பாசிப்பருப்பு ரொட்டி
ஜூலை 5, 2017 at 8:10 முப 21 பின்னூட்டங்கள்
முன்பெல்லாம் நெடுந்தூரம் பிரயாணம் செய்வதானால் உணவிற்காக ஏதாவது தயார் செய்தே எடுத்துப் போவார்கள். இன்னும் முன்காலத்தில் அரிசி,பருப்புமுதல் கட்டி எடுத்துக் கொண்டே போவார்கள். ஸமீபத்தில் காட்மாண்டுவிலிருந்து ஒரு நடுத்தர வயது தம்பதியினர் ஐரோப்பாவில் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.
வந்த இடத்தில் சைவ உணவு சில ஸமங்களில் கிடைக்காது போகலாம். எதற்கும் கைவசம் ஏதாவது வைத்திருக்க வேண்டுமென்று, இனிப்புகளும், சில வகை ரொட்டிகளும் எடுத்து வந்திருந்தனர். ஜெயின் தம்பதிகள்.
எதுவும் கிடைக்காவிட்டால்,அலுத்து சலித்து திரும்பவும் ஹோட்டல் தேட வேண்டுமே என்று நினைக்காமல், ஏதோ ஒன்றுடன் இரண்டு ரொட்டிகளைச் சாப்பிட்டு விட்டு ,இனிப்பும் எடுத்துக் கொண்டால் அந்தநேர பசி அடங்கி விடும் என்றனர். ஸரி நாமும் கேட்டுக் கொண்டால் பிளாகில் ஒரு குறிப்புஎழுதலாமே என்று யோசித்து விவரம் கேட்டுக் கொண்டேன்.
நாம் பிரயாணங்களுக்காகத் தயாரிக்கா விட்டாலும் சுடச்சுட தயாரித்துச் சாப்பிடலாமே!
மாதிரிக்காக சிறிய அளவில் செய்தது. வீட்டிலுள்ள சாமான்களைக் கொண்டே செய்ய முடியும். வேண்டியவைகள்.
பயத்தம் பருப்பு—இரண்டு குழிக்கரண்டி.
ரொட்டிமாவு தேவையான அளவு, ரொட்டிக்கும்,பிரட்டியிட மேல் மாவிற்குமாக
எண்ணெய்–மாவில்க் கலந்து பிசைய–2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் வேண்டிய அளவு உபயோகிக்கவும்.
தாளித்துக் கொட்ட–கடுகு அரைஸ்பூன்+சீரகம் அரைஸ்பூன்+நெய் ஒரு டீஸ்பூன்
.வேண்டிய பொடிகள்—மிளகாய்ப்பொடி–ஒரு டீஸ்பூன்,
பெருங்காயப்பொடி–கால்டீஸ்பூன்,மஞ்சள்பொடி–கால்டீஸ்பூன்
கஸூரிமெத்தி–அரைடீஸ்பூன். அதாவது பொடித்த வெந்தய இலைகள்
ருசிக்குஉப்பு, கால்டீஸ்பூன் சர்கரை.
செய்முறை
பருப்பைக் களைந்து ஒருமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
தண்ணீரை ஒட்ட இறுத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் ,ஒருஸ்பூன் நெய்விட்டுச் சூடாக்கி,கடுகு,சீரகம் தாளித்து, அதனுடன் இரண்டு குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்,மஞ்சள்,பெருங்காயப் பொடிகளைச் சேர்க்கவும். பருப்பைும் சேர்த்து சற்று வேகவைக்கவும். அதிகம் வேக வேண்டாம்.
நெத்துப்பதமாக பருப்பு அழுத்தமாக இருக்க வேண்டும். கீழிறக்கி ஆறவைக்கவும்.
பருப்பும்,அது வெந்த தண்ணீரும் இருக்கும். நன்றாக ஆறியவுடன் அந்த தண்ணீருக்கு ஏற்றபடி ரொட்டிமாவைச் சேர்த்துப் பிசையவும். வேண்டியஉப்பு,சர்க்கரை,இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய், கஸூரிமெத்தி
இவைகளைையும் சேர்த்துச் சப்பாத்திமாவு பதத்திற்குப் பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.இது ஞாபகத்தில் இருக்கட்டும்.
இரண்டு கரண்டி ஊறவைத்தப் பருப்புடன் இரண்டு கரண்டி தண்ணீர் சேர்த்து சற்று வேக வைத்து ஆறிய கலவையில் மாவைப் போட்டு பிசைந்திருக்கிறோம். தண்ணீர் வேறெதுவும் சேர்க்கவில்லை. இது முக்கியம்.
பத்து நிமிஷங்கள் மாவை ஊறவைக்கவும்.,
இனி வழக்கமாக ரொட்டி தாரிப்பது போலவே மாவைப்பிரித்து, குழவியினால் மாவில்த் தோய்த்து ரொட்டிகளை இடவும். பருப்புடன் சேர்ந்து ரொட்டி இட அழகாகவே வருகிறது.
திட்டமான சூட்டில் ரொட்டிகளை எண்ணெய் விட்டு தோசைக்கல்லில் போட்டுச்செய்து எடுக்கவும்.
ஆறவைத்து, நான்கு நான்காக அடுக்கிப் பார்ஸல் செய்து வைத்தால் அதிக நாட்கள் உபயோகிக்கலாமாம்.
நீங்கள் உங்களுக்குப் பிடித்த எதனுடனும் சாப்பிடலாம். தயிர் மிகவும் ஏற்றது.
கறி,கூட்டு,சட்னி,ஊறுகாய்,டால் எது வேண்டுமோ அதையும் செய்யவும்.
டால்,காலிபிளவர்வதக்கல், கீரை,தயிர் இவைகளுடன் உங்களுக்குக் கொடுக்கிறேன். சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள்.
எனக்கு உதவி என் மருமகள்.
Entry filed under: ரொட்டி வகைகள். Tags: சைவஉணவு, பாசிப்பருப்பு.
21 பின்னூட்டங்கள் Add your own
திண்டுக்கல் தனபாலன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 8:55 முப இல் ஜூலை 5, 2017
செய்முறை சுலபம்தான். படமும் ரொம்ப நல்லா இருக்கு. மெதுவாக இருக்காதோ? கொஞ்சம் காச்சின மசாலா அப்பளாம்(கொஞ்சம் தடிமன்) மாதிரி இருக்குமோ? செய்துபார்க்கிறேன். இதுக்கு ‘தால்’ஐவிட எந்த சப்ஜியும் நல்லா இருக்கும் தொட்டுக்க.
இந்தத் தடவை எல்லாப் படங்களும் ரொம்ப நல்லா வந்திருக்கு. அதிலும் ரொட்டி, அப்புறம் தட்டுல ரொட்டியோடு சேர்ந்த மத்த ஐட்டங்கள் – படங்கள் நல்லா இருக்கு
2.
chollukireen | 9:50 முப இல் ஜூலை 6, 2017
படமும் நல்லா இருக்கு செய்முறையும் ஸுலபம்தான். ஸரியாகத்தான் சொன்னீர்கள். ரொட்டிகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்குகிறோம். சற்று மெதுவாக ஆகிவிடுகிறது. ஸாதாரணமாக சிறிது பழக்கமானவர்கள் செய்தால்தான் ரொட்டிக்கு மிருதுத் தன்மை கூடிவரும். நன்றாகப் பிசைவதிலும்,பதமான சூட்டில் வேகவைப்பதும் முக்கியமாக ரொட்டிக்கு அவசியம் இல்லையா? இதைக் கொண்டு வந்தவர்கள் கூறின காரணமே அதிக நாட்கள் இருப்பதற்காக. தயிர் தொட்டுக் கொள்ள. உங்கள் பின்னூட்ட ஐயங்கள் எல்லோருக்கும் ஏற்படும். உங்களின் கைப் பக்குவத்தில் எப்படி வருகிறது பாருங்கள். பயத்தம்பருப்பும் ஊறி,வெந்து, அதில் வந்துள்ளது. நீங்கள் பக்குவமாகச் செய்வதில் தேர்ந்தவர்.
உங்களுக்கு பதிலளித்தாலே மற்றவர்கள் ஸந்தேகம் நீங்கிவிடும்.மிக்கநன்றி. ஸந்தோஷமும். அன்புடன்
3.
Geetha Sambasivam | 8:56 முப இல் ஜூலை 5, 2017
அம்மா, முகநூலில் பார்த்த உடனே ஆவலுடன் ஓடோடி வந்துட்டேன். விரைவில் செய்து பார்த்துட்டுச் சொல்றேன் அம்மா. ரொம்பவே எளிமையான முறையாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி. நமஸ்காரங்கள்.
4.
chollukireen | 10:04 முப இல் ஜூலை 6, 2017
உடனே வந்தது மிக்க மகிழ்ச்சி. நானும் இதுதான் முதல் முறை செய்தது. செ்ய்யுங்கள். நெல்லை,நீங்கள் யாவரும் பக்குவம் அறிந்தவர்கள். ஸரியாகவே வரும்.
கொஞ்சம் பரோட்டாமாதிரிகூட செய்து பாருங்கள். நன்றி. அன்புடன் ஆசிகளும்
5.
VAI. GOPALAKRISHNAN | 10:24 முப இல் ஜூலை 5, 2017
மிகவும் ருசியான பதிவுக்கும் பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றிகள்.
6.
chollukireen | 10:09 முப இல் ஜூலை 6, 2017
நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ருசியான பதிவு என்று எழுதியதற்கு. மகிழ்ச்சி. அன்புடன்
7.
திண்டுக்கல் தனபாலன் | 11:43 முப இல் ஜூலை 5, 2017
அருமையாக உள்ளது…
நன்றி…
8.
chollukireen | 10:18 முப இல் ஜூலை 6, 2017
மிக்க ஸந்தோஷம். அன்புடன்
9.
கோமதி அரசு | 12:40 பிப இல் ஜூலை 5, 2017
அருமையான ரொட்டி. பர்கருக்கு இடையில் வைப்பது போல் உள்ளது.
செய்முறை குறித்துக் கொண்டேன்.
படங்கள் அழகு.
10.
chollukireen | 10:22 முப இல் ஜூலை 6, 2017
படங்கள் ஒழுங்காக வந்தால் அழகாக இருக்கிறது. முடிந்தபோது செய்யுங்கள். அன்புடன்
11.
Sheela | 1:18 பிப இல் ஜூலை 5, 2017
Mami seekiram panni parkiren..
12.
chollukireen | 10:25 முப இல் ஜூலை 6, 2017
தினமும் ரொட்டி செய்பவர்களுக்கு இது ஒன்றும் பிரமாதமில்லை இல்லையா? பாரு,பதிலும் சொல்லு. அன்புடன்
13.
இராய செல்லப்பா | 4:28 பிப இல் ஜூலை 5, 2017
என்னவளிடம் இந்தப் பதிவைக் காட்டியிருக்கிறேன். சுபமான முடிவை எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்…
-இராய செல்லப்பா சென்னையில் இருந்து
14.
chollukireen | 4:16 பிப இல் ஜூலை 6, 2017
மிக்க மகிழ்ச்சி. நெல்லைத் தமிழருடைய ஹஸ்பெண்ட் செய்தார்களாம்.உங்கள் வீட்டிலும் செய்யட்டும்.எதிர்பார்ப்பு எப்போதும் நன்றாகவே கிடைக்கும். வந்து பின்னூட்டம் இட்டது மிக்க மகிழ்ச்சி.நன்றியும். அன்புடன்
15.
ஸ்ரீராம் | 12:39 முப இல் ஜூலை 6, 2017
மிகவும் எளிய முறையில் இருக்கிறது. நெல்லை சொல்லியிருப்பதுபோல படங்களும் நன்றாக வந்திருக்கிறது. வார இறுதியில் முயற்சித்துப் பார்க்கிறேன்.
16.
chollukireen | 10:31 முப இல் ஜூலை 6, 2017
ஆமாம். ஒரு மூன்று பேர்கள் என்ன சொல்கிரார்கள் என்பதுதான் கேள்வியே!! நீங்களும் அதில் ஒருவர். முயற்சி என்ன . செய்யப் போகிறீர்கள். ஸந்தோஷம். நானும் முதல்முறைதான் செய்தது. மிக்க நன்றி. அன்புடன்
17.
நெல்லைத்தமிழன் | 4:06 பிப இல் ஜூலை 6, 2017
இன்னைக்கு என் ஹஸ்பண்ட் பாசிப்பருப்பு ரொட்டி பண்ணினாளாம். படங்களும் அவ அனுப்பியிருந்தா. ரொம்ப நல்லா இருந்தது படங்கள். என் பையன் “Epic food”னு சொல்லிட்டான். இந்த ரெண்டு நாளுக்குள்ள நானும் பண்ணிப்பார்க்கிறேன். செய்யணும்னு ஆசையைத் தூண்டினது உங்கள் படங்கள்தான். நன்றி
18.
chollukireen | 4:39 பிப இல் ஜூலை 6, 2017
அப்படியா. நீங்கள் செய்தால் அதுவும் பதிவு போட்டால் நிறைய பேர் கமென்ட் கொடுப்பார்கள். படங்கள் நன்றாக இருந்தது.கேட்கவே ஸந்தோஷம். எனக்கு நீங்கள் யாவரும் வருகை தந்ததே மிக்க ஸந்தோஷம். நன்றி.. உங்கள் ஹஸ்பெண்ட் உங்களைவிட முந்திக் கொண்டார்.
உங்கள் பையன் epic food என்று சொல்லி ஹானர் செய்து விட்டான். அவர்களுக்கும் என்ந—-ன்—றி. அன்புடன்
19.
ஜெயந்தி ரமணி | 6:31 முப இல் ஜூலை 7, 2017
வித்தியாசமான ரொட்டி. ஆனால் சாதாரணமாக பயத்தம்பருப்பு விரைவில் ஊசிவிடும். இது எப்படி 4,5 நாட்கள் நன்றாக இருக்கும். தெரிந்து கொண்டால் செஞ்சு எடுத்துண்டு போகலாமே. அதற்காகத்தான் கேட்கிறேன்.
20.
chollukireen | 9:51 முப இல் ஜூலை 7, 2017
இதில் போடப்பட்டுள்ள பருப்பு நன்றாக ஊறி, ஓரளவு வெந்து, ரொட்டிமாவுடன் சேர்ந்து ஈரம் உறிஞ்சப்பட்டுள்ளது. மேலும் அப்பளக்குழவியினால் நசுக்கப் பட்டுள்ளது . போதாக்குறைக்கு தோசைக்கல்லில் சூடு ஒத்தடம் கொடுக்கப்பட்டு, எண்ணெய் பூசிக்கொண்டது. அடுக்கி ஆறவைத்த பின் பேக் செய்யப் படுகிறது. இதனாலெல்லாம் ஊசுவதற்கு அதனிடம் ஈரப்பசை இருக்காது போய்விடுகிறது போலும்.!!!!!!!!!!!!!
இது நீங்கள் கேள்வி கேட்டபின் மனதிலுண்டான ஆராய்ச்சி. உங்கள் மனதிற்குச் சரியாகப்படுகிறதா பாருங்கள். அடுத்து சாப்பிடுபவர்களுக்கு இந்த ருசி பிடிக்கிறதா பாருங்கள்,
நான் இந்தக் கேள்விையை குறிப்பு சொன்ன காட்மாண்டுக்காரர்களிடம் கேட்கவில்லை. குளிர்ப்பிரதேசம் ஆதலால் இவ்விடமும் எதுவும் ஊச வா்ப்பில்லை.
ஜெயின்பிரிவினபெரியவர்களின் ரொட்டிக்குறிப்பாக இருக்கும்.
உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. பண்ணிப் பாருங்கள். ஸந்தேகமிருந்தால் இருக்கவே இருக்கிறது குளிர் பதனப்பெட்டி. சற்று நீர்க்கஉள்ள பருப்பு,கூட்டுகளையே சேர்த்து சாப்பிட இசைவாகவும் இருக்கும். சென்னைபோன்ற சுட்டெரிக்கும் வெயிலில் எப்படி இருக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்தான். மிக்க நன்றி. அன்புடன்
21.
chollukireen | 9:58 முப இல் ஜூலை 7, 2017
வார்ப்பில்லை என்பதை வாய்ப்பில்லை என்று திருத்திப் படிக்கவும். அன்புடன்.