டால்வகையில் வெள்ளைக் காராமணி.
ஜூலை 14, 2017 at 12:31 பிப 24 பின்னூட்டங்கள்
நாம் அநேகமாக சுண்டல்,கூட்டுமுதலானவைகள்தான் இதில் அடிக்கடி செய்வோம். அதிலும் இனிப்புப் போட்ட சுண்டல்தான் வெகு இடங்களில். என் நாட்டுப்பெண் இந்த டாலை பூரி,ரொட்டிகளுக்காகவும்,சாதத்துடனும் ஒரு மாற்றத்திற்காகச் செய்வாள் . அப்படிச் செய்தது தான் இதுவும். பூரியும் இருக்கிறது. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம்.
தட்டப்பயறு,காராமணி, பெரும்பயறு என்று பலவிதப் பெயர்களில் பல வகைகள் கிடைக்கிறது. இது ப்ளாக் ஐ பீன்ஸ் என்று சொல்லப்படும் வெள்ளைக் காராமணி. ஹிந்திியில் Bபோடி
காராமணி,கத்தரிக்காய்,பலாக்கொட்டை இவைகள் சேர்த்துச் செய்யும் கூட்டு ருசியானது. இதில் பலாக் கொட்டை இல்லை. இதுவும் தானாக வருகிறது.
நாம் இப்போது டால் செய்வதைப் பார்க்கலாம்.
வேண்டியவைகள். டால் செய்வதற்கு–
வெள்ளைக்காராமணி—1 1/2 கப்,
வெங்காயம்–திட்டமானசைஸ்–2 பூண்டு இதழ்–4. இஞ்சி அரை அங்குலத் துண்டு.
பழுத்த தக்காளி–2
பொடிக்க —மிளகு–1டீஸ்பூன், லவங்கம்–4, பட்டை சிறிதளவு, ஏலக்காய்–1
பொடிகள்–மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன், தனியாப்பொடி—-2 டீஸ்பூன், மஞ்சள்பொடி–1டீஸ்பூன்
தாளிக்க —எண்ணெய்,நெய் வகைக்கு ஒரு டேபிள்ஸ்பூன். சீரகம்—1டீஸ்பூன்
கொத்தமல்லி, எலுமிச்சை ஒரு பாதி. ருசிக்கு—உப்பு.
செய்முறை.
வெள்ளைக்காராமணியை தண்ணீரில் நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளைச் சுத்தம் செய்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்கக் கொடுத்தவைகளை முடிந்தவரை பொடிக்கவும்.
காராமணியின் தண்ணீரை நீக்கிவிட்டு மூன்று கப் தண்ணீரைச் சேர்த்து மஞ்சள் பொடியுடன் குக்கரில் நேரிடையாக மிதமான தீயினில் இரண்டு விஸில்வரும்வரையில் வைத்து இறக்கி விடவும்.
நன்றாக வெந்திருக்கும். ஒரு ஸ்பூன் வெந்த காராமணிையை எடுத்து மசித்துச்
சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் நெய்யைவைத்துக் காய்ந்ததும் சீரகத்தைப் பொரியவைத்து, அரைத்த வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும்போதுபொடிகளைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
டாலிற்கு வேண்டிய உப்பையும் சேர்க்கவும். தண்ணீர் வேண்டுமானால் ஓரிரண்டு கரண்டி இப்போதே சேர்த்துக் கொதிக்க விடவும் . வேகவைத்த காராமணிையைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். சற்று நெகிழ வைத்தால்தான் ஸரியாக இருக்கும்.
இந்தப்படம் எடுக்க மறந்துவிட்டது.
உப்புக்,காரம் ஸரிபார்த்து பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். எலுமிச்சை சாறு வேண்டியளவு சேர்க்கவும். போலில் வைக்கவும்.
டாலும், பூரியுமாகச் சாப்பிடுங்கள். வெள்ளைக்காராமணிடால் ரொட்டி,சாதம் யாவற்றினுடனும் ஸரிவருகிறது.
நன்றி வழக்கம்போல மருமகளுக்கு.
Entry filed under: டால் வகைகள். Tags: வெள்ளைக் காராமணி.
24 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:10 பிப இல் ஜூலை 14, 2017
டாலை விட பூரி பார்க்க அமர்க்களமாய் இருக்கிறது. எப்படி அப்படி உப்ப வைப்பது அம்மா? எப்போதாவதுதான் எங்களுக்கு அப்படி வரும்!!
காராமணி, பட்டாணி குருமாவில் எல்லாம் வரும் அந்த பட்டாணி காராமணிகளை எனக்குச் சாப்பிடப் பிடிக்காது. சென்னா குருமாவில் கூட கோ.கடலையை ஒதுக்கி விடுவேன்! நீங்கள் செய்திருப்பது கலர்ஃபுல்லாக நன்றாக இருக்கிறது.
2.
chollukireen | 12:32 பிப இல் ஜூலை 15, 2017
இங்கேதான் காராமணியில் டால். நான் சுண்டல் கூட்டு முதலானதுதான் செய்வேன்நானும். குருமா வெளிியில் சாப்பிட்டது கிடையாது. என்னுடைய பிள்ளைகளுக்கும் இந்தப் பயறுவகைகள் பிடிப்பதில்லை. ரொட்டி,பூரி என்று மெனு மாறி ,காலம் மாறியபோது விருப்பமிருந்தாலும்,இல்லாவிட்டாலும், அதைப்பற்றி விமர்சிப்பதில்லை. நல்ல தக்காளி கலரைக் கொடுக்கிறது.
பூரி கோதுமைமாவில்தான் செய்கிறோம். மாவைப் பிசையும்போது சிறிது எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்க்கிறோம். இருக்கமாகப் பிசைந்தமாவைச் சற்று ஊறவைத்து திரும்பவும் நன்றாகப் பிசைந்து, எண்ணெய் தொட்டே பூரியை இட்டுப் பொரிக்கிறோம். மாவு தொட்டு இடுவதில்லை. பூரியை எண்ணெயில் போட்ட பிறகு சற்று சட்டுவத்தினால் அழுத்தம் கொடுக்கிறோம். இது எதுவும் புதியதில்லை. பொரிக்கும்போதே அடுத்தடுத்து எல்லோரும் சாப்பிட்டால் ஸரிதான். சற்றுப்பொருத்து என்றால் — எதுவும் கம்ப.சூத்திரமில்லை. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அன்புடன்
3.
வை. கோபாலகிருஷ்ணன்i | 2:13 பிப இல் ஜூலை 14, 2017
எனக்கும் அந்த உப்பலான பூரிதான் மிகவும் பிடித்துள்ளது. தொட்டுக்கொள்ள உ.கி. + வெங்காயம் + பச்சமிளகாய் + கருவேப்பிலை + கடலைப்பருப்பு போட்ட மஞ்சள் கலர் மஸால் இருந்தால் போதும். பகிர்வுக்கு நன்றிகள்.
4.
chollukireen | 4:33 பிப இல் ஜூலை 17, 2017
அதுதானே வழக்கமானது. பூரி உருளைக்கிழங்கு ஹோட்டலில் கிடைக்கும் இந்த வகை மிகவும் பிரபலமானது ஆிற்றே! நல்ல ரஸிகர் நீங்கள்.நன்றி. அன்புடன்
5.
வை. கோபாலகிருஷ்ணன்i | 2:15 பிப இல் ஜூலை 14, 2017
எனக்கும் டாலைவிட அந்த உப்பலான பூரிகள்தான் மிகவும் பிடித்துள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
6.
VAI. GOPALAKRISHNAN | 2:15 பிப இல் ஜூலை 14, 2017
எனக்கும் டாலைவிட அந்த உப்பலான பூரிகள்தான் மிகவும் பிடித்துள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
7.
chollukireen | 12:43 பிப இல் ஜூலை 15, 2017
கோதுமை மாவு பூரிதான். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்று பிடித்தாலும் போதுமே!
மிக்கநன்றி.அன்புடன்
8.
திண்டுக்கல் தனபாலன் | 3:09 பிப இல் ஜூலை 14, 2017
ஆகா…! சூப்பர்…!
9.
chollukireen | 12:44 பிப இல் ஜூலை 15, 2017
மிக்க ஸந்தோஷம். நன்றி. அன்புடன்
10.
Geetha Sambasivam | 1:11 முப இல் ஜூலை 15, 2017
இது அடிக்கடி செய்யும் முறை தான். நன்றாகவே இருக்கும். ஆனாலும் எனக்குப் பிடித்தது சிவப்புக்காராமணியில் (நாங்க தட்டாம்பயறு) என்போம், சின்ன வெங்காயம் சேர்த்து என் அம்மா செய்யும் சுண்டல் தான்!
11.
chollukireen | 1:00 பிப இல் ஜூலை 15, 2017
சிவப்புக் காராமணி அதற்கென்ற வாஸனையை உடையதாக இருக்கும். காரடைக்குக்கூட அதுதான் உபயோகம். டால் நான் செய்தது இல்லை. இங்கே அடிக்கடி விருந்தாளிகள். இது முன்னே செய்திருக்கு, இப்போ மாற்றுகிறேன் என்று வேலைக்குப்போகும் அவள் அடிக்கடி மாற்றிச் செய்கிராள். காராமணி முதலானது ஊரப்போடாவிட்டால்கூட பிரஷர் குக்கரில் நிமிஷத்தில் வெந்துவிடுகிறது. எல்லா பயறு வகைகளும் சற்று வித்தியாஸமான முறையில் தயாராகும்போது நானும் செய்வதுண்டு. செய்யாதவர்களும் இருக்கலாமல்லவா. மறுமொழிக்கு மிகவும் நன்றி. இங்கு எல்லாம் வெண்மை காராமணிதான். அன்புடன்
12.
Geetha Sambasivam | 1:13 முப இல் ஜூலை 15, 2017
அடுப்பில் எண்ணெயை வைத்து விட்டுப் பூரிக்கு மாவு பிசைந்து இட்டு உடனடியாகப் போட்டால் நன்றாக உப்பி வரும். ஒரு சிலர் பூரிக்கு மாவு பிசைகையில் ரவை சேர்க்கிறார்கள். எங்களுக்கு அது பிடிக்காது. உப்பல் அப்படியே நிற்க வேண்டும் எனில் ஒரு ஸ்பூன் அஸ்கா சர்க்கரையை(வெள்ளைச் சர்க்கரை) சேர்க்கச் சொல்லுவார்கள். ஆனாலும் எங்க வீட்டு பூரி உப்பலாகவே வரும். பேல்பூரிக்குச் செய்துவைப்பவை மட்டும் நடுவில் குத்தி விடுவதால் மொறுமொறுப்பாக எடுப்பேன்.
13.
chollukireen | 2:04 பிப இல் ஜூலை 15, 2017
குழிவான வாணலியில் எண்ணெய் வைத்துப் பொரிக்கவேண்டும். அவரவர்கள் செய்முறை என்று ஒன்று இருக்கிறது அல்லவா. சர்க்கரை,ரவை சேர்க்கும் வழக்கம் எனக்கும் கிடையாது. உங்கள் செய்முறையும் எல்லோருக்கும் கிடைத்து விட்டது. கொஞ்சம் நேரம் ஆகிவிட்டால் பூரி உப்பல் தானாக அடங்கி விடும். சுடச்சுட ஒரு கை பார்க்க வேண்டியதுதான் எல்லோரும். உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
14.
Geetha Sambasivam | 1:13 முப இல் ஜூலை 15, 2017
யு.எஸ்ஸில் வெள்ளைக்காராமணி ஃப்ரோசன் கிடைக்கும். அதில் செய்தால் காராமணி நன்கு குழைந்து நன்றாக இருக்கும்.
15.
chollukireen | 2:11 பிப இல் ஜூலை 15, 2017
இங்கு ராஜ்மா,கடலைமுதலானது ஃப்ரோசனில் கிடைக்கும். இந்த வெள்ளைக் காராமணி இங்குள்ளவர்களுக்குப் பழக்கமில்லையோ என்னவோ. கேரளாக் கடைகளில்தான் இது கிடைக்கும். நன்றி உங்களுக்கு. அன்புடன்.
16.
நெல்லைத்தமிழன் | 10:48 முப இல் ஜூலை 15, 2017
வெள்ளைக்காராமணி தால் – ரொம்ப நல்லா இருக்கு. செய்முறையும் சுலபமா இருக்கு. செய்துபார்க்கிறேன்.
இப்போ படமெல்லாம் அட்டஹாசமா வந்திருக்கு. படங்களைப் பார்க்கும்போதே உடனே செய்துபார்க்கலாமே என்று தோன்றுகிறது.
பூரி சாப்பிடறதுல ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, எத்தனை சாப்பிடறோம்னு கணக்கே தெரியாம நிறைய சாப்பிட்டுவிடுவோம். இந்த தால் சப்பாத்திக்கும் ரொம்ப நல்லா இருக்கும்.
படங்களைப் பற்றிய பாராட்டைத் தெரிவித்துவிடுங்கள்.
17.
chollukireen | 2:37 பிப இல் ஜூலை 15, 2017
ரொம்ப நல்லா இருக்கு. கேட்க ஸந்தோஷம். ரொட்டிக்கும் ஏற்றதுதான். படமெல்லாம் கைப்பேசிியில்தான் எடுக்கிறேன். கூட்டும்,காராமணியும் மும்பையில் எடுத்த படம். டால்,பூரி,மஸாலா ஜெனிவா படம். அதுவும் நான்கைந்து நாட்களுக்கு முன்பாக. சிலஸமயம் மருமகளையும் உதவி கேட்பதுண்டு. ருசியெல்லாம் எழுதறேனே தலியா மோர்விட்ட கஞ்சியும்,உருத்தெரியாத மோர்சாதமும்தான் நான் சாப்பிடுவது. ஒருஸ்பூன் காராமணி ருசி பார்த்தேன்.
படம் அட்டஹாஸமா வந்திருக்குஎன்று நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டையும் தெரிவித்து விட்டேன். செய்முறை கேட்டுதான் செய்தேன். ஏதாவது எழுதிண்டே இருக்கணும். யாரையாவது பார்த்தால் உங்க பக்கத்தில் எப்படிச் செய்கிறீர்களென்று கேட்பேன். ஏதாவது புதிதாக இருந்தால் மனதில் வாங்கிக் கொள்வேன்.
அம்மாதிரி கேட்டு வாங்கிப்போடும் பதிவு என்று பெயர் கொடுத்து ஸ்ரீராமைக் காப்பியடிக்க வேண்டியதுதான் பாக்கி. என்னுடைய கம்யுட்டரில் கேள்விக்குறி மக்கார் செய்கிறது. நன்றி மிகவும். அன்புடன்
18.
துளசிதரன், கீதா | 2:59 முப இல் ஜூலை 17, 2017
அழகான வெள்ளைக்காராமணி டால். செய்வதுண்டு, சிவப்பிலும் செய்வதுண்டு. எல்லா கடலைகளையும் இது போன்று ராஜ்மா, சென்னா போல செய்வதுண்டு. உங்கள் குறிப்புகளையும் குறித்துக் கொண்டேன் அம்மா. நான் பொதுவாக தக்காளியையும் வெங்காயத்தையும் வதக்கிக் கொண்டு அரைப்பது வழக்கம். அப்படிச் செய்தால் எண்ணை குறைவாக விட்டால் போதும் என்று ஒரு எண்ணம் அனுபவத்தில் தோன்றியது.
நன்றாக இருக்கிறது அம்மா…மிக்க நன்றி பகிர்விற்கு
கீதா
19.
chollukireen | 4:22 பிப இல் ஜூலை 17, 2017
சில வகைகளுக்கு வதக்கி அரைத்து விட்டால் கடைசிியில் அரைத்து விட்டதைச் சேர்த்தால் போதும். பொடிகளைச் சேர்ப்பதற்கு பச்சையாக அரைத்துவிட்டு வதக்கினால், பொடிகளும் கடைசியில் எண்ணெயில் சற்று ரோஸ்ட்டாகும். நான்ஸ்டிக் உபயோகித்தால் எண்ணெய் குறைவாக ஆகிறது . இப்படி வழக்கங்களும்,எண்ணமும் ஏற்படுகிறது. நமக்கு ஸரி என்று பட்டதை பிளஸ் பாயிண்டாக உபயோகப் படுத்துவதுதான் ஸரி. எங்கள் ஆரம்பகாலத்தில் ரொட்டி,டால் வகைகள் மிகவும் குறைவு. எல்லாம் அரிசி மயம் ஜெகத். இப்போது அப்படி இல்லையே!.ஸர்வம் பாஸ்தா, பிட்ஸா,ரொட்டி மயம் ஜகத் இல்லைா. உன் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி. அன்புடன்
20.
chollukireen | 11:40 முப இல் ஓகஸ்ட் 15, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
டால்வகையில் இதுவும் ஒன்று. வெள்ளைக் காராமணி. படியுங்கள். ருசியுங்கள். அன்புடன்
21.
ஸ்ரீராம் | 11:40 பிப இல் ஓகஸ்ட் 15, 2022
ஆச்சர்யம் என்னவென்றால் இப்போது பதிவைப் படித்ததும் என்ன பின்னூட்டம் இட நினைத்தேனோ அப்படியே அப்போதும் இட்டிருக்கிறேன்! எனவே அதே பின்னூட்டம்தான் இப்போதும்!! அதாவது,
“டாலை விட பூரி பார்க்க அமர்க்களமாய் இருக்கிறது. எப்படி அப்படி உப்ப வைப்பது அம்மா? எப்போதாவதுதான் எங்களுக்கு அப்படி வரும்!!
காராமணி, பட்டாணி குருமாவில் எல்லாம் வரும் அந்த பட்டாணி காராமணிகளை எனக்குச் சாப்பிடப் பிடிக்காது. சென்னா குருமாவில் கூட கொ.கடலையை ஒதுக்கி விடுவேன்! நீங்கள் செய்திருப்பது கலர்ஃபுல்லாக நன்றாக இருக்கிறது.”
22.
chollukireen | 11:16 முப இல் ஓகஸ்ட் 16, 2022
முன்பு இட்ட பின்னூட்ட பதிலே இதற்கும். நானும் என்ன புதியதாகச் சொல்லப் போகிறேன். சிலது பிடிக்கவில்லை என்றால் மாற்ற முடியாது. என்ன இது ஒன்றுதானா சாப்பிடுவதற்கு? படித்து பின்னூட்டமிடுகிறீர்களே? அதுவே எதேஷ்டம். மிக்க நன்றி. அன்புடன்
23.
நெல்லைத்தமிழன் | 10:03 முப இல் ஓகஸ்ட் 16, 2022
மிக அழகாக இருக்கிறது. சாப்பிடணும் போல இருக்கிறது…. பூரி பார்க்கவே சூப்பரா இருக்கிறது.
24.
chollukireen | 11:19 முப இல் ஓகஸ்ட் 16, 2022
பிடித்த ஸைட்டிஷ்ஷுடன் சாப்பிடுங்கள். பிரமாதமொன்றுமில்லை. மிகவும் நன்றி. அன்புடன்