முதல்வி சரணம்,
வித்தே விளைவே சரணம்சரணம், வேதாந்த நிவாஸினியே சரணம் சரணம்,
தத்தேரியநான் தனயன் தாய்நீ , சாகாதவரம் தரவே வருவாய்,.
மத்தேறுத் திக்கினை வாழ்வடையேன், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
பவழம்.
5. அந்திமயங்கிய வான விதானம் ,அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை,
சிந்தை நிரம்பவழம் பொழிவாரோ , தேம்பொழிலாம் இது செய்தவள் யாரோ,
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள், எண்ணுபவர்க்கருள் எண்ண மிகுத்தாள்,
மந்திர வேத மாயப் பொருள் ஆனாள், மாதாஜெயஓம் லலிதாம்பிகையே!
மாணிக்கம்.
6. காணக்கிடையா கதியானவளே, கருதக்கிடையா கலையானவளே,,
பூணக்கிடையா பொலிவானவளே,, புனையக்கிடையா புதுமைத்தவளே,
நாணித் திருநாமமும் நின் துதியும், நவிலாதவரை நாடாதவளே,
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
மரகதம்.
7. மரகதவடிவே சரணம் சரணம் ,மதுரித பதமே சரணம்சரணம்,
சுரபதி பணிய திகழ்வாய் சரணம், சுருதிஜதிலயமே இசையேசரணம்,
அரஹர சிவ என்றடியார் குழுவ, அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம், மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
கோமேதகம்.
8. பூமேவியநான் புரியும் செயல்கள், பொன்றாதுபயன் குன்றா வரமும்,
தீமேல் எனினும் ஜெய சக்தி எனத், திடமாய் அடியேன் மொழியும் திறனும்,
கோமேதகமே குளிர்வான் நிலவே , குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்,
மாமேருவினிலே வளர் கோகிலமே, மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
பதுமராகம்.
9. ரஞ்ஜனி நந்தினி அங்கணி பதும, ராக விலாஸினி வியாபினி அம்மா
சஞ்ஜலரோக நிவாரணி வாணி, சாம்பவி சந்ர கலாதரி ராணி,
அஞ்ஜன மேனி அலங்ருத பூரணி, அம்ருதஸ்வ ரூபிணி நித்ய கல்யாணி,
மஞ்சுளமேரு சிருங்க நிவாஸினி, மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
வைடூரியம்.
10…வலையொத்தவினை கலையொத்தமனம், மருளப் பறையாரொலி யொத்தவிதால்,
நிலையற்றொளியேன் முடியத் தகுமோ, நிகளம் துகளாக வரம் தருவாய்,.
அலையற் றசைவற் றனுபூதி பெரும் , அடியார் முடிவாழ் வைடூரியமே,
மலையத்துவஜன் மகளே வருவாய், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
11. பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா, நவரத்தின மாலை நவின்றிடுவார்,
அவர் அற்புத சக்தி எல்லாமடைவார், சிவரத்தினமாய்த் திகழ்வார் அவரே,
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே ,மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே மாதாஜெயஓம் லலிதாம்பிகையே!!!!!!!
பின் குறிப்பு—- எழுத்துப் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. தெரிந்தவர்கள் திருத்திக் கொள்ளவும்.
நவ ராத்திரி சுப ராத்ரிகளாக அமைய எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லுகிறேன்.
Entry filed under: பூஜைகள்.
17 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 7:54 பிப இல் செப்ரெம்பர் 30, 2016
’நவரத்ன ஸ்தோத்ரமாலை’ மிகவும் அருமை. நவராத்திரி சமயத்தில் அனைவருக்கும் உபயோகமாக இருக்க்கூடும். பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 4:50 பிப இல் ஒக்ரோபர் 4, 2016
அதை மனதில் நினைத்துதான் எழுதினேன். நன்றி. அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 7:55 பிப இல் செப்ரெம்பர் 30, 2016
இருக்க்கூடும். = இருக்கக்கூடும்
4.
Venkat | 1:39 முப இல் ஒக்ரோபர் 1, 2016
தக்க சமயத்தில் ஒரு பகிர்வு. நன்றிம்மா….
5.
chollukireen | 4:54 பிப இல் ஒக்ரோபர் 4, 2016
அப்படியா. மிகவும் நன்றி.அன்புடன்
6.
ஸ்ரீராம் | 1:52 முப இல் ஒக்ரோபர் 1, 2016
நவராத்திரிக்கான பகிவு கோலாகல ஆரம்பமா அம்மா? வாழ்த்துகள்.
7.
chollukireen | 5:03 பிப இல் ஒக்ரோபர் 4, 2016
ஜெனிவா கொலுக்கள், பிறர் வீட்டில்தான் மஞ்சள் குங்கும அழைப்பு குடும்பத்தினருடன் அழைப்பு உண்டு. நம் வீட்டிலும் அழைப்பும் சிற்றுண்டிகளும் உண்டு. கோலாகலமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனபிறகு உங்களுக்கு எழுதியிருக்கிறேன். அன்புடன்
8.
ranjani135 | 7:10 முப இல் ஒக்ரோபர் 1, 2016
பாடல்கள் கேட்கவும் இனிமையாக இருக்கின்றன. நவராத்திரி நல்வாழ்த்துகள்!
9.
chollukireen | 5:46 பிப இல் ஒக்ரோபர் 4, 2016
தமிழ் மொழி அல்லவா..இனிமை. வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
10.
Geetha Sambasivam | 8:16 முப இல் ஒக்ரோபர் 1, 2016
லலிதா நவரத்தினமாலை, சில வருடங்கள் முன்னர் நவராத்திரிப் பதிவில் இட்ட நினைவு! நன்றி அம்மா.
11.
chollukireen | 7:33 முப இல் ஒக்ரோபர் 3, 2016
நீங்கள் எழுதாத விஷயங்களா.? அவ்வப்போது மனதில் எழுதத் தோன்றும் விஷயங்கள். கருத்துக்கு மிகவும் நன்றி. அன்புடன்
12.
கோமதி அரசு | 3:28 பிப இல் ஒக்ரோபர் 1, 2016
சிறுவயதிலிருந்து நான் பாடும் பாடல். பாடல் பகிர்வுக்கு மிகவும் நன்றி.
நவராத்திரி வாழ்த்துக்கள்.
அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
13.
chollukireen | 7:36 முப இல் ஒக்ரோபர் 3, 2016
பாருங்கள் உங்கள் சிறுவயது முதலே பாடும் பாடலை நான் இப்போது உங்கள் முன் எழுத்து வடிவத்தில் கொண்டுவந்துள்ளேன். அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். நல்ல வார்த்தைகள் .
வாழ்த்துகளுக்கும்,வரவிற்கும் நன்றி. அன்புடன்
14.
yarlpavanan | 7:13 முப இல் ஒக்ரோபர் 2, 2016
அருமையான பதிவு
15.
chollukireen | 7:38 முப இல் ஒக்ரோபர் 3, 2016
மிக்க நன்றி யாழ்ப்பாவாணன் அவர்களே. அன்புடன்
16.
chitrasundar5 | 2:55 பிப இல் ஒக்ரோபர் 4, 2016
நவராத்திரி ஸ்தோத்திரம் அருமை, பதிவாக்கியதற்கு நன்றிமா ! அன்புடன் சித்ரா.
17.
chollukireen | 4:48 பிப இல் ஒக்ரோபர் 4, 2016
தமிழில் அருமையாக அர்த்தம் எல்லோருக்கும் புரியும்படியாக இருப்பது இதன் விசேஷம். அன்புடன்