மட்டர் பனீர் முந்திரிக் கிரேவியுடன்.
மே 13, 2017 at 7:47 முப 13 பின்னூட்டங்கள்
பிள்ளையுடன் படித்த பால்ய சினேகிதர்கள் வருகிறார்கள் j`’ரொட்டியுடன் சாப்பிட. காரசாரமாக மட்டர் பன்னீரும் தயாராகிறது. சற்று வேறுமாதிரி என்று தோன்றியது. ப்ளாகில் குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகிறது. இதுவும் உபயோகமாக இருக்குமே. செய்து பாருங்கள். பூண்டு வெங்காயம் சேர்க்கவில்லை. ஒரிஜனல் முந்திரிச் சுவையுடன்—-
வேண்டியவைகள்.ப்ரோஸன் மட்டர்–200 கிராம்.பனீர்–200 கிராம். வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்
தாளித்துக் கொட்ட நெய்—2டீஸ்பூன்.
பெரிய தக்காளிப் பழம்—2 அரை அங்குல நீளம்–இஞ்சித்துண்டு. இவை இரண்டையுமாகச் சேர்த்து அரைத்த விழுது.
முந்திரிப் பருப்பு—8, ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை. இதைத் தர்பூஸ்கா ஸீட்ஸ் என்று வட இந்தியர் சொல்வார்கள், இவைகளை ஊரவைத்துத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்க ஸாமான்கள்
மிளகுஅரை டீஸ்பூன்—லவங்கம்-5,—பட்டை ஒரு அங்குல அளவிற்கு, ஏலக்காய்-இவைகளைப் பொடிக்கவும். ஸுமாராகப் பொடித்தல்ப் போதும். வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேஜ்பத்தி என்னும்லவங்க இலை–1
பொடிகள். மிளகாய்ப்பொடி–1 டீஸ்பூன்,—-மஞ்சள் பொடி தேவையான அளவு.
ருசிக்கு—உப்பு.
செய்முறை. பதப்படுத்தப்பட்ட பட்டாணியை வென்னீர் விட்டு அலம்பி ஊறவைக்கவும். பின்னர் திட்டமான தண்ணீரில் வேக வைக்கவும்.
பனீரைச் சிறு துண்டங்களாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ச்சி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து இரண்டுஸ்பூன்வைத்துச் சூடானதும்தேஜ்பத்தியைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளிவிழுதைக் கொட்டி சுருளக்கிளறவும்.
பொடிகளைச் சேர்த்துக் கிளறி, வெந்தமட்டரைத் தண்ணீருடன் சேர்க்கவும். இரண்டொரு கொதி வந்தபின் பனீரைச் சேர்க்கவும்.
திட்டமாக உப்பைச் சேர்த்து முந்திரி விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
மிகவும் கெட்டியாகத் தயாரிக்காமல் கூட்டு மாதிரி சற்று நெகிழும் பதத்தில் இருக்கும்படி தண்ணீரைக் கொதிக்கும்போதே திட்டமாகச் சேர்த்துச் செய்யவும்.
இறக்கி வைத்து ரொட்டி, பூரியுடன் பரிமாறவும். என்ன ருசியான து,எவ்வளவு ருசியானது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். உதவி–ஸுமன்
Entry filed under: கிரேவி வகைகள். Tags: வெள்ளரி விதை.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கோமதி அரசு | 2:12 பிப இல் மே 13, 2017
அழகான படங்களுடன் மட்டர் பனீர் முந்திரி கிரேவி செய்முறை அருமை.
2.
chollukireen | 7:32 முப இல் மே 14, 2017
முதல் பின்னூட்டம். வரவிற்கு மிகவும் நன்றி. பிரமாதமில்லை. செய்து பாருங்கள். அன்புடன்
3.
angelin | 10:10 பிப இல் மே 13, 2017
சுலபமா இருக்க ..பார்க்கவும் அருமை ..செய்து பார்க்கிறேன் காமாட்சியம்மா
4.
chollukireen | 7:34 முப இல் மே 14, 2017
அஞ்சலின் செய்து பார்த்து எழுது. அன்புடன்
5.
ஸ்ரீராம் | 12:45 முப இல் மே 14, 2017
“காரசாரமாக”
இதைப் படிக்கும்போது இன்னும் ஆர்வம் வருகிறது. எட்டு முந்திரி போட்டால் காரத்தை அடித்து விடாதோ அம்மா?
குறித்துவைத்துக் கொண்டுள்ளேன்.
6.
chollukireen | 7:42 முப இல் மே 14, 2017
ஸ்ரீராம் காரம் இன்னும் வேண்டுமென்றால் மிளகாய்ப்பொடி கூட்டினால் ஆயிற்று. இல்லையா இரண்டு முந்திரிப் பருப்பை வாயில் போட்டுக்கொண்டாலும் ஆயிற்று.. இந்த மிளகு,லவங்கம் எல்லாமும் சிறிது விருவிருப்பைக் கொடுக்கலாம். குறிப்பைப் பார்க்கும் போது அட்ஜஸ்ட் செய்து கொண்டால் போதுமே. நன்றி அன்புடன்
7.
நெல்லைத்தமிழன் | 5:05 முப இல் மே 14, 2017
இதில் போட்டிருக்கும் எல்லா Ingredientsம் சுலபமாகக் கிடைப்பவை. செய்துபார்க்கிறேன். ஏதேனும் கொஞ்சம் மாறுதல் செய்து, எப்படி இருந்தது என்று சொல்கிறேன்.
நீங்கள் படத்தில் போட்டிருப்பது தக்காளி இஞ்சி அரைத்த விழுதா அல்லது தக்காளி ப்யூரி டப்பாவில் அடைத்ததா?
8.
chollukireen | 7:53 முப இல் மே 14, 2017
ப்யூரி வாங்குவதில்லை. தக்காளியும் இஞ்சியும் சேர்த்து அரைத்த விழுதுதான். செய்தவுடனே போட்டதுதான். குறிப்பைச்செய்து பாருங்கள். நல்ல இன்ட்ரஸ்ட் உடையவர்நீங்கள். மாறுதல் தோன்றும். இதுவும் ஆராய்ச்சிதான். ஸந்தோஷம் வருகைக்கு. அன்புடன்
9.
ஜெயந்தி ரமணி | 11:21 முப இல் மே 19, 2017
நான் பனீரும் வீட்டிலேயே செய்து விடுகிறேன். அடுத்த முறை பனீர் செய்யும்போத்ய் கண்டிப்பாக இந்த ரெசிபி செய்து விட்டு வருகிறேன்.
10.
chollukireen | 11:15 முப இல் மே 20, 2017
வீட்டிலேயே செய்தால் பனீர் இன்னும் ருசியாக இருக்கும். வரவிற்கும்,பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
11.
chollukireen | 10:45 முப இல் ஓகஸ்ட் 22, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
மடர் பன்னீர் வெங்காயம், பூண்டு இல்லாதது.இதுவும் ஒருவகை. மீள் பதிவாக வருகிறது. ருசித்துப் பாருங்கள். அன்புடன்
12.
ஸ்ரீராம் | 11:43 பிப இல் ஓகஸ்ட் 22, 2022
பாஸிடமாவது சொல்லி செய்யச் சொல்லவேண்டும். ஐந்து வருஷம் ஆகிவிட்டது. இன்னமும் செய்து ருசிக்கவில்லை அம்மா!
13.
chollukireen | 10:43 முப இல் ஓகஸ்ட் 23, 2022
பரவாயில்லை. 5 வருஷங்கள்தானே ஆகியுள்ளது.மருமகள் வந்து செய்வாளோ என்னவோ? பார்ப்பதெல்லாம் செய்ய முடியுமா என்ன? அன்புடன்