ஜெனிவாவில் பலநாட்டு இசைத்திருவிழா.
ஜூன் 27, 2017 at 12:56 பிப 14 பின்னூட்டங்கள்
ஜப்பானியக் குழு பாடுகின்றது.
ஜெனிவா நகரமே இசைப்பெருக்கில் திளைத்திருக்கும் கட்டணம் எதுவும் இல்லை. அவரவர்கள் நாட்டின் இசையை யாவருக்கும் வழங்குவதே இதனுடைய சிறப்பு.
ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இடங்களில், பலவிதமான தேசத்து இசைகளில்
இசையில் திளைத்திருக்கும் திருவிழா இது.
எங்கெங்கு நோக்கினும் இசை வெள்ளம். எல்லா பாஷைகளிலும்,எல்லோர் கலாசாரங்களிலும் எவ்வெவ்வளவு உண்டோ, அவ்வளவைும் அவரவர்கள் குழுக்களாக இசைப்பதற்கு வசதி.
ஒருவித சிலவுமில்லாமல் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தருகிறார்கள். ஒரு குழுவின்பின், மற்ற குழுவினர் என்று அவரவர்களாக நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள்.
சாலை ஓரமாக அமைந்திருக்கும் சிறிய பார்க்குகளிலும், பெரியபெரிய பார்க்குகளில் பல இடங்களிலும் மேடைகள்.
இடைவிடாது நாள் பூரவும் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள், பார்வைாளர்கள் வந்து போ்ய்க் கொண்டே இருக்கின்றனர்.
அவர்களுக்காக பெரிய நிழற்குடைகளும், இருக்கை முதலானவைகளும், சிலவு செய்து சாப்பிடுபவர்களுக்கு சிற்றுண்டி வசதியும், குப்பைகள் போட வசதி முதற்கொண்டு எல்லா வசதிகளும் உண்டு.
இத்திருவிழா ஒவ்வொரு வருஷமும் ஜூன் மூன்றாவது வார இறுதி நாட்களில் மூன்று , நான்கு நாட்கள் கொண்டாடப் படுகிறது. வெள்ளி சனி,ஞாயிறு என்ற வகையில்.
இதைப்பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டதினால் கூட வந்து பார் என்று கூட்டிப்போனார்கள்.
இவ்விடம் எவ்வளவு முடியாதவர்களானாலும் வெளிியில் போகாது இருக்க மாட்டார்கள். இரண்டொரு இடங்களைப் பார்த்து விட்டுத் திரும்பி விடலாம் என்று சொல்லி என்னை வீல்சேர் வசதியுடன் அழைத்துப் போனார்கள். அப்போது எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பாருங்கள் வழியிலேயே பியானோ இசைக்கும் பெட்டிகள்.
உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் இசைக்கலாம். கூட்டம் தன்னால் கூடிக் கொள்ளும்.
எல்லா தேசத்தினரும் அவரவர்கள் திறமையை யாவருக்கும் பிரகடனப் படுத்தும் ஒரு அரிய வாய்ப்பு.
பரதநாட்டியமும் ஒரு இடத்தில் அழகாக நடந்தது. ஆக வெளி உலகம்,பல தேச இசைகள் என ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை உங்களிடமும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு ஒரு ஸந்தோஷம். உண்மைதானே!!!!
Entry filed under: விசேஷமான கட்டுரை. Tags: இசைத்திருவிழா.
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 2:04 பிப இல் ஜூன் 27, 2017
இசைபட வாழ்கிறார்கள் போலும். சுவாரஸ்யமாய் பொழுது போயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
2.
chollukireen | 12:06 பிப இல் ஜூன் 28, 2017
இசைபடதான் வாழ்கிரார்கள்.. சுவாரஸ்யம் பலவித மனிதர்களைப் பார்க்கும்போது இன்னும் கூடுகிறது. பலவித கலாசாரமனிதர்களை ஒருங்கு சேரப் பார்ப்பதில். அவர்களும் நம்மைப் பார்த்து அப்படியே நினைத்திருக்கக் கூடும். அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 3:52 பிப இல் ஜூன் 27, 2017
அறிந்து கொள்ள எங்களுக்கும் ஒரு வாய்ப்பு… நன்றி அம்மா…
4.
chollukireen | 12:10 பிப இல் ஜூன் 28, 2017
அப்படி நினைத்திருந்தால் மிக்க ஸந்தோஷம்தான். நன்றி உங்கள் வரவிற்கு. மிக்க நாட்களாகப் பார்க்கவில்லை. நலம்தானே.அன்புடன்
5.
கோமதி அரசு | 5:40 முப இல் ஜூன் 28, 2017
இசைத்திருவிழா செய்திகள் அருமை.
இப்படி பல நாட்டு இசையை கேட்டு மகிழ அருமையான சந்தர்ப்பம்.
6.
chollukireen | 12:16 பிப இல் ஜூன் 28, 2017
ஸரியாகச் சொன்னீர்கள். அருமைாகத்தானிருந்தது. ஒரு சான்ஸ் கிடைத்தது. நன்றி. அன்புடன்
7.
நெல்லைத்தமிழன் | 6:38 முப இல் ஜூன் 28, 2017
படிப்பதற்கே நன்றாக இருக்கிறதே. நீங்களும் ஏதாவது இசையைக் கேட்டீர்களா? நல்ல வாய்ப்பு. பகிர்ந்துகொண்டதற்கு பாராட்டுக்கள்.
8.
chollukireen | 12:26 பிப இல் ஜூன் 28, 2017
நானும் நான்கு ஐந்து நிகழ்ச்சிகள் கேட்டேன். கூட்டத்தில் பல ரஸிக்கும் மனிதர்கள்.கலாசாரம். சில பாடல்களில் ஸரியாக எல்லோரும் ஒன்றுபோல தாளம்போட்டு ஆர்வமுடன் ரஸித்தல் என எங்கும் அவரவர்கள் கலையை ரஸிக்கும் முறை. பலமாதங்களுக்குப் பிறகு ஸந்தோஷமான ஒரு கூட்டத்தைப் பார்க்கக் கிடைத்தது . இது என்ன பகிர்வு என்று யாராவது நினைக்க மாட்டார்களா. வெறும் படங்கள் என்று நினைத்தேன். பரவாில்லை. நன்றி அன்புடன்
9.
நெல்லைத்தமிழன் | 5:52 முப இல் ஜூன் 29, 2017
“இசைபட வாழ்கிறார்கள் போலும்” – ஸாரி ஸ்ரீராம். அர்த்தம் சரியாக வரவில்லை.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
பிறருக்குக் கொடுத்து அதனால் புகழ் பெற வாழ்வதைத் தவிர வாழ்க்கையின் பயன் (அல்லது பலன்) வேறு எதுவும் இல்லை. ‘இசைபட வாழ்தல்’ புகழோடு வாழ்வது. ( நீங்கள் இசையோடு ஒன்றி வாழ்வது என்ற பொருளில்தானே இதை எழுதினீர்கள்?)
10.
chollukireen | 9:20 முப இல் ஜூன் 30, 2017
நன்றி. திருத்தி அர்த்தம் செய்து கொண்டால்ப் போகிறது. நானும் ஸ்ரீராமின் அர்த்தத்தை மனதில் வைத்துதான் பதில் எழுதினேன். உங்களின் மீள் வருகை மிக்க ஸந்தோஷம். அன்புடன்
11.
VAI. GOPALAKRISHNAN | 4:54 பிப இல் ஜூன் 30, 2017
’ஜெனிவாவில் பலநாட்டு இசைத்திருவிழா’ படங்களும் செய்திகளும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.
12.
chollukireen | 10:11 முப இல் ஜூலை 3, 2017
உங்களைக் காணவில்லை என்று யோசித்தேன். நானும் ஸரியாக உங்கள் பதிவுகளுக்குப் போகவில்லை. அதனால் இருக்குமோ ? அப்படி எல்லாம் இல்லை என்று நான் நினைக்கும்படியாக உங்கள் பின்னூட்டம் வந்தது. மிகவும் மகிழ்ச்சி. நன்றியும். அன்புடன்
13.
ranjani135 | 10:44 முப இல் ஜூலை 12, 2017
எங்கு கூடினாலும் ஒரு ஒழுங்கு என்பதை வெளிநாடுகளில் மட்டுமே காண முடிகிறது. கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். நம் நாட்டில் என்றைக்கு இந்த நிலைமை வரும்?
இசைக்கு மொழி இல்லை என்பதை இந்த பல்வேறு நாடுகளின் இசையைக் கேட்கும் போது உணர முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வெறும் இசை மட்டுமா? அல்லது வாய்ப்பாட்டும் உண்டா? இசையின் பல்வேறு வடிவங்கள் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
பரதநாட்டியமும் இடம் பெற்றது என்று படித்தவுடன் மனதில் ஒரு சின்ன சந்தோஷம்.
நீங்கள் அவ்வப்போது வெளியில் போய்வருவது மனதிற்கு உற்சாகம் கொடுக்கும், இல்லையா? அதுவும் வெளிநாடுகளில் சீனியர் சிடிசன்களுக்கு எல்லா இடங்களிலும் வசதிகள் செய்திருப்பார்கள். அதிக சிரமம் இல்லாமல் போய் வரலாம்.
14.
chollukireen | 12:49 பிப இல் ஜூலை 12, 2017
முக்கால்வாசி வா்ய்ப்பாட்டுகளும் , பல இடங்களில் விதவிதமான வாத்திய இசைகளும், குழுக்கள் அமைத்துப் பாடினார்கள். இவ்விடமே வசிக்கும் பரதம் கற்பிக்கும் திறனுள்ளவர்களும் இருக்கிரார்கள் இங்கே.
எப்பொழுதாகிலும் பிள்ளை,நாட்டுப்பெண் வற்புறுத்தி அழைத்துப் போகிரார்கள். வீல்சேர் வீட்டிலேேயே இருக்கிறது.. தனியாக வருபவர்களும் இருக்கிரார்கள். ஆரம்பமுதல் தனிாக இருந்து பழக்கப்பட்டவர்கள். வயதானவர்களுக்கு சிரமம் என்ன என்பது அவர்களைக் கேட்டால் தெரியும்.. வெகுநாள் கழித்து வலைப்பக்கம் வந்துள்ளீர்கள். நல்வரவு. தொடர்ந்து வாருங்கள். அன்புடன்