ஜெனிவா கொலுக்களில் சில
ஒக்ரோபர் 8, 2016 at 4:31 பிப 13 பின்னூட்டங்கள்
ஜெனிவா நவராத்திரி. எங்கள் வீட்டில் ஸ்வாமி ஷெல்ப்பில் தான் நித்யகொலு.
இவ்விடமும் ஏராளமான குடும்பங்களில் நவராத்திரி பொம்மைக் கொலு வைக்கிரார்கள். மிகவும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். விதவிதமான பட்டுப் புடவைகளும், அதற்கேற்ற நகைகளும், மற்ற குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துப் பேசி மகிழ்ச்சியாகப் பகிர்ந்துண்ணலும், மஞ்சள் குங்கும, அன்பளிப்புகளுடன் பக்திக் கொண்டாடலும் மிகவும் அழகாக இருக்கிறது.
நல்ல குளிர் களை கட்டுகிரது.என்னைப்போன்ற வயதானவர்களுக்கு.
நான் சில அருகிலுள்ள வீடுகளுக்குத்தான் போனேன். என்னுடைய மருமகளும் கொலு என்ற பெயர் வைக்காமல் நித்தமும் கொலுவாகவே விளங்கும் ஸ்வாமி அறையில் மஞ்சள் குங்குமம் கொடுத்துக் கொண்டாடுகிறாள். பேத்தி விலாயினியும் மருமகள் ஸுமனும்.
நான் ஐந்து வருஷங்களுக்குப் பிறகு இவ்விடம் வந்திருந்ததால் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
நான் கண்ட சில கொலுக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மாமி வீட்டில் எல்லாமே ,ஸ்பெஷல்தான். அங்கு போயிருந்தபோது ஏராளமானவர்களைப் பார்க்க முடிந்தது. பாட்டுகள் அவ்விடம் பாடியவர்கள் மறக்க முடியாதவர்கள். ஸ்ரீ சக்ரராஜ,பாக்யாத லக்ஷ்மிபாரம்மா.சேர்ந்து அருமையாகப் பாடியவர்கள் பாட்டு இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள். மற்றும்
ஒவ்வொருவரும் மிக்க அழகாக கொலு வைத்திருந்தனர். எங்கோ தமிழ்நாட்டில் உள்ளது போல அவர்களும்,அவர்களின் பெண் குழந்தைகளும் பங்கு கொண்டு,பேசி,மகிழ்வித்தது மனதைவிட்டு அகற்ற முடியாத காட்சிகள்.
பிரபாவின் மாமியாரும் ஓர்ப்படியும் அயலூரில் இருக்கிரார்கள். மாமியின் நவராத்ரி பூஜை மிகவும் விசேஷமானது. எவ்விடமிருந்தாலும் ஞாபகம் வரும். கண்ணைக்கவரும் விதத்தில் ப்ரபாவின் கொலு அழகு.
அடுத்தது அருணா அவர்களின் அழகான கொலு.
வீட்டுப்பெண்களும்,சினேகிதர்களுமாக நிறைந்திருந்து , உண்டு கலகலவெனப்பேசி அழகியகொலுவையும் பார்த்து, ஸந்தோஷமாக எல்லோருடனும் மகிழ்ந்திருந்து விட்டு வந்தது நிறைவாக இருந்தது.
அடுத்து சுபாவின் கொலு.
சுபாவின் வீட்டுக்கொலு,அலங்காரம், மற்றும் இயற்கை காட்சிகள் அமைப்பது எப்போதும் விசேஷமானதொன்று. சுபாவின் மாமியார் அவர்களின் ஒவ்வொரு விசேஷமான கைத்திறன்களும் அதில் இடம் பெறும். இப்போது சுபாவின் பெண்களின் பங்குகளும் கூடி இருக்கிறது. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது ஸ்ரீ ஜனனியின் திறமையில். கணேசர் மீதில் ஸ்ரீஜனனி எங்கள் வீட்டில் பாடியது மறக்க முடியாத ஒன்று.
விதவிதமான நிவேதனங்களும், பாடல்களும் பாடினவர்களையும் கண்டு மனதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வருஷத்தில் நவராத்திரி அவர்களுக்கும் பக்திப்பரவச,கோலாகல, கூடி மகிழும் சுபராத்ரியாக விளங்குகிறது.
யாவரையும் அழைத்து மதிய உணவு அளித்து உபசரித்துக் கொண்டாடியவர்கள் பெருமைக்குரியவர்கள்.
இந்த ஸமயத்தில் இப்படங்கள் வெளியிடுவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். அருமையாக கொலு வைத்தவர்கள் படமெடுக்க அனுமதித்தற்கு மிகவும் நன்றி. அடுத்தடுத்து யாவரையும் மறுபடி ஸந்திப்பது இன்பமாக உள்ளது மனதிற்கு.
என்னுடைய கொள்ளுப் பேத்தியின் கொலு நியூஜெர்ஸியில் அழகான படம். குட்டிப்பெண்ணிற்கு குதூகலம்.
இன்னும் நிறைய குடும்பங்களில் கூப்பிட்டிருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள். போன இடங்களெல்லாம் சுண்டல் மட்டுமல்ல விதவித பலகாரங்களும். மாதிரிக்குச்சில பாருங்கள். வெளியிலுள்ளவர்கள் தெரிந்து கொள்ளவே இப்படம். வேண்டியவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இம்மாதிரி ஒவ்வொரு வீட்டிலும். கண்டு களியுங்கள். எல்லோருக்கும் ஸரஸ்வதி பூஜை,விஜயதசமி வாழ்த்துகள். மஞ்சள் குங்குமத்துடன்.
Entry filed under: பூஜைகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 4:36 பிப இல் ஒக்ரோபர் 8, 2016
பல ஆத்து கொலு படங்களும், பதிவும் மிக அருமை.
//வேண்டியவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.//
பிரஸாதமாக கொஞ்சம் நானும் எடுத்துக்கொண்டேன். மிக்க நன்றி. 🙂 சந்தோஷம்.
2.
chollukireen | 8:18 முப இல் ஒக்ரோபர் 9, 2016
உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. அதுவும் பிரஸாதமும் எடுத்துக்கொண்டேன் என்ற வாசகம். மானஸீகமாக ருசித்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
Krishnamurthy Venkat Rao | 5:33 முப இல் ஒக்ரோபர் 9, 2016
DEAR MAMI,
I AM HIGHLY GRATEFUL TO NOTE YOUR COMMENTS AND THE NICE ARTICLE ON GENEVA KOLU.
MY NAMASKARAMS TO YOU.
GOD KEEP YOU AND YOUR HUSBAND IN GOOD HEALTH AND LONG LIFE
OUR BEST WISHES FOR SUMAN AND HER FAMILY
REGARDS
GEETHA
V.Krishnamurthy[http://graphics.hotmail.com/emrose.gif]
________________________________
4.
chollukireen | 7:39 முப இல் ஒக்ரோபர் 9, 2016
அன்புள்ள மாமி,மாமா அவர்களுக்கு என்றும் நன்மைகளே உண்டாகுக. உங்களின் மறுமொழி பார்த்து மிக்க ஸந்தோஷமும் நன்றியும். அன்புடன்
5.
chitrasundar5 | 11:07 பிப இல் ஒக்ரோபர் 9, 2016
காமாக்ஷிமா,
கொலு படங்கள் எல்லாமும் பளிச்சென நேரில் பார்ப்பது போலவே உள்ளன.
மஞ்சள் குங்குமத்துடன் உங்க வீட்டு படசணங்களையும் மனதளவில் எடுத்துக்கொண்டாயிற்று ! அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 8:58 முப இல் ஒக்ரோபர் 11, 2016
வாவா.சித்ரா. மனதளவில் நீ வந்து போனதே திருப்தியாக இருக்கிறது. எல்லார் வீட்டுக்கொலு. கதம்பம் மாதிரி அல்லவா? நன்றி. அன்புடன்
7.
padma | 11:22 முப இல் ஒக்ரோபர் 20, 2016
Kamakshiamma, neengal india varumbodhu sollungal, ungalai eppadiyaavadhu paarthu pesa vendum.
8.
chollukireen | 3:53 பிப இல் ஒக்ரோபர் 21, 2016
நான் இந்தியா வாசிதான். டிஸம்பரில் மும்பை வந்து விடுவேன். என்னுடன் பேச ஆசைப்படும் உன்னை நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன், எங்கு இருக்கிராய்நீ. என் பதிவுகள் உனக்குப் பரிச்சயமா? அன்பிற்கு நன்றி அம்மா. அன்புடன்
9.
durgakarthik | 1:53 முப இல் ஒக்ரோபர் 24, 2016
அருமையான படங்கள்.வலை பதிவாளர்கள் அனைவர்க்கும் நீங்கள் ஒரு முன் மாதிரி. வேண்டிய படங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதில் என்ன மன விஸ்தீரணம். கற்றுக் கொள்ள நிறைய உங்களிடம்.
உங்களை போல் வாழ்ந்திட ஆசிர்வதியுங்கள் மாமி எங்கள் குடும்பத்தை
. நன்றி
10.
chollukireen | 11:42 முப இல் செப்ரெம்பர் 23, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் ஒரு மீள்பதிவுதான். ஆறு வருஷங்களுக்குப் பிறகு நவராத்திரிப் பதிவாகப் போடுவதை வெள்ளிக்கிழமையான இன்றே போடலாம் என்று தோன்றியது. கொரானோவிற்குப் பிறகு எல்லாம் சிறிய வட்டத்திற்குள் போய்விட்டது போலும். யாவருக்கும் ஆசீர்வாதங்கள். கண்டு களியுங்கள் அன்புடன்
11.
நெல்லைத்தமிழன் | 4:09 முப இல் செப்ரெம்பர் 26, 2022
கொலு படங்கள் மிக அருமை. உங்களையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி
12.
chollukireen | 5:52 பிப இல் செப்ரெம்பர் 26, 2022
ஐந்து வருடங்களுக்கு முன்ன எடுத்த படம் இப்பொழுது என்னை பார்த்தால் எவ்வளவு மாறுதல்கள் படங்களை பார்த்து ரசித்ததற்கும் என்னை தனியாக குறிப்பிட்டதற்கும் மிகவும் நன்றி. இப்பொழுது நவராத்திரிக்கு யாவரும் அவரவர்கள் வேலை காரணம் எங்கெங்கோ பிரயாணம் செய்துகொண்டு இருக்கிறார்கள் இதுதான் நிதர்சனம் யாவருக்கும் வாழ்த்துக்கள் அன்புடன்
13.
chollukireen | 12:12 முப இல் ஒக்ரோபர் 8, 2022
.