பெருஞ்ஜீரகச் செடியின்அடி பாகம். bulb சமையலில்.
நவம்பர் 6, 2017 at 9:26 முப 10 பின்னூட்டங்கள்
ஸாதாரணமாக இதன் கீரையை சமையலி்ல் உபயோகப் படுத்துவார்கள். பெருஞ்சீரகம் மருந்து வகைகளிலும், மஸாலா வகைகளிலும், மது தயாரிப்பிலும் உபயோகப் படுத்துகிறார்கள் என்பது நாம்படித்தும்,கேட்டும்,பார்த்தும் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்தக் கிழங்கு போன்ற அடிப்பாகத்தின் உபயோகம் எனக்குத் தெரியாது.
கீரையைப் பற்றி பகோடா,அடை,வடைஎன்று நானே கூட எழுதியிருக்கிறேன். இதன் அடி பாகம் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை.
பார்க்க வெண்மையான நிறம். பூண்டு மாதிரியான , சற்றுப்பருமனான மடல் கொண்ட வடிவமைப்பு.
இதில் கால்ஷியம், காப்பர், இரும்பு,மெக்னீஷியம்,, பாஸ்பரஸ் போன்ற ஸத்துக்கள் நிறைந்திருக்கிரதாம். பிளட் பிரஷருக்கு மிகவும் நல்லதாம்.
இது எனக்கு அறிமுகமானதே ஜெனிவா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போதுதான். அதற்கு முன் அதிகம் இதைப் பற்றி நான் அக்கரை காட்டினதில்லை. இதனுடைய வடிவம் குழந்தைகள் விளையாடும் சொப்பினூடே காய்கறிகளில் இருந்தது. ஸரி நாம் இபபொழுது விஷயத்திற்கு வருவோம்.
இந்த அடிபாகத்து Bulb சமைக்க உதவுகிறது. ஸூப்,ஸேலட்,முதலானவைகள் செய்கிரார்கள். கோஸ் கறிபோல் சமைக்கவும் உதவுகிறது.
ஆஸ்ப்பத்திரியில் நோயுற்றவர்களுக்கு இதை வேகவைத்து அரைத்த மாதிரி உண்ணக் கொடுக்கிறார்கள். நமக்குதான் உபயோகப்படுத்தத் தெரிந்தால் போதுமே!
பொடியாக நறுக்கிப்போட்டு பகோடா,அடைவடைகளிலும் போட்டுப் பார்த்தது. எல்லாமே மிதமான சோம்பு வாஸனையுடன் கூடியதாக நன்றாக இருந்தது. தேங்காய் போடாத கறியாக ஜெனிவாவில் இருக்கும்போது செய்தது. அதை இங்கே எழுதுகிறேன். நறுக்கிய வெங்காயம் ஒன்று சேர்த்தேன்
கோஸ் நறுக்குவது போல மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரில் அலசி வடிக்கட்டவும். இது இரண்டுஅடிப்பகுதியில் செய்தது. கோஸ் நறுக்குவது போலதான். இதிலும் நடுவில் சற்று அழுத்தமான பாகம் இருக்கிறது.அதை நீக்கி விடவும்.
வாணலியில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காயவைக்கவும். அரைஸ்பூன் கடுகை வெடிக்க விடவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். வகைக்கு அரை டீஸ்பூன் மிளகாய்ப்பொடி,தனியாப்பொடி, மஞ்சள்பொடி சேர்க்கவும். சிறிதளவு நறுக்கி வைத்திருப்பதைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு மீதியைச் சேர்த்து வேண்டிய உப்பு சேர்த்து வதக்கவும்.
கீழிறக்கி வேண்டுமானால் ஒருதுளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
பெருஞ்சீரக வாஸனை லேசாகத் தெரிகிறது.
மூடித் திறந்து செய்தாலே வெந்து விடுகிறது. அவசியமானால் லேசாகத் தண்ணீர் தெளித்தாலும் போதும். நன்றாக வெந்து விடுகிறது.
காரட்,பீட்ரூட்,அவகேடோ, தக்காளி சேர்த்து ஸேலட்டும் பலவகைகளிற் செய்யலாம். இதன் கீரையையே சிறிது தூவி அலங்கரிக்கலாம்.
இது நம்முடைய ஸ்டைலும் இல்லை. பலவித ருசிகளில் உப ஸாமான்கள் சேர்த்துச் செய்யலாம்.
உடனே கடைக்குப் போய் வாங்கும் பொருளாகத் தோன்றவில்லை. ஏதோ நமக்குப் புதியதாகத் தோன்றலாம்.
எழுதுவோமா வேண்டாமா என்ற யோசனையினூடேதான் எழுதுகிறேன்.
ஒரு குறிப்பு எப்போதாவது பிறருக்குச் சொல்லவாவது உதவும். இதன் கீரை சேர்த்துச் செய்யும் பகோடாக்கள் ருசியானது.
ஸூப்பில் கீரையும்சேர்த்துச் செய்யலாம். மற்றஸூப்களிலும் சேர்க்கலாம்.
மொத்தத்தில் ஸோம்ப் அதாவது பெருஞ்ஜீரக வாஸனை பிடித்தவர்களாக இருக்கவேண்டும்.
Entry filed under: கறி வகைகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 12:49 பிப இல் நவம்பர் 6, 2017
இப்போதுதான் இதனைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். நூல்கோல், வாழைத்தண்டு கரேமதுபோல் பார்ப்பதற்கு இருக்கிறது.
எனக்கு சோம்பு வாசனையே பிடிக்காது (குருமா தவிர. அதைவிட்டால், ஹோட்டல்களில் ஜீனி தடவி வைத்திருப்பது). அதனால் நான் இதனைச் செய்துபார்க்க வாய்ப்பு இல்லை.
இருந்தாலும் புதிய ஒன்றைத் தெரிந்துகொண்டேன். முதல் படம், இரண்டு உள்ளங்கைகளைக் காண்பிப்பதுபோல் அழகாக இருக்கு. கடைசிப் படமும் இலையுடன், சிறிய தொட்டி மாதிரி அழகாக இருக்கு.
2.
chollukireen | 7:22 முப இல் நவம்பர் 9, 2017
எனக்கு அதன் கீரையைப் பற்றித் தெரியும். சோம்புக்கீரை பகோடா என்ற குறிப்பும் எழுதியிருக்கிறேன். இதற்கு அடிபாகமோ,அது சமையலுக்கு உபயோகப்படுமென்பதும் தெரியாது. சோம்பு வாஸனை பிடிக்காது என்பதில்லை. அதற்காக ஸாம்பார் பொடியில் அந்த வாஸனை வந்தால் பிடிக்குமென்பதில்லை. ஏதோ விசுவாஸத்தால் இந்தப் பின்னூட்டமாவது. இதை அவ்வளவாக யாரும் ரஸிக்க மாட்டார்கள். பழக்கப்படாததும்,புழக்கத்தில் இல்லாததுமான ஒன்று. பெங்களூர்,மும்பை,ஏன் நேபாளத்திலும் எனக்குக் கீரை கிடைத்தது.
படிப்பது,பார்ப்பது எல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்பது அவசியமில்லை. இப்படியும் ஒன்றா என்று நினைத்துப் போகவேண்டியதுதான். உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. படங்கள் நன்றாக வந்தது. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 2:28 பிப இல் நவம்பர் 6, 2017
படங்கள் நன்றாய் இருக்கின்றன. நீங்கள் சொல்லி இருப்பது போல இப்படி ஒன்று இருக்கிறது என்று தெரிந்து கொள்ள உதவும். நான் இதைப் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதுமில்லை!
4.
தchollukireen | 7:48 முப இல் நவம்பர் 9, 2017
பெங்களூரில் வசிப்பவர்களுக்கு ஓரளவு இதைப்பற்றித் தெரியும். பெண்களுக்கு பிரஸவ காலத்திற்கு பின் இந்தக் கீரையை சேர்த்து சமையல் செய்து கொடுத்தால் அவ்வளவு நல்லதென்று சொல்லுவார்கள். எனக்கும் அவ்விடம் அறிமுகமான கீரைதானிது. சித்ராசுந்தர் என்ற ஸகபதிவாளர் அமெரிக்காவிலிருந்து, இந்த bulb ைப என்னசெய்யலாம் என்று எழுதிக் கேட்டார்கள். அது வேறு ஏதாவது கீரையாக இருக்கும் என்று பதிலெழுதினேன்.
இல்லை. அதுவேதான் இது என்றார்கள். ஜெனிவா அனுபவம்தான் எனக்குப் புரியவைத்தது. இனி நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொல்லலாம்.மிக்க நன்றி. அன்புடன்
5.
angelin | 5:11 பிப இல் நவம்பர் 7, 2017
காமாட்சியம்மா இது இங்கே எல்லா சூப்பர் மார்க்கெட்லயும் இருக்கு பஞ்சாபி குஜராத்தி கடைலையும் இருக்கு .நான் தான் வாங்கினதேயில்லை 🙂 இந்த சோம்பு bon bon குண்டு ஆரஞ்சு மிட்டாய் மாதிரியும் விக்குது நல்ல டேஸ்டி ..
இந்த பெருஞ்சீரக செடி bulb ரோஸ்ட் செஞ்சி வச்சிருந்தாங்க அப்புறம் பாஸ்தாவிலும் சேர்த்திருந்தாங்க ஒரு ரெஸ்டாரண்டில் .
நானும் செய்யப்போறேன் உங்க குறிப்பு பார்த்து
6.
chollukireen | 9:08 முப இல் நவம்பர் 9, 2017
முன்பு பழுபாகற்காய் குறிப்பு எழுதினபோது நீ அதைச் செய்தும் உன் பதிவில் போட்டிருந்தாய். அதுவும் சற்று பரிச்சியமில்லாத காய். ஆனால் இது முற்றிலும் வேற்றுமையானது. இதையும் உனக்குத் தெரிந்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. நம்முடைய செய்முறையில் இதைச் சேர்த்துச் செய்வது. அவ்வளவுதான். நன்றி அஞ்சு. நாம் அப்பம் செய்வது மாதிரி மாவில், இந்தப் பெருஞ்ஜீரகத்தைப் போட்டுச் செய்வார்கள் நேபாளிகள். உருளைக்கிழங்குக் கறியில் சோம்புக்கீரை சேர்ப்பார்கள்.
இந்தப் bulb சமையல் புதுசுதான். அன்புடன்
7.
chitrasundar5 | 5:28 முப இல் நவம்பர் 25, 2017
காமாக்ஷிமா,
நானும் ஒரு தடவை உழவர் சந்தையில் வாங்கிவந்து கீரையை மட்டும் வடை & பகோடா (உங்க ப்ளாக் பார்த்துதான்) செய்துவிட்டு பல்பை தூக்கிப்போட்டுவிட்டேன். வாசனைதான் கொஞ்சம் பிரச்சினையாக இருந்தது. இந்த ஊர் மக்கள் நிறையவே வாங்கிட்டுப்போறாங்க.
மீண்டும் வாங்கினால் செய்து பார்க்கிறேன்மா. அன்புடன் சித்ரா.
8.
thulasithillaiakathu | 7:11 முப இல் நவம்பர் 27, 2017
இதைப் பார்த்திருக்கேன் காமாட்சிம்மா…ஆனால் இது சோம்பின் கிழங்குனு தெரியலை…. சோம்புக் செடியின் அடியில் இப்படி ஒரு கிழங்கா,….
தனியாகவோ அல்லது தனியாகச் செய்யாவிட்டாலும் உருளைக்கிழங்கு, காரட் எல்லாம் போட்டு சப்ஜியோ இல்லை வெஜ் ப்ரியாணியோ செய்யலாம் போல இருக்கு……உங்கள் குறிப்பையும் குறித்துக் கொண்டேன். இதைப் பயன்படுத்துவது பற்றி இப்போது தெரிந்துகொண்டேன்…. இதை அரைத்துவிட்டு வட இந்திய உணவுகள் க்ரேவி செய்யலாம் போல இருக்கு….
கீதா
9.
chollukireen | 6:57 முப இல் நவம்பர் 29, 2017
துளசிதில்லைக்காத்து இதைநான் முதலில் பார்த்தது கூடஇல்லை. கீரைமட்டும் நிறையமுறை உபயோகப்படுத்தியுள்ளேன். முதலில் ருசி பிடிக்கவேண்டும். நீ எழுதியிருக்கும் எல்லாம் முயற்சி செய்யலாம். சின்ன அளவில் முயற்சி செய்யவும்.
வெளிநாட்டினரைவிட காரஸாரமான கிரேவியில் ருசியாகஇருக்கலாம். உன்னுடைய ஊக்கத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
10.
chollukireen | 6:45 முப இல் நவம்பர் 29, 2017
சித்ரா நீ எழுதியும் கேட்டிருந்தாய். அப்போது எனக்கு இதைப்பற்றித் தெறியாது. இம்முறை ஜெனிவாவின் நிகழ்ச்சிகள் இதைப்பற்றி நிறைய அறியவாய்ப்பு அளித்து விட்டது. மேலும் மருமகளும் எப்போதாவது வாங்கி சமைக்கிராள்.. நன்றி அன்புடன்