கணபதியே வருகவருக.
ஓகஸ்ட் 23, 2017 at 4:43 பிப 24 பின்னூட்டங்கள்
வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
மும்பை கணபதிகளின் அணி வகுப்பு. அவ்விடமுள்ள என் மகன் அமெரிக்கா போவதால் முன்கூட்டியே படங்கள் கேட்டிருந்தேன். குறைந்தது படமாவது போடலாமே.
வேழ முகத்து வினாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
வெற்றி முகத்து வினாயகனைத் தொழ புத்தி மிகுத்து வரும்.
அல்லல் போம் வல்வினைகள் போம், அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக
மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்
கணபதிையைக் கொதொழுதக்கால்.
கணபதிியின் அடி பணிந்து யாவருக்கும் நன்மைகள் உண்டாக வேண்டி வணங்குவோம்.
நல் வாழ்த்துகள் யாவருக்கும்.
Entry filed under: படங்கள்.
24 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Venkat Nagaraj | 4:49 பிப இல் ஓகஸ்ட் 23, 2017
அழகான பிள்ளையார் சிலைகள்.
உங்களுக்கும் வாழ்த்துகள் மா.
2.
chollukireen | 8:38 முப இல் ஓகஸ்ட் 25, 2017
ஆமாம். மும்பைப் பிள்ளையார் சிலைகள் தனிப்பட்ட அழகு.வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 5:50 பிப இல் ஓகஸ்ட் 23, 2017
நமஸ்காரம் மாமி. பிள்ளையார் படங்கள் அத்தனையும் அழகோ அழகு ! 🙂
4.
chollukireen | 8:42 முப இல் ஓகஸ்ட் 25, 2017
ஆசிகள். ஸவுக்கியமா . வெகு நாட்களாகக் காணோம். நினைத்துக் கொள்வேன். அழகு சிலைகள். மும்பை கைவண்ணம். வரவிற்கு மிகவும் நன்றியும் ஸந்தோஷமும். அன்புடன்
5.
ஸ்ரீராம் | 12:44 முப இல் ஓகஸ்ட் 24, 2017
அதிகாலையில் ஆனைமுகன் தரிசனம். நன்றி. நலம்தானே அம்மா?
என் மாமாவின் நண்பர் ஒருவர் இருக்கிறார். அரவிந்தன் என்று பெயர். திருவண்ணாமலையில் வசிக்கும் அவர் பதினாறு வருடங்களாக விதம் விதமான விநாயகர் சிலைகளை வைத்து வருடா வருடம் பெரிய கொலு போல விநாயகர் சதுர்த்தி கண்டாடி வருகிறார். நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி வரவழைப்பார்.
6.
chollukireen | 8:58 முப இல் ஓகஸ்ட் 25, 2017
காலையில் படங்கள் பார்த்தால் நல்ல சகுனமாக ஸந்தோஷமாக இருக்கும் என்றுதான் முதல் நாளே போஸ்ட் செய்தேன். நினைத்தது நடந்தது. நானும் மும்பை படங்களை அவ்விடம் போனது முதல் வெளியிடுகிறேன். அதில் ஒரு திருப்தி. அரவிந்தன் அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி,ஸந்தோஷம் கணேச சதுர்த்தியில் கிடைக்கிறது. மற்றவர்களையும் பங்கு பெற அழைப்பது எவ்வளவு ஒரு நல்ல குணம். கொலுமாதிரிவைக்க வினாயகர்கள் சேகரம். நல்ல நபரைத் தெரிந்து கொண்டேன். நன்றி.
என் உடல்நிலை ஏதோ வைரல் இன்பெக்க்ஷன். வலி எரிச்சல். மருந்திற்கு கட்டுப்படாதாம். குறைவதற்கு சிகிச்சை தொடருகிறது. பார்ப்போம்.
யாவைக்கும் நன்றி. அன்புடன்
7.
ஸ்ரீராம் | 9:04 முப இல் ஓகஸ்ட் 25, 2017
உங்கள் உடல்நிலை சீக்கிரம் சரியாக விநாயகப் பெருமானைப் பிரார்த்திக்கிறேன் அம்மா.
8.
chollukireen | 9:54 முப இல் ஓகஸ்ட் 25, 2017
மிக்க நன்றி ஸ்ரீராம்
9.
திண்டுக்கல் தனபாலன் | 5:17 முப இல் ஓகஸ்ட் 24, 2017
அனைத்தும் அழகோ அழகு…
10.
chollukireen | 9:02 முப இல் ஓகஸ்ட் 25, 2017
ஆம். அழகுச்சிலைகளே.! நன்றி. அன்புடன்
11.
நெல்லைத்தமிழன் | 5:57 முப இல் ஓகஸ்ட் 24, 2017
என்ன ரொம்ப நாளா இடுகையைக் காணோமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். மற்ற இடங்களிலும் உங்களைக் காணவில்லை. நலம்தானே.
வரும்போது, அருமையான கணபதி சிலைகளின் படங்களோடு வந்துள்ளீர்கள். அருமை.
நான் எதிர்பார்த்தது, மோதகம் அல்லது பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டிய மற்ற பிரசாத செய்முறையை. பரவாயில்லை, அடுத்தமுறை பதிவிடுங்கள்.
12.
chollukireen | 9:42 முப இல் ஓகஸ்ட் 25, 2017
சிலைகளை ரஸித்திருக்கிறீர்கள். நல்லதே. மோதகம்,மற்றும் எவைகளும் எழுதவோ, செய்யவோ முடியவில்லை. முடியும் போது ஜமாய்த்து விடலாம். இப்டியாவது உங்கள் யாவருடனும் தொடர்பு கொண்டால் அதுவே போதும். நலக்குறைவு கணினியில் உட்காரவோ எழுதவோ முடியாததால்தான். வயதானவர்களுக்கு எதுவும் ஏஜ் ரிலேடட்தான். விசாரிப்புக்கு மிகவும் நன்றி. அன்புடன்
13.
கோமதி அரசு | 7:04 முப இல் ஓகஸ்ட் 24, 2017
அழகான விநாயகர் சிலைகள்.
அனைத்தும் அழகு.
14.
chollukireen | 9:45 முப இல் ஓகஸ்ட் 25, 2017
மிகவும் நன்றிம்மா. இம்மாதிரி ஸமயங்களில்தான் இப்படிான அழகு சிலைகளை மும்பையில் பார்க்க முடியும். நன்றிம்மா. அன்புடன்
15.
கோமதி அரசு | 7:05 முப இல் ஓகஸ்ட் 24, 2017
நலம் தானே அக்கா என் தங்கை பிள்ளையார் கொலு வைப்பாள். ஸ்ரீராம் சொன்னது போல்.
16.
chollukireen | 9:49 முப இல் ஓகஸ்ட் 25, 2017
பலவித பிள்ளையார்களைப் பார்க்க கொலு அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல ஸமாசாரம்.
வாழ்த்துகள் அவருக்கு. எங்கும் வர இயலவில்லை,நலக்குறைவுதான் காரணம். அது போகட்டும். அன்புடன்
17.
துளசிதரன், கீதா | 5:28 பிப இல் ஓகஸ்ட் 24, 2017
விதம் விதமாக அருமை!!பிள்ளையார் !! பிள்ளையார் நாளை எங்க வீட்டுக்கும் வருகிரார்! என்னிடம் வித்ம் விதமாகப் பிள்ளையார் இருக்கிறார்…
அம்மா நலமா?
கீதா
18.
chollukireen | 9:52 முப இல் ஓகஸ்ட் 25, 2017
ஒரு படமாவது எடுத்துப் போடு உங்கள் வீட்டுப் பிள்ளையார்களை. விசாரிப்புக்கு மிகவும் நன்றி. அன்புடன்
19.
கோமதி அரசு | 10:35 முப இல் ஓகஸ்ட் 25, 2017
உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
20.
chollukireen | 12:06 பிப இல் செப்ரெம்பர் 9, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இவ்வருஷம் வினாயக சதுர்த்தி மும்பை படங்கள் எடுக்க முடியாது கட்டுப்பாடுகள். தடைகள். வழக்கம்போல படங்கள் 2017 ஆம் வருடப் படங்களை மீள் பதிவு செய்து வணங்குகிறேன். உலகம் நன்மையுறப் பிரார்த்திப்போம் யாவரும். வாழ்த்துகள். அன்புடன்
21.
ஸ்ரீராம் | 11:56 பிப இல் செப்ரெம்பர் 9, 2021
அதிகாலையில் ஆனைமுகத்தான் தரிசனம்தான்.. முன்னர் சொன்னது போல.. நன்றி அம்மா. .வணங்கி கொள்கிறேன்.
22.
chollukireen | 11:49 முப இல் செப்ரெம்பர் 10, 2021
ஆசீர்வதிப்பார் ஆனை முகன். எண்ணங்கள் யாவும் நிறைவேர வேண்டும். அன்புடன்
23.
Geetha Sambasivam | 10:44 முப இல் செப்ரெம்பர் 10, 2021
ஆனைமுகத்தான் தரிசனங்கள் எல்லாமே அருமை. எங்கள் குலதெய்வம் ஊரான பரவாக்கரையின் பொய்யாப்பிள்ளையாரின் அபிஷேஹத்தை வாட்சப் மூலம் பார்த்துக்கொண்டே இதை எழுதுகிறேன். சுமார் பதினைந்து வருடங்களாக எங்க பெண்ணின் குடும்பம் வருடா வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு இதைச் செய்து வருகிறார்கள். விநாயகன் அருளால் அனைவரின் விக்னங்களும் தீர்ந்து நன்மை பிறக்கட்டும்.
24.
chollukireen | 11:53 முப இல் செப்ரெம்பர் 10, 2021
பொய்யாப் பிள்ளையார் யாவருக்கும் அருள் செய்யட்டும்.நல்ல காரியங்கள் செய்யவும் கொடுத்து வைக்க வேண்டும். நன்மை பிறக்க பிள்ளையார் அருள் செய்வார். அன்புடன்