பழைய மாடல் கார்கள்
ஏப்ரல் 24, 2017 at 2:26 பிப 11 பின்னூட்டங்கள்
பிகாஸோ ஓவியங்களைப் பார்த்த பிறகு அடித்தளத்தில் பழைய கார்களின் வகைகள் அழகழகாக கண்காட்சிக்கு வைத்திருந்தனர். அவைகளையும் பார்த்து விடலாமென்றனர்.
எவ்வளவு வகைகள்? எல்லாம் அப்பொழுதுதான் விலைக்கு வந்திருப்பதுபோன்ற புத்தம்புதிய தோற்றத்துடன் பொலிவாக விளங்கியது. பார்க்க அலுக்கவில்லை. எடுத்த படங்களிற் பல காணாது போய் விட்டது.
இருந்தவைகளிற் சிலவற்றை உங்கள் பார்வைக்கு. பார்ப்பதில் சலிப்பு ஏற்படாது.
பாருங்கள்.
அடுத்து
வரிசையாகப் போடுகின்றேன். இன்றைக்கு இவ்வளவுதான்.
Entry filed under: பழைய கார்கள்.
11 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 3:56 பிப இல் ஏப்ரல் 24, 2017
’பழைய மாடல் கார்கள்’ பார்க்க அழகாகத்தான் உள்ளன.
அவை புதிதாக தயாரித்த காலத்தில் ‘புதுமணப்பெண்’ போல ஜோராகத்தான் இருந்திருக்கும். பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 11:59 முப இல் ஏப்ரல் 25, 2017
இந்தக் கார்களெல்லாம் புதியதாகத் தயாரிக்கப் பட்டது போலவே இருந்தது. ஒருவேளை புதியதோ என்னவோ? ஜான்வாஸ ஊர்கோலத்திற்குத் தயாராக இருப்பது போலப்பட்டது. அவ்வளவு நல்ல நிலையில். நன்றி அன்புடன். மாப்பிள்ளை அழைப்பிற்கு
3.
angelin | 8:03 பிப இல் ஏப்ரல் 24, 2017
இந்த பழைய மாடல் வாகனங்களை பொலிவு குறையாம அழகா பராமரிச்சு வைத்திருக்காங்க ..இங்கே ஆண்டுதோறும் பழைய கார்களின் ஷோ நடக்கும் நிறையபேர் அவங்க கராஜில் வைத்துள்ள பழைய கார்களை ஓட்டிட்டு வந்து டிஸ்பிளேக்கு வைப்பாங்க .சிலருக்கு இவை குழந்தை போல தான் .படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றிம்மா
4.
chollukireen | 12:14 பிப இல் ஏப்ரல் 25, 2017
பழைய மாடல்கள் என்றால் எங்காவது நசுங்கி,சற்று உருமாறி அதெல்லாம் ஒன்றுமே இல்லை. ,ஷோரூம் கார்கள் மாதிரி வெள்ளோட்டத்துக்குத் தயாராக, விலை உயர்ந்த கார்களுக்குப் போட்டி போடுவது மாதிரி!
பேப்பரில் வந்த செய்திகளில் நீ எழுதியிருக்கும் மாதிரி ஸமாசாரங்களைப் படித்திருக்கிறேன். நன்றி அஞ்சு
5.
ஸ்ரீராம் | 12:32 முப இல் ஏப்ரல் 25, 2017
இப்போது தெருவில் இவை ஓடினாள் எல்லோரும் விநோதமாகப் பார்ப்பார்கள். ஆனால் அந்தக் காலத்தில் எவ்ளவு நவீனமாக இருந்திருக்கும்! கார்கள் பளபளவென மின்னுகின்றன.
6.
chollukireen | 12:18 பிப இல் ஏப்ரல் 25, 2017
இப்போது கூட பார்ப்பதற்காக கூட்டம் கூடிவிடும். எப்படி எப்படியெல்லாம் கார்கள் உருமாறியுள்ளது என்று நினைத்துக் கொண்டேன் . புதியதாகவே செய்திருப்பார்களோ! மிக்க நன்றி உங்கள் அபிப்ராயத்திற்கு. அன்புடன்
7.
நெல்லைத்தமிழன் | 10:02 முப இல் ஏப்ரல் 25, 2017
நிறைய பேருக்கு, பழைய கார்கள்ல ஒரு ஆசை, பெருமை… எனக்கு பழைய கார்களைப் பார்ப்பதில் ரொம்ப ஆசைலாம் கிடையாது. படங்கள்லாம் நல்லா இருக்கு.
8.
கோமதி அரசு | 12:18 பிப இல் ஏப்ரல் 25, 2017
பழைய கார்கள் படங்கள் அழகு.
9.
chollukireen | 12:39 பிப இல் ஏப்ரல் 25, 2017
அந்த அழகிற்காகவே போட்டேன். மிக்க நன்றி. அன்புடன். இது கோமதி அரசு அவர்களுக்கான பதில். நன்றி. அன்புடன்
10.
chollukireen | 12:25 பிப இல் ஏப்ரல் 25, 2017
இது என்ன திட்டம் போடப்பட்டு கார் பார்க்கப் போனோமா? இல்லை. தொண்ணூரோடு துவரம்பருப்பு. போன இடத்தில் ஒரு ஷோ. வயதானவளுக்கு எப்போதாவது பார்த்த ஏதாவதொன்று ஞாபகம் வரலாமே. அப்படி இருக்கும். கிராமங்களில் அபூர்வமாகக் கார் வரும். அதைப் பார்க்க காரில் யாரோ வந்திருக்கா. கார் பழசாதான் இருக்கு இப்படிக்கூட விமரிசனங்கள் கேட்டதுண்டு. புதுகார்தான் உங்களுக்குப் பிடிக்குமா? அதுவும் ஸரிதான். அன்புடன்.
நெல்லைத் தமிழரே உங்களுக்கான மறுமொழி இது.
11.
ஜெயந்தி ரமணி | 11:23 முப இல் ஏப்ரல் 27, 2017
OLD IS ALWAYS GOLD. எத்தனை புதிய மாடல் கார்கள் வந்தாலும் பழைய கார்களும் நன்றாகத்தான் இருக்கின்றன. எனக்கு இந்த கார்களைப் பார்த்ததும் ‘காதலிக்க நேரமில்லை’ படம்தான் ஞாபகம் வருகிறது. PRESTIGIOUS MODELS SUPER