ஜெனிவாஏரியைச் சுற்றிமேலும்-6
நவம்பர் 24, 2016 at 2:14 பிப 16 பின்னூட்டங்கள்
இந்த இடத்தில் பார்வையாளர்களுக்காக மதியம் ஒரு மணிக்கு மிஷினை இயக்கிக் காட்டுகிரார்கள். அது வரை அவ்விடம் சேருவதற்குள் பார்வைக்குப் படங்களும்,கணக்குகளும், மாடுகளின் உணவைப் பற்றியும், விவரமாகப் பதிவுகள் படங்கள் மூலம் இருக்கிறது.
ரிமோட் ஒன்றை எடுத்துக் கொண்டு விட்டால் அவ்விட விஷயங்களை அது நமக்குச் சொல்லுகிறது.
புற்கள்தான் எத்தனைவித நறுமணங்களில்? புற்களைப் பார்க்க முடிவதில்லை.
அதன் நறுமணங்களை முகர்ந்து பார்க்க வசதி இருக்கிறது. இந்த வாஸனை இல்லையா? ஓமம் வாஸனை, சீரகம்,ரோஜா, பூக்களின் வாஸனை என பலதரப்பட்டது. லவென்டர்,ரோஸ்மரி இப்படிப்பலபல.
ஓ அம்மா கரெக்டா கண்டு பிடிக்கிறா என்று கேலிக்கூச்சல். பிறகு பார்த்தால் வாஸனையின் பெயர்களும் சிறிய எழுத்தில் எழுதியிருக்கிறது போலும்.
அம்மாவிற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். உனக்கு பிளாக் இருக்கு எங்களுக்கெல்லாம் எதுவும் இல்லையே என்று என்னை முக்கிய நபராக பேசி சிரித்துக் கொண்டு வந்தனர்.
போகட்டும்போங்கள். நான்தான் எங்குமே வர விரும்பவில்லை. இப்படி ஒரு பெரிய சுமை எனக்காகவா என்றேன்.
சுமையில்லை. நீ ஸந்தோஷமாக ஏதாவது எழுத இம்மாதிரி இடங்கள் வேண்டுமென்றுதான். மனதில் ஸந்தோஷம் வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
கணக்குகளின் பார்வை பாருங்கள்.
ஒரு பசுவின் சாப்பாடு 100 கிலோகிராம் பசும்புல். எண்பத்தைந்து லிட்டர் தண்ணீர்
12 லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ சீஸ் செய்ய முடியும். 30 பால் வியாபாரிகள் ஒரு வருஷத்தில் ஆறு மில்லியன் லிட்டர்
பால் ஸப்ளை செய்கிறார்கள். இதில் 500 டன் சீஸ் செய்கிரார்கள்.
இந்த சீஸை ஐந்து மாதத்திற்குப் பிறகு உபயோகப் படுத்துகிரார்கள்.
பிறகு 16மாதங்கள் வரை உங்கள் ருசிக்குத் தக்கவாறு சாப்பிடமுடியும்.
2200 பால் கொள் முதல் செய்பவர்கள் 345 மில்லியன் லிட்டர் பாலில் 870000 வீல்ஸ் சக்க்ரவடிவிலான சீஸைச் செய்கிரார்கள்.
மணி ஒன்றாகப்போகிறது. நமக்கு செய்முறை காட்டும் நபரும் வந்து விட்டார்.
கொப்பறையில் குளமாக கெட்டியானபால். என்ன ஏது கலப்பார்களோ அது தெரியவில்லை. கேட்டுகள் மாதிரி உள்ளவைகள் சுழன்று வருகிறது.
தயிர்கடைவேனே கோபாலன் தனைமறவேனே என்ற பழைய பாடல் ஒன்று ஞாபகம் வந்தது. காணொளி பாருங்கள்.
நான் மிக்க அக்கறையாக இம்மாதிரி பதிவு ஒன்றும் நாம் போட வேண்டும் என்ற ஆசையுடன் செய்கிறேன்.
அவர்கள் கணக்கு முடிந்து கலவையை வட்டங்களில் நிரப்பி ஒரு நாள் பூரவும் அழுத்தம் கொடுப்பார்களாம்.
கலவை கெட்டியாக ஆனவுடன் தயார் செய்து கிடங்குகளில் ரோபோ மூலம் அடுக்கி விவரங்கள் பதிப்பார்கள்.
இம்மாதிரி வகைவகையாக எவ்வளவு சீஸ் தயாரிக்கும் இடங்களோ? பலவித ருசிகளில், விதவிதமாக ருசிப்பவர்களுக்கு விருந்துதானே?
நல்ல தரமான பசும்பாலில்தான் சீஸ் தயாரிக்கப் படுகிறது. முன்நாட்களில் படகுகள் மூலம் வெளியிடங்களுக்குக் கொண்டுச் செல்வார்களாம். இப்போது வாகன வசதிகளுக்குக் குறைவில்லை.
யாவரும் உடன் வந்து ரஸித்தாற்போல நான் உணருகிறேன்.
இன்னும் மலையின் மீது போய்ப் பார்க்க ஒரு கோட்டை ஃபோர்ட் பாக்கியுள்ளது. குட்டி குட்டி ராஜ்யமும் , பெயரளவில் கோட்டையும்.
பிறகு பார்க்கலாம். வாருங்கள்.
Entry filed under: பொழுதுபோக்கு. Tags: இயக்குபவர், உபகரணங்கள், மெஷின்.
16 பின்னூட்டங்கள் Add your own
merabalaji க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஶ்ரீராம் | 2:26 பிப இல் நவம்பர் 24, 2016
சீஸ் அவ்வளவு நாள் வைத்து உபயோகிக்கலாமா? சுவாரஸ்யமான தகவல்கள்.
2.
chollukireen | 12:39 பிப இல் நவம்பர் 26, 2016
ஒரு முறைக்குப் பலமுறை படித்து ஸந்தேகம் தீர்த்தது தான் விவரங்கள். அதற்குத் தகுந்த ஏற்பாடுகளும் இருக்கும். பல விதங்களில் மேலும் வித விதமாக தயார் செய்துதானே விற்பனைக்கு வரும். தகவல்கள் எநக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நன்றி அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 2:32 பிப இல் நவம்பர் 24, 2016
மிகவும் அருமையான பதிவு. ஒவ்வொன்றையும் அழகாக வர்ணித்து எழுதியுள்ளீர்கள். பார்க்கப்பார்க்க கேட்கக்கேட்க வியப்பாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
4.
chollukireen | 12:49 பிப இல் நவம்பர் 26, 2016
அருமையான பதிவு என்று நீங்கள் எழுதியதற்கு மிகவும் ஸந்தோஷம். நான் அதிகம் பின்னூட்டங்கள் எழுத முடிவதில்லை. எனக்குப் பின்னூட்டங்கள் அதிகம் வருவதில்லை. இருந்தாலும் மனதிற்கு உங்களைப்போல் யாராவது பாராட்டி எழுதினால் ஸந்தோஷமாகத்தான் இருக்கிறது. சற்றுப் புதியதான விஷயம், எழுதவேண்டும் என்று தோன்றியது. மிக்கவேமகிழ்ச்சி உங்கள் பின்னூட்டம் கண்டு. நன்றி. அன்புடன்
5.
MahiArun | 11:49 பிப இல் நவம்பர் 24, 2016
super ma!! 🙂
6.
chollukireen | 12:50 பிப இல் நவம்பர் 26, 2016
நன்றிம்மா. ஆசிகளும் அன்புடன்
7.
A Kumar | 1:41 முப இல் நவம்பர் 25, 2016
Cheese factory tour-very informative and enjoyable.
8.
chollukireen | 12:52 பிப இல் நவம்பர் 26, 2016
ஆமாம். எல்லோருமாகப் போனதினால் ரஸிக்க முடிந்தது. நன்றி. அன்புடன்
9.
கோமதி அரசு | 8:10 முப இல் நவம்பர் 25, 2016
உங்களுடன் உடன் வந்து நாங்களும் சீஸ் செய்யும் இடத்தை பார்த்து விட்டோம்.
நான் கொடைக்கானலில் சீஸ் செய்யும் இடத்தை சிறு வயதில் பார்த்து இருக்கிறேன். உங்கள் படம் அருமை ரிமோட் வைத்துக் கொண்டு இருக்கும் படம்.
//நீ ஸந்தோஷமாக ஏதாவது எழுத இம்மாதிரி இடங்கள் வேண்டுமென்றுதான்.//
அழைத்து சென்று பதிவெழுத வைத்த உங்கள் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி, உங்களுக்கும் மகிழ்ச்சி, எங்களுக்கும் மகிழ்ச்சி.
10.
chollukireen | 12:59 பிப இல் நவம்பர் 26, 2016
உங்கள் மறுமொழிக்கு மிக்க ஸந்தோஷம். ஜெனிவா திரும்பவும் வருவேனென்றே நினைக்கவில்லை. குடும்பத்தார் ஆர்வம் அளித்து அழைத்துப் போனார்கள்.
எல்லாவற்றையும் உணர்ந்து பாராட்டி எழுதியுள்ளீர்கள். அதற்குப் பெரிய மனமார்ந்த நன்றி. மகிழ்ச்சியால் பின்னூட்டம் நிரம்பி வழிந்து விட்டது. அன்புடன்
11.
chitrasundar5 | 6:17 பிப இல் நவம்பர் 25, 2016
காமாஷிமா,
சீஸ் செய்முறையை நாங்களும் ரசித்தோம்மா !
அடுத்தாற்போல் கோட்டையைப் பார்க்க நாங்களும் ரெடி, அன்புடன் சித்ரா.
12.
chollukireen | 1:03 பிப இல் நவம்பர் 26, 2016
ரஸித்தாயா? கோட்டைக்கு இன்னும் சற்று மலைமேல் போக வேண்டும். வீல்சேர் கிடைக்குமா என்று கேட்கப் போயுள்ளார்கள். நீ ரெடியாகி விட்டாய். போகலாம். அன்புடன்
13.
chitrasundar5 | 8:54 பிப இல் நவம்பர் 27, 2016
ஓ, அப்படின்னா சேர் வரும்வரை வெயிட் பண்ணுவோம் !
பதிவோ, பின்னூட்டமோ எதுவாக இருந்தாலும் ரசிக்கும்படி இருப்பதுதான் காமாக்ஷிமாவின் தனித்துவம் 🙂
14.
merabalaji | 3:25 பிப இல் நவம்பர் 27, 2016
சீஸ் செய்வது அழ்காக காட்டினீர்கள்.இடமும் எழுத்துகளும் நன்ராக உள்ளது.கோட்டைக்கு நானும் வருகிரேன்.
15.
chollukireen | 3:47 பிப இல் நவம்பர் 27, 2016
வரவேற்கிறேன் உன்னை. சுற்றிப்பார்க்க உடன் மற்றவர்களும் இருக்கிரார்கள். அன்புடன்
16.
gardenerat60 | 8:21 முப இல் மார்ச் 19, 2017
grass with different smells…wow!.Wish we could get to smell them..