தொட்டில்—15
ஒக்ரோபர் 15, 2016 at 11:45 முப 15 பின்னூட்டங்கள்
குளிர் இல்லை. வெளிநாட்டுப் பிள்ளைகள் வரும்போது ரொம்பவே நாடு சூடாக ஆகிப்போகிறது. காட்மாண்டு. முன்பெல்லாம் வெயிலே இவ்வளவு கிடையாது. ஒரு வீட்டிலும் மின் விசிறியே கிடையாது.
இப்போது எல்லோர் வீட்டிலும் மின் விசிறி. வீடுகளில் ஹீட்டர் வசதியும் கிடையாது. குளிர் நாளில் எங்கோ ஒருவர் வீட்டில் மண்ணெண்ணெயில் சூடு கொடுக்கும் ஹீட்டர். அபூர்வமாக இருக்கும். வேலைகள் முடிந்து ஒரு அகலமான மண் மடக்கு அதாவது பேஸன் போன்ற வாயகன்ற மண் பாண்டத்தில் அடுப்பு எறித்து மீந்த தணல்,மேலும் மேலும் போட சிறிது அணைத்த கரி.
சுற்றிலும் சற்று நேரம் உட்கார்ந்திருப்பார்கள். பெண்கள் மூன்றடுக்கு துணியால் தைத்த சௌபந்தி அதாவது நான்கு இடத்தில் இருக்கமாக முடிச்சு போடும் படியாகத் தைத்த முழுக்கை இரவிக்கை அணிந்து மேலே வீட்டிலேயே தறியில் நெய்த சால், அதாவது போர்வை அணிந்து விட்டால் ஆஜ் இத்னா தண்டி சோய்ன என்று பேசிக் கொள்வார்கள்.அதாவது இன்று அவ்வளவாகக் குளிர் இல்லையாம்.
குளிர்நாளில் கொரிப்பதற்கு மக்காச்சோளப்பொரி, ஒருவகை ஸோயா பீன்ஸ் விதை வறுத்தது கொரித்துக் கொண்டே இருந்தால் குளிரே தெரியாது என்பார்கள். மக்கை,பட்மாஸ் எளிய எல்லோரும் சாப்பிடும் ஒரு பண்டம். அதுவும் வீட்டில் விளைந்து குளிர் காலத்திற்காக சேமித்து வைத்திருப்பார்கள். வறுத்துச் சாப்பிட.
வெயிலில் உட்கார்ந்து சாப்பிட நாம் பொம்மனாஸ் என்று சொல்லும் பழத்திற்கு பொகடே என்பார்கள். புளிப்பும்,இனிப்புமான சுவை கொண்டது. அதில் உப்பு,மிளகாய்ப்பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெயும் கலந்து ரஸித்துச் சாப்பிடும் அழகு நமக்குப் பல் கூசுவதுபோலத் தோன்றும். இந்தப்பழம் அவ்விட லக்ஷ்மி பூஜைக்கு அவசியமானதொன்று.
இம்மாதிரி அனுபவிக்கும் காட்சிகள் எதுவும் இல்லாமல் பிள்ளைகள் இருவரும் ஜூலை,ஆகஸ்டில் அப்பா எவ்வளவு சூடு என்று அலுத்துக் கொள்ளும் நேரமே அவர்கள் வரும் காலமாக இருக்கிறது.
யோசனைகள் செய்து கொண்டே சரிதாமாயா இரண்டு பிள்ளைகளையும் வரவேற்கிறாள் . எங்கு எந்த தேசத்திலிருந்தாலும் தசராவின் போது பிறந்த பிள்ளை,பெண்கள் தாய் தந்தையர்களிருக்கும் இடத்திற்கு கட்டாயம் வந்து டீக்கா,அதாவது ஆசீர்வாதம் வாங்கவேண்டும். இது கட்டாயமாக அமுலிலுள்ள எழுதப்படாத சட்டம்.
அதையும் இவர்களால் செய்ய முடிவதில்லை. ஒத்தன் ஆஸ்த்ரேலியா.இன்னொருவன் ஐரோப்பா. முடிந்தவரை இவர்கள் முறை வைத்துக்கொண்டு அவர்களிடம் போவது வழக்கம்.
அதுவும் இப்போது முடிவதில்லை. இப்போது பண்டிட்தான் எல்லாவற்றிற்கும். ஓடியாடி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறான்.
அம்மா எல்லாம் ரெடி செய்து விட்டேன். நேபாலிகளுக்கே உண்டான அசைவம் தயாராகி விட்டது. எல்லா வகைகளும் ருசியாக சமைத்தாகி விட்டது. பண்டிட் அவனுடைய விளக்கம் கொடுக்கிறான்.
பண்டிட்டின் பெண் வருகிறது. ஹஜூர் மா நான் காலேஜ் போகணும், உங்களுக்காகவும், மற்ற எல்லோருக்கும் குளிக்க ஏற்பாடு செய்து விட்டேன். இரண்டாம் முறையாக சியா அதாவது டீ போட்டு விட்டேன்.ட்ரேயில் கப்புகளில் சூடான டீ. கலைந்து கிடக்கும் துணிகளையும்,ஸாமான்களையும் அவஸரமாகச் சரி செய்து விட்டு நான் நாலு நாளுக்கு லீவு போடறேன். எங்கம்மா வந்து மீதி கவனிப்பாள், நான் போகிறேன் என்று சொல்லி விட்டுக் காலைத் தொட்டு வணங்கிவிட்டு சிட்டாய்ப் பறந்து ஓடுகிறது அந்தப்பெண்.
வாங்கி வந்த ஸாமான்களை எடுத்து வைத்து விட்டு குசலப்பிரசினம் ஆன பிறகு சாப்பாடெல்லாம் முடிகிறது.
இந்த முறை யாரையும் அழைத்து வரவில்லை. அம்மா கோபிக்கிறாள். இல்லை நாங்கள் வேண்டுமென்றே யாரையும் அழைத்து வரவில்லை. நீங்கள் அங்குவந்து இரண்டு வருஷம் ஆகிவிட்டது.
ஒரு வழியாக உங்கள் இருவரையும் கூட்டிப் போகவே வந்துள்ளோம். உங்களுக்கு பிடிக்கும் இடத்தில் நீங்கள் இருக்கலாம். அவ்விடம் வந்த பிறகு மாறிமாறி இருக்கலாம்.
இல்லை , வரவர எங்களுக்கு முடியவில்லை. பண்டிட் குடும்பம் எங்களை நன்றாக கவனித்துக் கொள்கிரார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்.?
இதெல்லாம் அப்புறம் பேசலாம். கொஞ்சம் ஓய்வெடுங்கள். தேசவித்தியாஸம்,நேர வித்தியாஸம் எல்லாம் ஸரியாகட்டும்.
இல்லை, நீங்கள் யோசிக்கவே வேண்டாம். புவா அதான் அப்பாவிடமும் பேசுங்கள்.
சொல்லுவதெல்லாம் ஸரி. ஓய்வெடுங்கள்.
மனது ஓடுகிறது. எங்கெங்கோ, எவ்வெப்போதோ, எல்லையில்லாமல் ஓடுகிறது.
பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிரார்கள். மருமகள்களும் நேபாளத்தவர்களே.
அவர்கள் வழக்கம் தெரிந்தவர்கள். காலையில் எழுந்தவுடன் , மாமியார்,மாமனாருக்கு பார்த்தவுடன் வணங்கி காலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் எல்லாவித உபசாரங்களும் செய்ய வேண்டும். இரவு படுக்கப் போகுமுன் ஒரு கிண்ணத்தில் சிறிது கடுகெண்ணெய் எடுத்துப்போய் மாமியாருக்கு காலில் சிறிது தேய்த்து மஸாஜ் செய்துவிட்டுத் திரும்பவும் மாமியார் பாதங்களை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டுதான் படுக்கப் போக வேண்டும். மாமியார் வேண்டாமென்றால் அது வேறு விதம். அவரவர்கள் தாயாருக்குச் செய்கிறார்களோ இல்லையோ மாமியாருக்குச் செய்வது எழுதப்படாத சட்டம்.
பணக்காரப் பெண்களும் இதில் விதி விலக்கு இல்லை. வயதான முதிய காலத்தில் செய்ய வேண்டியதை முதலிலேயே கற்றுக் கொடுத்து விடுகிறார்கள் போலும்!
பிள்ளைகள் வீட்டிற்கு எங்கு சென்றாலும் எதிலும் மருமகள்கள் குறை வைப்பதில்லை.
தனக்குதான் மனது உறுத்தும். நேபாலிகளிலும் பலவித பிரிவுகள் உண்டு.ராய்,லிம்பு, க்ஷத்ரி,பாவுன் அதாவது பிராமின்,சர்மா,ஆசார்யா,ஜோஷி,பஸ்நேத்,கடுகா இப்படி எவ்வளவோ? / யாரும் நீ உயர்வு,நான் உயர்வு என்று வித்தியாஸமில்லை. ஸம்பந்தங்கள் அவரவர்களின் பிரிவில்தான் செய்வார்கள். தனக்குக் காதல் விவாகம். புருஷனோ இந்தியாவில் படித்தாலும் ஸொந்த இடம் மலை கிராமம். இருவரும் நேபாலிகளானாலும் சற்று வித்தியாஸமான பிரிவு.
முதலில் பழக்க வழக்கங்கள் மாறுபாடு. வேலை நிமித்தம் உடனே காட்மாண்டு வந்தபடியால் அவர்களின் மனப்போக்குப்படி உபசாரம் செய்யத் தெரியவில்லை. செய்யவும் இல்லை. அவர்களும் வரத்துப் போக்கு முதலில் இல்லை. இருவரும் வேலைக்குப் போகிறவர்கள்.
வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் ஸுலபம். வீட்டோடு சாப்பாடு துணிமணிகள் கொடுத்தால் வயதான கிழவிகள் கிடைப்பார்கள். வீட்டைப் பொருப்பாக பார்த்துக் கொண்டு அவர்களுக்கு ஒருவரும் இல்லாதவர்கள் பாசத்துடன், கடைசிவரை இருந்து தன் பேரன் பேத்திகள் போல் குழந்தைகளையும் ஆளாக்கி விடுவார்கள். அப்படி ஒரு வயதானவள் கிடைத்ததால் தன் இரண்டு பிள்ளைகளும் வளர்க்க எந்தவித கஷ்டமும் படவில்லை.
பிறகு மாமியார் போக்குவரத்து இருந்தபோதும், அவருக்காக எதுவும் செய்ததில்லை. அதையும் வேலைக்கார முதியவளே செய்து விடுவாள்.
கிராமத்து மனுஷி. ஸோபாவில் காலை மடக்கிக் கொண்டு மேலேயே உட்கார்ந்து விடுவாள். அப்படி உட்காராதே என்று வேலைக்காரி சொல்லும்படி இருக்கும்.
இப்படி பலவித அவசியமான முரண்பாடுகள். மேஜையில் சாப்பிடத் தெரியாது. கீழே உட்கார்ந்து சாப்பிடுவாள். வீட்டு வேலைக்காரிக்கு அதிகாரம் இருக்கிறது. நமக்கில்லை என்றவரையில் எண்ணம் போய்விட்டது. அதைத் தடுக்க முடியவில்லை. அவர்களின் காலம் கிராமத்தில் தொடர்ந்து முடிந்தது. வேலைகாரியும் வயதானவள். அவளுக்கும் காலம் முடிந்தது. பிறகு வந்தவன் பண்டிட். அவன்யாரு பார்க்கலாம். தொடருங்கள்
Entry filed under: கதைகள்.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 11:56 முப இல் ஒக்ரோபர் 15, 2016
இந்தத்தொட்டிலைப் பார்க்கும்போது எனக்கு அந்தக்கால தாழங்குடை (பரிசல் போல ….. மடக்கி வைக்கவே முடியாதபடி இருக்குமே …. ஒரு குடை) நினைவுக்கு வந்தது.
நல்ல பல பழைய செய்திகளை இன்றுடன் ஒப்பிட்டுச் சொல்லும் அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 12:02 பிப இல் ஒக்ரோபர் 15, 2016
ஆமாம். இப்போது நேபாளத்தின் காட்சிகள்தான் மனதில் பின்புலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சூடான உடனடி வரவிற்கு மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும். லேசாக இருக்கும் இது. தாழங்குடை எங்கள் வீட்டிலும் இருந்தது. மடக்க முடியாத அமைப்பு. சற்றுக் கனமாக இருக்கும். மாயவரம் பக்கத்திலிருந்து வாங்கி வந்தது. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 2:26 முப இல் ஒக்ரோபர் 16, 2016
குளிரில் வாய் ஆதிக் கொண்டே இருந்தால் குளிர் தெரியாது! ஏதோ ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம் இல்லையா!!
//தாய் தந்தையர்களிருக்கும் இடத்திற்கு கட்டாயம் வந்து டீக்கா,அதாவது ஆசீர்வாதம் வாங்கவேண்டும். இது கட்டாயமாக அமுலிலுள்ள எழுதப்படாத சட்டம்.//
பாராட்டுவதா, எதிர்க்கருத்துச் சொல்வதா! ரெண்டு மாதிரியும் சொல்லலாம்!
அப்படி சட்டம் போட்டால்தான் இந்த வழக்கங்கள் தவறாது நிகழும் என்றும் சொல்லலாம். கட்டாயப்படுத்தி வருவதா பாசமும், மரியாதையும்? தானாகத் தெரிய வேண்டாமா என்றும் கேட்கலாம்!
:)))))
//அவரவர்கள் தாயாருக்குச் செய்கிறார்களோ இல்லையோ மாமியாருக்குச் செய்வது எழுதப்படாத சட்டம்.//
:))))
4.
chollukireen | 4:09 பிப இல் ஒக்ரோபர் 16, 2016
சிலவழக்கங்களைப் பாராட்டவே வேண்டும். அதை கடைபிடிக்கிரார்கள். ஒற்றுமை ஓங்குகிறது. சிலஸமயங்களில் நேரில் யாவரையும் பார்க்கும்போது, பகைகளிருந்தாலும் , மறையவோ,குறையவோ வாய்ப்புள்ளது. மாமியாருக்குச் செய்வது உடன் இருப்பதால்தான். தாயாருக்கு அவருடன் இருக்கும் மருமகள் இதையே அனுஸரிப்பாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும்,தேசாசாரமும் மனதில் ஆழப்பதிந்த நம்பிக்கையும்தான் காரணம். இன்றும் நேபாளிகளுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கிறதென்பது என் எண்ணம். மாறுதல்கள் எங்கும் ஸகஜமானதொன்று. நன்றி. அன்புடன்
5.
கோமதி அரசு | 3:10 பிப இல் ஒக்ரோபர் 17, 2016
நேபாளிகளின் பழக்க வழக்கம் எல்லாம் அருமையாக எழுதுகிறீர்கள். நாங்கள் முக்திநாத் போவதற்கு நேபாளம் , காட்மண்டுவில் நான்கு தினங்கள் தங்கி இருந்தோம். பெண்கள் நல்ல பலம் பொருந்தியவர்களாக இருப்பதைப் பார்த்தோம். பஸ்ஸில் சிலிண்டரை தூக்கி கொண்டு படியில் பிராயணம் செய்தார்கள்.
அன்னாசி பழத்தை வெட்டி காய வைத்து இருந்தார்கள். மக்கா சோளத்தை வீட்டின் முன் காய போட தோரணம் மாதிரி எல்லா வீட்டின் முன் பக்கமும் கட்டி தொங்க விட்டு இருப்பதை பார்க்க முடிந்தது.
பெரியவர்களுக்கு மரியாதை செய்வது நல்லது தானே!
6.
chollukireen | 3:24 பிப இல் ஒக்ரோபர் 17, 2016
நான் நேபாளத்தில் 26 வருஷங்கள் காட்மாண்டுவில் இருந்தவள். என் பிள்ளைகள் எல்லாம் அவ்விடம்தான் ஆரம்பக்கல்வியை முடித்தவர்கள்.
நேபாளத்துப் பின்னணியில் கதைகள் எழுத மனம் இப்போதுதான் சிந்தித்தது. மிடில் கிளாஸ் வர்கம் இந்தக்கதை. இன்னும் எவ்வளவோ எழுதலாம். நீங்களும் நிறைய கவனித்து இருக்கிறீர்கள். பூண்டும்,வெங்காயமும் அதன் தாள்களுடன் தோரணமாகக் காய்ந்து தொங்கும் காட்சியும் பார்த்திருப்பீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்பதைக் கட்டாயமாகப் பண்டிகைகளுடன் இணைத்திருப்பதை நினைவு கூர்ந்து எழுதியிருந்தேன்.
உங்கள் வரவிற்கும்,பின்னூட்டத்திற்கும், கவனிப்புக்கும் நன்றி. அன்புடன்
7.
chollukireen | 3:42 முப இல் திசெம்பர் 29, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
தொட்டில்களில் இது நேபாளப்பின்னணியுடன் வருகிறது. இதுவும் அவ
அழகானத் தொட்டில்தான். சறறு மன விசாலத்துடன் ஆடுகிரது அன்புடன்
கானத் தொட்டில்தாந்
ன்.
.
8.
நெல்லைத்தமிழன் | 8:10 முப இல் திசெம்பர் 29, 2020
காலையில் போட்ட பின்னூட்டம் காணவில்லை.
நேபாள வாழ்க்கை முறைகளை அறிய ஒரு நல்ல சந்தர்ப்பம்.
வேலைக்கார முதியவள், மாமியாருக்கு காலில் எண்ணெய் தேய்த்து சூடுபடுத்துவது (மாமனார் மட்டும் என்ன பாவம் செய்தார்? அவருக்கு ஒரு சிசுருஷையும் கிடையாதா?)
ரசித்த தொட்டில். எப்படியெல்லாம் ஆடப்போகிறது எனப் பார்ப்போம்.
9.
chollukireen | 12:11 பிப இல் திசெம்பர் 29, 2020
நான் காலையில் எழுதிய பின்னூட்டத்தையும் பார்த்தேன். மாமியார் கடுகடு இல்லாமலா இருக்கும். மரியாதை என்ற சொல்லுக்கு அர்த்தம் இருந்தால் அது ஸுபாவமாகவே போய்விடுமோ என்னவோ? மாமனாருக்குச் செய்ய மாமியார் இருக்கிராரே? குளிர் தேசத்திற்கு கடுகு எண்ணெய் உடலுக்குச் சூட்டைக் கொடுக்கும். குழந்தைக்கும் கடுகு எண்ணெய்தான் மஸாஜ்.. ராணி வீட்டுப் பெண் ஆநாலும் மாமியாருக்கு உபசாரம் தேச கலாசாரம். சமையலும் செய்ய வேண்டும். பழைய கால வழக்கம் இன்றும் ஓரளவு அனுஸரிக்கப்படுகிறது. இன்னும் எவ்வளவோ கொடுமையும் இருந்திருக்கும். பாருஙகள் தொட்டில்நன்றாகததான் ஆடும். அன்புடன்
10.
Geetha Sambasivam | 9:50 முப இல் திசெம்பர் 29, 2020
என்னைப் பொறுத்தவரை புத்தம்புதிய தொட்டில். சுவாரசியமானதும் கூட. ஆவலுடன் படித்துவிட்டு மிச்சக்கதைக்குக் காத்திருக்கேன்.
11.
chollukireen | 12:13 பிப இல் திசெம்பர் 29, 2020
இன்னும் எவ்வளவோ நேபால் அனுபவங்கள். நன்றி. அன்புடன்
12.
athiramiya | 3:31 பிப இல் திசெம்பர் 29, 2020
காமாட்ஷி அம்மா, அக்காலத்தில் இப்படி எல்லாம் பழக்கவழக்கம் இருந்ததோ… நம்ப முடியவில்லை..
//இரவு படுக்கப் போகுமுன் ஒரு கிண்ணத்தில் சிறிது கடுகெண்ணெய் எடுத்துப்போய் மாமியாருக்கு காலில் சிறிது தேய்த்து மஸாஜ் செய்துவிட்டுத் திரும்பவும் மாமியார் பாதங்களை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டுதான் படுக்கப் போக வேண்டும். ///
நாம் விரும்பிச் செய்வது வேறு, கட்டாயத்தின் பெயரில் செய்வது கொடுமை:(
13.
நெல்லைத்தமிழன் | 7:12 முப இல் திசெம்பர் 30, 2020
அதிரா… எந்தப் பழக்கமும் முதலில் ரூல் போன்றுதான் வரும். அப்புறம் பழகிவிடும். இதுவும் நல்ல செயல்தானே.
உங்க அப்பா, காலையில் 5 மணிக்கே எழுந்துக்கணும், அங்க இங்க போய் கதை அடிக்கக்கூடாது என்றெல்லாம் ரூல்ஸ் போடும்போது கட்டாயப்படுத்துவது போல்தான் இருக்கும். அப்புறம் அது நல்லதுக்கு என்று புரிவதில்லையா?
14.
chollukireen | 12:14 பிப இல் திசெம்பர் 30, 2020
ஆமாம் நீங்கள சொல்வது முற்றிலும ஸரி.. நாம் தினமும் வென்னீர் போட்டுக் குளிப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. சனி நீராடினால் போதும் அவர்களுக்கு.. இப்படி எத்தனையோ வித்தியாஸங்களும் உண்டு. இப்போது மாறி இருக்கலாம். சீதோஷ்ண ஸமயங்கள். இப்போத யாவும் மாறி வருகிறது. அனுபவங்களுக்குக் குறைவில்லை. . எண்ணங்கள் அதைச்சுற்றியே வருகிறது.. உங்கள் பின்னூட்டங்களும் . நன்றி. அன்புடன்
15.
chollukireen | 11:55 முப இல் திசெம்பர் 30, 2020
கற்றுக் கொள்ளும் எந்த வொரு வேலையுமே கட்டாயத்தில்தான் வருகிறது. பழக்கங்கள் தொன்றுதொட்டு வருகிறது. நடைமுறை வழக்கங்கள் நான் எழுதினேன். இப்போதும் முறை இருக்கிறது. காலையில் எழுந்ததும் பெரியவர்களைப் பார்த்தால் காலைத்தொட்டு வணஙகி கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஸிர்டோக்னி என்பார்கள். இப்போது ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரியவர்களைப் பார்த்தால், குனிந்து காலைத்தொட்டு வணங்குகிரார்கள். சிலநியமங்கள் பார்த்தால் ஏன் இப்படி என்று தோன்றுகிறது. அவர்களின் சட்ட திட்டம் என்பார்கள். பழமை விரும்பிகள். அதிராவிற்கு ஏஞ்சல்மாதிரி ஸம்பவங்களைப் பார்த்து கோபம் வந்து விட்டதா? இதுஸகஜம்,இதுஸகஜம்.தொடர்ந்து வந்து பின்னூட்டத்தை தொட்டில் எதிர பார்க்கிறது. ஸந்தோஷம். அன்புடன்