ஜெனிவா ஏரியைச் சுற்றி மேலும்–5
நவம்பர் 17, 2016 at 1:35 பிப 8 பின்னூட்டங்கள்
அன்று போய்வந்த ந்யான் வழியேதான் கார்தான் எவ்வளவு வேகமாகப் பறக்கிறது. காரிலிருந்து படம் எடுக்க வேண்டுமென்றால் முடிவதே இல்லை. ஆப்பிள் தோட்டங்களும், சோளக் கொல்லைகளும்,திராக்ஷைத் தோட்டங்களும். ஆப்பிள்மரங்கள் அடர்ந்த பகுதி இது.
சூரியகாந்தி அறுவடை முடிந்து விட்டிருக்கும் போலுள்ளது. லுஸான் நகரையும் கடந்து மலைமீது அமைந்திருக்கும் ஒரு இடத்திற்குப் போகிறோம். குளிர் இருக்குமென்பதால் இலகுவான ஸ்வெட்டர் எனக்குத் தேவையாக இருந்தது. கிராமத்திற்குப் போகும் வழி. ஊரின் பெயர் Gruyeres Gகிரியேர்ஸ்
மலை மேலுள்ள பாதை தெரிகிறதா? வழியே எவ்வளவோ காட்சிகள். மாடுகளின் மேய்ச்சலுக்கான புல் வெளிகளும்,மாட்டுக் கூட்டங்களும். படமெடுக்கவில்லை கார்வேகம். மேலும் போகிறோம்.
கிராமத்து கார் முகப்பில் நிறுத்திவிட்டு சீஸ் உற்பத்தி செய்யும் இடத்தின் முகப்பிற்குச் செல்கிறோம்.
கொழுகொழு பசுமாட்டின் உருவமும்,சீஸ் ஸம்பந்தப்பட்ட கடைகளும்,அவ்விடத்திய விஷயங்களும், மாதிரிக்கு சாப்பிட சீஸும் தருகிரார்கள். பெரிய முகப்பு. எல்லா விஷயங்களும் ஆங்கிலத்திலும்,Fப்ரெஞ்ஜிலும் இருக்கிறது.அழகான கடைகள்.
வியப்பு மேலிட அவ்விட எல்லா உபகரணங்களையும் பார்க்க விலையைப் படிக்க எவ்வளவு விலை அதிகம் என்று வியப்பு மேலிடுகிறது.
சீஸ் தயாரிக்கும் முறையைப் பொது மக்களுக்குக் காட்ட, மதியம் ஒரு மணி குறிப்பிடப் பட்டுள்ளது. அதற்கும் டிக்கெட் வாங்கிப் போக வேண்டும். டிக்கெட் வாங்கியாகிவிட்டது. பொழுது இருக்கிறது.
உள் நுழைவதற்கு முன்பே சீஸ் வட்டங்களை அடுக்கி வைக்கும் பெரிய கிடங்கு இருக்கிறது. ரோபோக்கள் உதவியுடன் பெரியபெரிய வட்டங்கள் அடுக்கப்படுவதைப் பார்ப்போம் வாருங்கள். வண்டிச் சக்கரம் மாதிரி கெட்டியான சீஸ். அடுக்கடுக்கான ஷெல்புகள்,
வட்டவட்டமாக அடுக்கியிருப்பது எல்லாம் சீஸ். இடையே வருவது ரோபோ.
சீஸை அடுக்கும் விதத்தையும் , ரோபோ செய்வதையும் பார்ப்போம்.
ரோபோ வேலை செய்வதைப் பாருங்கள்.
சீஸ் செய்யும் இடத்திற்கு ஒரு மணிக்குப் போவோம். பின்பு மலைமுகடுகளருகில் ஒரு கோட்டையையும் பார்ப்போம்.
Entry filed under: பொழுதுபோக்கு. Tags: கோட்டை, சீஸ், சூரியகாந்தி, மலைமுகடுகள்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:44 பிப இல் நவம்பர் 17, 2016
அருமையான தகவல்களுடன், அழகான படங்களுடன், காணொளியையும் கண்டு களித்தேன். நானும் உங்களுடனேயே வந்தது போன்றதொரு மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 2:29 பிப இல் நவம்பர் 17, 2016
உடனுக்குடனான ஊக்கமளிக்கும் பதிலுக்கு மிகவும் நன்றி.அன்புடன்
3.
ஸ்ரீராம் | 2:22 முப இல் நவம்பர் 18, 2016
அழகிய படங்கள், தகவல்கள். ரோபோ அடுக்குவதும் அழகு.
4.
chollukireen | 8:55 பிப இல் நவம்பர் 18, 2016
இம்மாதிரி வாய்ப்புகள் காண்பதற்கு சற்று அழகுதான். மிகவும் நன்றி. அன்புடன்
5.
கோமதி அரசு | 5:58 முப இல் நவம்பர் 18, 2016
அழகான படங்கள், சீஸ் அழகு, அதை அடுக்கும் ரோபோ காணொளி அருமை.
நன்றி.
6.
chollukireen | 8:59 பிப இல் நவம்பர் 18, 2016
நீங்கள் ஆன்மீக சுற்றுலா போடுங்கள். நான் பார்த்த சீஸின் சுற்றுலாவைப் போடுகிறேன். கிடைத்ததைப் பிடித்துக் கொள்கிறேன். உங்களின் மறுமொழியைப் பார்த்ததும் என் மனதில் இப்படித் தோன்றியது. வருகைக்கு மிகவும் நன்றி. அன்புடன்
7.
chitrasundar5 | 3:05 முப இல் நவம்பர் 24, 2016
ஜெனிவாவுல என்ன நடக்குதுன்னு காமாட்சி அம்மா மூலம் இங்க இருந்தே தெரிஞ்சிக்க முடியுது 🙂
கிராமம்னாலே பசுமையான அழகுதானே ! ரோபோவினால் சீஸ் அடுக்கப்படுவதை அழகா எடுத்திருக்கீங்க. நீங்க சுற்றிப் பார்த்தை நாங்களும் பார்க்கக் காத்திருக்கிறோம், அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 12:34 பிப இல் நவம்பர் 26, 2016
ஆமாம். டிஸம்பர் 19 ஆம் தேதி மும்பை போகிறேன். ஏதோ வந்தவுடன் குளிர் இல்லாதிருந்து போகமுடிந்த இடங்கள் இவை. வீட்டுவரையில் நடமாட்டம் உள்ள நான் இவ்வளவு தூரம் சில இடங்கள் பார்க்க முடிந்தது. வியப்புதான். உடன் இரண்டு மருமகள்கள்,ஒரு,பிள்ளை,பேத்தி என உதவிசெய்ததுதான் விசேஷம். நன்றி அன்புடன்