விளக்கு பூஜை நினைவுகள்.
ஜூலை 27, 2017 at 7:18 பிப 13 பின்னூட்டங்கள்
டில்லியில் எப்போதோ நடந்த விளக்கு பூஜையின் படங்கள். மலரும் நினைவுகள் மயூர் விஹார்—மேதா அபார்ட்மென்ட். நாங்கள் ஒரு பத்து தமிழ்க்குடும்பம் இருக்கும்.
வேலைக்குப் போகிறவர்களும் வருவதற்காக சனிக்கிழமைகளில் லலிதா ஸஹஸ்ரநாமம், குத்து விளக்குபூஜை ஆடி,தை வெள்ளிக்கிழமைகள்,நவராத்ரி பத்து தினங்கள் என ஒன்று தவராது செய்தவைகள். ப்ளாகில் போட்டுப் பார்ப்போமா… படங்கள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. மலரும் நினைவுகள்தானே.!!!!!!!!
நடுவில் ஒரு விளக்கு. சுற்றிலும் உட்கார்ந்து பூஜை. நிவேதனம் லலிதா அதான் கனராபேங்க் மாமி செய்கிரார். தில்லி ரோஜா இதழ்களாகவேபூஜை.
நினைத்துப் பார்க்கவே ஆனந்தம். அடுத்து கிடைத்த படங்களெல்லாம், டில்லி நினைவுகளாகக் கிடைத்த சில பழைய படங்கள். ஆடி வெள்ளிக்கிழமை. ஞாபகம் வந்தது. அவ்வளவே.
Entry filed under: சிலநினைவுகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 12:48 முப இல் ஜூலை 28, 2017
நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போ இப்படித் தான் சனிக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் வைத்திருந்தோம். இங்கேயும் ஒரு குழுவினர் வந்து அவ்வப்போது பாராயணம் பண்ணிச் செல்கின்றனர். நல்ல அருமையான பகிர்வுக்கு நன்றி. ஆடி வெள்ளியன்று பார்க்கக் கிடைத்தது.
2.
chollukireen | 3:18 பிப இல் ஜூலை 29, 2017
ஆடிவெள்ளி . நல்லது பார்த்துப் பாராட்டியது. இப்பவும் விஷ்ணு ஸஹஸ்ரநாமங்கள் தொடருகிறதா. கேட்கவே அருமையாக இருக்கும். பத்து,பன்னிரண்டு வருஷ டில்லி அனுபவங்கள். நினைக்கவே நன்றாக இருக்கிறது. ஒரே குடும்பம் மாதிரி சில பேர்களின் சினேகம். நிறைய எழுதலாம். உங்கள் மகிழ்ச்சியான பின்னூட்டம் மனதை நிறைத்தது. நன்றி. அன்புடன்
3.
.ஸ்ரீராம் | 1:04 முப இல் ஜூலை 28, 2017
ஓ…. இன்று(ம்) ஆடி வெள்ளி. மலரும் நினைவுகள் இதமானவை, சுகமானவை அம்மா.
4.
chollukireen | 2:29 பிப இல் ஓகஸ்ட் 2, 2017
ஓ. இப்போது இது ஒன்றுதான். பழைய படங்கள் திடீரென்று கிடைத்தது. அன்புடன்
5.
கோமதி அரசு | 3:50 முப இல் ஜூலை 28, 2017
அருமையான மலரும் நினைவுகள். கோயிலில் விளக்கு பூஜைகளில் முன்பு கலந்து கொண்டேன். இப்போது முடிவது இல்லை. லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி செவ்வாய், வெள்ளியில் படிப்போம். இங்கு பல கோயில்களில் விளக்கு பூஜை என்று வருகிற செய்திகளை படிக்கும் போது மலரும் நினைவுகள் வருகிறது.
6.
chollukireen | 3:22 பிப இல் ஜூலை 29, 2017
நீங்கள் கூறும் எல்லாம் போகவர முடிந்தது. இடம்,காலம்,வயது எல்லாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. மலரும் நினைவுகள் கூட உற்சாகமாகத்தான் இருக்கிறது. நன்றி. அன்புடன்
7.
நெல்லைத்தமிழன் | 4:42 முப இல் ஜூலை 28, 2017
விளக்கு பூஜை படங்கள், கிளாரிட்டி இல்லைனாலும் கூடிப் ப்ரார்த்திப்பதன் உணர்வைப் புரிந்துகொள்ள முடிந்தது. பெரும்பாலும் வெளிநாடுகளிலும் இதுபோன்று சனிக்கிழமைகளில் சகஸ்ரநாம பாராயணங்களும் பெரும்பாலும் அதைத்தொடர்ந்து மஹா ப்ரசாதமும் நிகழும். சில படங்கள் துல்லியமாக இருந்தால் லட்டு தவிர என்ன என்ன பிரசாதம் வைத்திருக்கிறார்கள் என்று பார்த்திருக்கலாம்.
8.
chollukireen | 3:29 பிப இல் ஜூலை 29, 2017
வடை,சுண்டல்,சக்கரைப்பொங்கல், புளி,எலுமிச்சைசாதங்கள் வெண்பொங்கல் எல்லாம் உண்டு. நல்ல சாப்பாடுதான். நான் சொல்லி விட்டேன்.இன்னும் நல்ல அயிட்டங்களும் இருக்கும். கையிலும் எடுத்துப்போக கிடைக்கும். டில்லியில் ஆங்காங்கே இப்போதும் வேறு நல்ல பூஜைகளும் நடக்கின்றது. நன்றி அன்புடன்
9.
திண்டுக்கல் தனபாலன் | 1:31 பிப இல் ஜூலை 28, 2017
இனிய நினைவுகள் அம்மா…
10.
chollukireen | 3:31 பிப இல் ஜூலை 29, 2017
ஆமாம், ஏதாவது இப்படி நினைத்துக் கொண்டால் பொழுது போகின்றது. நன்றி. அன்புடன்
11.
Aekaanthan | 12:26 பிப இல் ஓகஸ்ட் 5, 2017
’எங்கள் ப்ளாக்’ மூலம் வந்தேன் உங்கள் பக்கத்திற்கு. டெல்லி மயூர்விஹார் என்றதும் அசந்தேன்! எங்கள் வீடும் அங்குதான் இருக்கிறது. நீங்கள் மயூர்விஹார் ஃபேஸ்-1-ல் இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நான் டோக்கியோவில் இந்திய தூதரகத்தில் பணிபுரிந்தபோது (2000-2004) தமிழர்கள் குழு நடத்தும் சஹஸ்ரநாமம் பாராயணத்திற்கு செல்வதுண்டு. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது!
12.
chollukireen | 8:02 முப இல் ஓகஸ்ட் 6, 2017
வாருங்கள் ஏகாந்தன். வருகவருக. மயூர்விஹார் ஃபேஸ் ஒன் ext இல் இருந்தோம். பூராவும் மயூர் விஹாரில் இன்றும் ஆங்காங்கே நல்ல காரிங்கள் நடந்தே வருகிறது. இப்போது நீங்கள் எங்கு உள்ளீர்கள். ஆண்கள் விஷ்ணு சஹஸ்ரநாம பாராணம், இருவருமாகச் சேர்ந்து திருப்புகழ் பஜனைகள், என இப்படி ஏராளமான நிகழ்வுகள். நாராயணீம்போன்றவைகளும் நடக்கின்றது. நான் தில்லி போ்ய் ஆறு ஏழு வருடங்களாகி விட்டது. உங்கள் மயூர் விஹார நினைவுகள் இயற்கை. டோக்கியோ சென்றாலும் அந்த நாள் ஞாபகம் நெஞ்ஜிலே வந்ததே வரவேற்கிறேன் ஞாபகங்களை. நன்றி. அன்புடன்
13.
chitrasundar5 | 9:19 பிப இல் மே 3, 2018
காமாக்ஷிமா,
பழைய படங்களைப் பார்த்து, நினைவுகளை அசைபோடும்போது அதில் ஒரு சுகம், கூடவே அவர்களையெல்லாம் மீண்டும் பார்க்கமாட்டோமா என்ற ஏக்கமும் வந்துபோகும்.
////// படங்கள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. மலரும் நினைவுகள்தானே.!!!!!!!! ///// ___ அழகான நினைவுகள் !